search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனவு"

    அ.தி.மு.க. ஆட்சி கவிழும் என நினைத்த எதிர்கட்சிகளின் கனவு பலிக்காமல் 17 மாத காலமாக ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்று அமைச்சர் உதயகுமார் பேசினார். #ADMK #TNMinister #Udhayakuamr
    ஆரணி:

    திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் 17 மாத ஆட்சி குறித்து சாதனை விளக்க 3-வது கட்ட சைக்கிள் பேரணி ஆரணியில் தொடங்கியது.

    இதன் தொடக்க நிகழ்ச்சி ஆரணி-சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள அம்மா திடலில் நடந்தது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வரவேற்றார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-


    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சியினர் கனவு கண்டனர். புதிய முதல்-அமைச்சர்கள் நாங்கள்தான் என்று கூறினர். அவர்களுடைய கனவு பலிக்காமல் 17 மாத காலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி நம்மை வழிநடத்திசெல்கின்றனர்.

    தொடர்ந்து நீதிமன்றம் மூலம் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என நினைத்து வருகிறார்கள். அது நடக்காது. அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்கள் வீறுகொண்டு எழுவார்கள்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 1, 250 இளைஞர்கள் சீருடை அணிந்து அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் இந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். தினமும் இந்த சைக்கிள் பேரணி காலை 7 மணிக்கு தொடங்கும். சில பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்படும். ஒரு சில பகுதிகளில் பள்ளி மாணவர்களிடத்தில் வாசிப்புத் திறன் மேற்கொள்ளப்படும். நீங்கள் சைக்கிள் ராஜாவாக இனியும், எப்போதும் உலா வருவீர்கள்.

    இந்த சைக்கிள் பயணம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 300 கி.மீ. தொலைவிற்கு நடக்கிறது. நிறைவு நிகழ்ச்சி இதே இடத்தில் 28-ந் தேதி நடக்கிறது என்றார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். #ADMK #TNMinister #Udhayakuamr
    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகி விடுவோம் எனும் பகல் கனவை மம்தா பானர்ஜி நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ராகுல் சின்ஹா குறிப்பிட்டுள்ளார். #BJP #RahulSinha
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று நடைபெற்ற பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, 2019 பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தின் 42 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் பா.ஜ.க தேசிய செயலாளர் ராகுல் சின்ஹா, ‘மம்தா பானர்ஜி மீண்டும் மாநில அரசை கைப்பற்றுவதே சந்தேகத்தில் இருக்கும் நிலையில், அவர் டெல்லிக்கு கனவு காண்கிறார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகி விடுவோம் எனும் பகல் கனவை மம்தா பானர்ஜி நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். #BJP #RahulSinha
    காந்தி கண்ட கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #BJP #PonRadhakrishnan
    மதுரை:

    மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி 4 ஆண்டுகள் முடிந்து 5-வது ஆண்டு தொடங்கி உள்ள நிலையில் இதை கொண்டாடும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

    மதுரை கோச்சடையில் நடைபெற்ற தூய்மை பணியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு குப்பைகளை அகற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-வது ஆண்டு தொடக்கம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

    இந்தியாவை உலக அளவில் முதல்நிலை நாடாக மாற்றுவதற்கு பிரதமர் மோடி மிகப்பெரிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தூய்மை நிறைந்த இந்தியாவை உருவாக்கும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டுவந்தது மட்டுமின்றி, பிரதமர் மோடி தனது கையிலே துடப்பத்தை எடுத்து சுத்தம் செய்தார்.

    தூய்மை இந்தியா திட்டத்தினால் உலக அளவில் இந்தியாவிற்கு பல மடங்கு பெருமை அதிகரித்துள்ளது. இன்று நாடு முழுவதும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, உறுப்பினர்கள், பாரதிய ஜனதா ஆளும் 21 மாநில முதல்-அமைச்சர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டமன்ற, மேலவை உறுப்பினர்கள், பாரதிய ஜனதா தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.


    சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று காந்தி கனவு கண்டாரோ அந்த கனவுகளை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பல மடங்கு பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இன்றைக்கு தூய்மைப்படுத்தப்பட்டுள்ள மதுரை கோச்சடை பகுதி ஒரு ஆண்டாக குப்பைகளை அகற்றாத பகுதியாகும். இதேபோன்று எல்லா இடங்களிலும் தூய்மை பணியை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan
    ×