என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 181853"
- எருக்கம் பூ, பூமாலை, காகித மாலை, புது கயிறுகள் போடப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.
- மாடுகளை அவிழ்த்து தேரடி வரையும் ஓட்டிச்சென்று திரும்பி கொண்டு வந்து மாட்டுத்தொழுவத்தில் கட்டப்பட்டது.
தஞ்சாவூர்:
தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நந்திக்கு சுமார் 100 கிலோ கொண்ட காய்கறிகள், பழங்கள் மூலம் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.
ஐயாறபர் குதிரை வாகனத்தில் எழுந்தருளியும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவோலக்க மண்டபத்தில் இருந்து மேலதாள கச்சேரியுடன் சென்று முருகன் சன்னதி முன்பு காளை மாடு பசுமாடு யானை கன்று குட்டிகள் ஆகியவற்றை ஆவாரம் பூ, மாவிலை, எருக்கம் பூ, பூமாலை, காகித மாலை, புது கயிறுகள் போடப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.
ஐயாறபர் அம்பாளுக்கு முன்பாக பொங்கல்யிடபட்டு இருந்த பொங்கலை முன்பு படையலிட்டு பஞ்சமுக தீபாரதனை காண்பிக்கப்பட்டு மாடுகளுக்கு யானைக்கும் சாதங்கள் ஊட்டப்பட்டன பின்பு மாடுகளை அவிழ்த்து தேரடி வரையும் ஓட்டிச் சென்று திரும்பி கொண்டு வந்து மாட்டுத்தொழுவத்தில் கட்டப்பட்டது.
அய்யாறபர் அம்பாள் பல்வேறு வீதிகள் வழியாக மேலதாள வான வேடிக்கையுடன் சந்நிதியை வந்து அடைந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பசு மாடுகளை சுற்றி வலம் வந்து கும்பிட்டு இறைவனிடைய அருளை பெற்று சென்றார்கள்.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் 27- வது மகா குரு சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் அவர்களின் அறிவுறுத்–தலின்படி கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
வேலூர் அருகே உள்ள பொய்கை வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. வாரம் பிறந்து செவ்வாய்க்கிழமை என்றாலே பொய்கை சந்தை களை கட்டும். கால்நடைகள், கோழி மட்டுமின்றி காய்கறி, விதைகள் போன்றவையும் விற்கப்படுகிறது.
ஆனாலும், பொய்கை சந்தையை மாட்டு சந்தை என்றே அழைப்பர். இங்கு வேலூர், திருவண்ணாமலை உள்பட ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காளை, பல்வேறு இன கறவை மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.
வாரம் ஒருநாள் சந்தையில் மட்டும் ரூ.1 கோடி முதல் ரூ.1½ கோடி வரை வியாபாரம் நடைபெறுகிறது. மாடுகள் விற்பனை மட்டுமே ரூ.1 கோடியை எட்டும். சந்தைக்கு முந்தைய நாள் இரவிலேயே வெளியூர்களில் இருந்து மாடுகள் கொண்டு வந்து இறக்கப்பட்டுவிடும்.
மாடுகளின் பல்லை பிடித்தும், கன்று ஈன்றதை வைத்தும், நாளொன்றுக்கு எவ்வளவு லிட்டர் பால் கறக்கும் என்பதை கேட்டும் இடைத்தரகர்கள் மூலம் விலை நிர்ணயித்து மாடுகள் உடனடியாக விற்கப்படும்.
பக்ரீத் பண்டிகை நாளை நடைபெறுவதை யொட்டி இறைச்சிக்காக மாடுகள் வாங்குபவர்கள் அதிகளவில் சந்தைக்கு வந்திருந்தனர். கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையின் போது கேரள மாநில வியாபாரிகள் அதிகளவில் பொய்கை சந்தைக்கு வந்திருந்தனர்.
கடந்த ஆண்டு கேரளாவுக்கு மட்டும் 7 ஆயிரம் மாடுகள் வாங்கி சென்றனர். இந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்பு காரணமாக கேரளாவில் பக்ரீத் பண்டிகை களையிழந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று வாழவச்சனூரில் நடந்த வாரச்சந்தைக்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளையும், மாடுகளையும் விற்பனைக்காக கொண்டு வந்தனர். நாளை (புதன்கிழமை) பக்ரீத் பண்டிகை என்பதால் ஆடுகள் விற்பனை களைகட்டியது. ஆடுகளை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
இதனால் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. மேலும் முஸ்லிம்கள் குர்பானி வழங்குவதற்காகவும் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி சென்றனர்.
நேற்று மட்டும் ரூ.1 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்