search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுமுறை"

    • காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
    • சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி :

    புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை யையொட்டி கன்னியா குமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்த னர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி யை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடா ஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. ஈஸ்டர் பண்டிகையை யொட்டி கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தி லும் மக்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்து டன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர். மேலும் கன்னியா குமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைபகுதி, மியூசியம், அரசு அருங்காட்சி யகம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தளங்கள்களை கட்டியது.

    இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீ சாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • தருமபுரி மாவட்டத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி நாளை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்.
    • மீறி எவரேனும் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி நாள் அன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரர் மதுவிற்பனைக்கூடம் அனைத்தும் மதுபானங்கள் விற்பனை இன்றி மூடிவைக்க உத்தரவிடப்படுகிறது.

    இதனை மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும்.
    • அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஷகிலா பானு தலைமை தாங்கினார்.

    அப்போது அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும், அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    ஊட்டச்சத்து மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்களை இணைக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும்உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கை கள் வலியுறுத்தி செம்பனார்கோ வில் ஒன்றியத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட அங்க ன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தமிழ்நாடு சத்துணவு ஓய்வூதிய சங்க மாவட்ட பொருளாளர் செல்வராஜ், ஒன்றிய தலைவர் வள்ளியம்மாள், செயலாளர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நார்த்தாமலை முத்துமாரியம்மன் ேகாவில் தேர்த்திருவிழா: நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை
    • 29ம்தேதி வேலை நாளாக அறிவிப்பு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்வான தேர்த்திருவிழா வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.மேலும் அதற்கு பதிலாக 29-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 30-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்று பணிநாள் ஆகும். மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினை கருதியும் அவசர அலுவலகள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும். மேலும் அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

    • திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
    • முஸ்லிம் பள்ளிவாசலிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்

    கன்னியாகுமரி :

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கானசுற்றுலா பயணிகள்வந்துகுவிந்தனர். முக்கடலும் சங்கமிக் கும் திரிவேணிசங்கமம் சங்கிலித்துறைகடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சி யை பார்த்து ரசித்தனர்.

    அதன்பிறகு கன்னியா குமரி முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில்அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார் வையிட இன்று காலை 6 மணியில் இருந்தேசுற்றுலாபய ணிகள்படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்கு வரத்துதொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.சுற்றுலாபயணி கள்2மணிநேரம்நீண்ட வரிசையில்காத்தி ருந்து படகில் சென்று விவேகா னந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.

    அதேபோல திருவள்ளுவர் சிலையையும் சுற்றுலா பயணிகள் 2மணி நேரம் காத்திருந்து படகில் சென்று பார்வையிட்டு வந்தனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்குபூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசுஅருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதே போல விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சிகூடம் மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி கூடம்பாரத மாதா கோவில் ஆகிய இடங்க ளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசலிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்தபோலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.கடற்கரைப்பகுதியில்சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • சுகாதார ஏற்பாடுகள் செய்து தருதல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
    • தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி உள்ளூர் விடுமுறை.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட ரங்கில் தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் விழாவை முன்னிட்டு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை வகித்தார்.

    திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி.கே.கலைவாணன் முன்னிலை வகித்தார்.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது, திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேரோட்டமானது வருகிற 1-ந் தேதி நடைபெறவுள்ளது.

    இத்தேரோட்டத்தினை யொட்டி துறைவாரியாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி காவல்துறை பொருத்தமட்டில் தேர் கட்டுமானப் பணிகளுக்காக ஐந்து தேர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்து தருதல், தேரோட்டம் நடைபெறும் போது தேருக்கு முன்னும் பின்னும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தருதல் குறித்தும், வீதிகளிலும், திருக்கோயிலுக்குள்ளும், கமலாலயம் குளக்கரையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தருதல், போக்குவரத்து சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளும் வழங்கப்பட்டது.

    திருக்கோயிலுக்குள் கூடுதலாக சுகாதார ஏற்பாடுகள் செய்து தருதல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்புத்துறையினர் தேர் வீதிகளில் வரும்போது தேருக்கு பின்னால், அனைத்து வசதிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய தீயணைப்பு வண்டி, ஒன்றினை தேரினை தொடர்ந்து வர செய்ய ஏற்பாடு செய்வது குறித்தும், தேரோடும் வீதிகளில் புதிதாக மின் கம்பம் நடும்போது தேரோட்டத்திற்கு இடையூறின்றி அமைத்து தருதல் பணிகள் ஒப்படைக்கப்பட்டது.

    அரசு போக்குவரத்து கழகம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொது மக்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு எளிதாக திரும்பிச் செல்லும் வகையில் சிறப்பு பேருந்து வசதி செய்து தருதல் குறித்தும் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கான பணிகளும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    திருக்கோவில் ஆழித்தேரோட்டத்தை சிறப்பாக நடத்திட உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.பி.சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி உள்ளிட்ட அரசுதுறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கீழவிதியில் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் சாருஸ்ரீ, தேரோட்டம் தினமான ஏப்ரல் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என தெரிவித்தார்.

    • திருவப்பூர் தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை விடபட்டுள்ளது
    • கலெக்டர் கவிதா ராமு அறிவித்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா பூச் சொரிதல் மற்றும் தேரோட்டத்துடன் விமரிசையாக நடைபெறும். மாசி பெருந்திரு விழாவையொட்டி கடந்த 26-ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் , வரும் 13-ந்தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வரும் 13ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அறிவித்து உள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 1ம் தேதி (சனிக்கிழமை) பணிநாளாகவும் அவர் அறிவித்துள்ளார்.

    • இடைத்தேர்தலையொட்டி 4 அனைத்து விதமான மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.
    • அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி எவ்வித அசம்பாவிதங்களும் நடைெபறாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இடைத்ேதர்தலையொட்டி அரசு உத்தரவின் படி வரும் 25-ந் தேதி காலை 10 மணி முதல் 27-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் செயல்படும் அனைத்து விதமான மதுபானக் கடைகளும்,

    வாக்குப்பதிவு நடைபெறும் நாளான வருகின்ற மார்ச் மாதம் 2-ந் தேதி வாக்கு எண்ணும் மையத்தினை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் செயல்படும் அனைத்துவித மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.

    மேலும் அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும்  நடைபெறாது. மேலும் அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    • விவேகானந்தர் மண்டப த்துக்கு செல்ல படகு துறையில் 2 மணி நேரம் காத்திருப்பு
    • கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணமாக உள்ள னர். இந்த நிலையில் ஞாயிற் றுக்கிழமை விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர். அந்த அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக் கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாக ெதரிந்தது. சூரியன்உதயமான இந்த அற்புத காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட "கியூ"வில் காத்திருந்தனர். காலை 8 மணிக்குபடகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.சுற்றுலாபயணிகள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வை யிட்டனர்.

    மேலும் கன்னியா குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்குபூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைபகுதி, மியூசியம், அரசுஅருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • ஞாயிறு ஒருநாள் விடுமுறை
    • கலெக்டர் அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலுார் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடம் ஆகிய அனைத்திற்கும் வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் உலர்தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்பெ.ரமண சரஸ்வதி, தெரிவித்துள்ளார்.

    • காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர எல்லைகளில் தொடர் மழை பெய்துவரு கிறது.
    • கடல் சீற்றம் காரணமாக மாவட்ட மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது,

    புதுச்சேரி:

    இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்ட லம் நிலை கொண்டுள்ள தால், காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர எல்லைகளில் தொடர் மழை பெய்துவரு கிறது.நேற்று முன்தினம் இரவு முதல், விடிய, விடிய லேசான மழை பெய்தது. நேற்று காலை 10 மணிக்கு மேல், காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து பெய்து வந்த மழை மாலை 3 மணிக்கு மேல் மீண்டும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கடற்கரையில் கடல் சீற்ற மாக காணப்பட்டது.

    லேசான மழை பெய்து வருகிறது. தொடர் மலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மாவட்ட மீன்வளத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, மீனவர்கள் நேற்று 3-வது நாளாக மீன் பிடிக்க செல்ல வில்லை. கடலில் ஏற்கெனவே மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களும் தற்போது கரை திரும்பி வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு களும் துறைமுகம் மற்றும் மீனவ கிராமங்களில் பாது காப்பாக நிறுத்திவைக் கப்பட்டுள்ளது. காரைக்கா லில் 11 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவத் தொழிலாளர்கள் கடலுக்கு செல்லவில்லை.   காரைக்கால் கடல் கொந்தளிப்புடன் சீற்றமாக காணப்படுவதால் கடற்கரை பகுதியில், பொது மக்களுக்கும் சுற்றுலா வாசி களுக்கும் குளிக்க தடை விதித்து போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றதொடர் மழையால் காரைக்கால் மாவட்டத்தில பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகலில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து காணப்படுவதால் போக்கு வரத்து பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளது. காரைக்காலில் பெரும்பா லான பகுதிகளில் சாலை கள் குண்டும் குழியு மாக இரு ப்பதால் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வயல்வெளிகளில் அறு வடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையின் காரணமாக சாய்ந்து இருப்பதால் அறுவடை பணி பாதிக்க ப்பட்டுள்ளது. இதனால் அறுவடைப்படி பெரும் பாதிப்புக்கு உள்ளா னாலும், விவசாயிகள் நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பண்ருட்டியில் தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் உதவியாளர் மாயமானார்.
    • ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி சந்திரகுமார் இவரை கடத்தி யதாக கூறப்படுகிறது.

    கடலூார்:

    சிதம்பரம் அருகே வையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்செந்தில்குமார். அவரது மகள் சுபத்திரா (வயது 21)இவர் பி.எஸ்.சி. விலங்கியல் படித்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சிங் உதவியாளராக பணிபுரித்து வருகிறார். பொங்கல் விடுமு றைக்காக மருங்கூரில் உள்ள பெரியம்மா வளர்மதி வீட்டுக்கு வந்து தங்கி இருந்தவர் நேற்று அதிகாலை முதல் காணாமல் போனார்.

    இது குறித்து முத்தாண்டிகுப்பம்போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரில் ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி சந்திரகுமார் இவரை கடத்தி யதாக கூறப்படுகிறது. இதுபற்றி காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தனியார் மருத்துவ கல்லூரி பெண் ஊழியரை தேடி வருகின்றனர். 

    ×