search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொண்டாட்டம்"

    • ஈரோடு மாவட்ட டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் நாடார் சங்க அலுவலகத்தில் சிவந்தி ஆதித்தனாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • மாவட்ட தலைவர் ஞானபால் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ஈரோடு:

    டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் திருநகர் காலனியில் உள்ள நாடார் சங்க அலுவலகத்தில் சிவந்தி ஆதித்தனாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் நற்பணி மன்ற ஈரோடு மாவட்ட தலைவர் ஞானபால் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் உப தலைவரும், ஈரோடு நாடார் சங்க தலைவருமான உதயம் செல்வம், மாநகர தலைவர் சண்முகம், செயற்குழு உறுப்பினர் ராதா, நாடார் சங்க உப தலைவர் முருகையா, செல்லசாமி, மோகன்ராஜ், பேங்க் பாண்டி, ஜோசப், வேல்பாண்டி, வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோர்ட் தீர்ப்பை வரவேற்று பொதுமக்கள் கொண்டாடினர்
    • டாஸ்மாக்கடை திறக்க தடை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரிய மணல் கிராமத்தில் புதிதாக மதுபான கடை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் புதிய மதுபான கடைகள் திறக்க கூடாது என பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

    இதனை அடுத்து மதுபான கடை திறப்பது அவ்வப்பொழுது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடையை திறந்து விற்பனையை துவங்கினர். இதனை அறிந்த பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு பாக்ஸ் மது பாட்டில்களை வெளியில் எடுத்து வைத்து கதவை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் பாலு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் மதுபான கடையை திறக்க கூடாது என உயர் நீதிமன்றம் அதிரடி தடை விதித்தது. உயர் நீதிமன்றம் தடை விதித்தது தொடர்ந்து பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    கோர்ட் தீர்ப்பை வரவேற்று பா.ம.க. மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    • மாணவிகள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூ வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    • ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பள்ளிகளில் இன்று ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைபள்ளியில் மாணவிகள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூ வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதேப்போல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கயம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.  

    • பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
    • அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு.

    அவினாசி :

    எடப்பாடி பழனிச்சாமி நடத்திய அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியதையடுத்து அவினாசி அவினாசிலிங்கம்பாளையம் நால்ரோடு பிரிவில் அவினாசி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் மு.சுப்பிரமணியம் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இதே போல் அவினாசியிலும் அ.தி.மு.க சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. பழங்கரை கூட்டுறவு சங்கத் தலைவர் தனபால்,பழங்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பழங்கரை ஊராட்சி வார்டு உறுப்பினர் சண்முகம், ஜெயலலிதா பேரவை ஒன்றிய தலைவர் அண்ணா பூபதி, ஒன்றிய செயலாளர் தம்பி ராஜேந்திரன், தெற்கு ஒன்றிய பொருளாளர் காவேரி ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர் முத்துசாமி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் வி.பி.நடராஜ், அமைப்புசாரா ஓட்டுனர் அணி ஒன்றிய செயலாளர் சுந்தர் உள்ளிட்ட அ.தி.மு.க. கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டியது.
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    மேலூர்

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து மேலூரில் கிழக்கு மாவட்ட பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழரசன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று செக்கடியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இதில் மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுசாமி, கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிசெழியன், மேலூர் நகர் மன்ற கவுன்சிலர் திவாகர் தமிழரசன், தலைமை கழக பேச்சாளர் மலைச்சாமி, தகவல் தொழில்நுட்ப துணை தலைவர் கவுரிசங்கர், முன்னாள் நகர் மாவட்ட பிரதிநிதிகள் சீனிவாசன், தவப்பாண்டி, முன்னாள் கவுன்சிலர்கள் காதர் மைதீன், ஷாஜகான், சக்கரவர்த்தி, பாசறை நிர்வாகிகள் சிவா, பாலாஜி, பேரவை நிர்வாகி அருள் பாண்டி, திருநாவுக்கரசு சிவகுரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தானில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
    • மூலவருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 22 வகையான திரவ அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன.

    சோழவந்தான்

    சோழவந்தான்-வாடிப்பட்டி சாலையில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி பூசாரி சேகர் தலைமையில் மூலவருக்கு பால் தயிர் இளநீர் உள்ளிட்ட 22 வகையான திரவ அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன. சந்தனகாப்பு அலங்காரத்தில் வரசித்தி விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவில் நிர்வாகத்தின் சார்பில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருவேடகம் மேற்கு பகுதியில் பழமை வாய்ந்த சதுர்வேத மஹாகணபதி கோவிலில் உள்ள மூலவருக்கு அர்ச்சகர் கணேசன் தலைமையில் அபிஷேகம் நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பூசாரி திருப்பதி, வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • குளச்சல் போலீசார் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • படுகாயமடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே கல்லுக் கூட்டத்தை சேர்ந்தவர் ஜாண் ஜெரோஷ்.இவர் குளச்சல் அருகே ஒரு கிராமத்தில் பாஸ்டராக உள்ளார்.

    இவரது மகள் ஜாபியா ஜாஸ்மின் (வயது 19).இவர் கருங்கல் அருகே ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரு கிறார். நேற்று முன்தினம் இரவு ஜாபியா ஜாஸ்மின் தனது பிறந்த நாளை கொண்டாட 2 தோழிகள் மற்றும் நண்பர் ஒருவரையும் வீட்டிற்கு அழைத்தாராம்.வீட்டு மொட்டை மாடியில் அவர்கள் பிறந்த நாள் விழா கொண்டாட தயாராகி கொண்டிருந்தனர்.

    அப்போது ஜாபியா ஜாஸ்மினின் பள்ளி தோழன் சுங்கான் கடையை சேர்ந்த அஜின் என்பவர் அவரது வீட்டிற்கு வந்து புளியமரம் வழியாக மொட்டை மாடிக்கு சென்றார். அப்போது அஜின் தகாத வார்த்தைகள் பேசி, கட்டையால் மாணவியை தாக்கினார். இதில் படுகாய மடைந்த ஜாபியா ஜாஸ்மின் உடையார் விளையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பாக குளச்சல் போலீசார் அஜின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இரவில் மொட்டை மாடி ஏறி சென்று கல்லூரி மாணவி தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளி குழந்தைகள், கண்ணன்- ராதை வேடமிட்டு, பஜனை பாடல்கள் பாடியபடியும், உறியடித்தும் விழாவை கொண்டாடினர்.
    • சிறப்பு விருந்தினர்கள் கிருஷ்ணர் வரலாறுகள் மற்றும் அவதார நோக்கங்களை விளக்கி பேசினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் வட்டாரத்தில் உள்ள பள்ளிகள், கோவில்களில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. பள்ளி குழந்தைகள், கண்ணன்- ராதை வேடமிட்டு, பஜனை பாடல்கள் பாடியபடியும், உறியடித்தும் விழாவை கொண்டாடினர். சிறப்பு விருந்தினர்கள் கிருஷ்ணர் வரலாறுகள் மற்றும் அவதார நோக்கங்களை விளக்கி பேசினர். பாடல், ஆடல், நாட்டிய நடன போட்டிகளும் நடந்தன.

    திருப்பூர் காமநாயக்கன்பாளையத்திலுள்ள ஸ்ரீபூமி நீளாதேவி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியை முன்னிட்டு, பஜனை குழுவினர், பல்லக்கில் கிருஷ்ணரை அலங்கரித்து, ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதன்பின், சிறப்பு பஜனைகளுடன்வழிபாடு, அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உறியடி திருவிழா, மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சிகளும் நடந்தது.கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கரிவரதராஜ பெருமாள் கோவில், மூகாம்பிகை நகர், அம்ச விநாயகர் கோவில், முனி யப்பன் கோவில் மற்றும் ராமலிங்க சவுடேஸ்வரி கோவில் உள்ளிட்டவற்றில், உறியடி திருவிழா நடந்தது.

    காங்கயம் தாலுகா வள்ளியரச்சல் கிராமம் பெருங்கருணைபாளையத்தில் உள்ள பால கிருஷ்ணசுவாமி ஆலயத்தில் கோகுலாஷ்டமி கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று காலை 8.45 மணிக்கு விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்ய பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. காலை 10..30 மணிக்கு கோபூஜை, 11 மணிக்கு மூலவர் உற்சவர் சிறப்பு அபிஷேகம், சங்காபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12.05 மணிக்கு மகாதீபாராதனை, திருவீதி உலா, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடந்தது. மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    உடுமலை சின்னவாளவாடியில், ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கோவிலில், கோகுலாஷ்டமி விழா கோலாகலமாக கொண்டாப்படும். இதைெயாட்டி ேநற்று இரவு 7 மணிக்கு பெருமாள் திருமஞ்சனம் நடைபெற்றது. நாளை காலை, 8 மணிக்கு, ஸ்ரீ சுதர்சன ேஹாமம், காலை, 10 மணிக்கு மேல், 12 மணிக்குள், ருக்மணி, சத்யபாமா, சமேத வேணுகோபால சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    பகல் 12மணிக்கு மேல், திருவாராதனம், சாற்றுமறை, தீபாராதனை, தீர்த்தம் வழங்கப்பட்டது. மாலை, 3மணிக்கு, ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருவீதி உலாவும், இரவு 7மணிக்கு, உறியடி உற்சவமும் நடைபெறுகிறது.பின்னர், அன்னபிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதேப்போல் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்கள், பள்ளிகளில் கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

    • பெண்கள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறுகளை கட்டியும், பரிசுப் பொருட்களை வழங்கியும் பாசத்தை வெளிப்படுத்தினர்.
    • பாசத்தை காட்டும் ஒரு சமூக விழாவாகவே ரக்‌ஷா பந்தன் இருந்து வருகிறது.

    திருப்பூர் :

    சகோதரத்துவ திருவிழா எனப்படும் ரக்‌ஷா பந்தன் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பெண்கள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறுகளை கட்டியும், பரிசுப் பொருட்களை வழங்கியும் பாசத்தை வெளிப்படுத்தினர். வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ரக்‌ஷா பந்தன் திருவிழா அண்ணன் தங்கை, அக்கா, தம்பி ஆகியோரின் ரத்த பந்தத்தை வலுப்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. சகோதர பந்தத்தை எடுத்துக்கூறும் இந்த தினம் இந்துக்களின் பண்டிகை என்பதைத் தாண்டி பாசத்தை காட்டும் ஒரு சமூக விழாவாகவே இருந்து வருகிறது.

    ரக்‌ஷா பந்தன் என்றால் 'பாதுகாப்பு பிணைப்பு' என்றும், 'பாதுகாப்பு பந்தம்' என்றும் பொருள். இந்த நாளில், ஓர் ஆ‌ண் ரக்‌ஷா கயிறைக் கட்டிக் கொள்வது என்பது, அவருக்கு கயிறு கட்டிய அந்தப் பெண்ணை சகோதரியாகக்கொண்டு அவளின் வாழ்க்கை முழுவதுமான பாதுகா‌ப்‌பி‌ற்கு‌ம், நலத்துக்கும் என்றென்றும் காவலாக இருப்பேன் என்று உறுதி கூறுவதைப் போன்றதாகும். இன்று ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு திருப்பூரில் வட மாநிலத்தினர் வசித்து வரும் பல வீடுகளில் சகோதரர்களுக்கு சகோதரிகள் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து ராக்கி கயிறு கட்டி வாழ்த்துக்களை பரிமாறினர். 

    • கைத்தறியின் கேந்திரமாக விளங்கும் சென்னிமலையில் இன்று கைத்தறியாளர் கள் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
    • விழாவில் கைத்தறி நெசவாளர்களுக்கு கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    சென்னிமலை:

    இன்று நாடு முழுவதும் கைத்தறி யாளர்கள் தினம் அரசால் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.கைத்தறியின் கேந்திரமாக விளங்கும் சென்னிமலையிலும் இன்று கைத்தறியாளர் கள் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    சென்னிமலை இந்திரா நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற கைத்தறியாளர் கள் தின விழாவில் கைத்தறி நெசவாளர்களுக்கு கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு இந்திரா டெக்ஸ் தலைவர் ஏ. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மேலாளர் சுகுமார் ரவி வரவேற்று பேசினார்.

    இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சி. பிரபு கைத்தறி நெசவாளர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து இனிப்பு வழங்கினார்.

    இந்த விழாவில் முகாசிபிடாரியூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சதீஷ் என்கிற சுப்ரமணியம், முன்னாள் யூனியன் கவுன்சிலர் சி.கே ஆறுமுகம், தி.மு.க. நிர்வாகிகள் தோப்புக்காடு முருகேஷ், பிரஸ் ஆனந்த், கோயில் பாளையம் ஜம்பு , உட்பட கைத்தறி நெசவா–ளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அல்லி முருகன் நன்றி கூறினார்.  

    • 2012 செப்டம்பர் 21- ந்தேதி முதல் மீட்டர் கேஜில் இருந்து அகலப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரெயில் போக்குவரத்து மீண்டும் செயல்படத் தொடங்கியது.
    • ரெயில் ஓட்டுனர்கள், ரெயில் நிலைய அதிகாரிகள் ஆகியோருக்கு பொன்னா டை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    தென்காசி:

    நெல்லையில் இருந்து செங்கோட்டை வரை 1903- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீட்டர் கேஜ் வழித்தடம் தொடங்கப்பட்டு 1904-ல் இந்த வழித்தடத்தில் கொல்லத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

    அப்போது நிலக்கரி என்ஜின் மூலமாக ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. நெல்லை -தென்காசி -கொல்லம் வழித்தடமானது இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக செல்வதால் இந்த வழித்தடத்தில் ெரயிலில் பயணிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    அகலப்பாதையாக மாற்றம்

    நெல்லை -தென்காசி மீட்டர் கேஜ் ரெயில் வழித்தடம் 31 டிசம்பர் 2008- ம் ஆண்டு அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிக்காக மூடப்பட்டது.

    பின்னர் 2012 செப்டம்பர் 21- ந்தேதி முதல் மீட்டர் கேஜில் இருந்து அகலப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரெயில் போக்குவரத்து மீண்டும் செயல்படத் தொடங்கியது. இந்த ரெயில் வழித்தடத்தில் சேரன்மகாதேவி, அம்பை, கடையம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட 16 ரெயில் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது. தற்போது ரெயில்வே மின்மயமாக்கல் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதால் விரைவில் மின்சார என்ஜின் மூலம் ரெயில்கள் இயக்கப்படும்.

    119 -வது ஆண்டு விழா

    பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தின் 119-வது ஆண்டு விழா கேக் வெட்டியும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. ரெயில் ஓட்டுனர்கள், ரெயில் நிலைய அதிகாரிகள் ஆகியோருக்கு பொன்னா டை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்த ராமச்சந்திரன், கல்லூரணி பஞ்சாயத்து தலைவர், தொழிலதிபர் சேவியர் ராஜன், தெற்கு ரெயில்வே மண்டல ஆலோ சனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

    • அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் கொண்டாடினர்.
    • மேலும் அருகே இருந்த பஸ் நிறுத்தத்தில் பயணியர்களுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    திருமங்கலம்

    சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்தின் சாவியை இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. இதைத்தொடர்ந்து திருமங்கலம் தேவர் சிலை முன்பு மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    மேலும் அருகே இருந்த பஸ் நிறுத்தத்தில் பயணியர்களுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதல் யூனியன் சேர்மன் லதா ஜெகன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டி, மாணவரணி மாவட்ட இணைச் செயலாளர் சிவசக்தி, மீனவர் அணி மாவட்ட இணைச்செயலாளர் விஜி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைச்செயலாளர் கோடீஸ்வரன், ஒன்றிய அவைத்தலைவர் அன்னக்கொடி, ஒன்றிய துணைச்செயலாளர் சுகுமார், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் முருகன், நிர்வாகிகள் கப்பலூர் சரவணன், கண்ணபிரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×