என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 174124"
- கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடந்தது.
- மதுரை மாவட்டத்தில் கொரோனா சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கூட்டம் குறைந்த அளவே இருந்தது.
மதுரை
தமிழகம் முழுவதும் கொரோனா மீண்டும் பரவி வருகிறது. மதுரையில் நேற்று மட்டும் 17 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோய்த் தொற்று பாதிப்புடன் உள்ள 154 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றை தடுக்கும் வகையில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கி நடந்து வருகிறது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் 1500 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. இங்கு 1600 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இரவு 7 மணி வரை சிறப்பு முகாம் நடக்கும். எனவே தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.
மதுரை மாவட்டத்தை பொருத்தவரை முதல் டோஸ்- 87 சதவீதம், 2-வது டோஸ்- 75 சதவீதம் போடப்பட்டு உள்ளது. பூஸ்டர் டோஸ் 3 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளன" என தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் கொரோனா சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கூட்டம் குறைந்த அளவே இருந்தது. ஒரு சில பகுதிகளில் 50-க்கும் மேற்பட்டோர் வரிசையாக வந்திருந்து, தடுப்பூசி போட்டு செல்வதை பார்க்க முடிந்தது.
- மதுரையில் நாளை மின்தடை ஏற்படும்.
- இதன் காரணமாக நாளை (30-ந் தேதி) காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மதுரை
மதுரை அண்ணாநகர் பிரிவுப்பகுதியில் உயரழுத்த மின்பாதைகளில், புதைவடம் (கேபிள்) இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக நாளை (30-ந் தேதி) காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை அண்ணாநகர் கிழக்கு, குருவிக்காரன் சாலை, எஸ்.எம்.பி. காலனி, காமராஜர் தெரு, ஆலமரம் பஸ் நிறுத்தம், முதலியார் காலனி, ஜக்கா தோப்பு, அரவிந்த் மருத்துவமனை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
- கோஷ்டி மோதல்; 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மதுபானம் அருந்தி, சிகரெட் புகைத்துக் கொண்டு இருந்தனர். இதனை கோபாலகிருஷ்ணன் தட்டி கேட்டார்.
மதுரை
மதுரை கீழவைத்தியநா தபுரத்தை சேர்ந்த செந்தில்வேல் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 20). இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்தார்.
அப்போது இதே பகுதியில் வசிக்கும் வேலு மகன் ரமேஷ் என்ற மொக்கையன் (22), நெப்போலியன் தெரு கிருஷ்ணமூர்த்தி மகன் பன்னீர் (19) ஆகிய 2 பேர், வீட்டின் அருகே மதுபானம் அருந்தி, சிகரெட் புகைத்துக் கொண்டு இருந்தனர். இதனை கோபாலகிருஷ்ணன் தட்டி கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேர் இரும்பு கம்பியால் கோபாலகிருஷ்ணனை தாக்கினர். இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன், செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் என்ற மொக்கையன், பன்னீர் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதே வழக்கில் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் செந்தில் வேலை கைது செய்தனர்.
- பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை
மதுரை அழகப்பன் நகர், செம்பருத்தி தெருவை சேர்ந்த பொன்னையா மனைவி ஜெயா (வயது 47). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஜெயா சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது அவரை ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். ஜெயா வீட்டின் அருகே நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் வந்தவர்கள், ஜெயா அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதுதொடர்பாக ஜெயா, சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- இதற்கு மதுரை மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.
- முடிவில் மாவட்ட துணைத் தலைவர் ராம பழனியப்பன் நன்றி கூறினார்.
தஞ்சாவூர்:
மதுரை மாவட்டத்தில் தேசிய திருக்கோயில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் எல்லிஸ் நகரில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்றது.
இதற்கு மதுரை மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள், மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் ராமமூர்த்தி, தேசிய துணை தலைவர் வழக்கறிஞர் பழனிகுமார், மராட்டிய சங்கம் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் அமைந்திருக்கும் கோயில்கள் அந்தப் பகுதி மக்கள் கருத்துக்கள் கேட்பு அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது .
நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், இறை பணி தொண்டர்கள், தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் ராம பழனியப்பன் நன்றி கூறினார்.
- தூய்மை பணியாளர் பணிக்கு பட்டதாரி பெண்கள் குவிந்தனர்.
- மதுரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் தற்காலிக பணியாளர் தேர்வுக்கு 302 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின்கீழ் மாணவ- மாணவியர் விடுதிகள் இயங்கி வருகின்றன. அங்கு காலியாக உள்ள தூய்மை பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளி யிடப்பட்டது.
அதன்படி தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு செய்யப்படுவோர் தொகுப்பூதியம் அடிப்ப டையில் பணி நியமனம் செய்யப்படுவர்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மதுரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் தற்காலிக பணியாளர் தேர்வுக்கு 302 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்வு நடந்து வருகிறது.
இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பிளஸ்-2, டிகிரி முடித்த வர்கள். அதுவும் தவிர நடப்பாண்டு பிளஸ்-2 முடித்த 17 வயது இளம் பெண்களும் தேர்வுக்கு வந்து இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
- மதுரையில் 13-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்.
- ஆனையூர் துணைமின் நிலையத்தில் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
மதுரை
ஆனையூர் துணைமின் நிலையத்தில் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக பாலமேடு மெயின்ரோடு, சொக்கலிங்க நகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, பெரியார் நகர், அசோக்நகர், புது விளாங்குடி, கூடல்நகர், ஆர்.எம்.எஸ். காலனி, சொக்கநாதபுரம், ராஜ் நகர், பாத்திமா கல்லூரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்திநகர், துளசிவீதி, திண்டுக்கல் மெயின்ரோடு, விஸ்தாரா குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகர், கரிசல் குளம், வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாக்குடி பிரிவு, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
- மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மதுரை
மதுரை தெற்கு கோட்டம், ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோவில், அனுப்பானடி, தெப்பக்கு ளம் ஆகிய துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மழைக்கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (12-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 1, 2-வது தெருக்கள், ஒர்க்ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி அக்ரஹாரம்,தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் அக்ரஹாரம் படித்துறை, திலகர் திடல் சந்தை, பாரதியார்ரோடு, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1 மற்றும் 4-வது தெரு, விவேகானந்தர் ரோடு.
பெரியார் பஸ் நிலையம், டி.பி.ேக. ரோட்டின் ஒரு பகுதி, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு,மேல மாசி வீதியின் ஒரு பகுதி, இன்மையிலும் நன்மை தருவார் கோவில் தெரு, மேல வடம் போக்கி தெரு, ஹயாத்கான் சாலை. மேல வாசல் ஹவுசிங் போர்டு. மேல வாசல் மரக்கடை பகுதிகள், ஹீரா நகர் மற்றும் திடீர் நகர் முழுவதும், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின்ரோடு, புட்டு தோப்பு மெயின் ரோடு, எச்.எம்.எஸ். காலனி, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, கரிமேடு ஏரியா முழுவதும், மோதிலால் மெயின் ரோடு.
மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், என்.எம்.ஆர். புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி. ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவன்யூ, மேல அனுப்பானடி கிழக்கு பகுதி, தமிழன் அவன்யூ, மருத்துவமனை சுற்றுப்புறம், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி. காலனி. திருமகள் நகர், செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
- பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை காளிமுத்து நகர் பாண்டியன் மனைவி அஸ்மா (வயது 50). இவருக்கும், குடும்பத்தினருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் அஸ்மா காலை வீட்டில் இருந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை தெப்பக்குளம், காமராஜர் சாலை சுடலைமுத்து தெருவை சேர்ந்த பழனிவேல் மகன் முத்துப்பாண்டி (22). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த முத்துபாண்டி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். க தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை ஆனையூரில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் 12-ந் தேதி நடக்கிறது
- மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.
மதுரை
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளில் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
அதன்படி வருகிற 12-ந் தேதி (செவ்வாய்கிழமை) ஆனையூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.
கிழக்கு மண்டலத்திற்கு (எண் 1) உட்பட்ட ஆனையூர், பார்க்டவுன், நாகனாகுளம், அய்யர் பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், உத்தங்குடி, கற்பக நகர், பரசுராம்பட்டி, லூர்து நகர், ஆத்திக்குளம், கோ.புதூர், வள்ளுவர் காலனி, எஸ்.ஆலங்குளம், அலமேலு நகர், கூடல்நகர், மேலமடை, பாண்டிகோவில், சவுராஷ்டிராபுரம், தாசில்தார் நகர், வண்டியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
- காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
மதுரை
மதுரை மாகாளிப்பட்டி துணை மின்நிலையம் மூலக்கரை பீடர், தெப்பக்குளம் துணைமின்நிலையம் காமராஜர் சாலை பீடர், அனுப்பானடி துணைமின் நிலையத்திற்குட்பட்ட தெப்பக்குளம், புளியங்குளம் பீடர்களில் மழைக்கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக ஓட்டுக்காளவாசல், ராஜமான் நகர், அவினாஷ் மாடர்ன் ரைஸ் மில் வரை, கொண்டித்தொழு வடக்குத்தெரு, ஜிம் சந்்து, வெங்கடபதி கோவில்தெரு, சீனிவாசப்பெருமாள் கோவில் தெரு, சித்து பாலகிருஷ்ணன் சந்து, சுடலைமுத்து சந்து, மேல அனுப்பானடி வீட்டு வசதிவாரியம், கிறிஸ்டியன் தெரு, சூசை மைக்கேல் தெரு, தெய்வக்கன்னித் தெரு, அய்யனார் கோவில் மார்க்கெட், மண்எண்ணை பல்க் ஏரியா, மேல அனுப்பானடி மெயின்ரோடு, பாபு நகர், கணேஷ்நகர், வளனார் நகர், வேலன் தெரு, எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் நாளை (5-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
- மதுரையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மதுரை பெரியார் பஸ் நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.
மதுரை
மதுரை தென்பரங்குன்றம், தேவர் சிலை அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக திருப்பரங்குன்றம் போலீசுக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த ஒருவர் பிடிபட்டார். அப்போது அவரிடம் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் தென்பரங்குன்றம் சேகர் மகன் நாகராஜ் (வயது 22) என்பது தெரிய வந்தது. அவரை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை பெரியார் பஸ் நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் திடீர் நகர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது பெரியார் பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்த ஒருவர் பிடிபட்டார். அவரிடம் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 40) என்று தெரிய வந்தது. அவரை திடீர் நகர் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்