search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடனம்"

    • இரவு 3 மணிக்கு மேல் சந்தனம் பூசிவிடுவார்கள்
    • சந்தனக்காப்பு இல்லாத மரகதக்கல் நடராஜரை, பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    வருடத்திற்கு ஒரு நாள் அதாவது மார்கழி மாதம் பவுர்ணமி நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில் மட்டும் சந்தனக்காப்பு கலைக்கப்படும்.

    அன்று முழுவதும் சந்தனக்காப்பு இல்லாத மரகதக்கல் மேனியால் ஆன நடராஜரை, பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    அதனைத்தொடர்ந்து நடராஜர் சிலைமீது சந்தனாதி தைலம் பூசப்பட்ட பின்னர் வெண்ணெய், சந்தனம், குங்குமம், மஞ்சள் திரவியம், தேன், பால், தயிர், இளநீர் உள்பட 32 வகையான அபிஷேகம் நடைபெறும்.

    இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

    மேலும் நடராஜர் மீது பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் கொண்டது என்பதால் அதனை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள்.

    இதையடுத்து அன்று இரவு சரியாக 12.00 மணி அளவில் சிறப்பு பூசைகள் நடத்தப்பட்டு மீண்டும் மரகத நடராஜர் சிலை மீது சந்தனம் பூசப்படும்.

    திருவாதிரை அன்று கோவிலில் அதிக கூட்டம் இருக்கும் காலை பத்து மணியில் இருந்து மரகத நடராஜரைப் பார்க்கலாம்.

    இரவு 3 மணிக்கு மேல் சந்தனம் பூசிவிடுவார்கள் பிறகு அடுத்த வருடம்தான் மரகத நடராஜரை தரிசிக்க முடியும்.

    அதனால் இரவு சாமி தரிசனம் செய்யும்போது வரிசையில் அதிகநேரம் நிற்கவேண்டியதிருக்கும் கூட்டமும் கட்டுக்கடங்காமல் இருப்பதால்

    சில நேரம் அதிக தொலைவில் இருந்து வந்து இருப்பவர்கள் மரகதநடராஜரை பார்க்காமலே சந்தனம் பூசப்பட்ட நடராஜரை பார்த்து செல்ல வாய்ப்பு உண்டு.

    இந்த ஏமாற்றத்தை தவிர்க்க காலையில் வந்துவிட்டால் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் நேரத்தில் மரகதநடராஜர் தரிசனத்தை எவ்வித சிரமமும் இன்றி தரிசித்து விட்டு செல்லலாம்.

    வயதானவர்கள் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் காலையில் வந்து விடுவது சிறந்தது.

    • அவர் பெயர் ரத்தின சபாபதி. அவரையே ஆதிசிதம்பரேசர் என்று அழைக்கின்றனர்.
    • நடராஜர் சிலை 5 அடி உயரம் கொண்ட பச்சை மரகதக் கல்லால் ஆனது.

    உத்தர கோசமங்கையில் உள்ள நடராஜர் சிலை 5 அடி உயரம் கொண்ட பச்சை மரகதக் கல்லால் ஆனது.

    அவர் பெயர் ரத்தின சபாபதி. அவரையே ஆதிசிதம்பரேசர் என்று அழைக்கின்றனர்.

    ஒளி வெள்ளத்தில் இந்த சிலையைப் பார்க்கும்போது உயிர்ப்புடன் இருப்பது போல் தோன்றுவதை நாம் உணர முடியும்.

    அபூர்வமான இந்த விக்கிரகத்தில் மனித உடலில் உள்ளது போல் பச்சை நரம்புகள் இருப்பதைக் காணலாம். எனவே இந்த சிலை உலக அதிசயத்தில் ஒன்றாக உள்ளது.

    இந்த நடராஜர் விக்ரகம் மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒலி, ஒளி அதிர்வுகளை தாங்க இயலாத தன்மை கொண்டது.

    எனவே இந்த கோவிலில் மேளதாளங்கள் எதுவும் இசைக்கப்படுவதில்லை.

    எந்த விதத்திலும் விக்கிரம் சேதப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டு பாதுகாத்து வருகிறார்கள்.

    • ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல் பலமும் கூடும்.
    • கன்னிபெண்களுக்கு நல்ல இடத்தில் திருணம் கைகூடும்.

    இந்த ஆருத்ரா தரிசனத்தைக் காண தேவலோக தேவர்கள், ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள் ஆகியோர் உத்தரகோசமங்கைக்கு வருவார்கள்.

    இங்கு நடனம் புரியும் நடராஜனை தரிசனம் செய்தால், இப்பிறவியல் செய்த பாவங்கள் விலகி இன்பமான வாழ்வு அமைவதுடன், சுமங்கலிப் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.

    கன்னிபெண்களுக்கு நல்ல இடத்தில் திருணம் கைகூடும்.

    ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல் பலமும் கூடும்.

    ஆருத்ரா தரிசனம் பன்மடங்கு பலன்களையும் நலன்களையும், வளங்களையும் வாரி வழங்கும் வழிபாடாக உள்ளது.

    அவரது ஐந்தொழில்களை ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் ஆகியவற்றை உணர்த்துவதாக அமையும் பொருட்டே இத்திருத்தலத்தில் பஞ்சகிருத்திய உற்சவம் நடந்து வருகிறது.

    உத்தரகோசமங்கை ஆதிசிதம்பரம் என்றும் பூலோக கைலாயம் என்றும் பூலோக சொற்கம் என்றும் உலகத்தில் முதல் தோன்றிய கோவில் என்ற பெருமை உண்டு.

    முக்தி கிடைக்க வழி செய்யும்.

    • சிவபெருமான் சிதம்பரத்தில் ஆடிய தாண்டவம் மூன்று.
    • உத்தர கோசமங்கையில் மட்டும் நான்கு தாண்டவம் முதல் தடவையாக ஆடி உள்ளார்.

    ஆதிசிதம்பரம் என்று அழைக்கப்படுகின்ற உத்தர கோசமங்கையில் மட்டும் நான்கு தாண்டவம் முதல் தடவையாக ஆடி உள்ளார்.

    அந்த நான்கு தாண்டவங்கள் வருமாறு:

    (1) ஆனந்த தாண்டவம்

    (2) சந்தியத் தாண்டவம்

    (3) சம்விஹார தாண்டவம்

    (4) ஊர்த்துவத் தாண்டவம் ஆகும்.

    அடுத்து சிவபெருமான் சிதம்பரத்தில் ஆடிய தாண்டவம் மூன்று.

    அவை

    (1) திரிபுரந்தர தாண்டவம்

    (2) புஜங்கத் தாண்டவம்

    (3) லலிதாத் தாண்டவம் ஆகும்.

    மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று ஈசனின் நடனத்தை காண்பது விசேஷம்.

    • பரந்தாமனின் முகத்தில் இன்று என்ன இவ்வளவு பிரகாசம் என்று சிவன் கேட்டார்.
    • சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருக்கிறார். அவற்றுள் 18 நடனங்கள் ஈசன் தனியாக ஆடியதாகும்.

    ஒரு தடவை திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மகாவிஷ்ணு திடீரென மகிழ்ச்சியில் திளைக்கத் தொடங்கினார்.

    அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷமானது சித்திரை பவுர்ணமி நிலவைப் போன்று பளிச்சிட்டது.

    பரந்தாமனின் முகத்தில் இன்று என்ன இவ்வளவு பிரகாசம் என்று சிவன் கேட்டார்.

    அதற்கு மகாவிஷ்ணு உத்தரகோசமங்கை திருவாதிரை நாளன்று ஆடிய தங்களுடைய திருத்தாண்டவமே எனது மகிழ்ச்சிக்குக் காரணம் என்றார்.

    இதைக்கேட்டதும் திருமாலையே மகிழ்ச்சியில் திளைக்கச் செய்த அந்த நாட்டியத்தை, தான் ஆடிய நாட்டியத்தை தானே பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆசை சிவபெருமானுக்கு ஏற்பட்டது.

    எனவே ஈசன் பாதி மார்புக்குமேல் மனிதராகவும், மார்புக்குக் கீழ் பாதி பாம்பாகவும் மாறி பதஞ்சலி முனிவர் ஆனார்.

    ஈசன் ஆடிய திருநடனத்தை ஈசன் கண்டுகளித்த இடம்தான் ஆதிசிதம்பரம் என்ற உத்திரகோச மங்கையாகும்.

    சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருக்கிறார். அவற்றுள் 18 நடனங்கள் ஈசன் தனியாக ஆடியதாகும்.

    ஈஸ்வரியுடன் ஆடியது 36, விஷ்ணுவுடன் ஆடியது 9, முருகப்பெருமானுக்காக ஆடியது 3, தேவர்களுக்காக ஆடியது 42 ஆகும்.

    • சிறு வயதிலேயே பல குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது.
    • நாளடைவில் இது சர்க்கரை நோயாகவும் மாறி விடுகிறது.

    இன்றைய வாழ்க்கை முறையில் பெரியவர்களே சரியான முறையில் தனது உடலை பார்த்து கொள்ளாத நிலையில், குழந்தைகளும் அதனையே பின்பற்ற தொடங்குகின்றனர். சிறு வயதிலேயே பல குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஓடி ஆடி விளையாடாமல் ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்து இருப்பது தான்.

    இது போன்று செய்வதால் உடலில் அதிக கொழுப்புகள் சேர்ந்து குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே உடல் பருமன் உண்டாகுகிறது. மேலும் நாளடைவில் இது சர்க்கரை நோயாகவும் மாறி விடுகிறது. இவற்றை தடுக்க மருத்துவர்கள் கூறும் இந்த எளிய உடற்பயிற்சிகளை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்று தந்து, செய்ய வைத்தால் போதும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

    உடற்பயிற்சி என்றால் மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண வீட்டு வேலைகள் மூலமாகவும் இவற்றை செய்யலாம். குறிப்பாக வீட்டை சுத்தம் செய்தல், துடைத்தல், போன்ற சிறிய வேலைகளை குழந்தைகளை செய்ய சொல்லலாம். மேலும் வீட்டில் கலைந்துள்ள பொருட்களை அவர்களை அழகாக அடுக்கி வைக்க சொல்லலாம்.

    வீட்டில் உள்ள படிக்கட்டுகளை உடற்பயிற்சிக்காக சிறப்பாக பயன்படுத்தலாம். தினமும் 10-15 நிமிடம் வரை படிக்கட்டுகளில் ஏறி இறங்க சொல்லுங்கள். இது நல்ல பலனை தரும். குழந்தைகளுக்கு சிறந்த உடற்பயிற்சியாகவும் இது அமையும். இப்படி செய்வதால் இதய ஆரோக்கியம் மேம்படும், உடல் பருமன் ஆகாது.

    குழந்தைகளை ஆரோக்கியமாக வைக்க உதவும் சிறந்த உடற்பயிற்சி நடனம் தான். எளிமையான நடன அசைவுகளை சொல்லி கொடுத்து அவர்களை ஆட சொல்லலாம். இது உடலுக்கும் மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும். பெற்றோர்கள் ஆரம்பத்தில் சிறிய சிறிய நடன அசைவுகளை சொல்லி கொடுத்து பிறகு குழந்தைகளை ஆட சொல்லலாம்.

    ஒரு தட்டு வடிவிலான இலகுவான பொருளை கொண்ட விளையாட்டை 'ஃப்ரிஸ்பீ' என்று கூறுவார்கள். விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து சென்று அங்கு இந்த விளையாட்டை விளையாட சொல்லி தரலாம். இது குழந்தைகளுக்கு வேடிக்கையான விளையாட்டாக இருக்கும்.

    உடல் ஆரோக்கியத்தை குழந்தைகள் சிறப்பாக வைத்து கொள்ள ஸ்கிப்பிங் சிறந்த பயிற்சியாகும். வீட்டின் மாடியில் ஜாலியாக ஸ்கிப்பிங் செய்ய சொல்லுங்கள். இது உடல் எடையை கூடாமல் வைக்கும், மேலும் தசையை வலுப்பெற செய்ய உதவும்.

    குழந்தைகள் நல்ல மன வலிமையையும், உடல் வலிமையையும் பெறுவதற்கு யோகா செய்தல் வேண்டும். முதலில் சிறிய பயிற்சிகளை குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். பிறகு அவர்களுக்கே இதன் மீது அதிக ஆர்வம் வந்துவிடும்.

    மூளைக்கும், உடலுக்கும் தேவையான வேலையை நாம் தந்து வந்தாலே உடல் நலன் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் இவை இரண்டையும் சீரான நிலையில் வைக்க, பந்து எறிதல் விளையாட்டு நல்ல தேர்வாகும். இந்த விளையாட்டிற்கு பெற்றோர்களும் குழந்தைகளுடன் இருந்தால் நல்லது. ஒருவர் பந்தை தூக்கி எறிய மற்றவர் அதை பிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும்.

    • மதுரை முதியோர் இல்ல தாத்தா, பாட்டிகள் நடனமாடி இன்ஸ்டாகிராமில் சாதித்த வீடியோ வெளியானது.
    • பொதுமக்கள் அதிகமாக பார்த்து வருவது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது

    மதுரை

    கூட்டுக்குடும்பம் சிதைந்து போனதால் சிற–கொடிந்த பறவைகளை போன்று தங்களது கடைசி காலத்தை கழிக்க போராடும் மூத்த குடிமக்களுக்காக உருவானதுதான் முதியோர் இல்லங்கள். பிள்ளைகள் இருந்தும் பல்வேறு கார–ணங்களுக்காக தனித்தும், துரத்தியும் விடப்படுப–வர் களை கண்டறிந்து அவர்க–ளின் வாழ்க்கையை இனி–தாக்கும் முயற்சியில் தொடங்கப்பட்ட முதியோர் இல்லங்கள் இன்று எண் ணில–டங்காமல் முளைத்து–விட்டது.

    ஒத்த வயதுடையவர்களை உறவினர்களாக நினைத்து வாழ்வின் இறுதி நாட்களை கழித்துவரும் முதியோர் களும் நாகரீகத்திற்கேற்ப தங்களை மாற்றி வருகிறார் கள் என்பதற்கு சமூக ஊட–கங்களே சாட்சி.

    எத்தனை நாளைக்குத் தான் வரலாற்று கதைகளை நினைவு கூர்ந்து, அனுபவ்ட களை பகிர்ந்து–கொண்டு காலத்தை கடத்துவது? காலத்தின் சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள முதியோர்களும் தயாராகி–விட்டனர் என்பதற்கு மதுரை முதியோர் இல்லமும் சான்றாக அமைந்துள்ளது. அதிலும் சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளி–யிட்டு லைக்குகளை பெறுவ–திலும் அவர்கள் முன்னேற் றம் கண்டுள்ளனர். அதுபற் றிய விபரம் வருமாறு:-

    மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகரில் அடைக்கலம் என்கிற முதி–யோர் இல்லம் செயல் பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டு–களாக இலவசமாக நடத்தப் பட்டு வரும் இல்லத்தில் கணவரை இழந்தவர்கள், மனைவியை இழந்தவர்கள், சாலையோரம் தவித்தவர் கள், தனிமையில் வாடுபவர் கள் என தற்போது 14 பாட்டிகளும், 11 தாத்தாக்க–ளும் தங்கியுள்ள–னர்.

    இதுவரை 14 பேர் இறந்துள்ள நிலையில் 58 பேர் வசித்துள்ளனர். முதி–யோர்களின் உடல் நிலையை பரிசோதித்து அவர்களுக் கேற்ற உணவுகள் தவறாமல் வழங்கப்படுகிறது. பொழுதை கழிக்க பழங்கதை பேசியவர்கள் தற்போது ஆண்டிராய்டு போன்கள் பற்றியும் அறிந்து, தெரிந்து பழகிக்கொண்டுள்ளனர்.

    அந்த வகையில் இந்த இல்லத்தைச் சேர்ந்த முதிய–வர்கள் சினிமா பாட–லுக்கு நடனமாடும் காட்சிகள் இன்ஸ்டாகிராமில் அடைக்க–லம் என்கிற பெயரில் வீடியோக்கள் வைரலாகி மில்லியன் கணக்கில் பார் வை–யாளர்களை பெற்று சாதனை படைத்துள் ளது.

    மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏறு பூட்டி வயக்காட்ட உழுதுபோடு செல்லக்கண்ணு... என்ற புதிய ரீமேக் பாடலுக்கு ஏற்ப நளினமாக ஆடிய நடனம் பார்வையாளர்க–ளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இதுகுறித்து அந்த முதி–யோர் இல்லத்தில் வசித்து வரும் ராஜகோபால் மற்றும் ராக்காயி கூறியதாவது:-

    குடும்ப சூழ்நிலை கார–ணமாக இங்கு வந்தோம். இங்கு எங்களை நல்லபடி–யாக பார்த்துக் கொள்கி–றார்கள். நடனம் ஆடுவதில் ஆர்வம் இருந்த காரணத்தால் நடனமாடி வீடியோ எடுத் தோம். மேலும் இதுபோன்ற விஷயங்களை செய்வது மூலம் எங்கள் கஷ்டங்களை மறந்து மகிழ்ச்சியாக இருக்கி–றோம்.

    மனதில் அடக்கி வைத்தி–ருந்த கஷ்டங்கள் காணாமல் போய்விட்டது. இந்த வீடியோ காட்சிகள் எதார்த்தமாக நாங்கள் எடுத்தோம். ஆனால் தற்போது இதை பொதுமக்கள் அதிகமாக பார்த்து வருவது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றனர்.

    • குரோசா -2023 கலைத்திறன் போட்டியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
    • ஹிவஸ்திகா, சாதனா ஹரிணி ஆகியோர் ஜோடி நடனத்தில் 2-ம் இடம் பெற்றனர்.

    சுரண்டை:

    தூத்துக்குடி ஹோலிகிராஸ் பள்ளியில் குரோசா -2023 கலைத்திறன் போட்டி நடைபெற்றது. இதில் அழகர் பப்ளிக், பாரத் வித்யாமந்திர், கீதா மெட்ரிக், குட் ஷெப்பெர்டு, ஹோலிகிராஸ், எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த கலைத்திறன் போட்டியில் எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சிவ டமோக்னஸ் ராஜேந்திரா குழுவினர் மேற்கத்திய நடனத்தில் முதலிடம் பெற்றனர். மேலும் இதே பள்ளியை சார்ந்த ஹிவஸ்திகா, சாதனா ஹரிணி ஆகியோர் ஜோடி நடனத்தில் 2-ம் இடம் பெற்றனர்.

    கணக்கதேஜஸ், சுபநந்தன் ஆகியோர் கணிதப்புதிர் போட்டியில் 3-வது இடம் பெற்றனர். குரோசா கலைத்திறன் போட்டியில் ஜீனியர் பிரிவில் எஸ்.ஆர். பள்ளி மாணவ, மாணவிகள் 3-வது இடம் பெற்றுச் சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற அணியினரை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ்ராம், பள்ளி செயலர் சிவ டிப்ஜினிஸ் ராம், முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் மாரிக்கனி ஆகியோர் பாராட்டினர்.

    • அரசு அதிகாரிகளை பழங்குடி இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடியும், வாத்தியங்கள் வாசித்தும் வரவேற்பு அளித்தனர்.
    • சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்படும் பல்வேறு நலன்கள், கல்வி திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே சிறக்காடு, சோலையூர் மேலப்பரவு, முந்தல், கொட்டகுடி பகுதிகளில் பழங்குடியின மக்களின் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு தேனி மாவட்ட ஆதிவாழ் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு வங்கி ( நபார்டு) சார்பாக பல்வேறு அடிப்படை வாழ்வாதார மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் ஆதிவாழ் பழங்குடி இன மக்கள் மேம்பாட்டு அலுவலர், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் நபார்டு வங்கி அதிகாரிகள், வனத்துறை மற்றும்போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று பழங்குடி இன மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அரசு அதிகாரிகளை பழங்குடி இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடியும், வாத்தியங்கள் வாசித்தும் வரவேற்பு அளித்தனர்.

    அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளில் பழங்குடியின மக்களுக்கான வங்கிக் கணக்குகள் தொடங்குவது, சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்படும் பல்வேறு நலன்கள், கல்வி திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

    பின்னர் சிறக்காடு, மேலப்பரவு, சோலையூர், முந்தல், கொட்டகுடி ஆகிய பகுதிகளில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பழங்குடியின மக்களுக்கு விலையில்லாத கன்றுடன் கூடிய கறவை மாடுகள், நபர் ஒன்றுக்கு ஆறு ஆடுகள் வீதம் சுமார் 150 பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் தேனி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு தொண்டு நிறுவனம் சார்பாக போடியில் உள்ள பள்ளிகளில் பயிலும் சிறக்காட்டில் இருந்து வரும் 45 மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆட்டோ கட்டணம் ரூ.10 ஆயிரம் வழங்கியும் சிறப்பு ஆசிரியர் கொண்டு கல்வி மேம்பாட்டு திட்டமும் கொண்டு வருவதாகவும் உறுதி அளித்தனர்.

    • கடந்த 3-ந் தேதி வரை தொடர்ச்சியாக 127 மணி நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
    • நேபாள நாட்டை சேர்ந்த பந்தனா என்பவர் 126 மணி நேரம் தொடர்ச்சியாக நடனமாடியதே ஸ்ருஷ்டி முறியடித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஸ்ருஷ்டி சுதிர் ஜக்தீப். இவர் தொடர்ச்சியாக பல மணிநேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டார். அதன்படி கடந்த மாதம் 29-ந் தேதி இந்த முயற்சியை தொடங்கிய அவர் கடந்த 3-ந் தேதி வரை தொடர்ச்சியாக 127 மணி நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    இதற்கு முன்பு நேபாள நாட்டை சேர்ந்த பந்தனா என்பவர் 126 மணி நேரம் தொடர்ச்சியாக நடனமாடியதே கின்னஸ் சாதனையாக இருந்த நிலையில், அதனை ஸ்ருஷ்டி முறியடித்துள்ளார்.

    இந்திய கலாசாரத்தை உலகிற்கு எடுத்து காட்டும் வகையில் கதக் நடன முறையை பின்பற்றி அவர் நடனமாடி சாதனை படைத்துள்ளார். இதற்காக தினமும் 4 மணி நேரம் தியான பயிற்சி, 3 மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் 6 மணி நேரம் நடன பயிற்சி மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

    • பூந்தோட்டம் அருகில் உள்ள அரசலாற்று பாலம் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • மது அருந்தி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பூந்தோட்டத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் ஐயப்பன் (வயது 30). இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி தொழில் நடத்தி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு பூந்தோட்டம் அருகில் உள்ள அரசலாற்று பாலம் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக பேரளம் போலீசார் சந்தேக மரணம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் இறப்பதற்கு முன் ஐயப்பனுடன் பேரளம் காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் மணிகண்டன், பிரபு உள்ளிட்ட நண்பர்கள் மது விருந்து நடத்தி நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதனைத் தொடர்ந்து இறந்து போன ஐயப்பனின் தந்தை அன்பழகன், தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதில் பேரளம் போலீஸ் மணிகண்டன் மற்றும் பிரபு ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.

    இந்த புகார் மனு குறித்து மாவடட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் பணி நேரத்தில் உரிய அனுமதியின்றி தனிப்பட்ட நபரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதால் மணிகண்டன், பிரபு ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    பணி நேரத்தில் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு மது போதையில் நடனம் ஆடிய போலீசார் 2 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அகிராணி நாட்டுபுறப்பாடல் ஒன்றுக்கு அந்த சிறுவன் உற்சாகமாக நடனம் ஆடுகிறான்.
    • சிறுவனை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    சிறுவர்களின் சிரிப்பான பேச்சு, அழுகை, நடனம் போன்றவையும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி விடும். அந்த வகையில் சீருடை அணிந்து கொண்டு ஒரு சிறுவன் அட்டகாசமாக நடனமாடும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

    அதில் அகிராணி நாட்டுபுறப்பாடல் ஒன்றுக்கு அந்த சிறுவன் உற்சாகமாக நடனம் ஆடுகிறான். மேலும் பாடலுக்கு ஏற்ப சிறுவனின் செய்கைகளும் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது. இதனால் நெட்டிசன்கள் வீடியோவை வைரலாக்கி வருவதோடு, சிறுவனை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். 

    ×