search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபச்சாரம்"

    • மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடைபெற்றது
    • 2 அழகிகள் மீட்பு

    திருச்சி:

    திருச்சி தில்லை நகர் நான்காவது குறுக்கு தெருவில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அப்பகுதிக்கு சென்ற விபச்சார தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த சங்கீதா (வயது32), சேலம் மாவட்டத்தை சேர்ந்த லைலா (23)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) உள்ளிட்ட இருவரையும் காவல்துறையினர் மீட்டு பெண்கள் காப்பகத்தில் ேசர்த்தனர். மேலும் அவர்கள் இருவருக்கும் இடைத்தரகராக செயல்பட்ட சரத் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த அருள் செல்வம் என்ற இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன் ரூ.1500, ஆணுறை பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது.

    • போலீஸ் விசாரணையில் கடந்த 1½ வருடமாக மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
    • தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ஜிபு மற்றும் சிஜோவை கைது செய்தனர்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளியை சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவர் வேலை விஷயமாக ஈரோடு மாவட்டத்திற்கு வந்தார்.

    ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் நின்று கொண்டு இருந்தபோது அவர் அருகே வந்த ஒரு வாலிபர் தான் கேரளாவை சேர்ந்தவர் என்றும் தனது பெயர் ஜிபு (26) என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

    மோளகவுண்டன் பாளையம் பாலதண்டாயுதம் வீதியில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருவதாகவும், அங்கு வெளி மாநிலத்தை சேர்ந்த 3 பெண்கள் இருப்பதாகவும், ரூ.2 ஆயிரம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினார்.

    அதற்கு அந்த வாலிபர் சரி என்று ஒப்புக்கொண்டு ஜிபு கூறிய இடத்திற்கு சென்றுள்ளார். அந்த மசாஜ் சென்டரில் இருந்த கேரளாவை சேர்ந்த சிஜோ (25) என்பவர் 3 பெண்களை காண்பித்து இதில் உங்களுக்கு யாரை பிடித்து இருக்கிறதோ சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு வேறு அறைக்கு சென்று விட்டார். அந்த வாலிபர் 3 பெண்களிடம் அவர்களது பெயரை கேட்டு உள்ளார்.

    அப்போது அந்த பெண்கள் தாங்கள் அரியானா, டெல்லி மற்றும் சேலத்தை சேர்ந்தவர்கள் என்றும், மசாஜ் செய்யும் வேலை என்று சொல்லி அழைத்து வந்து தங்களை ஜிபு, சிஜோ ஆகியோர் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாகவும் தங்களை எப்படியாவது இங்கிருந்து அழைத்து சென்று விடுங்கள் என்று அந்த பெண்கள் அந்த வாலிபரிடம் கூறியுள்ளனர்.

    இதையடுத்து அந்த வாலிபர் தன்னிடம் பணம் குறைவாக இருப்பதாகவும் ஏ.டி.எம்.மில் சென்று பணம் எடுத்து வருவதாகவும் ஜிபு, சிஜோ ஆகியோரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்து இதுகுறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் மசாஜ் சென்டருக்குள் நுழைந்து சோதனையிட்டனர். அப்போது விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை மீட்டனர். அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கேரளாவை சேர்ந்த ஜிபு மற்றும் சிஜோ ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவர்கள் கடந்த 1½ வருடமாக இந்த பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ஜிபு மற்றும் சிஜோவை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களையும் மீட்டு கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    ஆசிய விளையாட்டு போட்டிக்காக இந்தோனேசியா சென்றுள்ள ஜப்பான் அணியில் 4 வீரர்கள், இரவு விடுதி ஒன்றில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததால் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். #AsianGames #AsianGame2018 #Japan
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், ஜப்பான் நாட்டின் கூடைப்பந்தாட்ட அணியை சேர்ந்த 4 வீரர்கள் போட்டி நன்னடத்தை விதிகளை மீறியதற்காக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த வியாழன் அன்று கத்தாருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய பின்னர், ஓட்டல் ஒன்றுக்கு அணியின் சீருடையுடன் சென்றுள்ள அந்த 4 வீரர்களும் மது அருந்தியுள்ளனர். அப்போது, ஜப்பானை சேர்ந்த உள்ளூர் பெண் அவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். 

    இதனை அடுத்து, 4 பெண்களுடன் ஓட்டல் அறைக்குள் நுழைந்த 4 வீரர்களும் மறுநாள் காலை வரை அங்கு இருந்துள்ளனர். விளையாட்டு கிராமத்தை விட்டு வெளியேறி போட்டி விதிமுறைகளை மீறிய அந்த 4 வீரர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

    அதற்கு முன்னதாக அவர்கள் தொடரை விட்டு வெளியேற்றப்பட்டு ஜப்பானுக்கு திரும்ப அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்கள் மீதான விசாரணை முடிந்த பின்னர், தண்டனை அறிவிக்கப்படும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூறியுள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு தென்கொரியாவில் நடந்த ஆசிய போட்டியின் போது, பத்திரிகையாளர் ஒருவரின் உடமையை திருடி ஜப்பானை சேர்ந்த நீச்சல் வீரர் தோமிடா 18 மாத தடைக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×