search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்கள்"

    • போக்குவரத்து நிறைந்த இந்த இடத்தில் டிராபிக் சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
    • பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த இடத்தில் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அடிக்கடி அந்த சிக்னல் பழுதாகி வருகிறது.

    குனியமுத்தூர்:

    பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூரில் ஜங்ஷன் உள்ளது. இங்கு 4 புறமும் வாகனங்கள் அடிக்கடி சென்று கொண்டிருக்கும். இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

    கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் வாகனங்களும் மற்றும் பாலக்காடு, மதுக்கரை, கோவைபுதூர் போன்ற பகுதியில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களும் இப்பகுதியை கடந்து தான் வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இப்படி போக்குவரத்து நிறைந்த இந்த இடத்தில் டிராபிக் சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் அடிக்கடி சிறு, சிறு விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் சிக்னல் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த இடத்தில் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அடிக்கடி அந்த சிக்னல் பழுதாகி வருகிறது. இதனால் மீண்டும் வாகன தடுமாற்றமும், வாகன போக்குவரத்து தடை ஏற்படும் நிலை உள்ளது.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், சாலையின் இருபுறங்களிலும் செல்லும் குறுக்கு சாலையில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளது. எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் இரு சக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் அதிகமாக இப்பகுதியை கடந்து சென்று கொண்டிருக்கும்.

    ஆனால் சிக்னல் பழுது ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் தாறுமாறாக ஓடுகிறது. இதனால் சிறு, சிறு விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே பழுது இல்லாத சிக்னல் இப்பகுதியில் தேவை என்று வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், பள்ளி பேருந்துகளை அனைத்தையும் ஆய்வு செய்வதற்காக ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மீனாகுமாரி, பள்ளி பேருந்துகள் சோதனை முகாம் நடத்தினார்.
    • பேருந்துகளில் சி.சி.டி.வி கேமரா, ஜி.பி.எஸ் கருவி வைக்கப்பட்டிருப்பதை ஆய்வு செய்தார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய 2 தாலுகாவிற்கும் சேர்த்து ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலு வலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், பள்ளி பேருந்துகளை அனைத்தையும் ஆய்வு செய்வதற்காக ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வா ளர் மீனாகுமாரி, பள்ளி பேருந்துகள் சோதனை முகாம் நடத்தினார்.

    இந்த முகாமில் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம், கருப்பூர் ஆகிய வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை சேர்ந்த 250 பேருந்துகள் சோதனை செய்யப்பட்டது. பேருந்துகளில் சி.சி.டி.வி கேமரா, ஜி.பி.எஸ் கருவி வைக்கப்பட்டிருப்பதை ஆய்வு செய்தார்.

    மேலும், பேருந்து படிகள், மாணவர்கள் அமரும் சீட்டுகள், அவசர கால கதவுகள், முதலுதவி பெட்டிகள், தீ அணைப்பான்கள் ஆகியவற்றை முறையாக ஆய்வுகள் செய்தார். எந்திரத்தின் தன்மை, வாகன இயக்கம், பேருந்தின் தரைதளத்தின் உறுதி தன்மை ஆகியவையும் ஆய்வுகள் செய்யப்பட்டது.

    அப்போது ஒரு தனியார் பள்ளி பேருந்தின் தரை தளத்தை அழுத்தி பார்க்கும்போது, அவை அனைத்தும் உடைந்து கொட்டியது. மாணவர்கள் சீட்டில் அமரும்போது, தரைதளம் உடைந்தால், மாணவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலையில், இருந்தது. இதையடுத்து அந்த பேருந்து இயக்குவதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டார்.

    அதேபோல பல பேருந்துகளில் மாண வர்களின் இருக்கை பெயர்ந்தும், கிழிந்தும், தூய்மை இல்லாமல், அழுக்குகள் படிந்தும் காணப்பட்டது. அந்த ேபருந்துகளின் இருக்கைகள் மாற்றப்பட்டதை உறுதி செய்த பின்னரே இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    சி.சி.டி.வி கேமரா இல்லாத பேருந்துகளில் உடனடியாக கேமரா வைக்க உத்தரவிடப்பட்டது. அதேபோல, பள்ளியில் நின்றிருக்கும் பேருந்துகள் பின்னால், மாணவர்கள், குழந்தைகள் இருப்பதை அறிந்துகொள்ளும் வகையில், அனைத்து பேருந்துகளிலும்ரியர் சென்சார் ஒலி எழுப்பும் கேமரா வைக்க உத்தர விடப்பட்டுள்ளது.பேருந்தின் பின்னால் மாணவர்கள் ஒரு அடி தூரத்தில் இருந்தாலும், ஓட்டுனருக்கு எச்சரிக்கை விடுக்கும்ஒலி எழுப்பக்கூ டிய ரியர் வியூ சென்சாரை அனைத்து பேருந்து களிலும்பொருத்திய பின்னரே இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில், 15 பேருந்துகளை இயக்க

    தடைவிதித்து உத்தரவிடப்பட்டது.

    • தனியார் பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
    • குழந்தைகள் ஏறும் வகையில் படிக்கட்டுகளின் உயரம் உள்பட 21 வகையான அரசு விதிமுறைகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.

    ஊட்டி:

    வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்னர், மே மாதம் பள்ளி வாகனங்கள் தணிக்கை செய்யப்படும். இந்த முறை கொரோனா பரவல் காரணமாக பள்ளி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் தள்ளிப்போனதால் ஆய்வு பணிகள் தாமதமாக தொடங்குகின்றன.

    அதன்படி நீலகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதற்காக வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது.

    தனியார் பள்ளி வாகனங்களை கலெக்டர் அம்ரித் நேரில் ஆய்வு செய்தார். வாகனங்களில் பள்ளிக்கூடத்தின் பெயர், தீயணைப்பு கருவிகள், அவசரகால வழி முதலுதவி பெட்டிகள், வேகக்கட்டுப்பாட்டு கருவி, குழந்தைகள் ஏறும் வகையில் படிக்கட்டுகளின் உயரம் உள்பட 21 வகையான அரசு விதிமுறைகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.

    இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:- தமிழ்நாடு மோட்டார் வாகன பள்ளி பஸ்கள் முறைப்படுத்துதல் மற்றும் சிறப்பு விதிகள் 2012-ன் படி ஆய்வு பணிகள் தொடங்கி உள்ளன. இதன்படி நீலகிரியில் ஊட்டி, கூடலூர் ஆகிய வட்டார போக்குவரத்து கழக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளிகளை சேர்ந்த 345 பள்ளி வாகனங்களில் முதற்கட்டமாக 164 பள்ளி வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வில் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு நீலகிரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி ஜெகதீசன் உத்தரவின் பேரில் ஊட்டி நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையில் தீயணைப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

    அப்போது சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கையேடு களும் வழங்கப்பட்டன. கூடலூரில் 90 வாகனங்களும் மீதமுள்ள பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்களும் ஒரிரு நாளில் ஆய்வு செய்யப்படும். இதேபோல் நேற்று நடந்த ஆய்வில் ஒரு சில குறைபாடுகள் இருந்த 7 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

    இந்த ஆய்வில் வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், வாகன ஆய்வாளர் விஜயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அர்ஜூனன் உடன் இருந்தனர்.

    • குடிபோதையில் வாகனங்களை சேதப்படுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஆத்திரம் அடைந்த 3 பேரும் அங்கிருந்த 2 கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பினர்.

    மதுரை

    மதுரை மதிச்சியம், தெற்கு தெருவை சேர்ந்தவர் தீபக்ஆனந்த் (32). சம்பவத்தன்று நள்ளிரவு இவர் வைகை வடகரை, ஆர்.ஆர். மண்டபம் பகுதிக்கு சென்றார்.

    அங்கு குடிபோதையில் இருந்த 3 பேர் தகராறில் ஈடுபட்டனர். அவர்களிடம் தீபக் ஆனந்த், ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று தட்டிக் கேட்டார். ஆத்திரம் அடைந்த 3 பேரும் அங்கிருந்த 2 கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பினர்.

    இதுகுறித்து தீபக்ஆனந்த் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில், அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக்குமரன் ஆலோசனை யின்பேரில் மதிச்சியம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் வைகை வடகரை பகுதியில் தகராறில் ஈடுபட்ட கும்பல் பற்றிய விவரம் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மதிச்சியம் மாரியம்மன் கோவில் தெரு முருகன் மகன் அரி சுரேஷ் (24), தெற்குதெரு பிரபாகரன் மகன் ரூபன் குமார் (24), பூலாங்குளம், கணபதி நகர், ஆறுமுகபாண்டி மகன் பிரபு (23) ஆகியோரை கைது செய்தனர்.

    திருச்செங்கோட்டில் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

    திருச்செங்கோடு:

    ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு திருச்செங்கோடு வட்டம் வருவாய் கோட்டாட்சியர் இளவரசி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர்(பொறுப்பு) மாதேஸ்வரன், திருச்செங்கோடு கல்வி மாவட்ட அலுவலர் பழனிச்சாமி மற்றும் டி.எஸ்.பி. சீனிவாசன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்களை திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரி வளாகத்தில் ஆய்வு செய்தனர்

    இதில் 350 பேருந்துகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. வேக கட்டுப்பாட்டு கருவி, கண்காணிப்பு கேமரா, தீயணைப்பு கருவிகள், முதலுதவிப் பெட்டி உள்ளதா, அவசரகால வழி உள்ளதா, பேருந்தின் தளம் உறுதியாக உள்ளதா, பள்ளி மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளும் வகையில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறைபாடு உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் அதனை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வருமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் மற்றொருநாள் ஆய்வு செய்யவுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன் தெரிவித்தார்.

    இந்த ஆய்வினை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திருச்செங்கோடு ராஜசேகர், குமாரபாளையம் ரவிக்குமார், நாமக்கல் பறக்கும்படை சரவணன் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.

    • நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
    • அருவியின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிலங்களை கண்ட றியும் முயற்சியில் பேருராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. தற்போது சில இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து உள்ளோம்.விரைவில் வாகனங்கள் நிறுத்துவதற்க்கு கூடுதல் இட வசதி ஏற்படுத்தப்படும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி.

    திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட இந்த அருவிக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து குடும்பத்துடன் குளி த்துச் செல்கின்றனர். நாளுக்கு நாள் கூட்டம் அதி கரித்து வருவதால் பாது காப்பு வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

    முக்கியமாக சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை விரிவு படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக திற்பரப்பு பேருராட்சி தலைவர் பொன்ரவி, செயல் அலுவலர் பெத்ராஜ், மற்றும் அதிகாரிகள் திற்பரப்பு அருவி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இது குறித்து பேருராட்சி தலைவர் பொன் ரவி நிருபர்களிடம் கூறிய தாவது:-

    திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. அவர்களது வாகனங்களை நிறுத்தும் இடத்தில் இட நெருக்கடி ஏற்பட்டு உள்ளது எனவே கூடுதல் இடம் ஏற்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதற்காக அருவியின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிலங்களை கண்ட றியும் முயற்சியில் பேருராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. தற்போது சில இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து உள்ளோம்.விரைவில் வாகனங்கள் நிறுத்துவதற்க்கு கூடுதல் இட வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கலையரங்கத்தின் முன்பு கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களும் அந்தப் பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகளும் தாங்கள் கொண்டு வரும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு சென்று விடுகிறார்கள்.
    • சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும் ஆட்டோ, கார், வேன், ஜீ்ப் டிரக்கர், மினி பஸ் போன்ற கனரக வாகனங்களையும் கன்னியாகுமரி சன்னதி தெருவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    இந்த கோவில் நடை தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 8.30மணிக்கு அடைக்கப்படும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    தற்போது கோடை விடுமுறை சீசன் என்பதால் இந்த கோவிலில் தரிசனத்துக்காக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நுழைவு வாசலில் எந்த நேரமும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

    பகவதிஅம்மன் கோவிலில் நடக்கும் திருவிழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் சமய சொற்பொழிவு நடத்துவதற்காக கோவிலின் நுழைவு வாசல் முன்பு மிக பிரம்மாண்டமான கலையரங்கம் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த கலையரங்க த்தின் முன்பு கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களும் அந்தப் பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகளும் தாங்கள் கொண்டு வரும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு சென்று விடுகிறார்கள். சிலர் தங்களது இரு சக்கர வாகனங்களை காலையில் இந்த கலையரங்கம் முன்பு வைத்து விட்டு இரவு தான் திரும்பி வந்து எடுத்துச் செல்கிறார்கள்.

    இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கலையரங்க பகுதி இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் "பார்க்கிங்" இடமாக மாறிவிட்டது. தினமும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் இங்கு நிறுத்தப்படுவதால் இந்த பகுதி கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

    இதற்கிடையில் ஆட்டோ, கார், வேன், டிரக்கர், ஜீப், மினி பஸ் போன்ற பெரிய கனரகவாகனங்களும் இந்த சன்னதி தெரு பகுதியில் உள்ள லாட்ஜுகள் முன்பு ஆங்காங்கேபோக்குவரத்துக்குஇடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் கன்னியாகுமரிபகவதி அம்மன் கோவிலில்வைகாசிவிசாக பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா காலங்களில் 10 நாட்களும் இந்த சன்னதி தெரு வழியாகத் தான் அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்துகொண்டிருக்கிறது.

    மேலும் இந்த 10 நாட்களும் இந்த கோவிலின் முன்புஉள்ள கலையரங்கத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது. இதனால் இந்த கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் கோவிலுக்குள் எளிதாக சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பி வர முடியாமல் கடும் அவதிப்படுகிறார்கள்.

    எனவே கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் கலையரங்கம்முன்பு இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு போக்கு வரத்து போலீசார் தடை விதிக்கவேண்டும் என்றும் அதற்கு பதிலாக இந்த இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு மாற்று இட வசதி செய்து தர வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மேலும் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும் ஆட்டோ, கார், வேன், ஜீ்ப் டிரக்கர், மினி பஸ் போன்ற கனரக வாகனங்களையும் கன்னியாகுமரி சன்னதி தெருவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
    • சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையில் போலீசார் போக்குவரத்து வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

    அளவுக்கு மீறி அதிக அளவில் கரும்புகையை வெளியேற்றி காற்று மாசை ஏற்படுத்தும் வாகனங்கள், அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்கள் பொருத்திய வாகனங்களை போலீசார் கைப்பற்றினர். சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வாகனங்களுக்கு புதிய புகை பரிசோதனை சான்றிதழ் பெறப்பட்டது. அதன்பிறகு வாகன ஓட்டிகள் "சுற்றுப்புறசூழலை பாதுகாப்போம்" என்று போலீசார் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதிகளில் உள்ள சாலையில் மண் சரிவு ஏற்பட்டிருப்பதால் இன்று 4-வது நாளாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    வால்பாறை:

    கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து கோவை மாவட்டம் வால்பாறையிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.

    பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த கன மழையால் ஆழியாறிலிருந்து வால்பாறை செல்லும் மலைப் பாதையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    இதனால் 3-வது கொண்டை ஊசி வளைவிலிருந்து 9-வது கொண்டை ஊசி வளைவு வரையிலும் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் சாலை பெயர்ந்து உள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிவைடர்கள் மற்றும் மணல் மூட்டைகளை வைத்து யாரும் செல்லாதவாறு தடுக்கப்பட்டுள்ளது.

    மண் சரிவை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் வாகனங்களை ஆழியாறு அருகே உள்ள சோதனை சாவடியில் வனத்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் வால்பாறை வாழைத் தோட்டம் ஆற்றின் நீர் அப்பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக டெப்போவுக்குள் புகுந்து டீசல் டேங்கில் தண்ணீர் புகுந்தது.

    இதனால் டீசல் கிடைக்காமல் அரசு போக்குவரத்து கழக பஸ்களை இயக்க முடியவில்லை. வால்பாறைக்கு கன ரக வாகனங்கள் செல்ல முடியாததால் டீசல், காய்கறி உள்ளிட்ட பொருட்களை வெளியூரில் இருந்து கொண்டு செல்ல முடியவில்லை.

    இன்று 4-வது நாளாக பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் கன ரக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன் வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் கேரளாவிற்கு எந்த வாகனமும் செல்லவில்லை. பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வால்பாறையில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
    மாதனூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
    அணைக்கட்டு:

    மாதனூர் அருகே உள்ள பாக்கம்பாளையத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 2 ஆழ்துளை கிணறுகளின் மின்மோட்டார் பழுதாகியுள்ளது. இதனை விரைந்து சரிசெய்து குடிநீர் வழங்கக்கோரி கிராமமக்கள் வலியுறுத்தினர்.

    ஆனால், சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால் ஒரு குடம் தண்ணீருக்கு பக்கத்து கிராமங்களை நாடி செல்லும் அவல நிலைக்கு பாக்கம் பாளையம் கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஒடுகத்தூர்- வேலூர் ரோட்டில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால், 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து ஸ்தம்பித்து நின்றன. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் தவித்தனர்.

    தகவலறிந்ததும், வேப்பங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போன் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ருத்ரப்பாவிடம் சப்-இன்ஸ்பெக்டர் பேசினார். இன்றைக்குள் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதாக கூறி வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார். இதையடுத்து, மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
    ×