search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இத்தாலி"

    • காந்தி நினைவு அருங்காட்சியகத்திற்கு இத்தாலிய யோகா குழுவினர் வருகை தந்தனர்.
    • பயிற்சியை பெற இத்தாலிய ஆசிரியர் குழுவினனர் இந்தியா வந்துள்ளனர்.

    மதுரை

    இந்தியாவில் பின்பற்றப்படும் யோகா, தியானம், நல வாழ்வு ஆகியவற்றை கற்றுக் கொண்டு இத்தாலிய மாணவ-மாணவிகளுக்கு கற்று கொடுப்பதற்கான பயிற்சியை பெற இத்தாலிய ஆசிரியர் குழுவினனர் இந்தியா வந்துள்ளனர்.

    இந்த குழுவினர்கள் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வந்தனர். காந்திய சிந்தனைகள் குறித்து அருங்காட்சியக நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர். காந்தி நினைவு அருங்காட்சி யகத்தை பார்வையிட்ட யோகா குழுவினர் அந்த அருங்காட்சியகத்திற்கும் இத்தாலி நாட்டிற்குமான தொடர்புகள் வருங்காலத்தி லும் தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த னர்.

    இதற்காக காந்திய கலாசார பரிமாற்றம் தொடர்பான செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என வேண்டு கோள் விடுத்தனர். காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

    • குடும்பத்துடன் இத்தாலியின் அமல்ஃபி கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தார்
    • இந்த மோதலில் ஏட்ரியன் படகிலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்டார்

    ப்ளூம்ஸ்பரி பப்ளிஷிங் என்பது இங்கிலாந்தின் கேம்டன் பகுதியை மையமாக கொண்டு செயல்படும் ஒரு உலகளாவிய பதிப்பக நிறுவனம்.

    இந்நிறுவனம் கதை மற்றும் கதை அல்லாத புத்தகங்களை பதிப்பிட்டு வெளியிடுவதில் உலக புகழ் பெற்றதாகும். இந்நிறுவனத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகளில் பதிப்பக கிளைகள் உண்டு.

    இதன் ஒரு பதிப்பக அலுவலகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருக்கிறது.

    அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை நிர்வகித்து வந்தவர் இதன் தலைமை நிர்வாக அதிகாரி ஏட்ரியன் வாகன் எனும் 45 வயது பெண்மணி.

    இவர் இத்தாலியின் அமல்ஃபி கடற்கரையில் தனது கணவர், 12 மற்றும் 8 வயதுடைய இரு குழந்தைகளுடன் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு அவர் குடும்பத்தினருடன் ஒரு வாடகை வேகப்படகில் கடலில் பயணித்தார்.

    அப்போது சற்று தொலைவில் ஒரு பெரிய படகு சுமார் 80 சுற்றுலா பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

    திடீரென ஏட்ரியன் சென்ற படகு கட்டுப்பாட்டை இழந்து அந்த பெரிய படகின் மீது மோதியது.

    இதில் ஏட்ரியன் படகிலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்டார். அப்போது பெரிய படகின் புரொபெல்லர் மீது மோதி அவர் படுகாயமடைந்தார்.

    உடனடியாக கடலிலிருந்து அவர் மீட்கப்பட்டார். அவசரகால சிகிச்சை குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், அவர்கள் வந்து பரிசோதித்து பார்த்த போது ஏட்ரியன் உயிரிழந்திருந்தார்.

    இந்த மோதலில் ஏட்ரியனின் கணவர் மைக் வைட்டிற்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தைகளுக்கு காயங்கள் ஏதுமில்லை என்றாலும் இந்த கோர விபத்தை நேரில் கண்டதால் அவர்கள் இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

    இத்தாலியின் புலனாய்வு துறையினர் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ஏட்ரியன் உயிரிழப்பிற்கு ப்ளூம்ஸ்பரி பதிப்பகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்துகொண்ட எம்பி கில்டா அங்கேயே தனது மகனை ஆசுவாசப்படுத்தினார்.
    • இவரின் செய்கையை கவனித்து வந்த சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கில்டாவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இத்தாலி நாட்டின் பாராளுமன்றத்திற்கு எம்பி கில்டா ஸ்போர்டெல்லோ கைக்குழந்தையான தனது மகன் ஃபெடரிகோவை அழைத்து வந்திருந்தார். பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கைக்குழந்தை திடீரென அழத்துவங்கியது. உடனே பாராளுமன்றம் அமைதியானது. எனினும், குழந்தை அழுவதை நிறுத்தவில்லை.

    குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்துகொண்ட எம்பி கில்டா அங்கேயே தனது மகனை ஆசுவாசப்படுத்தி பாலூட்ட தொடங்கினார். இவரின் செய்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனித்து வந்தனர். அவையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய எம்பி-யை சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தியதோடு, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    "அனைத்து கட்சிகளும் ஆதரவளிப்பது இதுவே முதல்முறை. ஃபெடரிகோவுக்கு நீண்ட, சுதந்திரமான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். தற்போது நாம் அனைவரும் சற்று அமைதியாக பேச தொடங்குவோம்," என சபாநாயகர் ஜார்ஜியோ மியூல் தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி பதவியேற்றார். பெண் எம்பிக்கள் தங்களது கைக்குழந்தைகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான அனுமதி கடந்த நவம்பர் மாதம் வழங்கப்பட்டது. பெண் பிரதமர் பதவி வகிக்கும் இத்தாலியின் எம்பிக்களில் பெரும்பாலானோர் ஆண் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    கனமழை காரணமாக இத்தாலி நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலரை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
    ரோம் :

    இத்தாலி நாட்டின் கேலாப்ரியா மாகாணத்தில் பொலினோ தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவின் ஒருபகுதியக ராக்னெல்லோ எனும் ஓடை உள்ளது. மலை இடுக்குளில் மிகவும் குறுகலாக சுமார் 1 கி.மீ அழத்தில் பயணிக்க கூடிய இந்த நீர் ஓடையை பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.

    இந்நிலையில், இந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக இந்த ஓடைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இந்த ஓடையை சுற்றி பார்க்க சென்ற சுற்றுலாப் பயணிகள் 8 பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    மேலும், 18 பேர் மீட்பு குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் அவர்களில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சுற்றுலாப் பயணிகள் யாரும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் இப்பகுதிக்கு சென்றுள்ளதால் மொத்தம் எத்தனை பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.



    இத்தாலியில், கடந்த வாரம் பாலம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானதில் 43 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் தொடர்புடைய இடைத்தரகரை ஒப்படைக்க இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளதால் நாடு கடத்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தை சி.பி.ஐ. அணுகி உள்ளது.
    புதுடெல்லி:

    முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மிக முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 ஹெலிகாப்டர்கள் வாங்க இங்கிலாந்தை சேர்ந்த அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த பேரத்தை செய்து முடிப்பதற்காக, ரூ.423 கோடி லஞ்சம் கைமாறியதாக வெளியான தகவலையடுத்து, ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

    இந்த லஞ்ச விவகாரம் குறித்து சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட 3 பேரில் ஒருவரான இத்தாலியை சேர்ந்த கர்லோ கெரோசாவை (வயது 71) பிடிக்க சர்வதேச போலீஸ் மூலம் ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டது. இதன்பேரில், இத்தாலி போலீசார் கர்லோ கெரோசாவை கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்துவது அவசியம் என்பதால், அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு சி.பி.ஐ. வேண்டுகோள் விடுத்தது. ஆனால், அக்கோரிக்கையை இத்தாலி நிராகரித்துள்ளது. இந்தியாவுடன் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் எதுவும் இல்லாததை அந்நாடு சுட்டிக்காட்டி உள்ளது.

    இது, சி.பி.ஐ.க்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இருப்பினும், வேறு விதிமுறைகளின் கீழ், கெரோசாவை நாடு கடத்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தை சி.பி.ஐ. அணுகி உள்ளது.
    இத்தாலியின் டுரின் மாகாணத்தில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது ரெயில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Italytrain
    ரோம்:

    இத்தாலியில் உள்ள டுரின் மாகாணத்தில் தண்டவாளத்தில் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் ரெயில் பயணம் செய்த பயணிகள் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


    அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரி டிரைவர் காயங்களுடன் உயிர் தப்பினார். ரெயிலானது உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு டுரின் நகரில் இருந்து புறப்பட்டு இவ்ரியாவிற்கு சென்று கொண்டிருந்தது. சுமார் 11.30 மணியளவில் கலுசோ நகருக்கு அருகில் செல்லும் போது இந்த விபத்து நடந்துள்ளது. #Italytrain
    இத்தாலி பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முக்கிய இரண்டு எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளது. #Italy
    ரோம்:

    சமீபத்தில் நடந்து முடிந்த இத்தாலி பாராளுமன்ற தேர்தலில்  எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கடந்த 11 நாட்களாக அரசியல் சூழல் முடங்கியுள்ளது. பிரதான எதிர்க்கட்சிகளான பைவ் ஸ்டார் கூட்டணி - மத்திய வலதுசாரி கூட்டணி கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. 

    இந்நிலையில், இந்த கூட்டணியை ஆட்சியில் அமர்த்த முக்கிய பங்காற்றிய சட்ட பேராசிரியர் கியூசெப்பீ கோண்டே உடன் இன்று அந்நாட்டு அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா சந்தித்து, பிரதமராக பொறுப்பேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். 

    அதிபரின் அழைப்புக்கு பைவ் ஸ்டார் லீக் கூட்டணி சம்மதம் தெரிவித்துள்ளது. கியூசெப்பீ கோண்டே எவ்வித அரசியல் அனுபவமும் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×