search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசியக்கொடி"

    • தேசியக்கொடி தலைகீழாக பறப்பதை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி.
    • அவமாறியதை செய்த அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம்,சித்தி பேட்டை மாவட்டம், கஜ்வேல் நகராட்சியில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்தது. நகராட்சி அலுவலகம் முழுவதும் வண்ண வண்ண தோரணங்கள் மற்றும் தேசிய கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. பின்னர் நகர மன்ற தலைவர் ராஜமவுலி குப்தா தேசிய கொடியை ஏற்றினார்.

    அப்போது தேசியக்கொடி தலைகீழாக பறப்பதை கண்ட அதிகாரிகள் நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தேசியக்கொடி கீழே இறக்கப்பட்டு மீண்டும் சரி செய்து பறக்க விடப்பட்டது.

    தேசியக்கொடி தலைகீழாக ஏற்றி அவமாறியதை செய்த அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க சார்பில் கஜ்வேல் போலீசில் புகார் செய்தனர்.

    இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ராஜகோபுரத்தில் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றப்பட்டது.
    • நடராஜன் திருவடிகளில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு ஏற்றப்பட்டது.

    சிதம்பரம்:

    உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் கீழரத வீதியில் உள்ள 142 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றப்பட்டது.

    நடராஜர் கோவில் சித் சபையில் முதற்கால பூஜை நடைபெற்று முடிந்த பின்னர் தேசியக் கொடியானது நடராஜன் திருவடிகளில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க பொது தீட்சிதர்கள் செயலர் வெங்கடேச தீட்சதர் தலைமையில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ராஜ கோபுரத்தில் கொடி யேற்றப்பட்டது.

    சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா வருடத்திற்கு இரண்டு முறை இந்திய தேசியக்கொடி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கீழ் கோபுரத்தில் ஏற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேசியக்கொடியுடன் பேரணி செல்ல அனுமதி மறுத்தது துரதிருஷ்டவசமானது.
    • தேசியக்கொடியை மரியாதையுடன் கண்ணியமாக எடுத்து செல்ல வேண்டும்.

    சென்னை:

    இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுவதும் பைக் பேரணி நடத்த பாஜக திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதிகளிலும் இந்த பைக் பேரணியை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

    எனவே, இந்த பைக் பேரணிக்கு அனுமதி கேட்டு அந்தந்த மாவட்ட போலீசில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், பைக் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

    மாவட்ட தலைநகரங்களில் தேசியக்கொடியுடன் இருசக்கர வாகன பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கோவை மாவட்ட பாஜக செயலாளர் கிருஷ்ண பிரசாத் வழக்கு தொடர்ந்தார்.

    இந்நிலையில் பைக் பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பாஜக தாக்கல் செய்திருந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

    தேசியக்கொடியுடன் பேரணி செல்ல அனுமதி மறுத்தது துரதிருஷ்டவசமானது. சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக்கொடியை ஏந்தி பேரணி செல்வதை தடை செய்யக்கூடாது என்று தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டார்.

    தேசியக்கொடியை மரியாதையுடன் கண்ணியமாக எடுத்து செல்ல வேண்டும்.

    பேரணியில் பங்கேற்பவர்கள் தேசியக்கொடிக்கு அவமரியாதை செய்யும் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. பேரணி ஏற்பாட்டாளர்கள், வழித்தடம் குறித்த தகவல்களை காவல் துறையினருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக்கொடியை ஏந்தி சென்னையில் பாஜகவினர் பைக் பேரணி செல்ல நிபந்தனையுடன் அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    • மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
    • சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில முதல் மந்திரிகள் தேசியக்கொடி ஏற்றுவார்கள்.

    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

    சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில முதல் மந்திரி தேசியக் கொடியை ஏற்றுவது மரபு. கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் சிறையில் இருந்து வெளியே வந்து கொடியேற்றுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

    இதுதொடர்பாக பொது நிர்வாகத்துறை மந்திரி கோபால் ராய் கூடுதல் தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல் மந்திரி கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசினேன். சுதந்திர தின விழாவில் மந்திரி அதிஷி தேசியக் கொடியேற்றுவார் என கெஜ்ரிவால் தெரிவித்தார். சத்ரசால் மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய கோருகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதை ஏற்கமறுத்த பொது நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சுதந்திர தின விழாவில் அதிஷி கொடி ஏற்றமுடியாது என தெரிவித்தார்.

    இந்நிலையில், சத்ரசால் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் டெல்லி மந்திரி கைலாஷ் கெலாட் தேசியக் கொடி ஏற்றுவார் என கவர்னர் மாளிகை பரிந்துரை செய்துள்ளது.

    சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில முதல் மந்திரிகள் தேசியக்கொடி ஏற்றுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய சுதந்திர தினம் வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • தேசியக்கொடியுடன் செல்பி எடுத்து harghartiranga.com தளத்தில் பகிர கேட்டுக்கொள்கிறேன்

    புதுடெல்லி:

    இந்திய சுதந்திர தினம் வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக பிரதமர் மோடி ஊக்குவித்து வருகிறார். 'ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி' என்ற இந்த பிரசாரத்தை இந்த ஆண்டும் மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார். இதன் ஒரு பகுதியாக தனது எக்ஸ் தளத்தின் முகப்பு படமாக தேசியக்கொடியை வைத்து இருக்கிறார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில் 'ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி' என்ற பிரசாரத்தை மீண்டும் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம். எனது எக்ஸ் தள முகப்பு படமாக தேசியக்கொடியை வைத்து இருக்கிறேன். நீங்களும் அவ்வாறு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தேசியக்கொடியுடன் செல்பி எடுத்து harghartiranga.com தளத்தில் பகிரவும் கேட்டுக்கொள்கிறேன்' என கேட்டுக்கொண்டு இருந்தார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் மற்றும் பிற நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றுமாறும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.

    • குடியரசு தின விழாவில் ஆர்.என். ரவி தேசியக்கொடி ஏற்றினார்.
    • முதலமைச்சர் மற்றும் ஆளுநர் முப்படை மற்றும் காவல் சிறப்புப்பிரிவின் மரியாதையை ஏற்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு வீரதீரச் செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கி வருகின்றன. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

    இந்த ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவக்குமார், காயல்பட்டினம் யாசர் அராபத், நெல்லை டேனியல் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    சிவக்குமார்

    தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்த அதிதீவிர கனமழையினால் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட தாமிரபரணி ஆற்று வெள்ளம் மற்றும் காட்டாற்று வெள்ளம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்குட்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 14 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டார்.

    மேற்படி கிராமங்களில் இரவு 10.30 மணி முதல் ஒவ்வொரு வீடாக சென்று தாமிரபரணியில் வெள்ளம் வரப்போவதாகவும், உடனே வீடுகளை விட்டு வெளியேறுமாறும் கூறி அவர்களை வாகனங்களில் ஏற்றி பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து சென்று தங்க வைத்தார். மேலும் அவர் நேரடி துரித கண்காணிப்பில் சுமார் 2,400 பேர் மீட்கப் பட்டனர்.

    தன்னலம் கருதாமல் துணிச்சலோடு மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அவரது துணிச்சலான செயலை பாராட்டி சிவக்குமாருக்கு 2024-ம் ஆண்டிற்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.

    யாசர் அராபத்

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18-ந் தேதிகளில் பெய்த அதிதீவிர கன மழையினால் வரலாறு காணாத வெள்ளம் மற்றும் காட்டாற்று வெள்ளம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    இதனால் கடம்பா குளத்திற்கு கீழ் உள்ள பல்வேறு குளங்களில் இருந்து பாய்ந்தோடிய மழை வெள்ளம் திருச்செந்தூர் வட்டம், தண்ணீர்பந்தல் கிராமத்தையும் மூழ்கடித்தது. அந்த கிராமத்தில் உள்ளவர்கள் சுமார் 250 பேர் தண்ணீரில் சிக்கித் தவித்தனர்.

    அவர்களை மீட்க தனியார் அமைப்புகள், அரசு அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் காயல்பட்டினம், சிங்கித்துறையை சேர்ந்த மீனவர் யாசர் அராபத் என்பவரிடம் உதவி கோரப்பட்டது.

    இதையடுத்து அவரது தலைமையில் 16 மீனவர்கள் ஒரு குழுவாக தங்களது உயிரையும் துச்சமென நினைத்து தண்ணீரில் தத்தளித்த தண்ணீர் பந்தல் கிராமத்தில் உள்ள மக்களை தங்களுடைய படகில் சென்று மீட்டு வந்தனர். மேலும் அங்குள்ள ஒரு உப்பளத்தில் தவித்துக் கொண்டிருந்த 13 உப்பளத் தொழிலாளர்களையும் 2 மணி நேர கடும் போராட்டத்திற்குப் பின் மீட்டு வந்துள்ளனர்.

    தனது உயிரையும் துச்சமென நினைத்து தண்ணீரில் தத்தளித்த மக்களை காப்பாற்றிய அவரது துணிச்சலான செயலை பாராட்டி யாசர் அராபத்துக்கு 2024-ம் ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.

    டேனியல் செல்வ சிங்

    நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கன மழை மற்றும் தாமிரபரணி வெள்ளத்தினால் திருநெல்வேலி மாநகரின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

    இந்த நிலையில் திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோவில் கீழத்தெருவை சேர்ந்த டேனியல் செல்வ சிங் என்பவர் தான் வசிக்கும் தெருக்களில் வெள்ள நீரால் சூழப்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பால் பாக்கெட், ரொட்டி பாக்கெட், மருந்துகள் ஆகியவற்றை தண்ணீரில் நீந்தியவாறு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

    இவர் தன்னலம் கருதாமல் துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமென நினைத்து கடந்த டிசம்பர் மாதம் 18, 19-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தன்னார்வ மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளார்.

    தன்னலம் கருதாமல் துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமென நினைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அவரது துணிச்சலான செயலை பாராட்டி டேனியல் செல்வசிங்குக்கு 2024-ம் ஆண்டிற்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.

    • ஆளுநர் ஆர்.என். ரவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.
    • தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் ஆர்.என். ரவி.

    குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 7.52 மணிக்கு மோட்டார் சைக்கிள் புடைசூழ வந்தார். அவர் அங்கு கூடியிருந்த பார்வையாளர்களுக்கு வணக்கம் செலுத்தியபடி வந்தார். அவரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி காரில் 7.54 மணியளவில் அவரது மனைவியுடன் வந்தார். அவரும் பார்வையாளர்கள் இருக்கும் பகுதிகளுக்கு வந்து வணக்கம் தெரிவித்தார். காலை 7.58 மணியளவில் தேசியக்கொடி ஏற்றும் இடம் அருகே கவர்னர் ஆர்.என். ரவி வந்தார். அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கி பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

    பின்னர் முப்படை தளபதிகள் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கூடுதல் டி.ஜி.பி. அருண் ஆகியோரை கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து சரியாக காலை 8 மணிக்கு கவர்னர் ஆர்.என். ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் ரோஜா மலர் தூவியபடி சென்றது.

    அதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு சென்று அமர்ந்தார். கவர்னர் ஆர்.என்.ரவி அணிவகுப்பு மேடைக்கு வந்து பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பை ஏற்றார். அதனைத்தொடர்ந்து 41 வகை படைப்பிரிவுகள் அணிவகுத்து வந்தன. இந்த அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என். ரவி ஏற்றுக் கொண்டார்.

    அதன் பிறகு அவர் மேடைக்கு சென்று அமர்ந்தார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வீரதீர துணிச்சல் மிகுந்த செயல்களுக்கான பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கினார்.

    கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கத்தை கிருஷ்ணகிரி மாவட்ட தளி பகுதியை சேர்ந்த முகமது ஜுபேருக்கு வழங்கினார். இவருக்கு ரூ.25 ஆயிரம் காசோலை, பதக்கம் மற்றும் சான்றிதழை முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் வழங்கினார்.

    சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது சேலம் பூலாம்பட்டியை சேர்ந்த பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது. இவருக்கு ரொக்கப் பரிசு ரூ.5 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    • புதுச்சேரி விடுதலை நாள் விழா மாநிலம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
    • மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தேசியக்கொடி ஏற்றினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி விடுதலை நாள் விழா மாநிலம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தேசியக்கொடி ஏற்றினார். அப்போது தேசியக்கொடி தலைகீழாக (பச்சை நிறம் மேல்புறமாக இருந்தது) ஏற்றப்பட்டது தெரியவந்தது.

    இதைப்பார்த்து தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து முக்கிய நிர்வாகிகளிடம் சுட்டிக்காட்டியதும் அவசர அவசரமாக கொடியை இறக்கி, சரிசெய்தபின் மீண்டும் வைத்திலிங்கம் ஏற்றி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
    • ஸ்கேட்டிங் மாணவன் கார்த்திக் பரணிதரன் தேசியக் கொடியை ஏந்தி வந்தான்.

    கடலூர்:

    பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. பள்ளி நிர்வாகிகள், மாணவ -மாணவிகள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஸ்கேட்டிங் மாணவன் கார்த்திக் பரணிதரன் தேசியக் கொடியை ஏந்தி வந்து விழா மேடையில் சிறப்பு விருந்தினர்களுக்கு கொடி வணக்கம் செலுத்தினான். இதனை பார்த்த அனைவரும் பரவசம் அடைந்தனர்.

    • ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பின்னர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் சமாதான புறா பறக்க விட்டனர்.

    தொடர்ந்து விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.

    அதேபோல் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    • பரிசோதனை செய்த அனைவருக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி வழங்கப்பட்டது.
    • மருத்துவர் மற்றும் செவிலியர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி திருஞானசம்பந்தர் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன், புளியங்குடி மருதம் மாடசாமி கலைவாணி தொண்டு அறக்கட்டளை மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமை நடத்தியது.

    முகாமிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து துறை சுந்தர் ராஜ், மருதம் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் முகேஷ் சிங் மாடசாமி ஆகியோர் தலைமை தாங்கினார். திருஞானசம்பந்தர் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கணேஷ், புளியங்குடி தொழிலதிபர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வருவாய் துறை அதிகாரி அருண்குமார் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்த அனைவருக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி வழங்கப்பட்டது. இதில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இந்நிகழ்ச்சியில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிர்வாகிகள் மற்றும் மருதம் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மருதம் தொண்டு நிறுவன நிர்வாகி கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

    • ஒரு தேசியக்கொடியின் விலை ரூ.25 ஆகும்.
    • பொதுமக்கள் ஆர்வமுடன் தேசியக்கொடியை வாங்கி செல்வதாக தபால் நிலைய பணியாளர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    76-வது சுதந்திர தின விழாவையொட்டி தபால் நிலையங்களில் குறைந்த விலையில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது.அந்த வகையில் பல்லடம் தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனை நடைபெற்று வருகிறது.

    ஒரு தேசியக்கொடியின் விலை ரூ.25 ஆகும்.பொதுமக்கள் ஆர்வமுடன் தபால் நிலையத்தில் தேசியக்கொடியை வாங்கி செல்வதாக தபால் நிலைய பணியாளர்கள் தெரிவித்தனர்.மேலும் பல்லடம்சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கிளை தபால் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ×