என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 174124"
- வருகிற 13- ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.
- மதுரை பள்ளிகளில் துப்புரவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை. மாணவ-மாணவிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் படித்து வந்தனர். அதன் பின்னர் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று வந்தது.
இதைத்தொடர்ந்து பொதுத்தேர்வு முடிவடைந்தது. பின்னர் கோடை காலத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் சுற்றுலா தலங்கள் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இருந்து வந்தனர்.
இந்தநிலையில் வருகிற 13-ந் தேதி கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
- இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்த வாலிபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
- 900 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
அவனியாபுரம்
இலங்கையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து சிறப்பு அதிகாரிகள் குழுவினர் மதுரை விமான நிலையத்தில் நேற்று முகாமிட்டு பயணிகளிடம் திடீர் சோதனை நடத்தினர்.
இலங்கையில் இருந்து மதுரை வந்த விமான பயணிகளிடம் சோதனை நடத்தியபோது ஒரு வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் 900 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 46 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக நுண்ண றிவு பிரிவு அதிகாரிகள் கூறும்போது, பிடிபட்ட வாலிபர் இளையான்குடி பகுதியை சேர்ந்தவர் என்றும், அவரிடம் இருந்து ரூ.46 லட்சம் மதிப்பிலான 900 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவர் இதற்கு முன்பு கடத்தலில் ஈடுபட்டாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
மதுரை விமான நிலையத்துக்கு போதைப்பொருட்கள் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் கடத்தால் மட்டுமே நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள். ஆனால் தற்போது 900 கிராம் தங்கம்தான் பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது நம்பத்தகுந்ததாக இல்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே இது தொடர்பான தகவல்களை அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- மதுரை மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
- சேவைகுறைபாடுகள் குறித்த புகார் மனுக்களை நேரடியாக அலுவலரிடம் வழங்கலாம்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் மக்கள் தொடர்பு முகாம் நாளை (11-ந்தேதி) குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்டவழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை நடக்கிறது.
இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை,நகல் அட்டை பெறுவது, கைபேசி எண் பதிவு மாற்றம் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகுறைபாடுகள் குறித்த புகார்கள் மற்றும் இதரக்குறைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் நேரடியாக முகாம் அலுவலரிடம் வழங்கி தீர்வுகளை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த தகவலை மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
- சர்வதேச போட்டியில் இந்திய அணி தங்கம் வென்ற மதுரை வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- சிறந்த விளையாட்டு வீராங்கனை பட்டத்தை விஷ்ணுஸ்ரீ பெற்றார்.
மதுரை
சர்வதேச டியூபால் பெட ரேஷன் சார்பில் மும்பையில் டியூபால் நடைபெற்றது. மே 25 முதல் 27ம் தேதி வரை நடந்த போட்டியில் இந்தியா, பங்களாதேஷ், ஈரான், ஓமன், ஏமன் ஆகிய நாடுகள் கலந்து கொண்டன.
இறுதிப்போட்டியில் இந்தியா மகளிர் அணியும் பங்களாதேஷ் மகளிர் அணியும் மோதின.இப்போட்டியில் இந்தியா அணி 9 - 1 என்ற புள்ளிக்க ணக்கில் பங்களாதேஷ் அணியை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது. இந்திய அணியில் இந்திய டியூபால் பெடரேஷன் ஆதரவுடன் தமிழ்நாடு டியூபால் சங்கம் சார்பில் தமிழக வீராங்கனைகள் பவித்ரா, விஷ்ணுஸ்ரீ, பிரியா, ஷாலினி ஆகியோர் பங்கேற்ற னர்.
இறுதிப்போட்டி யில் அதிக புள்ளி பெற்ற வீராங்கனை பட்டத்தை பவித்ரா பெற்றார். சிறந்த விளையாட்டு வீராங்கனை பட்டத்தை விஷ்ணுஸ்ரீ பெற்றார். இவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இவர்களை தென்னிந்திய டியூபால் சங்கத் தலைவர் கே.சி திருமாறான், மா நில துணைத்தலைவர் ராயல் ராஜாராம், மற்றும் சங்கச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மதுரை குபேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பாரட்டினார். பயிற்சியாளர் நடராஜனுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப் பட்டது.
- மதுரையில் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்.
- பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மதுரை
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் பெரியார் பேரங்காடி கட்டுமான பணிகளை மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றில் பெரியார் பேருந்து நிலையம், சுற்றுலா தகவல் மையம், ஜான்சிராணி பூங்கா, குன்னத்தூர் சத்திரம் ஆகியவற்றில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் பெரியார் பேருந்து நிலையம் அருகில் ரூ.119.56 கோடி மதிப்பீட்டில் பேரங்காடி கட்டுமான பணிகள், பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் ரூ.44.20 கோடி மதிப்பீட்டில் பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பெரியார் பேருந்துநிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் பேரங்காடி கட்டுமான பணிகள், அருகில் உள்ள பயணிகள் சுற்றுலா தகவல் மையத்தில் மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள ஜான்சி ராணி பூங்கா வணிக வளாகம் மையம், குன்னத்தூர் சத்திரம், பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் ஆணையாளர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலருக்கு உத்தர விட்டார்.
முன்னதாக ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு கர்டர்பாலம் பகுதியில் உள்ள கழிவு நீரேற்றுநிலையம், மேலப்பொன்னகரம் 8-வது தெருவில் பகுதியில் உள்ள உந்து கழிவுநீரேற்று நிலையம் மற்றும் பொன்மேனி பகுதியில் உள்ள உபகழிவு நீரேற்று நிலையம் ஆகிய கழிவுநீரேற்று நிலையங்க ளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது நகரப்பொறியாளர் லட்சுமணன், செயற் பொறியாளர்கள் பாக்கியலட்சுமி, பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் ேசகர், மக்கள்தொடா;பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர்கள் ஆறுமுகம், ஆரோக்கிய சேவியர், தியாகராஜன், கந்தப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை:
மதுரை வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மகள் சந்தியா (வயது 16) இவர், மதுரை தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
தர்மபுரி அருகே உள்ள எரியூரில் 10-ம் வகுப்பு படித்து முடித்த சந்தியா அந்த சான்றிதழை வாங்க முடியவில்லை. எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ் இருந்தால்தான் பிளஸ்-2 படிக்க முடியும் என்று ஆசிரியர்கள் மாணவியிடம் கூறியதாக தெரிகிறது.
இதற்காக மாணவி சந்தியா சான்றிதழை பெற பல்வேறு முயற்சிகள் எடுத்தும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கருப்பா யூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள காயாம்பட்டி மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி நந்தினி (வயது 22).
இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 10 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பாண்டி, அவரது தாயார் ராணி, உறவினர்கள் பாண்டிச் செல்வி, பாண்டிசெல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் கூடுதலாக வரதட்சணை கேட்டு நந்தினியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நந்தினி தனது தந்தை அமராவதியிடம் செல்போனில் அடிக்கடி தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று நந்தினி வீட்டில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக உறவினர்கள் மூலம் கிடைத்த தகவலின் பேரில் அமராவதி அங்கு சென்று பார்த்தார். அங்கு வீட்டில் கருகிய நிலையில் நந்தினி பிணமாக கிடந்தார்.
வேறு யாரும் இல்லாததால் அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அமராவதி மதுரை ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீயில் கருகி பிணமான நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வரதட்சணை கொடுமையில் நந்தினி எரித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆனால் நந்தினியின் கணவர் பாண்டி மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டதால் நந்தினி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை செல்லூர் போஸ் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 56). இவர் சம்பவத்தன்று நரிமேடு பஸ்நிறுத்தம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த 3 பேர் தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும். எனவே போலீஸ் நிலையத்துக்கு வாருங்கள் எனக்கூறி அவர்கள் சுப்பிர மணியத்தை அழைத்துச் சென்றனர். அப்போது அந்த கும்பல் சுப்பிரமணியத்தை தாக்கியது.
சத்தியமூர்த்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் சுப்பிரமணியத்தை அடைத்த அந்த கும்பல் பணம் கேட்டு மிரட்டியுள்ளது.
பின்னர் சுப்பிரமணியத்தின் நண்பர் திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகேந்திர பாண்டியன் என்பவரை தொடர்பு கொண்டு ரூ. 2 லட்சம் பணம் வேண்டும். இல்லை யென்றால் சுப்பிரமணியத்தை கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த நாகேந்திர பாண்டியன், மர்ம கும்பல் சொன்ன இடத்தில் வைத்து ரூ.2 லட்சத்தை கொடுத்ததாக தெரிகிறது. பணத்தை பெற்றுக் கொண்ட பின் அந்த கும்பல் சுப்பிரமணியத்தை விடுவித்தது.
இது குறித்து சுப்பிரமணியன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதில், சிவசுப்பிரமணியன் என்பவர் உள்பட 3 பேர் போலீஸ் போல் நடித்து கடத்திச் சென்று பணம் பறித்ததாக தெரிவித்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசுப்பிரமணியன் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்