search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிராக்டர்கள்"

    நாமக்கல் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டிய டிரைவரை தேடி வருகின்றனர்.
    மோகனூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா பாலப்பட்டி பகுதியில் கொமாரபாளையம் கிராம நிர்வாக அலுவலர் தவமணி, கிராம உதவியாளர்களுடன் அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தினார். உடனே லாரியில் இருந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். லாரியை பரிசோதித்த போது அதில் மணல் ஏற்றப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    அனுமதியின்றி மணல் கடத்தப்பட்ட போது வழிமறித்ததால் டிரைவர் தப்பி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் தவமணி கொடுத்த புகாரின் பேரில் மோகனூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். அந்த லாரியை ஓட்டி வந்த ஓமலூர் அருகே உள்ள தும்பிபாடி கே.கே.பள்ளம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரனை போலீசார் தேடி வருகிறார்கள். 
    கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை போலீசார் நேற்று கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் அதிராம்பட்டினம் செட்டித்தெருவை சேர்ந்த ராமநாதன் (வயது 39) என்பவரை கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். 
    கரூரில் லாரியில் மணல் கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.
    கரூர்:

    கரூர் மின்னாம்பள்ளி வன்னியம்மன் கோவில் தெரு அருகே நேற்று முன்தினம் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த லாரி டிரைவர், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ஞானவேலை (வயது 24) கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர். 
    காரையூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 டிராக்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    காரையூர்:

    காரையூர் அருகே உள்ள கீழத்தானியம் ஆற்றுப்பகுதியில் அனுதியின்றி மணல் அள்ளப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன், காரையூர் வருவாய் ஆய்வாளர் சாதிக் பாட்சா மற்றும் அதிகாரிகள் கீழத்தானியம் ஆற்றுப்பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

    அப்போது சூரப்பட்டியில் அந்த வழியாக வந்த 2 டிராக்டர்களை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து காரையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
    ×