search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுப்பணித்துறை"

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கும்பகோணம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கும்பகோணம்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கும்பகோணம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாரதி கண்டன உரையாற்றினார். மேட்டூர் அணை 3 முறை நிரம்பியும் கொள்ளிடம் ஆற்றில் விடப்பட்ட தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. கும்பகோணத்தில் 35-க்கு மேல் உள்ள குளங்களுக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் விடாததால் வறண்டு கிடக்கிறது.

    இதனை கவனிக்க வேண்டிய பொதுப்பணித்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. தமிழக அரசு கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள 8 இடங்களில் தூர்வாரும் பணி, குடிமராமத்து பணிகள் செய்வதற்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் எந்த வேலையும் நடக்கவில்லை. எனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை மோசடி நடந்துள்ளது.

    எனவே இதில் தொடர்புடைய பொதுப் பணித்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தஞ்சை மாவட்டத்திற்கு குடிமராமத்து பணிகளுக்கு ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டது அதில் கும்பகோணத்திற்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது 8 பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது ஆனால் அதில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்தும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #tamilnews
    தஞ்சை அருகே ஆலக்குடி மெயின் ரோட்டில் உள்ள அரசு பள்ளியை சேதப்படுத்திய பொதுப்பணித்துறை அலுவலர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே ஆலக்குடி மெயின் ரோட்டில் அரசு பள்ளி அமைந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இப்பள்ளியில் ஆண்டுதோறும் கபாடி போட்டி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டு கபாடி போட்டி நடத்த முடிவு செய்து போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இதனை மீறி அப்பகுதியினர் சிலர் அரசு பள்ளி வளாகத்தில் கபாடி போட்டியை நடத்தி உள்ளனர்.

    அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பள்ளி கட்டிட ஓடுகள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த வல்லம் போலீசார் அரசு பள்ளியை சேதப்படுத்தியது மற்றும் அனுமதியின்றி போட்டி நடத்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் பொதுப்பணித்துறை அலுவலரான பழனிசாமி(50), வெங்கடேசன்(20), விக்னேஷ்(26), கார்த்திக்(21), தங்கமுத்து(32) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    ஆக்ராவில் சாலைப் பணி மேற்கொண்ட தனியார் நிறுவனம் நாயைக் கொன்று புதைத்ததாக அளித்த புகாரைத் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #RoadOverDog
    ஆக்ரா:

    உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் சாலை அமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனம் சார்பில் பரேபூர் சாலையில் வேலை நடந்தபோது, ஒரு நாயைக் கொன்று புதைத்து அதன் மீது சாலை அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    போலீசில் இதுபற்றி  புகாரும் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், மனுதாரர் குறிப்பிட்ட சாலைக்கு சென்று நாயின் உடலை தோண்டி எடுத்து அப்புறப்படுத்தினர்.

    மேலும், சாலைப் பணி மேற்கொண்ட தனியார் நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  சாலைப் பணிக்காக நாயை பலி கொடுத்தார்களா? அல்லது இறந்து கிடந்த நாயை அப்புறப்படுத்தாமல் அப்படியே சாலை போட்டார்களா? என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும். #RoadOverDog
    ×