என் மலர்
நீங்கள் தேடியது "சிறுமி"
- சந்தோஷ் விடாமல் தொடர்ந்து அந்த 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள இளம்பவனம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் பரமக்குடியில் வசித்து வருகிறார்.
அவரது 17 வயது மகளும், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்று வாலிபரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிந்ததும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதையடுத்து 17 வயது சிறுமி, அந்த வாலிபரிடம் நாம் இருவரும் நண்பர்களாக பிரிந்து விடுவோம் என்று தெரிவித்ததாகவும், ஆனால் சந்தோஷ் விடாமல் தொடர்ந்து அந்த 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சந்தோஷ் மீது சிறுமியின் தாயார் பரமக்குடி போலீஸ் நிலையத்தில், புகார் கொடுத்துள்ளார். இதனை விசாரித்த போலீசார் இருதரப்பினையும் அழைத்து விசாரணை நடத்தி எழுதி வாங்கி வழக்கை முடித்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகும், சந்தோசினால் பிரச்சனை வந்ததால் சிறுமியை அவரது தாயார் எட்டையபுரம் அருகே கீழ நம்பிபுரத்தில் இருக்கும் தனது தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.
17 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் இருந்த நிலையில் கடந்த 23-ந்தேதி சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு, அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது தீ பற்றி எரிந்த நிலையில் 17 வயது சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எட்டையபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 2 வாலிபர்கள் வந்து சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சந்தோஷ் தன்னை காதலிக்க வேண்டும் என தொந்தரவு கொடுத்ததாகவும், தான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரும், அவரது நண்பரான முத்தையா என்பவரும் சேர்ந்து தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்ததாக கூறினார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
- நேற்று மாலை சிறுமி மாடியில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற முதியவர் மிட்டாய் தருவதாக ஏமாற்றினார்.
- சிறுமி மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
உத்தரப் பிரதேசத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த 4 வயது சிறுமியை 80 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹாரில் புக்ராசி சௌகி பகுதியில் 80 வயது முதியவர் தனது பக்கத்தில் வீட்டில் வசித்த 4 வயது தலித் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
நேற்று மாலை சிறுமி தனது வீட்டு மாடியில் தனியாக விளையாடிகொண்டிருந்தபோது அங்கு சென்ற முதியவர் மிட்டாய் தருவதாக ஏமாற்றி அங்கு வைத்தே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதையறிந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
சிறுமி மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் முதியவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
சிறுமியின் மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இரு வாரங்களுக்கு முன், திருமணம் செய்யலாம் என்று கூறி, சிறுமியை அழைத்து சென்று உறவினர் வீட்டில் தங்க வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
- புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட குணாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் குணால் (வயது 22). இவர் அலங்கியத்தை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பழகி வந்தார்.இரு வாரங்களுக்கு முன், திருமணம் செய்யலாம் என்று கூறி, சிறுமியை அழைத்து சென்று உறவினர் வீட்டில் தங்க வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் புகார் செய்தனர்.புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட குணாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- மணமகனும் தாலியை பெற்றுக் கொண்டு மணமகள் கழுத்தில் கட்ட தயாரானார்.
- சைல்டு லைன் அதிகாரிகளுக்கு குறைந்த வயதான எனக்கு தனது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைப்பதாக தகவல் தெரிவித்தார்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கிராமத்தை சேர்ந்த 30 இளைஞர் ஒருவருக்கும் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அவரது உறவினர் மகள் 17 வயது சிறுமி ஒருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிலையில் பெரியார்களால் முடிவு செய்யப்பட்ட நாளான நேற்று பாண்டி கடை தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திருமணம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி காலை 6.30 மணிக்கு மணமேடைக்கு மணமக்கள் இருவரும் வந்திருந்தனர். புரோகிதர் மந்திரங்கள் ஓதி தாலியை மணமகனிடம் எடுத்துக் கொடுத்தார்.
மணமகனும் தாலியை பெற்றுக் கொண்டு மணமகள் கழுத்தில் கட்ட தயாரானார்.
அப்பொழுது மணப்பெண் தாலி கட்டுவதை தடுத்து நிறுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் அப்படியே திகைத்து நின்றார். இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பொழுது மணமகள் தான் வைத்திருந்த செல்போன் மூலம் சைல்டு லைன் அதிகாரிகளுக்கு குறைந்த வயதான எனக்கு தனது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைப்பதாக தகவல் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் சைல்டு லைன் அதிகாரிகள் முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைடுத்து அங்கு வந்த காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
அதன் பிறகு அங்கு வந்த சைல்டு லைன் அதிகாரிகள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- காரியாபட்டி அருகே வெந்நீர் கொட்டி 3 வயது சிறுமி இறந்தாள்.
- இது தொடர்பாக ஆனந்தவேலு கொடுத்த புகாரின் பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தவேலு (வயது 30). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 வயதில் தனுஸ்ரீ என்ற மகள் இருந்தாள். சம்பவத்தன்று ஆனந்தவேலு வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி குழந்தையை வீட்டின் அறையில் விட்டு விட்டு மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது கொதிக்கும் தண்ணீர் இருந்த பாத்திரம் அருகே சிறுமி சென்றாள். அப்போது கொதிக்கும் தண்ணீர் சிறுமி மீது கொட்டியது. வலியால் கதறியழுத மகளை பார்த்து தாய் அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தனுஸ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தாள். இது தொடர்பாக ஆனந்தவேலு கொடுத்த புகாரின் பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தலைமறைவாக இருந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
- நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை
நாகர்கோவில்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சித்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 12 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வருகிறார். அவரை ராஜபாளையத்தைச் சேர்ந்த அஜித் கிளிண்டன் (வயது 25) என்பவர் ஏமாற்றி நாகர்கோ விலுக்கு அழைத்து வந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறை வாக இருந்து வந்த அஜித் கிளிண்டனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அஜித் கிளிண்டன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டார்
- உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக 193 உள்ளன.
- 196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சிறுமியின் முயற்சியை உலக சாதனையில் இடம்பெற அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி:
சென்னையை சேர்ந்த ஹேமந்த் - மோகனப்பிரியா தம்பதியின் மகள் சுபிக்ஷா. 12 வயதான சுபிக்ஷாவை பாடகராக்க வேண்டும் என பெற்றோர் விரும்பினர். பல நாடுகளின் தேசிய கீதத்தை சொல்லி கொடுத்தனர்.
உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக 193 உள்ளன. சிறுமி அதையும் தாண்டி கூடுதலாக 3 நாடுகளின் தேசிய கீதங்களையும் சேர்த்து 196 தேசிய கீதங்களை சரளமாக பாடி அசத்தி வருகிறார். புதுவை வந்த இந்த சிறுமி தனது பெற்றோருடன் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் ஒரு சில நாடுகளின் தேசிய கீதங்களை பாடினார். இதைக்கேட்ட முதலமைச்சர் ரங்கசாமி சிறுமியின் திறமையை பாராட்டி வாழ்த்துக்களை கூறினார்.
196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சிறுமியின் முயற்சியை உலக சாதனையில் இடம்பெற அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சந்திப்பின்போது பத்மஸ்ரீ டெரகோட்டா முனுசாமி உடனிருந்தார்.
- பள்ளிக்கு செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்ததால் மன அழுத்தம்.
- சிறுமியை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைத்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பவித்திரமாணிக்கத்தை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு தரணியா என்ற 12 வயது மகள் உள்ளார்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சரவணகுமார் பிரிந்து சென்று விட்டார். சுசீலா பாம்பு கடித்து இறந்தார். இதனால் பவித்திரமாணிக்கத்தில் உள்ள பாட்டியான சீதாலட்சுமியுடன் (94) தரணிகா வசித்து வந்தார். ஆனால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்ததால் மன அழுத்தத்திற்கு ஆளாகியு ள்ளார்.
இந்நிலையில் இடைநின்ற மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்க்கும் முயற்சியினை அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி கொரடாச்சேரி வட்டாரக் கல்வி அலுவலர்கள் விமலா மற்றும் சுமதி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிருந்தாதேவி, பவித்திர மாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, இடைநன்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் மற்றும் காவல்துறை ஆய்வாளர் மணிமேகலை உள்ளிட்ட குழுவினர் தரண்யாவின் வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி சிறுமியை மீட்டனர். சிறுமிக்கு மனநல ஆலோசனையும் வழங்க ப்பட்டது. பராமரிப்பின்றி குப்பை மேடாக கிடந்த அந்த வீட்டையும் தூய்மைப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து தரண்யாவை திருவாரூரில் உள்ள பாத்திமா ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து அங்குள்ள பள்ளியிலேயே படிப்பை தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவாக மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சேகர் கலியபெருமாள், உள்ளூர் பிரமுகர்கள் சந்துரு மற்றும் சங்கர் ஆகியோர் இருந்தனர்.
சிறுமி மீட்கப்பட்ட தகவல் அறிந்த பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., சம்பவ இடத்திற்கு வந்து சிறுமிக்கு ஆறுதல் கூறி படிப்பதற்கு ஊக்கமளித்தார்.
- பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நாகர்கோவில்:
கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் ஷோபா (வயது 16). இவர் தற்போது பூதப்பாண்டி அருகே துவரங்காட்டில் உள்ள பாட்டி கமலி வீட்டில் வசித்து வந்தார். நேற்று கமலி வீட்டிலிருந்து தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் ஷோபா மட்டும் இருந்தார்.
மாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கமலி, ஷோபாவை அழைத்தார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஷோபா தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கமலி கதறி அழுதார். பின்னர் இது குறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.தூக்கில் பிணமாக தொங்கிய ஷோபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஷோபா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருமணம் செய்வதாக கூறி 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ரவுடி கைது செய்யப்பட்டார்.
- சிறுமி வேலைக்கு செல்லும்போது பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
மதுரை
மதுரை மாட்டுத்தாவணி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்துவிட்டு அதே பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சிறுமி பின்னர் வீடு திரும்ப வில்லை. இதனால் பதட்டம் அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
அதில் தங்களது மகளை வாலிபர் ஒருவர் கடத்திச் சென்று இருப்பதாக தெரிவித்திருந்தனர். சிறுமி கடத்தல் விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் வடக்கு துணை கமிஷனர் (பொறுப்பு) ஆறுமுகசாமி மேற்பார்வையில் அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில் மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சிறுமியின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தி னர். மேலும் வீட்டில் இருந்த அவரது செல்போனும் ஆய்வு செய்யப்பட்டது.அப்போது மாயமான சிறுமி கருப்பாயூரணியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது.
அந்த செல்போன் சிக்னல் கருப்பாயூரணி பகுதியை காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சிறுமி வாலிபருடன் தங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் சிறுமியை மீட்டு வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர் கருப்பாயூரணியைச் சேர்ந்த கரண் (வயது 25) எனவும், இவர் மீது மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மாட்டுத்தாவணி பகுதியில் ரவுடியாக வலம் வந்த கரண் சிறுமி வேலைக்கு செல்லும்போது பின் தொடர்ந்து சென்றுள்ளார். நாளடைவில் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
இதனை சிறுமியின் பெற்றோர் கண்டித்து உள்ளனர். ஆனால் அதனை அவர் கண்டு கொள்ளாமல் குற்ற வழக்குகள் உள்ள கரனை காதலித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று கரண் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி வீட்டை விட்டு வெளியேறி கரனுடன் சென்றுள்ளார். வெளியூர் சென்ற இருவரும் அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து உள்ளனர். அப்போது சிறுமியை கரண் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கரணை மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி:
வெள்ளிச்சந்தை அருகே உள்ள பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மரிய ரூபன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஆரோக்கிய ஆஸ்மி. இவர்களது 12 வயது மகள் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியை தாய் அடித்து துன்புறுத்தி, வயதிற்கு மீறிய வேலைகளை செய்ய வைப்பாராம். சில நேரங்களில் உடலில் சூடு வைத்து தலையில் அடிப்பாராம். சிறுமியின் தலையில் தையல் போட்ட தழும்பு உள்ளது.
இந்த தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து மகளிர் சப் - இன்ஸ்பெக்டர் கீதா விசாரணை நடத்தி சிறுமியை கொடுமைப்ப டுத்தியதாக தாய் ஆரோக்கிய ஆஸ்மி மீது வழக்குப்பதிவு செய்து உள்ளார்.
தற்போது சிறுமியின் தந்தை மரிய ரூபன் ஊர் திரும்பி உள்ளார். பெற்ற மகளை சூடு வைத்து துன்புறுத்திய தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது
- ஆதார் அட்டையை ஆய்வு செய்தபோது சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகாதது தெரிய வந்தது
கன்னியாகுமரி :
கொல்லங்கோடு அருகே கரிமரம் பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 23), தொழிலாளி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலர்களாக மாறினர். திருமணம் செய்வதாக கூறி வாலிபர் அந்த சிறுமியிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த சிறுமி கர்ப்பமானார்.தற்போது அவர் 5 மாதம் கர்ப்பம் என கூறப்படுகிறது.அவர் மேட விளாகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சென்றார்.
இந்நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி சிறுமி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு மருந்து வாங்க சென்றார். அங்கு அவரது ஆதார் அட்டையை ஆய்வு செய்தபோது சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகாதது தெரிய வந்தது. உடனே மருத்துவமனை நிர்வாகிகள் குளச்சல் மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான வாலிபர் நிஷாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.