search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிபர்"

    • அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு மந்திரி உட்பட அனைவரும் விபத்தில் உயிரிழந்தது நேற்று (மே 20) காலை உறுதிசெய்யப்பட்டது.
    • ஈரானின் அரசியலமைப்பின் 131வது பிரிவின்படி, அதிபர் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், துணை அதிபர் அவரின் கடமைகளைச் செய்ய அதிகாரமுடையவர் ஆவார்.

    ஈரானின் 14 வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உட்பட அவருடன் வந்த முக்கிய அரசு உறுப்பினர்கள் அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே வர்சகான் கவுண்டி என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.

    மோசமான வானிலைக்கு மத்தியில் ஹெலிகாப்டர் விழுந்த இடத்துக்கு மீட்டுப்படை சென்றது. பின் இந்த விபத்தில் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு மந்திரி உட்பட அனைவரும் விபத்தில் உயிரிழந்தது நேற்று (மே 20) காலை உறுதிசெய்யப்பட்டது. விபத்து தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரான் நாட்டின் தற்காலிக அதிபராகத் துணை அதிபர் முகமது மொக்பர் பதவியேற்றார். இந்நிலையில் ஈரான் நாட்டின் 14வது அதிபர் தேர்தல் ஜூன் 28ம் தேதி நடைபெறும் என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    அதிபர் முகமது மொக்பர், நிதித்துறைத் தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி-எஜே மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் கலிபாஃப் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான துணைத் தலைவர் முகமது டெஹ்கான் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தேர்தல் தேதி தீர்மானிக்கப்பட்டது.

     

    ஈரானின் அரசியலமைப்பின் 131வது பிரிவின்படி, அதிபர் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், துணை அதிபர் அவரின் கடமைகளைச் செய்ய அதிகாரமுடையவர் ஆவார். மேலும், அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய இடைக்கால அதிபர் கடமைப்பட்டவர் ஆவார். இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இந்தியா இன்று (மே 21) துக்க தினம் அனுசரிப்பது குறிப்பிடத்தக்கது. 

    • அதிபர் மாளிகையில் நடந்த இந்த விழாவில் 8 நாட்டு தலைவர்கள், 51 சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    • புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள லாங் சிங் டே சீனாவுக்கு எதிரான கொள்கையினை கொண்டவர்.

    தைபே:

    கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான தைவானில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக முன்னேற்ற கட்சி வெற்றி பெற்று லாங் சிங் டே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த தேர்தலில் தனி பெரும்பான்மை கிடைக்காததால் அவர் கூட்டணி கட்சி ஆதரவுடன் தைவானின் புதிய அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    அதிபர் மாளிகையில் நடந்த இந்த விழாவில் 8 நாட்டு தலைவர்கள், 51 சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கடந்த 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரில் தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கூறி வருகிறது. தங்கள் நாட்டை தனி நாடாக நிலை நிறுத்துவதில் தைவான் உறுதியாக உள்ளது.1996- ம் ஆண்டு முதல் தைவானில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

    புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள லாங் சிங் டே சீனாவுக்கு எதிரான கொள்கையினை கொண்டனர். இவர் அதிபரானது சீனாவுக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. இவரை ஆபத்தான பிரிவினைவாதி என சீனா குற்றம் சாட்டி உள்ளது.

    • புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவருக்கு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • தற்போது 2-வது முறையாக அப்பதவியை வகித்து வந்தார்.

    தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவின் அதிபர் ஹேஜ் கீங்கோப் இன்று அதிகாலை மரணம் அடைந் தார். அவருக்கு வயது 82. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவருக்கு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தலைநகர் வின்ட்ஹோக்கில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் அதிபர் ஹேஜ் கீங்கோப், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக துணை அதிபர் நங்கோலோ தெரிவித்தார். ஹேஜ் கீங்கோப் 2015-ம் ஆண்டு முதல் முறையாக அதிபர் ஆனார். தற்போது 2-வது முறையாக அப்பதவியை வகித்து வந்தார்.

    • ரோட்டோரமாக இருந்த தடுப்பு சுவரில் மோதியது
    • சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பிரம்மேஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரம்மேஸ்வரன் (வயது 59), ஓட்டல் அதிபர். இவர் சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தார். ரெயில்வே மேம்பாலம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் இவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சென்று ரோட்டோரமாக இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இதில் படுகாயமடைந்த பிரம்மேஸ்வரனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பிரம்மேஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கன்னியா குமரி போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள கன்னியா குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரி சோதனை செய்யப்பட்டது.

    • தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்
    • 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது

    நாகர்கோவில் :

    ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 58). இவர் அந்த பகுதியில் செங்கல் சூளை நடத்தி வந்தார்.

    இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். மகன்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகள் ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒருவருக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.

    இந்த நிலையில் ஏசுதாசன், ஆரல்வாய்மொழி சர்ச் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டது. இதில் ஏசுதாசன் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் தெரிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து ஜெயா கொடுத்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகரை சேர்ந்த அன்பு என்ற அன்பழகன், விஜயன், திருப்பதிசாரத்தை சேர்ந்த மணிகண்டன், ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்டை சேர்ந்த தங்க ஜோஸ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசா ரணை நடத்தினர். கொலை செய் யப்பட்ட ஏசுதாச னுக்கும், அன்பு வின் உறவுக்கார பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பே இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறில் ஏசுதாசனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் ஏசுதாசனின் மனைவி ஜெயா, மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதன் பிறகு தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி னார்கள். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டி.எஸ்.பி. நவீன்குமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தை சந்தித்தும் அவர்கள் பேசினார்கள். அப்போது ஆரல்வாய்மொழி போலீசாரின் அலட்சியத்தின் காரணமாகவே எனது கணவரை கொலை செய்து விட்டனர் என்று கண்ணீர் விட்டு ஏசுதாசனின் மனைவி கதறி அழுதார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று உறுதி அளித்தார்.

    இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு ஒப்புக்கொண்டனர். மதியத்திற்கு பிறகு ஏசுதாசனின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு ஏசுதாசனின் உடல் உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது. கொலையாளி களை பிடிக்க போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.

    4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. கொலையாளிகளின் புகைப்படங்களையும் வெளியிட்டு அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். குமரி மலையோர பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்டை சேர்ந்த தங்கஜோஸ போலீசாரிடம் சிக்கினார்.

    அவரை கைது செய்த போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட தங்கஜோசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தலை மறைவாக உள்ள அன்பு, விஜயன், மணிகண்டனை பிடிக்க வும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • மனைவி மற்றும் உறவினர்கள் காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
    • காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    காங்கேயம் :

    காங்கேயம் அருகேயுள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது33). இவர் பெரிய இல்லியம் ரோட்டில் அரிசி ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை பழனிசாமி வீட்டில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதனை கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆலை அதிபர் பழனிசாமிக்கும் அவரது குடும்பத்தினருக்கு இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதில் மன உளைச்சல் அடைந்த அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

    • கொலை வழக்காக மாற்றம்
    • ஆரல்வாய் மொழி போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    பூதப்பாண்டி அருகே சீதப்பால் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆன்றோ செபஸ்தியான் (வயது 50).

    இவர் சீதப்பால் பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இவரது கோழிபண்ணையில் இருந்த தார்ப்பாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது.இது தொடர்பாக சீதப்பால் மேற்கு தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணிய பிள்ளை (50) அவரது மகன் சங்கர் (30) ஆகியோருக்கும் ஆன்றோ செபஸ்டியானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த 17-ந்தேதி தந்தை-மகன் இருவரும் ஆன்றோ செபஸ்தியானிடம் தகராறு செய்தனர். ஆத்திரமடைந்த அவர்கள் இரும்பு கம்பியால் ஆன்றோ செபஸ்தியானை சரமாரியாக தாக்கினார்கள். காயமடைந்த ஆன்றோ செபஸ்தியானை சங்கர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆன்றோ செபஸ்தியன் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டார்.

    இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சங்கர், சிவசுப்பிரமணிய பிள்ளை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.சங்கரை போலீசார் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆன்றோ செபஸ்தியான் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. பலியான ஆன்றோ செபஸ்தியான் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கி றது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    • இரணியல் போலீசார் 4 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை
    • ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள பேயன்குழி அடுத்த கல்லுவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் தங்கசுவாமி (வயது 53). இவர் பேயன்குழி சந்திப்பில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 8 மாதங்களுக்கு முன்பு பேயன்குழியைச் சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து ரூ.2900-க்கு ஜவுளிகள் வாங்கியதாக தெரிகிறது. பின்னர் ரூ.200 கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை மறுநாள் ஏ.டி.எம்.மில் எடுத்து தருவதாக கூறிச் சென்றுள்ளனர். ஆனால் கடந்த 8 மாதங்களாக கடனை திருப்பிக் கொடுக்காமல் அலைக்கழித்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை தங்கசுவாமி கடனை திருப்பி கேட்க பேயன்குழி சென்றுள்ளார். அப்போது மோகன்ராஜ் மகன் நிகேஷ், அவரது நண்பர்கள் 3 பேர்கள் என 4 பேர் சேர்ந்து தங்கசுவாமியை தடுத்து நிறுத்தி அவதூறாக பேசி கம்பு மற்றும் கல்லால் தாக்கி உள்ளனர். மேலும் அவரது செல்போனை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் தங்கசுவாமிக்கு கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயமும், கல்லால் தாக்கியதில் மேல் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

    தங்கசுவாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தங்கசுவாமி இரணியல் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நிகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் என 4 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடனை திருப்பி கேட்ட ஜவுளிக்கடை உரிமையாளரை 4 பேர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று 51 ஆண்டுகள் நிறைவு.
    • வீரர்களின் இணையற்ற துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கிறது.

    1971-ம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதி வெற்றி தினம் (விஜய் திவஸ்) கொண்டாடப்படுகிறது. இந்த போருக்கு பின்னர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த வங்காளதேசம், சுதந்திர நாடாக மாறியது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

    இதையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 1971 ஆண்டு போரின் போது நமது ஆயுத படையினர் வெளிப்படுத்திய வீரத்தை நன்றியுடன் நினைவு கூறுகிறோம். வீரர்களின் இணையற்ற துணிச்சல் மற்றும் தேசத்துக்காக அவர்கள் செய்த ஒவ்வொரு இந்தியருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்
    • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் செட்டிக்குளம் கே.பி. ரோடு பகுதியை சேர்ந்தவர் அருண் பிரகாஷ் (வயது 52).

    இவர் நாகர்கோவில் செட்டிகுளத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். நேற்று இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில் பறக்கிங்கால் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இது பற்றி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்து கிடந்தது யார்? என்பது பற்றி நாகர்கோவில் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்து கிடந்தது அருண் பிரகாஷ் என்பது தெரியவந்தது.

    அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் தண்டவாளத்தில் கிடந்த உடலை அடையாளம் காட்டி இறந்தது அருண் பிரகாஷ் தான் என்பதை உறுதி செய்தனர். அருண் பிரகாஷ்,ரெயில் மோதி இறந்தாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர் பறக்கங்கின் கால் பகுதிக்கு சென்றது ஏன்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரது செல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • மறைத்து வைத்திருந்த அரிவாளால் சங்கர்கணேசின் பின்பக்க தலையில் வெட்டினார்.
    • கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    என்.ஜி. ஓ.காலனி அருகே உள்ள ஆத்திக் காட்டுவிளையை சேர்ந்தவர் சங்கர்கணேஷ் (வயது 29).

    இவர் அப்பகுதியில் வலை கம்பெனி நடத்தி வருகிறார். 6 மாதத்திற்கு முன்பு ஆத்திக்காட்டு விளையை சேர்ந்த பாஸ்கர் (39) என்பவரிடம் ரூ.50 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கி மாதம், மாதம் 10ஆம் தேதி வட்டி கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் இந்த மாதம் வட்டி கொடுக்காததை முன் விரோதமாக கொண்டு நேற்று சங்கர்கணேஷ் ஆத்திக்காட்டுவிளை வெள்ளைச்சாமியார் கோயில் பக்கம் நின்று கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த பாஸ்கர் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

    மேலும் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சங்கர்கணேசின் பின்பக்க தலையில் வெட்டினார். அப்போது அக்கம் பக்கத்தினர் வந்ததால் பாஸ்கர் தப்பி ஓடி விட்டார்.

    அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த சங்கர் கணேசை ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சங்கர் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் பாஸ்கர் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, புதிய அதிபராக பொறுப்பேற்ற சாம்சனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
    • புதிய அதிபர் சாம்சன் பூண்டிமாதா பேராலயத்தில் முதல் திருப்பலி நிறைவேற்றினார்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள புகழ்மிக்க பூண்டி மாதா பேராலயத்தில் புதிய அதிபராக அங்குள்ள தியான மைய இயக்குனர் ஆக பணியாற்றிய சாம்சன் நியமித்து கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகளார் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதைத் தொடர்ந்து புதிய அதிபராக சாம்சன் பொறுப்பேற்றுக் கொண்டார். கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, புதிய அதிபராக பொறுப்பேற்ற சாம்சனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    புதிய அதிபர் சாம்சன் பூண்டிமாதா பேராலயத்தில் முதல் திருப்பலி நிறைவேற்றினார். இதில் பல்வேறு பகுதியைச் சார்ந்த பங்குத் தந்தையர்கள் கலந்துகொண்டனர்.மாறுதலில் செல்லும் பாக்கியசாமி, பேராலய துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியானமைய இயக்குநர் ஆல்பர்ட், உதவி பங்குத் தந்தைகள் தாமஸ், அன்புராஜ், ஆன்மிக தந்தைகள் அருளானந்தம், ஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக புதிய அதிபர் சாம்சனை பூண்டிமாதா மக்கள் மன்றத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

    ×