என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பக்ரீத்"
- ஆடுகளை ஏலத்தில் எடுப்பதற்காக, வியாபாரிகள், பொதுமக்கள் வருகை அதிகளவு காணப்பட்டது.
- 2 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விலை போனது.
உடுமலை :
உடுமலை நகராட்சி வாரச்சந்தையில், வாரம் தோறும் திங்கள் கிழமை காலை, ஆடு மற்றும் நாட்டுக்கோழி சந்தை கூடி வருகிறது.உடுமலை சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விவசாயிகள்ஆடு, மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.வழக்கம் போல் நேற்று முன்தினம் கால்நடைச்சந்தை கூடியது.
இஸ்லாமியர்களால் வரும் 10ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை நெருங்குவதால்ஆட்டுச்சந்தைக்கு அதிகாலை, 5:30 மணி முதலே ஆடுகள் வரத்தும் வியாபாரிகள், பொது மக்கள் வரத்தும் காணப்பட்டது.வழக்கமாக உடுமலை சந்தைக்கு 700 ஆடுகள் வரத்து இருக்கும்.
பக்ரீத் பண்டிகை காரணமாக, ஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்த நிலையில் ஏலத்தில் எடுப்பதற்காக, வியாபாரிகள், பொதுமக்கள் வருகையும் அதிகளவு காணப்பட்டது.அதிலும்செம்மறி ஆடுகள் எண்ணிக்கை அதிகளவு காணப்பட்டதோடு, விற்பனையும் களைகட்டியது.ஆடுகளும் கூடுதல் விலைக்கு விற்பனையானது.குறைந்தபட்சம் குட்டிகள் 2 ஆயிரம் முதல் பெரிய அளவில் கொம்புகள் அழகாக உள்ள ஆடுகள் என 30 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விலை போனது.அதே போல் கோழிச்சந்தைக்கு நாட்டுக்கோழிகள், சேவல், கட்டுச்சேவல் என 500க்கும் மேற்பட்டவை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
ரகத்திற்கு ஏற்ப 350 முதல் 5,700 ரூபாய் வரை விற்றன.வியாபாரிகள் கூறுகையில், பக்ரீத் பண்டிகை காரணமாக உடுமலை சந்தைக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் வரத்து காணப்பட்டன. வழக்கமான விலையை விட 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்றன என்றனர்.
- பக்ரீத் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்று அசைவ ஓட்டல்களில் பிரியாணி விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இப்போதே அசைவ ஓட்டல்களில் ஆர்டர்கள் குவிகிறது.
- குடும்பமாக சாப்பிட பக்கெட் பிரியாணி, தந்தூரி, கிரில் போன்ற கோழி வகை உணவுகளும் அதிகளவு தயாரிக்க முன்னணி ஓட்டல்கள் தயாராகி வருகின்றன.
சென்னை:
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை குர்பானி கொடுப்பது வழக்கம்.
வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முஸ்லிம்கள் தயாராகி வருகின்றனர்.
அவரவர் வசதிக்கேற்ப ஆடு, மாடு அல்லது ஒட்டக இறைச்சியை வாங்கியோ அல்லது உயிருடன் வாங்கி கூறுபோட்டு உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்துக்கு பிரித்து கொடுப்பார்கள்.
இதனால் பக்ரீத் பண்டிகைக்கு முன்னதாகவே ஆடு விற்பனை களை கட்ட தொடங்கி விடும். சென்னையில் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, அம்பத்தூர் ஆகிய 4 இடங்களில் உள்ள இறைச்சி கூடங்களில் குர்பானி ஆடு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
நேற்று முதல் ஆடுகளை வாங்கி செல்கின்றனர். சென்னையில் சுமார் 50 ஆயிரம் ஆடுகள் குர்பானிக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
புளியந்தோப்பு ஆட்டிறைச்சி கூடத்தில் மட்டும் 20 ஆயிரம் ஆடுகள் விற்பதற்கு தயாராக உள்ளன.
இதுகுறித்து ஆட்டிறைச்சி வியாபாரிகள் சங்க கவுரவ தலைவர் ஸ்ரீராமலு கூறியதாவது:-
குர்பானி ஆடு விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. குறைவாகத்தான் விற்பனை நடக்கிறது. பக்ரீத்துக்கு 4 நாட்களுக்கு முன்னதாகவே ஆடுகளை வாங்கி செல்வார்கள். 15 கிலோ எடையுள்ள ஆடு ரூ.10,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உயிருடன் கிலோ ரூ.650 வீதமும், கறியாக கிலோ ரூ.600 வீதமும் விற்பனை செய்கிறோம்.
ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் வருவதால் ஆட்டு இறைச்சி விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை 10 ஆயிரம் ஆடுகள் வெட்டப்பட்டும். இந்த வாரம் கூடுதலாக விற்பனையாகும் என்பதால் ஆடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் பல்வேறு இடங்களில் குர்பானி ஆடுகள் விற்பனை இப்போதே மும்முரமாக நடந்து வருகின்றன. ஒரு சில இடங்களில் ஒட்டக இறைச்சியும் விற்கப்படுகிறது.
மாடுகளும் அதிகளவு வெட்டுவதற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாட்டு இறைச்சி கிலோ ரூ.400 வரை விற்கப்படுகிறது. ஆட்டு இறைச்சி கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்கப்படுவதால் மாட்டு இறைச்சியை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். பக்ரீத் பண்டிகைக்கும் மாட்டு இறைச்சி விற்பனை அமோக இருக்கும் என்பதால் வியாபாரிகள் அதிகளவு மாடுகளை கொண்டு வந்துள்ளனர்.
பக்ரீத் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்று அசைவ ஓட்டல்களில் பிரியாணி விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இப்போதே அசைவ ஓட்டல்களில் ஆர்டர்கள் குவிகிறது. குடும்பமாக சாப்பிட பக்கெட் பிரியாணி, தந்தூரி, கிரில் போன்ற கோழி வகை உணவுகளும் அதிகளவு தயாரிக்க முன்னணி ஓட்டல்கள் தயாராகி வருகின்றன.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பார்சல் உணவு அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் பிரியாணி விற்பனை குறிப்பிடும் வகையில் உள்ளது.
- வருகிற 10-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வியாபாரிகள் லாரி உள்ளிட்ட வாகனங்களில் கால்நடைகளை கொண்டு வந்து இறக்கினர்.
- அதனை வாங்குவதற்கு வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகமாக வந்திருந்தனர். இன்று நாட்டுகிடா, பொட்டுகிடா என பல்வேறு இன கிடாக்களை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
நெல்லை:
தென்மாவட்டங்களில் உள்ள கால்நடை சந்தைகளில் எட்டயபுரத்துக்கு அடுத்த படியாக மேலப்பாளையம் ஆட்டுச்சந்தை மிகவும் புகழ் பெற்றது.
இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள்.
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்த சந்தையில் ஆடு, மாடுகள் மட்டுமின்றி கோழி, மீன், கருவாடு உள்ளிட்டவற்றின் விற்பனையும் தனித்தனியே நடைபெறும். பண்டிகை காலங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில் வருகிற 10-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வியாபாரிகள் லாரி உள்ளிட்ட வாகனங்களில் கால்நடைகளை கொண்டு வந்து இறக்கினர்.
அதனை வாங்குவதற்கு வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகமாக வந்திருந்தனர். இன்று நாட்டுகிடா, பொட்டுகிடா என பல்வேறு இன கிடாக்களை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
பண்டிகை நெருங்குவதால் விலையை பற்றி யோசிக்காமல் அதிக விலை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்றனர். நாட்டு கிடாக்கள் ஒன்று ரூ.45 ஆயிரம் வரை விற்பனையானது.
மயிலம்பாடி ஆடுகள் ரூ.25 ஆயிரம் வரையிலும், பொட்டுகிடா ரூ.40 முதல் ரூ.45 ஆயிரம் வரையிலும் விற்கப்பட்டது. இன்று ஒரே நாளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. அவை அனைத்தும் மதியத்திற்குள் விற்று தீர்ந்தது.
- பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆட்டுச்சந்தை நடந்தது.
- அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் வழக்கத்தைவிட அதிகளவு கூட்டம் காணப்பட்டது. 10,000 முதல் 20,000 ஆடுகள் வரை விற்கப்பட்டது.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுசந்தையில் ஒவ்வொரு வாரமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வியாபாரிகள் ஆடுகள், கோழிகளை வாங்கிச் செல்வது வழக்கம். அதிகாலை 4 மணியிலிருந்து 9 மணி வரை கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும்.
இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆட்டுச்சந்தை நடந்தது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் வழக்கத்தைவிட அதிகளவு கூட்டம் காணப்பட்டது. 10,000 முதல் 20,000 ஆடுகள் வரை விற்கப்பட்டது.
வருகிற 10-ந் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்த வார வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தையில் ரூ. 5 ஆயிரம் வரை விலை அதிகரித்து 15 முதல் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்று நடந்த ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இறைத்தூதர் இபுறாஹீம் நபியின் புனிதமும், அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த தன்னலமற்ற தியாக வாழ்வின் மேன்மையைப் போற்றும் நன்னாளே பக்ரீத் திருநாளாகும்.
அவ்வகையில் இந்தியாவில் இந்த ஆண்டு இன்று பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள மசூதிகள் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
இந்த நாளில் ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை குர்பானி கொடுக்கும் இஸ்லாமியர்கள், அவற்றின் இறைச்சியை ஏழைகள், நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்கின்றனர்.
பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். #EidAlAdha #Bakrid #EidMubarak
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்