search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்கள்"

    • பள்ளி நேரங்களில் பிரதான சாலைகள் மிகவும் போக்குவரத்து நெருக்கடியகாவும், நெரிசலாகவும் காணப்படுகிறது.
    • கனரக வாகனங்கள் சாலையோரம் நிறுத்தி வைப்பதால் பெரும் இடர்பாடும், விபத்துகளும் நேரிடுகிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

    அந்த மனுவில் கூறியுள்ளதாவது, சீர்காழி நகரில் பிரதான பகுதிகளான மணிகூண்டு, அரசுமருத்துவமனைசாலை, தென்பாதி பகுதிகளில் தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அதிகளவு இயங்கி வருகிறது. மேலும் நகரில் அரசு உதவிபெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் பிரதான சாலைகள் மிகவும் போக்குவரத்து நெருக்கடியகாவும், நெரிசலாகவும் இருப்பதால் உரிய நேரத்தில் பள்ளிக்கு சென்றுவருவது சிரமமாக உள்ளது. பள்ளி நேரங்களிலும் கனரக வாகனங்களும் நகரில் ஆங்காங்கே சென்று வருவதும், சாலையோரம் நிறுத்தி வைப்பதாலும் பெரும் இடர்பாடும், விபத்துக்களும் நேரிடுகிறது. ஆகையால் பள்ளி நேரங்களில் காலை 8 மணி முதல் 9.30 மணிவரையிலும், மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலும் கட்டிட பயன்பாடு மற்றும் இதர வணிக பயன்பாட்டிற்காக வரும் கனர ரக வாகனங்கள் நகர எல்லைக்குள் வருவதை தடை செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவை அதிகம் காணப்படுகின்றன.
    • வாகனங்கள் நிறுத்துவதற்கான தனி இடம் கிடையாது.

    உடுமலை :

    உடுமலை நகரில் ராஜேந்திரா ரோடு, கல்பனா வீதி, பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட வழித்தடங்கள் பிரதான பகுதியாக உள்ளன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவை அதிகம் காணப்படுகின்றன.தினமும் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் என எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது. ஆனால் இப்பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கான தனி இடம் கிடையாது. பெரும்பாலான வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு, தங்கள் பணிகளுக்கு சென்று திரும்புகின்றனர். இந்த ரோடுகளில் தினமும் இடநெருக்கடி நீடிப்பதால், வாகன ஓட்டுனர்கள் திணறுகின்றனர்.

    முறையற்ற போக்குவரத்து, வாகன நிறுத்தம் இல்லாமை போன்ற காரணங்களால் மக்கள் பாதிக்கின்றனர். மத்திய பஸ் நிலையம் ஒட்டிய ரோடுகளில், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சிறு விபத்துக்களும் அதிகரிக்கின்றன. பிரதான பகுதிகளில், வாகன நிறுத்தம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய கடைகள், நிறுவனங்கள், உணவகங்களில் வாகனம் நிறுத்த வசதி ஏற்படுத்தாவிடில், உரிமத்தை புதுப்பிக்க அனுமதிக்கக்கூடாது. விதிகளை மீறும் தனி நபர், நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பது, போன்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பு தொடர்ந்தால் மட்டுமே விதிமீறலை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண் குமார் ஏற்காட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
    • அப்போது சரக்கு வாகனத்தில் சட்டத்தை மீறி 45 நபர்களை ஏற்றிச் சென்ற 2 பிக்கப் வாகனங்களை பறிமுதல் செய்தார்.

    ஏற்காடு:

    கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்காட்டில் உள்ள வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண் குமார் மற்றும் ஏற்காடு போலீஸ் நிலையத்தில் சொந்த பயன்பாட்டு வாகனத்தை சட்டத்தை மீறி ஓட்டுவதாக புகார் அளித்தனர்.

    அதனைதொடர்ந்து சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண் குமார் ஏற்காட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது சரக்கு வாகனத்தில் சட்டத்தை மீறி 45 நபர்களை ஏற்றிச் சென்ற 2 பிக்கப் வாகனங்களை பறிமுதல் செய்தார்.

    மேலும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் வாகனத்தில் 20 நபர்களை ஏற்றிச் சென்ற ஒரு பிக்கப் வாகனத்தையும், சரியான ஆவணங்கள் இல்லாமல் இயக்கி வந்த ஒரு ஜே.சி.பி வாகனத்தையும் பறிமுதல் செய்தார். அதிகமான பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஒரு வாகனத்தையும் பறிமுதல் செய்து அபராதம் விதித்தார். இந்த சோதனையின்போது அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • மைதானத்தில் நாகை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
    • குப்பைகள் நிறைந்து நெருக்கடியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை காடம்பாடி பகுதி யில் பழைய ஆயுதப்படை மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் நாகை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் குப்பைகள் நிறைந்து நெருக்கடியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வானுயர பறந்த கரும்புகை மண்டலத்தை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து விரைந்து வந்த 10-க்கும் மேற்பட்ட நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தீ விபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஒரு கார் கருகி நாசமானது. தீ விபத்து குறித்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது
    • இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் அந்த வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும்

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையம் ஆகியவை ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள பழைய கழிவறை கட்டிடம் இடித்து அகற்றப்பட்டு வருகிறது.

    மேலும் அண்ணா பஸ் நிலையத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து மேயர் மகேஷ் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அண்ணா பஸ் நிலையத்திற்குள் போக்குவரத்துக்கு இடை யூறாக ஏராளமான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. உடனடியாக அந்த இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்த மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ் பெக்டர் அருண் மற்றும் போலீசார் அங்கு வந்து இடையூறாக நிறுத்தப் பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அகற்றினர். மேலும் பஸ் நிலையத்துக்கு உள்ளே இருந்த கடைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது சில கடைகளில் உணவு பண்டங்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தது. எனவே அவற்றை சரியாக மூடி வைக்க வேண்டும் என்று மேயர் மகேஷ் அறிவுறுத்தினார்.

    பஸ் நிலையத்தில் சில இருக்கைகள் பழுதாகி மோசமான நிலை யில் இருந்தது. அந்த இருக்கைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் சேதமடைந்து இருந்த இருக்கைகளை அப்புறப்படுத்தினார்கள்.

    இதுகுறித்து மேயர் மகேஷ் கூறுகையில், "அண்ணா பஸ் நிலையத்தை சீரமைக்க ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. பஸ் நிலையத்தை முழுமையாக கண்காணிக்கும் வகையில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்படும். மேலும் பல்வேறு மேம்பாட்டு பணிகளையும் மேற்கொள்ள உள்ளோம்.

    ஏற்கனவே இருசக்கர வாகனங்களில் பஸ் நிலையத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் பலர் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி உள்ளனர். இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் அந்த வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். எனவே பொதுமக்கள் பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்தாமல் அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே இரு சக்கர வாகனங்களை நிறுத்த வேண்டும். கடைகளில் உணவு பண்டங்களை மூடி வைத்து விற்பனை செய்ய வேண்டும்" என்றார்.

    ஆய்வின் போது கவுன்சிலர் ரோசிட்டா உள்பட பலர் உடனிருந்தனர்.

    • தரமற்ற சாலையானது தற்போது மழை பெய்து வருவதால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
    • பள்ளி மாணவர்களும் வேறு வழியின்றி ரெயில் தண்டவாளத்தில் ஏறிச் செல்லும் ஆபத்தான சூழல் நிலவுகிறது.

    திருத்துறைப்பூண்டி :

    திருத்துறைபூண்டி தாலு க்கா, உதயமார்தாண்டபுரம் ஊராட்சிக்கு உட்ப்பட்ட நாச்சிகுளம் கிராமம் ரயில்வே லையன் ஓரப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் சாலையானது தரமற்ற முறையில் காணப்ப டுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் சேறும் சகதியுமாககாட்சி யளிக்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்துடன் செல்கி ன்றனர். நடந்து செல்வோரும் அவதிப்படுகின்றனர். நோயாளிகள் அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வந்து அழைத்துச் செல்லமு டியாத அளவுக்கு சாலை காட்சிய ளிக்கிறது பள்ளி மாணவர்களும் வேறு வழியின்றி ரயில் தண்டவாளத்தில் ஏறிச் செல்லும் ஆபத்தான சூழல் நிலவுகிறது.

    இது குறித்து தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத், மற்றும் பல அரசியல் கட்சி பிரமுகர்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இனியாவது காலம் தாழ்த்தாமல் புதியதாக தார் சாலை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • இருசக்கர வாகனத்தில் மது அருந்திவிட்டு 3 பேர் அல்லது 4 பேர் சாலையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்வதாகவும், அதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுவதாகவும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது.
    • மது போதை–யில் சென்றவர்கள், உரிய ஆவணம் இல்லாமல் சென்ற–வர், லைசென்ஸ் இல்லாமல் சென்றவர் என பல்வேறு வகையில் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகனத்தில் மது அருந்திவிட்டு 3 பேர் அல்லது 4 பேர் சாலையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்வதாகவும், அதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுவதாகவும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது.

    இதை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பெயரில்துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன் தலைமையிலான காவல் ஆய்வாளர் சாஹிரா பானு மற்றும் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் தீவிர இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மது போதை–யில் சென்றவர்கள், உரிய ஆவணம் இல்லாமல் சென்ற–வர், லைசென்ஸ் இல்லாமல் சென்றவர் என பல்வேறு வகையில் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் வாகனங்களின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடை எடுக்கப்பட்டு வருகிறது.

    • 2 இடங்களில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி தெய்வகன்னி தெருவை சேர்ந்தவர் உடச்சி (வயது 45), முட்டை வியாபாரி.

    இவர் நேற்று இரவு மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது ரிப்பேர் ஏற்பட்டது. உடனே உடச்சி ரிங்ரோடு பஸ் நிலையம் அருகே, வாகனத்தை நிறுத்தி ரிப்பேர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் உடச்சி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை நிலையூர், ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் (39). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்பாக மோட்டார் சைக்கிள் நிறுத்தி இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பைக் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வேல்முருகன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார்.

    இருந்தபோதிலும் வாகனம் முழுமையாக கருகியது. இது தொடர்பாக வேல்முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலம் அமைய உள்ள இடம், நிதி ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கப்படும்.
    • வடக்கு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

    திருப்பூர்:

    திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க இணைப்பு சாலைகளில் இருந்து வரும் வாகனங்களால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க பி.என்., ரோட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.முதல்கட்டமாக பி.என்., ரோட்டில் பயணிக்க பல்வேறு ரக வாகனங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

    மேட்டுப்பாளையம் புதிய பஸ் நிலையம் பகுதியில் கணக்கெடுப்பு, ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா கூறியதாவது:-

    கணக்கெடுப்பு பணி முடிந்து, விரிவான அறிக்கை மற்றும் கருத்துரு தயாரித்து நிதி ஒதுக்கீடு கேட்டு அரசுக்கு விபரங்களை சமர்பிக்கப்படும். அதன்பின், பாலம் அமைய உள்ள இடம், நிதி ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கப்படும்.

    பி.என்., ரோடு மேட்டுப்பாளையம் சிக்னலில் இருந்து பாண்டியன் நகர் வரையுள்ள 5 கி.மீ., தூரத்துக்கு உயர்மட்ட பாலம் அமைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. பாலம் அமையும் போது வடக்கு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • தனியார் வாகனங்கள் ஓட்டி வருகிறவர்களிடம் உள்ளே வாகனங்கள் வரக் கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும்
    • பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள் நுழைய விடாமல் பேரூராட்சி ஊழியர்கள் காலை முதல் இரவு வரை பணியாற்றினார்கள்

    கன்னியாகுமரி :

    திங்கள் நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் நுழைய தடை செய்ய வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள வர்த்தகர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோசுக்கு புகார் மனு அளித்தனர்.

    இச்செய்தி மாலை மலர் நாளிதழில் வெளியானது இதனை அடுத்து திங்கள் நகர் பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் பேரூந்து நிலையத்தில் இருபுறமும் தனியார் வாகனங்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது என்று நோட்டீஸ் ஓட்டுவதற்கு உத்தரவு பிறப்பித்தார்.

    அதன்படி பஸ் நிலையத்தில் இருபுறமும் ஊழியர்கள் மூலம் தனியார் வாகனங்கள் ஓட்டி வருகிறவர்களிடம் உள்ளே வாகனங்கள் வரக் கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறலாம் என்று உத்தரவு பிறப்பித்தார்.

    மேலும் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, குளச்சல் துணை சூப்பிரண்டு, இரணியல் காவல் துறையி னருக்கு திங்கள்நகர் பஸ் நிலையத்தில் உள்ளே தனியார் வாகனங்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும் மீறினால் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கடிதம் அனுப்பி வைத்தார்.

    இதனையடுத்து திங்கள் நகர் பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள் நுழைய விடாமல் பேரூராட்சி ஊழியர்கள் காலை முதல் இரவு வரை பணியாற்றினார்கள். இதனால் பொது மக்கள் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • போலீசார் ஸ்பீடு சென்சார் கருவி கொண்டு வாகன சோதனை நடத்தினர்.
    • அதிவேகமாக வந்த அரசு பஸ்களின் டிரை வர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டத்தில் சில வாகனங்கள் அதிவேக மாக வருவதாகவும் இதனால் விபத்துகள் ஏற்படுவதாகவும் போலீ சுக்கு புகார் வந்தது. இதை யடுத்து போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இதையொட்டி பெரு ந்துறை பகுதியில் வேகமாக வரும் வாகனங்களை கண்காணிக்கும் வகையில் பெருந்துறை ஆர்.டி.ஓ. சக்திவேல், இன்ஸ்பெக்டர் பாஸ்கர், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சுகுமார் மற்றும் போலீசார் பெருந்துறை- கோவை மெயின் ரோடு பைபாஸ் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து போலீசார் ஸ்பீடு சென்சார் கருவி கொண்டு வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், லாரி, வேன், கார், மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சுமார் 40-க்கு மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்க ப்பட்டது.

    இதைத் ெதாடர்ந்து அதிவேகமாக வந்த அரசு பஸ்களின் டிரை வர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அவர்களின் வாகன வேகம் குறித்து விவரம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

    • மேலூரில் சாலையோர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    • ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் வழியாக சென்னை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கைக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு மேலூர் பஸ் நிலையம் வழியாக வாகனங்கள் வந்து செல்கின்றன.

    சராசரியாக நாள் ஒன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் மேலூர் வழியாக செல்கிறது. மேலூர் பெரிய கடைவீதி, செக்கடி பஜார் சந்திப்பு முதல் பஸ் நிலையம் வரையிலும், அதே போல் பஸ் நிலையத்தில் இருந்து யூனியன் அலுவலகம் வரையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    பஸ் நிலைய பகுதியில் தான் தாலுகா அலுவலகம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றப்பிரிவு நடுவர் நீதிமன்றம், சப் கோர்ட், காவல் நிலையம், 2 ஆயரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. மேலூர் பஸ் நிலையம் காலை முதல் இரவு வரை பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது.

    அதேபோல காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி நேரங்களில் அழகர் கோவில் ரோடு-பிள்ளையார் கோவில் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    அதேபோல சிவகங்கை சாலை-திருவாதவூர் சாலை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க, இது போதாது என்று மேலூரில் இருந்து மதுரை செல்லும் பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனங்கள் மற்றும் பழ வியாபாரம் செய்யும் தள்ளுவண்டிகள் வரிசையாக சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன.

    இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையினரிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதசாரிகள் ரோட்டை கடப்பது உயிரை கையில் பிடித்துச் செல்ல வேண்டிய அவல நிலையாக உள்ளது. சாலையோர ஆக்கிரமிப்புகளால் மற்றும் நெரிசலால் அடிக்கடி இருசக்கர வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலூரில் ஏற்படும் நெரிசலுக்கு பயந்து சில அரசு பஸ்கள் நகருக்குள் வராமல் பைபாஸ் வழியாக செல்கிறன. இதனால் பயணிகள் உரிய நேரத்தில் பஸ்களில் செல்ல முடியாத அவல நிலை உருவாகி உள்ளது.

    இனிமேலாவது மேலூர் பஸ் நிலையம்-ஆலங்குளம் ரோடு சந்திப்பு, செக்கடி பஜார், சிவகங்கைச் சாலை, பெரிய கடை வீதி ஆகிய இடங்களில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மட்டுமின்றி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×