என் மலர்
நீங்கள் தேடியது "வாகனங்கள்"
- மதுரை மாவட்டத்தில் 580 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- டிரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
மதுரை
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா நடந்து வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் கார் மற்றும் வாகனங்களில் திரளாக புறப்பட்டு செல்கின்றனர்.
இந்த வாகனங்கள் பெரும்பாலும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு வழித்தடங்கள் வழியாகவே செல்கின்றன.
இந்த நிலையில் தேவர் குருபூஜைக்கு செல்லும் வாகனங்கள், போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மதுரை மாவட்ட போலீசார் குருபூஜைக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
அதனை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும், போக்குவரத்து சாலைகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர டிரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
மதுரை வழியாக ராமநாதபுரம் செல்லும் ஒரு சில வாகனங்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்கள் மற்றும் டிரோன் காமிரா ஆகியவற்றின் காட்சிப்பதிவுகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி மதுரை மாநகரில் மட்டும் விதிமுறைகளை மீறியதாக 494 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் சிலைமான், கருப்பாயூரணி ஆகிய பகுதிகள் வழியாகவும் தேவர் குருபூஜைக்கு வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. எனவே அந்தப் பகுதியிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கண்ட 2 போலீஸ் சரகங்களிலும் 96 வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிலைமான், கருப்பாயூரணி போலீசார் அந்த வாகனங்களின் பதிவு எண்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 580 வாகனங்கள் மீது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- திருச்சி தீரன் நகரில் தினமும் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிவதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை.
- மாணவ-மாணவிகள், முதியவர்கள் மாடுகளுக்கு பயந்து வேறு வழியே சுற்றி செல்லும் பரிதாப நிலை உள்ளது.
திருச்சி
திருச்சி-திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள வளர்ந்து வரும் பகுதி தீரன் நகர். அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, வாரச்சந்தை என எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த பகுதியில் மெயின் ரோட்டில் பொழுது சாய்ந்ததும் வெளியில் மேய்ந்து வரும் மாடுகள் ரோட்டுக்கு வந்து விடுகின்றன.
இங்கு தினமும் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிவதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. பாதசாரிகளும் மாடுகளுக்கு பயந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த பகுதிகளில் ஏராளமான கடைகளும் உள்ளன.
கடைகளுக்கு வருபவர்களும், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வார சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி போன்ற பொருட்களை வாங்கிச் செல்ல முடியவில்லை. மாணவ-மாணவிகள், முதியவர்கள் மாடுகளுக்கு பயந்து வேறு வழியே சுற்றி செல்லும் பரிதாப நிலை உள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் வெளியே சுற்றி திரிந்தால் அவற்றை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அதனை யாரும் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. இங்கு அபராதம் விதிக்கப்படாவிட்டாலும் மாட்டின் உரிமையாளர்களை அழைத்து அவர்களுக்கு விதிமுறைகளை எடுத்துக் கூறி மாடுகளை வீடுகள் அருகிலேயே கட்டி அல்லது தொழுவத்தில் கட்டி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.
மாடுகள் முட்டி பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக இந்த நடவடிக்கையை எடுத்தால் சிறப்பாக இருக்கும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- போலீசார் தங்களது குறைகளை மனுவாக அளித்தனர்.
- அதிகமானோர் பணி மாறுதல் கேட்டு கோரிக்கை வைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர போலீசாரின் ரோந்து மோட்டார் சைக்கிள், மற்றும் கார்களை பரிசோதனை செய்வதற்கான வருடாந்திர ஆய்வு இன்று காலை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடந்தது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் ஆய்வு செய்தார். மேலும் ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து போலீசாரின் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது போலீசார் தங்களது குறைகளை மனுவாக அளித்தனர். அதிகமானோர் பணி மாறுதல் கேட்டு கோரிக்கை வைத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பின்னர் போலீசாரின் ரோந்து வாகனம் ஓட்டும் போலீசாரிடம் வாகனத்தை அரசு வாகனம் தானே என்று கருதாமல் தனது சொந்தம் வாகனத்தை போல் பராமரிக்க வேண்டும். அதேபோல் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வாகனம் ஓட்டுபவர்கள் மிகவும் கவனமாக இயக்க வேண்டும். ஒரு சிறு விபத்து கூட ஏற்படாத வகையில் வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வு நிகழ்ச்சியில் கூடுதல் துணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் ராஜன், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருக்காட்டுப்பள்ளி- செங்கிப்பட்டி நெடுஞ்சாலையில் பூதலூரில் ெரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது.
- மேம்பாலத்தில் மேற்புறத்தில் பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
பூதலூர்: திருக்காட்டுப்பள்ளி- செங்கிப்பட்டி நெடுஞ்சாலையில் பூதலூரில் ெரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான இரண்டு சக்கர வாகனங்கள், பஸ்கள், மணல் ஏற்றி வரும் லாரிகள் சென்று வருகின்றன.
இந்த மேம்பாலத்தில் மேற்புறத்தில் பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இதனால் அவற்றிலிருந்து விலகி பாதுகாப்பாக வாகனங்களை செலுத்த இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படு கின்றனர்.
வாகனங்களை வளைத்து நெளித்து ஓட்டுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
உடனடி யாக பூதலூர் ெரயில்வே மேம்பாலத்தில் குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அதேபோல விண்ண மங்கலம் அருகே இதேசாலையில் வெண்ணாற்றில் அமைந்து ள்ள பாலத்திலும்குண்டும் குழியுமாகவே காணப்படுகிறது.
செங்கிப்பட்டி- திருக்காட்டு பள்ளியை இைண ப்பதற்கு விண்ணமங்கலம் வெண்ணாற்றுபாலம் பிரதானமான பாலமாக உள்ளதால் இந்த பாலத்தில் மேற்பகுதியில் உள்ள சாலையில் குண்டும் குழியுமான பகுதிகளை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பொங்கல் பண்டிகை காலத்தில் ஏராளமான வாகனங்கள் பூதலூர் ரெயில்வே மேம்பாலம், மற்றும் விண்ணமங்கலம் வெண்ணாற்று பாலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் சீரான முறையில் போக்குவரத்து நடைபெற இரண்டு பாலங்களின் மேல் உள்ள குண்டு குழிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர்.
- இறைச்சி கோழிகளுடன் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
- பறவை காய்ச்சல் எதிரொலி
கன்னியாகுமரி:
கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பறவை காய்ச்சல் பல்வேறு பகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
முதலில் கோட்டயம் பகுதியில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது திருவனந்தபுரம் மாவட்டத்திலும் இது பரவி உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள், கோழிகள், வாத்துகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதற்கி டையில் பண்ணை களில் கோழிகள் பாதி க்கப்பட்ட தால், அங்குள்ள கோழிகள், வாத்துகளை அழிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல், பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது இல்லை என்றாலும், உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவ வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள குமரி மாவட்டம் படர்ந்தாலுமூடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கேரள வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பறவைகள், கறிக்கோழிகள் ஏற்றி வரும் பெரும்பாலான வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றன. சில வாகனங்களில் கிருமி நாசினி தெளித்து மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
தற்போது பறவை காய்ச்சல், கேரளாவில் தீவிரமடைந்துள்ளதால், அங்கிருந்து கறிக்கோழிகள், கோழிக் குஞ்சுகள், தீவனம், முட்டை போன்றவை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. படந்தாலுமூடு சோதனை சாவடி யில் 3 குழுக்களும், காக்க விளையில் ஒரு குழுவும் சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
- ராமநாதபுரம் நகராட்சிக்கு ரூ. 22½ லட்சம் மதிப்பில் மின்கல இயக்க வாகனங்களை கலெக்டர் வழங்கினார்.
- பசுமையான ராமநாதபுரத்தை மாற்ற உங்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும் என்று விழாவில் பேசினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ பவுண்டேஷன் சார்பில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக வழங்கப்பட்ட மின்கல இயக்க வாகனங்களை வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலையில் நடந்தது.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சி யாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் உருவாக்கப்பட வேண்டும். அதனை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடவு செய்திட வேண்டும் என்கிற நோக்கத்திலும் மேலும் இதற்கான அனைத்து நகராட்சிகளுக்கும் இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பசுமையான ராமநாதபுரத்தை மாற்ற உங்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும். மாசு இல்லாத ராமநாதபுரத்தை உருவாக்குவது இன்றியமையாததாகும். தூய்மைப் பணிகள் மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றை மேலும் சிறப்பாக மேற்கொண்டு ராமநாதபுரம் நகரினை தூய்மையான நகராட்சியாகவும் மற்ற நகராட்சிகளுக்கு ஒரு முன் உதாரணமாக விளங்கிடும் வகையில் செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
அதனைத் தொடர்ந்து ஐ, சி.ஐ.சி.ஐ. பவுண்டேஷன் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் தலா ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள 5 மின்கல இயக்க வாகனங்களை (மொத்தம் ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில்) ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் வழங்கினார். வாகனங்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் வாகனங்களை ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்ப டைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம், நகர் மன்றத்துணைத்தலைவர் பிரவீன் தங்கம், நகராட்சி ஆணையர் (பொ) லெட்சுமணன் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்து
- வாகனங்களில் கனிம வளங்கள் அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாவட்டங்க ளில் இருந்தும் 100-க்கணக் கான லாரிகள் கனிம வளங்களை அதிக அளவில் ஏற்றி கேரளாவிற்கு கொண்டு செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.
இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாண வர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியா ளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியா மலும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.
சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில் இன்று காலை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார், பி.பி .எம் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் அந்தவழியாக வந்த 8 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது வாகனங்களில் கனிம வளங்கள் அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்து களியக்காவிளை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. அதன் உரிமையாளர் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று மார்த்தாண்டம் வழியாக 3 பெரிய லாரி களில் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.விசாரணையில் அனுமதி கடிதம் மற்றும் அதிக பாரம் ஏற்றி சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தோப்புத்துறை சின்னபள்ளிவாசல் தெருவில் பள்ளிவாசலுக்கு பின்புறம் டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது.
- டிரான்ஸ்பார்மர் நெருக்கடியான தெருவில் உள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் இடையூறாக உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை சின்னபள்ளிவாசல் தெருவில் பள்ளிவாசலுக்கு அருகில் மின்கம்பமும், அதே பள்ளிவாசலுக்கு பின்புறம் டிரான்ஸ்பார்மரும் அமைந்துள்ளது.
இந்த மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர் நெருக்கடியான தெருவில் உள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் இடையூறாக உள்ளது.
இதனால் அப்பகுதி அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, அசம்பாவி தத்தை தடுக்கும் பொருட்டு மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மரை மாற்று இடத்தில் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு
- 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணமடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி:
தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டுமான பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. துறைமுக வடிவமைப்பு தவறாக வடிவமைக்கப்பட்ட காரணத்தால் துறை முகத்தின் நுழைவு பகுதி யில் மணல்மேடு ஏற்பட்டு அதனால் அந்த பகுதியில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் மற்றும் கட்டு மரங்கள் விபத்துக்குள்ளாகி இதுவரை 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணமடைந்துள்ளனர்.
மேலும் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப் புள்ள மீன்பிடி கலன்க ளும் முழுமையாக சேத மடைந்துள்ளன. மேலும் துறைமுகத்தின் தவறான வடிவமைப்பின் காரணமாக அருகாமையிலுள்ள இறை யுமன்துறை மீனவ கிராமம் முழுமையாக பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே துறைமுக பணியோடு இணைத்து இறையுமன் துறை மீனவ கிராமத்திலும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் இன்னும் நிறை வேற்றப்படவில்லை.
இந்த சூழலில் பல கட்ட போராட்டங்கள் மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தியதின் விளைவாக கடந்த மாதம் தமிழக அரசால் ரூ.116 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது துறைமுக கட்டு மான பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. காரணம் கேட்டால் துறைமுக கட்டுமான பணிகளுக்கு தேவையான பாறாங்கற்கள் குமரி மாவட்டத்தில் கிடைக்கவில்லை எனவும் குமரி மாவட்டத்தில் கல்குவாரிகள் அரசால் மூடப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் கடந்த மாதம் தமிழக அரசால் குமரி மாவட்டத்தில் இரண்டு கல்குவாரிகளுக்கு தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த இரண்டு கல்குவாரிகளிலிருந்து இதுவரை ஒரு லாரி கல்வரை தேங்காப்பட்டணம் துறை முக கட்டுமான பணிகளுக்கு வரவில்லை.
ஆனால் குமரி மாவட்டத்தில் உள்ள சில குவாரிகளில் இருந்தும் வெளிமாவட்ட குவாரிகளிலிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான வாக னங்கள் மூலம் கேரள மாநிலம் விழிஞ்ஞம் தனியார் துறைமுகத்திற்கு பாறாங்கற்கள், எம் சாண்ட், பாறை பொடி போன்ற கட்டுமான பொருட்கள் எவ்வித தடையும் இன்றி சென்று கொண்டி ருக்கின்றது. குமரி மாவட் டத்தின் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிகளுக்கு தேவையான கட்டுமான பொருட்கள் கிடைக்கப்பெறாத சூழலில் அண்டை மாநிலத்திற்கு அதுவும் தனியார் துறை முகத்திற்கு குமரி மாவட் டத்தில் இருந்து கட்டுமான பொருட்கள் செல்வதை தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு குமரி மாவட்டத்தில் தேங்காப் பட்டணம் மீன்பிடி துறை முகத்திற்கென்றே அனுமதி பெறப்பட்ட குமரி மாவட்டத்தின் குவாரிகளிலுள்ள கட்டுமான பொருட்களையும் துறை முக கட்டுமானத்திற்கு பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
மேலும் உடனடியாக தேங்காப்பட்டணம் துறை முக கட்டுமான பணி களை தொடங்கவில்லை எனில் வரும் 17-ந்தேதியில் இருந்து குமரி மாவட்டத்தின் சாலைகள் வழியாக விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவுகளும் இணைந்து சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.
- அனுமதி இன்றி பாறைகளை உடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசாரை கண்டதும் அங்கு பாறைகளை உடைத்து கொண்டிருந்த கும்பல் தப்பி ஓடினர்.
கன்னியாகுமரி :
குழித்துறை அருகே நல்லூர் அயனிக்காவிளை பகுதியில் சிலர் அனுமதி இன்றி பாறைகளை உடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மார்த்தாண்டம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு பாறைகளை உடைத்து கொண்டிருந்த கும்பல் தப்பி ஓடினர்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பாறை உடைக்க பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் பாறைகளை உடைத்த கும்பல் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு ரூ1.40 கோடியில் வாங்கப்பட்ட ஹைடெக் மண் அகற்றும் வாகனங்கள் மேயர் தொடங்கி வைத்தார்.
- பாதாள சாக்கடைகளில் அடிக்கடி அடைப்பு கள் ஏற்படுவதை உடனடியாக சரிசெய்வதற்கு வாங்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிதிட்ட பணியின் கீழ் சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால்கள், பாதா ளச்சாக் கடை பணிகள், தெருவிளக்குகள் பராமரித்தல், தூய்மை பணிகள், கால்வாய்கள் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு கட்ட மைப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடைகளில் அடிக்கடி அடைப்பு கள் ஏற்படுவதை உடனடியாக சரிசெய்வதற்கு மாநகராட்சியில் கழிவுநீர் உறிஞ்சு வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது பாதாள சாக்கடை யில் ஏற்படும் மணல்களை மட்டும் பிரித்து உடனுக்குடன் எடுத்து அகற்றுவதற்கு 15 சி.எப்.சி. திட்டத்தின் கீழ் ரூ1.40கோடி மதிப்பீட்டில் 12 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளது. அந்த வாகனங் களை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் பயன்பாட்டிற்கு கொடி யசைத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
இந்த புதிய வாகனத்தின் மூலம் மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடைகளில் ஏற்படும் மணல் அடைப்புகள் உடனுக்குடன் விரைந்து சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர்கள், நகர பொறியாளர் அரசு, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஷ்வரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- காலை 10:30 மணிக்கு தாராபுரம் போலீஸ் நிலைய வளாகத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது.
- டோக்கன் பெற்றுள்ளவர்கள் மட்டும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
தாராபுரம் :
தாராபுரம் தாலுகாவுக்குட்பட்ட தாராபுரம், மூலனூர், அலங்கியம் குண்டடம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது :- வழக்குகள் தொடர்பாக மொத்தம் 86 இருசக்கர வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரப்படாததால் அவைகள் தாராபுரம் வட்ட நிர்வாக நடுவர் மற்றும் தாசில்தாரால் வருகிற 5-ந் தேதி காலை 10:30 மணிக்கு தாராபுரம் போலீஸ் நிலைய வளாகத்தில் பொது இடத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது. ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்குச் சென்று அந்த வாகனங்களை பார்வையிடலாம்.
தாராபுரம் போலீஸ் நிலையத்தில் 6, அலங்கியம் போலீஸ் நிலையத்தில் 26, குண்டடம் போலீஸ் நிலையத்தில் 20, மூலனூர் போலீஸ் நிலையத்தில் 34 என இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் எடுப்பவர்கள் 5-ந் தேதி காலை 10 மணிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் ரூ.5 ஆயிரம் முன்வைப்புத் தொகை செலுத்தி டோக்கன் பெற்றுள்ளவர்கள் மட்டும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம். பின்னர் மீதி தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.