search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 178004"

    • திருச்சி மத்திய பஸ் நிலையம் - அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இரண்டு பிணங்கள்
    • போலீசாரால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

    திருச்சி,

    திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஹோட்டல் அருகாமையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று கிடப்பதாக கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி ஸ்டீபன் தன்ராஜ் கண்டோன்மென்ட் போலீசுக்கு புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை பிரேத கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இதேபோன்று திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேண்டில் அருகாமையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் கணேசன் அரசு மருத்துவமனை போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் ஜோதி பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். 

    • இடையே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்
    • கரூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த ஆணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    கரூர்,

    குளித்தலை-லாலாபேட்டை ரெயில் நிலையத்திற்கு இடையே தண்டவாளத்தில் நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த ஆணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து, பிணமாக கிடந்தவர் யார்? அவர் ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தா.பழூர் அருகே அடையாளம் ெதரியாத முதியவர் பிணம் கிடந்தது
    • இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே வீரபாண்டியன் என்பவருக்கு சொந்தமான பருத்தி வயலில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் காரைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் மணிமாறனிடம் தகவல் தெரிவித்தனர். மணிமாறன் தா.பழூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முதியவரின் சடலத்தை மீட்டு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மரணம் அடைந்த நபர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • 45 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
    • திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில், முத்தூர் ரோட்டில் மின்சார வாரிய அலுவலகம் முன்பு நிழற்குடையில் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

    இது குறித்து வெள்ளகோவில் போலீசார் பெயர் விலாசம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் காணாமல்போன நோயாளி ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
    • இறந்த மதியழகனுக்கு சர்மிளா என்ற மனைவியும், 5 வயதில் கபில் வளவன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரம்பலூர்;

    பெரம்பலூர் சங்குபேட்டை பின்புறம் உள்ள பெரம்பலூர் கீழேரி எனப்படும் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியில் நேற்று காலை 6.15 மணியளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தார். அவர் உள்ளாடை மட்டும் அணிந்திருந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஏரியில் பிணமாக மிதந்து கொண்டிருந்த ஆண் உடலை பார்வையிட்டனர்.

    பின்னர் போலீசார் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் ஏரியில் இருந்து இறந்தவரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதனை தொடர்ந்து போலீசார் இறந்தவர் யார்?, அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். ஏரியில் பிணமாக மிதந்தவர் கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்த மருதமுத்துவின் மகன் மதியழகன் (வயது 29) என்பது தெரியவந்தது.

    மதியழகன் அதிக மது போதையில் உயர் ரத்த அழுத்தத்தால் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மனநலம் சரியில்லாதவர்போல் நடந்து கொண்ட காரணத்தால் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் கடந்த 24-ந் தேதி காலை 10 மணியளவில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் 25-ந் தேதி மாலை 5 மணியளவில் மருத்துவமனையில் இருந்து மதியழகன் தப்பித்து சென்றவர் மீண்டும் வீட்டிற்கு செல்லவில்லை.

    இதனால் அவரை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் மதியழகன் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை தேடி வந்தனர். இந்த நிலையில் பெரம்பலூர் வெள்ளந்தாங்கியம்மன் ஏரியில் மதியழகன் நேற்று காலை இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    மதியழகன் இறந்தது தொடர்பாக, அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மதியழகன் உடலில் காயங்கள் ஏதும் இல்லாததால், அவர் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மதியழகனுக்கு சர்மிளா என்ற மனைவியும், 5 வயதில் கபில் வளவன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சி உறையூரில் அடையாளம் தெரியாத ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆண் பிணம்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    திருச்சி, 

    திருச்சி உறையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட உறையூர் ராமலிங்க நகர் 2-வது மெயின் ரோடு அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர், முகவரி தெரியாத ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் அவர் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஐந்தரை அடி உயரம் கொண்ட அவர் சிவப்பு நிற அரைக்கால் டவுசர், சிவப்பு நி அரைஞான் கயிறு கட்டியிருந்தார். இடது இடுப்பில் கருப்பு புள்ளி மச்சம், இடது நெற்றியில் காயத்தழும்பு காணப்பட்டது. இதுகுறித்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    • குளித்தலை அருகே பிளஸ்-1 மாணவி கிணற்றில் பிணமாக மிதந்தார்
    • மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாய் புகார்

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி பகுதி சவாரிமேட்டை சேர்ந்தவர் தங்கராசு, கலைவாணி. இவர்களுக்கு விக்னேஸ்வரி, தேவிகா(வயது 16) ஆகிய இரண்டு மகள்கள். இதில் இளைய மகள் தேவிகா பிளஸ்-1 படித்து வந்தார். தந்தை தங்கராசு சுமார் 10 வருடங்களுக்கு முன்பு பிரிந்து வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவாத கூறப்படுகிறது,இந்நிலையில் வீட்டில் இருந்த தேவிகா காணவில்லை. 

    பல இடங்களில் தேடிக் கிடைக்காததால் குளித்தலை காவல் நிலையத்தில் தேவிகாவின் தாய் கிருஷ்ணவேணி புகார் செய்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தேவிகா ஊருக்கு அருகாமையில் உள்ள விவசாய பாசன கிணற்றில் பிணமாக மிதப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, இதனை அடுத்து குளித்தலை போலீசார் மற்றும் முசிறி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து மாணவியின் தாயார் எனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தேவிகாவை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசியிருப்பார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர், மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
    • கிராம நிர்வாக அதிகாரி வினிசியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு

    நாகர்கோவில் :

    இடலாக்குடி பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வீட்டின் முன்பு பிணமாக கிடந்தார்.இதை பார்த்த பொதுமக்கள் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி வினிசியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரெயில்வே குடியிருப்பு பகுதியில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து நேற்று கடும் துர்நாற்றம் வீசியது.
    • உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே குடியிருப்பு பகுதியில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து நேற்று கடும் துர்நாற்றம் வீசியது. உடனடியாக இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்திய போது அங்கு ஆண் ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    5 நாட்களுக்கு முன்பு அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். விசாரணையில் இறந்தவர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 54) என்பதும், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தவர் இந்த பாழடைந்த கட்டிடத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும், உடல்நல குறைவால் இறந்ததும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருத்துவமனை வளாகத்தில் முதியவர் இறந்து கிடந்தார்
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக சம்பவத்தன்று வந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மருத்துவமனை வளாகத்திலேயே இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வைகைநல்லூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, அந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கறம்பக்குடி அருகே கிணற்றில் முதியவர் பிணம் மிதந்தது
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரெகுநாதபுரம் கடைவீதிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் புது விடுதி சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் சண்முகம் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் ரெகுநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தில்லைநாயகம் படித்துறையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம்
    • கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை

    திருச்சி, 

    திருச்சி காவிரி ஆறு தில்லைநாயகம் படித்துறையில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து தேவதானம் கிராம நிர்வாக அதிகாரி அனீஸ் பாத்திமா கோட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×