என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மெக்சிகோ"
- முதல் பாதிவரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
- மெஸ்சி முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சி பிரிவில் நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணி மெக்சிகோவை எதிர்கொண்டது. லுசைல் ஐகானிக் மைதானத்தில் நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டிய போதும், முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இரண்டாவது பாதியின் 64 வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து அந்நாட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து 87வது நிமிடத்தில் பெர்னான்டஸ் மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட போதும் மெக்சிகோ அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை அர்ஜென்டினா பதிவு செய்தது.
- மெக்சிகோவில் மர்ம நபர் நடத்திய தாக்குதலில் அந்நகர மேயர் உள்பட 18 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தொலைதூர நகரமானது மெக்சிகோவின் மிகவும் முரண்பட்ட பகுதிகளில் ஒன்றான டேரா கலிண்ட்டியில் உள்ளது.
மெக்சிகோவின் தென் மேற்கு பகுதியில் சான் மிகுவல் டோடோலாபன் என்ற நகரில் சிட்டி ஹால் உள்ளது. இந்த கட்டிடத்தின் மீது மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்தினார்கள்.
அவர்கள் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் அந்த கட்டிடத்தின் மீது கண்மூடித்தனமாக சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் அந்த கட்டிடத்தில் இருந்த பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர்
மர்ம கும்பல் நடத்திய இந்த வெறித்தனமான துப்பாக்கி சூட்டில் மெக்சிகோ மேயர் கான்ராடோ மெண்டோசா மற்றும் அவரது தந்தையும், முன்னாள் மேயருமான ஜுவான் மென்டோசா, போலீஸ் அதிகாரிகள் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதில் சில அரசு ஊழியர்களும் உயிர் இழந்தனர்.
மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டு பாய்ந்தவர்கள் சிட்டி ஹால் முன்பு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதனால் அந்த பகுதி ரத்த காடாக காட்சி அளித்தது. அந்த கட்டிடத்தின் பல இடங்களை துப்பாக்கி குண்டுகள் துளைத்து இருந்தது.
இந்த சம்பவத்திற்கு லாஸ் டெக்வலிரோஸ் என்ற அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. ஆனால் இதனை மெக்சிகோ அதிகாரிகள் உறுதிபடுத்தவில்லை.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை மர்ம கும்பல் படமெடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளது. இது வைரலாக பரவி வருகிறது
இந்த சம்பவத்தை தொடர்ந்து மெக்சிகோவில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். துப்பாக்கி சூடு கும்பலை பிடிக்க அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேயர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அவரது கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது கோழைத்தனமான தாக்குதல் என அக்கட்சி தெரிவித்து உள்ளது.
சமீபகாலமாக மெக்சிகோவில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மத்திய மெக்சிகோ மாநிலமான குவானா ஜூவாடோவில் உள்ள மதுக்கடை ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு வடக்கு மெக்சிகோவில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2006-ம் ஆண்டு அரசு போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையை தொடங்கியதில் இருந்து இது போன்ற சம்பவங்கள் தொடர் கதை போல நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் பதவி, பாராளுமன்றம் மற்றும் 3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபராக உள்ள பெனா நெய்டோ மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளதால், அவர் சார்ந்துள்ள ஐஆர்பி கட்சி தோல்வியை தழுவும் என கருத்து கணிப்புகள் முன்னரே வெளியாகின.
அதேபோல, வாக்கு எண்ணிக்கையில் அந்த கட்சி பின் தங்கியது. ஐஆர்பி கட்சியில் இருந்து பிரிந்து இடதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட தேசிய ரீஜெனரேசன் இயக்கம் தொடங்கிய லோபஸ் ஆப்ரதோர் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதே போல தேர்தல் முடிவுகள் எதிரொலித்தன.
53 சதவிகித வாக்குகள் பெற்று அவர் முதலிடம் பிடித்துள்ளார். மெக்சிகோவை கடந்த ஒரு நூற்றாண்டாக ஆண்டுள்ள இரு கட்சிகளை தோற்கடித்தவர் என்ற வரலாற்று சாதனையை லோபஸ் ஆப்ரதோர் படைத்துள்ளார். மற்றொரு முக்கிய கட்சியான தேசிய ஆக்ஷன் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரிகார்டோ அனாயா 23 சதவிகித வாக்குகளுடன் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
ஊழல், வறுமை, போதை மாபியா ஆகியவற்றை ஒழிப்பதே தனது முதல் இலக்கு என லோபஸ் ஆப்ரதோர் தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்தார். அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையை கடுமையாக ஆப்ரதோர் விமர்சித்து வந்தாலும், இவரது வெற்றிக்கு டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்