search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 181884"

    • பக்தர்கள் முக்கிய வீதி வழியாக கரகம் காவடி பால்குடம் கோவிலை வந்தடைந்தனர்.
    • பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு தீராதனை காண்பிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே ராஜகிரியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் 19-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் (மே) 25-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவை யொட்டி ராஜகிரி குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து திரளான பக்தர்கள் கரகம், காவடி, பால்குடம், முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர், அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, சிறப்பு தீபாராதனை காண்பி க்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, மாலையில் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து அம்மன் வீதிஉலா தப்பாட்டம், வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், நாட்டாமை, பஞ்சாயத்தார்கள், கிராமமக்கள்பக்தர்கள் கரகம், காவடி, பால்குடம், முளைப்பாரி எடுத்து செய்திருந்தனர்.


    • பக்தர்கள் பால் குடம் சுமந்தும் காவடி எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்,

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த மங்கலூர் கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற மஹா காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது. இதனையடுத்து தினமும் பல்வேறு நிகழ்சிகள் சிறப்பு அபிசேகம் ஆராதனைகள் நடந்தது.

    அதனை தொடர்ந்து அம்மனுக்கு பக்தர்கள் பால் குடம் சுமந்தும் காவடி எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பின்னர் அம்மனுக்கு பால்குடம் அபிஷேகம் நடைபெற்று.

    தொடர்ந்து கரகம் எடுத்தல், அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் தீபாராதனையும் சிங்க வாகனத்தில் அம்மன் வீதியுலா காட்சிகள் நடந்து அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரம் மாவுக்கு போடுதல் அர்ச்சனை சிறப்பு அபிசேகம், அன்னதானம் நடைபெற்றது.

    இரவும் கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது

    . இதில் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்துக் கொண்டனர்.

    • வைகாசி மாதம் பிரம்மோற் சவ திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நேரு வீதியில் புறப்பட்ட தேர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகாசி மாதம் பிரம்மோற் சவ திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்று வருகிறது.

    வைகாசி மாத பிரம்மோற் சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.கனகவல்லி தாயாருடன் லட்சுமி நரசிம்மர் பெருமாள் தேரில் எழுந்தருளினார். முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். திண்டிவனம் நேரு வீதியில் புறப்பட்ட தேர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என முழக்கங்க ளுடன் உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திண்டிவனம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தன்னார்வு தொண்டு நிறுவனம் சார்பாக பல்வேறு இடங்களில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. நகர செயலாளர் தீன தயாளன், மாவட்ட பொருளாளர் கே.வி.என். வெங்கடேசன், பி.ஆர்.எஸ். உரிமையாளர் ரங்க மன்னர், ராம் டெக்ஸ்டைல்ஸ் உரிமை யாளர் வெங்கடேசன் நிர்வாக அதிகாரி சூரிய நாராயணன், செயல் அலுவலகர் சிவசங்கர், ஒலக்கூர் ஒன்றிய துணைச் சேர்மன் ராஜாராம், கவுன்சிலர் லட்சுமி பிரபா மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் குணமடைய வேண்டி யாகம் வளர்க்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே காரை மேட்டில் ஒளிலாயம் அமைந்துள்ளது.

    இங்கு 18 சித்தர்களுக்கும் தனித்தனியாக கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவில் வளாகத்தில் ராஜேந்திரா சுவாமிகள் ஜீவசமாதி அடைந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோ விலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு வேஷ்டி, புடவை வழங்கப்பட்டது.

    மேலும், ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்கள் ஆன்மா சாந்தி அடையவும், விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் மகா யாகம் வளர்க்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் நாடிமுத்து, செந்தமிழன், பொறியாளர் மாமல்லன் செய்திருந்தனர்.

    • இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா காட்சி நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அடுத்த ராஜகிரியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் 19-வது ஆண்டு திருவிழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி ராஜகிரி குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம், பால்குடம், அழகு காவடி எடுத்து தப்பாட்டம், வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

    இதனை அடுத்து மாலையில் மாவிளக்கு பூஜையும், இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா காட்சியும் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை அப்பகுதி நாட்டாண்மைகள், பஞ்சாயத்தார்கள், கிராமமக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், இளைய தலைமுறை நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் பக்தர்கள் காவடி எடுத்து வந்து வழிபடுவது வழக்கம்.
    • அங்கு நடந்த பாரம்பரிய கோலாட்டத்தை கண்டு ரசித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 28-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

    ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் பக்தர்கள் காவடி எடுத்து வந்து வழிபடுவது வழக்கம்.

    இந்நிலையில், திருவிழாவின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை யொட்டி பக்தர்கள் மாவிளக்கு வைத்தும், படையலிட்டும், பால் காவடி, பன்னீர் காவடி, வேப்பிலை காவடி மற்றும் பாடை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். தொடர்ந்து அங்கு நடந்த பாரம்பரிய கோலாட்டத்தை கண்டு ரசித்தனர்.

    • விரதம் இருந்த பக்தர்கள் கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • தொடர்ந்து, பக்தர்கள் ரதக்காவடி எடுத்து வந்து வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள தெற்குப்பொய்கை நல்லூரில் பழமை வாய்ந்த சொர்ணபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    கோவிலில் வைகாசி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட விரதம் இருந்த பக்தர்கள் கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்தி கரகம் முன்னாள் செல்ல ஒன்றன்பின் ஒருவராக மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

    இதைத்தொடர்ந்து ரதக்காவடி அலகு காவடி எடுத்து வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களின் கோலாட்ட நிகழ்ச்சி நடை பெற்றது.

    • முருக பெருமான் பிறந்த நாள் பெருவிழாவாக வைகாசி விசாகம் அனுசரிக்கப்படுகிறது.
    • டானிங்டன் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் 108 பால் குடங்களை ஏந்தி ஊர்வலமாக சென்று சக்திமலைக்கு வந்தனர்.

    அரவேனு,

    கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருநாளையொட்டி பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்றதுடன், கோவிலில் முருகக் கடவுளுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

    முருக பெருமான் பிறந்த நாள் பெருவிழாவாக வைகாசி விசாகம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் திருவிழா கொண்டாட்டங்கள் தடபுடல்படும்.

    வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து சென்று முருக பெருமானை வணங்குவது வழக்கம். இதன் ஒருபகுதியாக கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் வைகாசி விசாகம் கொண்டாடப்பட்டது. அப்போது டானிங்டன் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் 108 பால் குடங்களை ஏந்தி ஊர்வலமாக சென்று சக்திமலைக்கு வந்தனர்.

    அங்கு அவர்கள் சுவாமிக்கு நல்லெண்ணெய், பால், பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம், திருநீறு அபிஷேகம் செய்து பக்திப்பரவசத்துடன் வழிபட்டனர். அப்போது கோவிலில்,ஐந்து முக விளக்கு ஏற்றி, அதில் 5 வித எண்ணை ஊற்றி, 5 வகை புஷ்பம் சமர்ப்பித்து, சுவாமிக்கு 5 வகை பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம், பழங்கள் மற்றும் ளை படைத்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும் வைத்து அலங்கார பூஜை நடத்தப்பட்டது.

    இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கந்த கவச பாராயணம் செய்து முருகப்பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சின்னடைக்கி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் அருகே செ.மணப்பட்டியில் 200 ஆண்டுகள் பழமையான பிடாரி கருப்ப சுவாமி, சின்னடைக்கி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாக யாகசாை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை, பஞ்ச கவ்விய பூஜை, மகா கணபதி ஹோமம், உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.

    நேற்று கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • இரவு சுமங்கலி பெண்களுக்கான விளக்கு பூஜை நடைபெற்றது.
    • ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுரபாஷாணி புரம்- காடந்தகுடியில் செல்வவிநாயகர், பாலமு ருகன், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த மாதம் (ேம) 30-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.

    தொடர்ந்து, 31-ந்தேதி குழந்தைகளுக்கான அகல் விளக்கு பூஜை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து, நேற்று மதியம் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு சுமங்கலி பெண்களுக்கான விளக்கு பூஜையும் நடைபெற்றது.

    இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் மஞ்சள் பொடி, குங்குமம், அருகம்புல், பச்சரிசி உள்ளிட்ட 10-ற்கும் மேற்பட்ட பொருட்களை கொண்டு வந்து அமர்ந்து விளக்கேற்றி பூைஜயில் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    இதனை அடுத்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பூஜையில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, இன்று (2-ந்தேதி) மாவிளக்கு போடுதல், பால்குடம், பால் காவடிகள் எடுத்து வரும் நிகழ்ச்சியும், மதியம் சிறப்பு அன்னதானமும், தொடர்ந்து, 3 மணிக்கு அம்மன் குளக்கரையில் இருந்து சடல் காவடி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இதேபோல், நாளை (3-ந்தேதி) பாலமுருகன் வீதிஉலாவும், இரவு 7 மணிக்கு அபிஷேக, ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு வானவேடிக்கை நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மதுரபாஷாணிபுரம்- காடந்தகுடி கிராமக்கள் செய்து வருகின்றனர்.

    • வள்ளி தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியர் அருள்பாலித்து வருகிறார்.
    • பல்வேறு திரவியங்களால் முருகனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு அமிர்தக டேஷ்வரர் கோவிலில் தனி சன்னதியில் வள்ளி தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியர் அருள்பா லித்து வருகிறார்.

    இந்த ஆண்டு வைகாசி பெருவிழா 7-ம் நாள் மண்டகபடியில் முருகனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரா தனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, இரவு முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து வந்து நேர்த்தி கடனை செலுத்தினர்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்,

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆதனூர் கிராமத்தில் அருள் பாலித்து வரும் வீமநாயகி அம்மன் கோயிலில் திருவிழா நடை பெற்றது.

    விழாவில் 9 ம் நாள் காலை முதல் பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து வந்து நேர்த்தி கடனை செலுத்தினர்.

    மாலை 5.00 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் ஆதனூர், கூப்புளிக்காடு, பாங்கிரான்கொல்லை, கழனிவாசல், பேராவூரணி, பொன்காடு, சித்தாதிக்காடு மற்றும் சுற்று வட்டார பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தேரோட்டத்திற்கு முதல் நாள் மாலை பேராவூரணி நீலகண்டபுரத்திலிருந்து குதிரை எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

    ×