search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 179048"

    • பிரசாரம் செய்யப்பட்ட 11 தொகுதிகளில் எட்டு தொகுதிகளை காங்கிரஸ் வென்றிருக்கிறது என்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
    • கர்நாடகாவில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பா.ஜ.க. முற்றிலும் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. பா.ஜ.க.வின் ஊழல் ஆட்சியையும், மதவெறி அரசியலையும் மரண அடி கொடுத்து வீழ்த்தியுள்ளனர்.

    இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழர்கள் வாழும் பெங்களூரு பகுதிகளில் பத்து சட்டமன்றத் தொகுதிகளில் வி.சி.க. சார்பில் பிரசாரத்தை மேற்கொண்டோம். பிரசாரம் செய்யப்பட்ட 11 தொகுதிகளில் எட்டு தொகுதிகளை காங்கிரஸ் வென்றிருக்கிறது என்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

    கர்நாடகாவில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பா.ஜ.க. முற்றிலும் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை தூக்கிச் சுமந்து வரும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் இந்தத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பா.ஜ.க.வுடன் கொண்டுள்ள தங்களது கூட்டணி உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விடுதலை சிறுத்தைகள் விருதுகள் வழங்கும் விழா மே 28-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது.
    • “அம்பேத்கர் சுடர்” விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யாவுக்கு வழங்கப்படுகிறது.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

    அந்த வரிசையில் 2023-ம் ஆண்டுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி- விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.

    இந்த ஆண்டுக்கான "அம்பேத்கர் சுடர்" விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா-வுக்கும், "பெரியார் ஒளி" விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் து.ராஜாவுக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.

    2023-ஆண்டுக்கான வி.சி.க.-விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் வருமாறு:-

    1. அம்பேத்கர் சுடர்-திபங்கர் பட்டாச்சார்யா, பொதுச்செயலாளர், சி.பி.ஐ. (எம்.எல்).

    2. பெரியார் ஒளி-து.ராஜா, பொதுச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

    3. காமராசர் கதிர்-மு.அப்பாவு, தலைவர், தமிழ்நாடு சட்டப் பேரவை.

    4. அயோத்திதாசர் ஆதவன்-ராஜேந்திரபால் கவுதம், முன்னாள் அமைச்சர், டெல்லி மாநில அரசு.

    5. மார்க்ஸ் மாமணி-கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சி.பி.ஐ.(எம்)

    6. காயிதேமில்லத் பிறை-முனைவர் மோகன் கோபால், முன்னாள் துணைவேந்தர், சட்டப் பல்கலைக்கழகம், பெங்களூர்.

    7. செம்மொழி ஞாயிறு-தாயம்மாள் அறவாணன், தமிழறிஞர்.

    விடுதலை சிறுத்தைகள் விருதுகள் வழங்கும் விழா மே 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • செயலாளர்கள் பொறுப்பு வழங்க உள்ள மாவட்டங்களில் முதல்கட்டமாக 17 மாவட்டங்களின் பெயர்களையும் திருமாவளவன் அறிவித்தார்.
    • கட்சியின் பொதுச்செயலாளர் துரை ரவிக்குமார் எம்.பி. உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி விரைவில் மறுசீரமைக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதையொட்டி, கட்சி பொறுப்புகளுக்கு விருப்பமனுக்கள் பெறப்பட்டன.

    மாவட்டச்செயலாளர் பொறுப்பில் 25 சதவீதம் இளைஞர்கள், தலா 10 சதவீதம் பெண்கள், பட்டியலினத்தைச் சாராதவர்களை இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பின்படி செயலாளர்கள் பொறுப்பு வழங்க உள்ள மாவட்டங்களில் முதல்கட்டமாக 17 மாவட்டங்களின் பெயர்களையும் திருமாவளவன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து மீதமுள்ள மாவட்ட மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த கட்சியின் உயர்நிலைகுழு கூட்டம், சென்னை, அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் திருமாவளவன் தலைமையில் நேற்று நடந்தது.

    கட்சியின் பொதுச்செயலாளர் துரை ரவிக்குமார் எம்.பி. உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில் புதிய பொறுப்புகளுக்கு யார்-யாரை தேர்வு செய்வது என்று ஆலோசிக்கப்பட்டது.

    • தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
    • கவர்னர் இங்கே சமூக அமைதியை சீர்குலைத்து, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை சீரழிக்கப் பார்க்கிறார்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானக் கூறுகளாகத் திகழும் சமத்துவம், சமூகநீதி போன்றவற்றைக் கொச்சைப்படுத்தியும்; அவற்றுக்கு நேரெதிரான சனாதனத்தைப் போற்றியும் தொடர்ந்து பேசி வருகின்ற தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்

    சனாதனத்தைப் போற்றுகிற இந்திய ஒன்றிய பா.ஜ.க. அரசோ வேலைவாய்ப்பின்மையை, விலைவாசி ஏற்றத்தை, பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தி எல்லா தளங்களிலும் தோல்வியடைந்து வெகுமக்களுக்கு எதிரான அரசாக இருக்கிறது. நாடறிந்த இவ்வுண்மையை கவர்னர் ரவியால் மறுக்க முடியுமா?

    பெரியாரின் சிந்தனைகளுக்கும் தி.மு.க. அரசுக்கும் எதிராகப் பேசுவதாக எண்ணிக்கொண்டு உழைக்கும் எளிய மக்களின் நலன்களுக்கு எதிராகவும்; மதத்தின் பெயரால் மக்கள் ஒற்றுமையைச் சிதைக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் நோக்கிலும் தொடர்ந்து திட்டமிட்டே பேசியும், செயல்பட்டும் வருகிற கவர்னர், இங்கே சமூக அமைதியை சீர்குலைத்து, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை சீரழிக்கப் பார்க்கிறார்.

    ஆன்லைன் ரம்மி மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல் பலரது சாவுக்குக் காரணமாக இருந்த அவர், 'ஒரு மசோதாவைக் கிடப்பில் போட்டால் அது செத்துவிட்டது என்று அர்த்தம்' என்று அகந்தை மேலோங்கப் பேசினார். ஆனால், அவரைக் கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவுடன் பதறியடித்துக் கொண்டு அவசர அவசரமாக அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.

    முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதும் அரசியல் வாதியைப் போல அன்றாடம் தேவையற்ற சச்சரவுகளை எழுப்புவதும் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

    அவர் முழுநேர அரசியல்வாதியாகச் செயல்பட விரும்புவதையே அவருடைய நடவடிக்கைகள் உறுதிப்ப டுத்துகின்றன. எனவே, உடனடியாக அவர் பதவி விலகி, வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ். தொண்டராகவே பணியாற்ற வேண்டும்.

    அடுத்து, ராஜ்பவன் என்ற தனது அரண்மனையின் பெயரை லோக்பவன் என்று மாற்றப் போவதாகவும் அவர் சொல்லி இருக்கிறார். அதா வது 'மக்களின் மாளிகை' என பெயர்சூட்ட விரும்புவதாக பேசியிருக்கிறார்.

    உண்மையில், அவர் மக்களை நேசிப்பவராக இருப்பாரேயானால் தனக்கு இவ்வளவு பெரிய மாளிகை தேவையில்லை; ஒரு சிறிய வீடு போதும் என்று தனது மாளிகையிலிருந்து வெளியேறி, மக்களின் பயன்பாட்டுக்கு என அதனை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தானியங்கி எந்திரத்தின் மூலம் மது விற்பனை செய்யும் ஒரு ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
    • பிரதமர் மோடியின் 100-வது மன்கிபாத் நிகழ்ச்சியில் கலைஞர் எழுதிய செம்மொழி பாடல் ஒலிபரப்பப்பட்டது தேர்தல் யுக்திகளில் ஒன்று.

    மதுரை:

    தானியங்கி மது விற்பனை ஏற்புடையதல்ல எனவும், மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும் என தொல்.திருமாவளவன் கூறினார்.

    மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சியின் வெற்றியை இலக்காக வைத்து அங்குள்ள தமிழர்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாக்கு சேகரிக்க இருக்கிறேன். தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகாவை மையமாக வைத்து பா.ஜ.க., தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மதத்தின் அடிப்படையில் வெறுப்பு அரசியலை விதைத்து வருகிறது. அதை அவர்கள் ஒரு களமாக பயன்படுத்துகின்றனர்.

    எனவே கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியை அப்புறப்படுத்துவது, தென் மாநிலங்களின் நலன்களுக்கு இன்றியமையாத தேவையாக உள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் மக்கள் அந்த முடிவில் இருக்கிறார்கள். என்றாலும், பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான களத்தில் காங்கிரசோடு விடுதலை சிறுத்தைகள் கைகோர்க்கிறது.

    கர்நாடகத்தில் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது குறித்து, அவர்தான் பதில் சொல்ல வேண்டும். அவர் இருக்கும்போதே தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என இடைமறித்து அதை நிறுத்தியுள்ளனர். கன்னட வாழ்த்து பாடலை பாடச் சொல்வது அவர்களுக்கான உரிமை. ஆனால் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய ஒரு பகுதியில், ஒட்டுமொத்த தமிழ் வாக்காளர்களையும் அவமதிக்கக்கூடிய வகையில் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    தானியங்கி எந்திரத்தின் மூலம் மது விற்பனை செய்யும், ஒரு ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வசதியை ஏற்படுத்தித் தருவதில் எந்த நியாயமும் இல்லை.

    படிப்படியாக மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்பாடு உள்ள இயக்கம் தி.மு.க. என்பதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில், தேர்தல் வாக்குறுதியிலேயே அதை கூறி இருக்கிறார். எனவே படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு முதல்- அமைச்சர் முன்வர வேண்டுமே தவிர, தானியங்கி எந்திரத்தின் மூலம் மதுவை பெற வசதிகளை ஏற்படுத்தித் தருவது ஏற்புடையதல்ல.

    திருக்குறளை பேசுவது, பாரதியார் பாடலை பாடுவது, அவ்வப்போது தமிழை இடையே எழுதி வைத்து இந்தியில் படிப்பது இவையெல்லாம் பா.ஜ.க. கையாளக்கூடிய தேர்தல் தந்திரங்களில் ஒன்று. இந்தியை திணிக்க வேண்டும், சமஸ்கிருதத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் இலக்கு. அதில் ஒரு முயற்சி தான், பிரதமர் மோடியின் 100-வது மன்கிபாத் நிகழ்ச்சியில் கலைஞர் எழுதிய செம்மொழி பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதுவும், அவர்களின் தேர்தல் யுக்திகளில் ஒன்று.

    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை செய்யப்பட்டது, வேதனை அளிக்கக் கூடிய சம்பவம். மணல் மாபியா கும்பல் அவரை கொடூரமாக தாக்கிப்படுகொலை செய்திருக்கிறார்கள். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மணல் மாபியா கும்பல் நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்கு அரசு, சிறப்பு படை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்சினையில் குற்றவாளியை கண்டுப்பிடிப்பதில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
    • விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனிடம் நிருபர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பியதால் கொந்தளித்து விட்டார்.

    வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்சினையில் குற்றவாளியை கண்டுப்பிடிப்பதில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனிடம் நிருபர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பியதால் கொந்தளித்து விட்டார்.

    குற்றவாளிகளை கண்டுபிடிக்க இத்தனை நாட்கள் என்று கெடு விதிக்க முடியாது. அரசை பொறுத்தவரை தலித்துகளுக்கு எதிராக இல்லை. யாரையும் காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட வில்லை. என்னைப்போய் தி.மு.க. காரர்கள் போல் பேசுகிறீர்களே என்று கேட்கிறீர்கள். இந்த மாதிரி எல்லாம் என்னிடம் வச்சிக்காதீங்க. இது நாகரீகம் இல்லாத பேச்சு. தி.மு.க.வை எதிர்த்து எங்களை போல் யாரும் போராட்டம் நடத்தியது உண்டா? கூட்டணியில் இருந்து கடந்த 2 ஆண்டுகளில் 10 போராட்டடங்களை நடத்தி இருக்கிறோம். புரிந்து கொள்ளுங்கள் என்றார். அப்போது ஒரு நிருபர். ஏன் இப்படி கையை நீட்டி ஆவேசப்படுகிறீர்கள் என்று கேட்டார். உடனே எதுங்க ஆவேசம், என்னை தி.மு.க.காரர் என்று கையை நீட்டி சொல்கிறார். நான் தி.மு.க. காரணா? உங்கள் முன் கையை நீட்டி பேசக்கூடாது என்றால் கையை கட்டிக்கொண்டு பேசனுமா? இல்லை குனிந்து நின்று பேச வேண்டுமா? என்று கொந்தளித்தார்.

    • சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • 8 மணி நேரம் வேலை என்பது தொழிலாளர்களின் உரிமை. அதனை பறிக்கும் வகையில் 12 மணி நேர வேலை என ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே அருணாபதியில் நடந்த ஆணவ படுகொலையை கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சாதிய ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஆணவ கொலைகள் தொடர்ந்து நடக்கிற மாவட்டமாக உள்ளது. ஏற்கனவே சுவாதி-நந்திஸ் இருவரும் ஆணவக்கொலை செய்யப்பட்டார்கள். அண்மையில் கிருஷ்ணகிரி அருகே ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஜெகன்-சரண்யா இருவர் ஒரு சமூகத்திற்கு உள்ளே உச்சாதிக்குள் அடிப்படையில் ஜெகன் பட்டபகலில் படுகொலை செய்யப்பட்டார்.

    ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட சுபாஷ் ஆணவப்படுக்கொலை செய்யப்பட்டார். அதனை தடுக்க முயன்ற அவரது தாயார் கண்ணம்மாள் ஆகிய இருவரையும் சுபாஷின் தந்தை தண்டபாணி வெட்டி படுகொலை செய்தார். இதில் படுகாயம் அடைந்த அனுசியா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மூன்று சம்பவங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

    இந்திய அரசு ஆணவ கொலை தடுப்புச் சட்டத்தை ஏற்ற வேண்டுமென தொடர்ந்து குரல் ஒலித்து வருகிறது.

    ஆனால் இந்திய அரசு சட்டம் இயற்றுவதில் தேக்கம், தயக்கம், இருந்து வருகிறது. உச்சநீதிமன்றம் ஆணவக் கொலைகளை கொடூரமான கொலைகள் அதனை தடுக்க வேண்டும் என அதற்கான வழிகாட்டுதலை வழங்கி உள்ளது.

    ஆனால் ஆணவ கொலை தொடர்பான உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றுவதில்லை. தொடர்ந்து நடைபெறும் ஆணவக் கொலைகள் அதிர்ச்சி அளிக்கிறது.

    ஆணவப்படுக்கொலை தடுப்புச் சட்டம் வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது தி.மு.க. அரசு ஆணவ கொலை எதிரான தடுப்புச் சட்டத்தை கொண்டுவரவேண்டும் என தோழமைக் கட்சி என்கிற முறையில் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

    சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 8 மணி நேரம் வேலை என்பது தொழிலாளர்களின் உரிமை. அதனை பறிக்கும் வகையில் 12 மணி நேர வேலை என ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த சட்ட மசோதாவிற்கு காங்கிரஸ் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி போன்ற தோழமைக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    இந்த நிலைப்பாடு தி.மு.க.வின் தொழிலாளர் நலனுக்கும், கொள்கைக்கு, எதிராக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்வர் உடனடியாக நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

    இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். 12 மணி நேரம் வேலை தொழிலாளர்கள் விரும்பினால் சூழல் அடிப்படையில் தொழிலாளர்களிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் பெறுவதற்கு ஏதுவாக ஒரு சட்ட மசோதா இருப்பது தொழிலாளர் சமூகத்திற்கு எதிரானது.

    இந்த சட்டம் திமுக மீதான நம்பகத் தன்மைக்கு எதிராக அமையும், நன்மதிப்பிற்கு ஊர் விளைவிக்கும், ஆகவே முதலமைச்சர் இந்த தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

    தோழமைக் கட்சிகள் சார்பில் முதலமைச்சரை சந்தித்து இது குறித்து கருத்துக்கள் வலியுறுத்தி உள்ளோம். அனைத்து தோழமைக் கட்சிகளும் சேர்ந்து நேரில் சந்தித்து சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ‘திருமா பயிலகத்தின்’ சார்பில் அரசு வேலை வாய்ப்புகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
    • அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் 'திருமா பயிலகத்தின்' சார்பில் அரசு வேலை வாய்ப்புகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    இப்பயிலகத்தில் பயிற்சி பெற்ற பலர், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இயங்கும் இப்பயிலகத்தில் 23-ந் தேதி காலை 9 மணிக்கு TNUSRB-Police, Sub-Inspector தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கவுள்ளன.

    மேலும், கீழ்காணும் பகுதிகளில் பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுத் தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர், குறிப்பிடப்பட்டுள்ள அலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு வகுப்பு களில் இணைந்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

    தொடர்புக்கு: சென்னை-9042991182, அங்கனூர்-9843660449, ஜெயங்கொண்டம்-9865756216, சிதம்பரம்-9894447722, திருப்போரூர்-8610392275, கடலூர்-9600244839, கும்பகோணம்-7904832410.

    திருவாரூர்-8825995117, திருச்செந்தூர்-8675590803, கள்ளக்குறிச்சி-9003612449, நாகப்பட்டினம்: 9787825382, நெடுங்குளம்-7639091631, புதுகோட்டை 9443903727, குறிஞ்சிப்பாடி-9042991182, மதுராந்தகம்-9566227765, திருச்சிற்றம் பலம்-9965734583, மின்னஞ்சல் : thirumapayilagam@gmail.com

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இஸ்லாமிய பேரவை மாநில செயலாளர் அப்துர் ரகுமான் தலைமை தாங்கினார்.
    • நிர்வாகிகள் முத்து முகமது மக்கா கலீல், அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தை கட்சி இலக்கிய ஜனநாயக பேரவை சார்பில் 19-ம் ஆண்டு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி எழும்பூரில் நடந்தது. இஸ்லாமிய பேரவை மாநில செயலாளர் அப்துர் ரகுமான் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முத்து முகமது மக்கா கலீல், அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆளுர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ வரவேற்றார், கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி இப்தார் உரையாற்றினார்.

    இதில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம்.அப்துல் ரகுமான், ஜவாஹிருல்லா எம்.எல்.எ, நவாஸ்கனி எம்.பி, எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், இயக்குனர் அமிர், திரைப்பட தயாரிப்பாளர் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தெற்கெல்லை போராளி கொடிக்கால் ஷேக், அப்துல்லாஹசன், "நாஞ்சில் நாட்டின் ஒரு சமுகப்போராளி" என்ற நூலை திருமாவளவன் வெளியிட ஏ.ஆர்.ஜாபர் சாதிக், இயக்குனர் அமீர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியை ஏ.ஆர். முகமது சலீம் ஒருங்கிணைத்தார்.

    • வழி தெரியாமல் தவிக்கும் காங்கிரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் யோசனை கூறி உள்ளார்.
    • பா.ஜனதாவில் எல்லோரும் 70 வயதை கடந்தவர்கள். ராகுல் இளம் வயதுடையவர் இன்னும் 10 ஆண்டுகள் அவரால் வீரியமாக அரசியல் செய்ய முடியும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதாவை எதிர்க்கும் அளவுக்கு வலிமை பெறுமா? ஆட்சிக்கு வரமுடியுமா? என்ற சந்தேகம் காங்கிரசாரிடமும் உள்ளது.

    இதற்கு வழி தெரியாமல் தவிக்கும் காங்கிரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் யோசனை கூறி உள்ளார். அவர் கூறியதாவது:-

    பா.ஜனதாவை எதிர் கொள்ளும் வலிமை தேசிய அளவில் காங்கிரசிடம் மட்டுமே இருக்கிறது. காங்கிரசில் இருந்து வெளியேறிய தலைவர்கள் மாநில அளவில் கட்சிகளை தொடங்கியதால் சில மாநிலங்களில் வாக்கு வங்கியை இழந்திருக்கிறது. இதை சரி செய்வதன் மூலம் மீண்டும் காங்கிரஸ் கட்சி வலிமை பெறும்.

    காங்கிரஸ் இரண்டு முக்கிய வேலைகளை செய்ய வேண்டும். பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்து அணிக்குள் இணைக்க வேண்டும். பா.ஜனதா எதிர்ப்பு சக்திகளை ஒருங்கிணைத்து தேர்தலுக்கு பிறகு பிரதமரை முடிவு செய்யலாம் என்ற நிபந்தனையோடு செயல்படவேண்டும். இந்த இரண்டையும் செய்தால் பா.ஜனதாவை வீழ்த்த முடியும். அதற்கான ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக இருப்பவர் ராகுல் மட்டும் தான். அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

    பா.ஜனதாவில் எல்லோரும் 70 வயதை கடந்தவர்கள். ராகுல் இளம் வயதுடையவர் இன்னும் 10 ஆண்டுகள் அவரால் வீரியமாக அரசியல் செய்ய முடியும்.

    • சனாதன-கார்ப்பரேட் மோடி அரசின் பாசிசப் போக்கை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
    • அசோக் நகரில் உள்ள 'வெளிச்சம்' அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

    சென்னை:

    டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு ஆண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த ஆண்டு ஜனநாயகம் காப்போம் சிறுத்தைகள் அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சனாதன-கார்ப்பரேட் மோடி அரசின் பாசிசப் போக்கை கண்டித்து இந்த அணிவகுப்பு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நாளை நடைபெறுகிறது.

    அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒன்று கூடி அணிவகுப்பாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

    இதற்காக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளனர்.

    சென்னையில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தை அணிவகுப்பு நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து எல்.ஜி. சாலை வரை மத்திய அரசுக்கு எதிராக அணிவகுத்து செல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை சென்னை மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், ந.செல்லத்துரை, ரவிசங்கர், வி.கோ.ஆதவன், அன்பு செழியன், அம்பேத் வளவன் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்.

    சென்னையில் உள்ள 6 மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் குவிகிறார்கள்.

    முன்னதாக அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் மணிமண்ட பத்தில் நாளை திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர் அசோக் நகரில் உள்ள 'வெளிச்சம்' அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

    தொடர்ந்து கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    • திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பாதுகாத்து வருகிற மகத்தான பணியை மு.க.ஸ்டாலின் செய்கிறார்.
    • பெரியார், அண்ணா, கலைஞர் கட்டிக்காத்த ‘சமூகநீதி’ அரசியலை மு.க. ஸ்டாலின் வெற்றிகரமாக முன்னெடுத்து செய்கிறார்.

    தி.மு.க.வுடன் திருமாவளவன் இணைந்து இருப்பது தேர்தல் கணக்குப்போட்டு தான் என்று நினைத்தால் தப்பாம். பிறகு ஏன் அவர் இணைந்து இருக்கிறார் என்பதற்கு சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் திருமாவளவனே பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பாதுகாத்து வருகிற மகத்தான பணியை மு.க.ஸ்டாலின் செய்கிறார். பெரியார், அண்ணா, கலைஞர் கட்டிக்காத்த 'சமூகநீதி' அரசியலை மு.க. ஸ்டாலின் வெற்றிகரமாக முன்னெடுத்து செய்கிறார். சமூக நீதிக்காகத்தான் எம்மைப்போன்றவர்கள் மு.க.ஸ்டாலினோடு கை கோர்த்து நிற்கிறோம். தேர்தலுக்காக அல்ல என்றார்.

    ×