search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184225"

    • இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்ட சாமி கோவில் பங்குனி தேரோட்ட திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    இதையொட்டி 1-ம் திருவிழாவான இன்று(24-ந் தேதி) அதிகாலை 5.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. கொடிபட்டத்தை மலர்களால் அலங்கரித்து கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோவிலின் முன்புறம் உள்ள கொடிமரத்தில் மேளதாளங்கள் மங்கல இசை மற்றும் சங்கு நாதம் முழங்க "அய்யா அரகர சிவசிவ" என்ற பக்தி கோஷம் விண்ணதிர கொடி ஏற்றப்பட்டது.

    முட்டப்பதி தலைமை தர்மகர்த்தா பாலசுந்தரம் கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன்பின்னர் முட்டப் பதி கடலில் அய்யா வழி பக்தர்கள் தீர்த்தமாடி பதமிடும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உச்சிப்படிப்பு, அன்ன தர்மம் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தது. இரவு 7 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் எழுந் தருளி கோவிலை சுற்றி மேளதாளங்கள்முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    2-ம் திருவிழா வான நாளை (25-ந்தேதி) முதல் 7-ம் திருவிழாவான 30-ந் தேதி வரை தினமும் பணி விடைகள், உச்சிப் படிப்பு, தர்மங்கள் மற்றும் இரவு வாகன பவனி போன்றவை நடக்கிறது. 2 மற்றும் 3-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு அய்யா கருட வாகனத்திலும், 4 மற்றும் 5-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு அன்னவாகனத்திலும், 6-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு சர்ப்ப வாகனத்திலும், 7-ம்திருவிழாஅன்றுஇரவு 7.30மணிக்கு அய்யாகருட வாகனத்திலும் பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான 31-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் அதைத்தொடர்ந்து உகப்படிப்பும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு உச்சிப் படிப்பு, பால்அன்னதர்மம் போன்றவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு ஒற்றையால்விளை, மாதவபுரம் வழியாக முட்டப்பதி வரை பவனி வந்து வடக்கு வாசலுக்கு எதிரே அமைந்துஉள்ள கடலில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு அன்னதர்மம் நிகழ்ச்சி நடக்கிறது.

    9 மற்றும் 10-ம் திருவிழா நாட்களில் இரவு 7.30 மணிக்கு சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.11-ம் திருவிழாவான 3-ந்தேதி பகல் 12 மணிக்கு அய்யா தேரில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 4-ந் தேதி திருக்கொடி இறக்க நிகழ்ச்சியும் தான தர்மங்களும் நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடு களை முட்டப்பதி தலைமை தர்மகர்த்தா பாலசுந்தரம், தர்மகர்த்தா செல்வராஜ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • ஜனாதிபதியை வரவேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார்.

    கன்னியாகுமரி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாகுமரிக்கு வருகிறார். இதையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஜனாதிபதியை வரவேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார்.

    • ஜனாதிபதி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக
    • பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

    கன்னியாகுமரி:

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (சனிக்கிழமை) காலை கன்னியாகுமரி வருகிறார்.

    அவரை வரவேற்பதற்காக வும் அவரது சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர்மாளிகைக்குவரும்அவருக்குமாவட்ட நிர்வாகம்சார்பில்சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் அவரை வரவேற்கிறார்கள். வரவேற்புநிகழ்ச்சிமுடிந்த தும் அவர் மாலை 6.20 மணிக்குகன்னியாகுமரி கடலில் சூரியன்மறையும் காட்சியை கண்டு ரசிக்கிறார். அதன் பின்னர் அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குசெல்கிறார். அங்குஅவர் பயபக்தியுடன் சாமிகும்பிடுகிறார். இரவு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    மறுநாள் காலையில் கன்னியாகுமரி வரும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை வரவேற்கிறார். அதன் பிறகு அவருடன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்கிறார். ஜனாதி பதி சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு கேரளா புறப்பட்டு சென்றதும் கவர்னர் ஆர்.என். ரவி சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    கவர்னர் வருகையையொட்டியும் கன்னியாகுமரியில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • நாகர். ரெயில் நிலையத்தில் முறையான அறிவிப்பு வெளியிடாததால் நடந்த சோகம்
    • அபாய சங்கிலியை பிடித்து இழுத்து பாதியில் நிறுத்தினர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்னைக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரியில் இருந்து தினமும் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தை வந்து அடையும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு சென்னை செல்லும். இந்த ரயிலில் தினமும் கன்னியாகுமரி, நாகர்கோவிலில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்கி றார்கள். இதனால் கன்னி யாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தினமும் கூட்டம் நிரம்பி வழியும்.

    நேற்றும் மாலை நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர். முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறுவதற்காக ரயிலின் பின்பகுதி மற்றும் முன்ப குதியில் பிளாட்பாரங்களில் பொதுமக்கள் காத்திருந்தனர். முன்பதிவு செய்யப் பட்ட பெட்டிகளில் ஏறுவ தற்கும் பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது கன்னியா குமரியில் இருந்து 5.45 மணிக்கு திப்ரூகர் செல்லும் ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதை பார்த்த பொதுமக்கள் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் என்று சில பயணிகள் அந்த ரயிலில் முண்டியடித்துக் கொண்டு ஏறினார் கள். முதல் பிளாட்பாரத்தில் வந்திருந்த எக்ஸ்பிரஸ் ரயில் சிறிது நேரத்தில் இங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    ஒழுகினசேரி பகுதியில் ரயில் திரும்பிய போது பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரயி லுக்கு பதிலாக வேறு ரயிலில் ஏறியதை உணர்ந்த பயணிகள் அபாய சங்கிலி யை பிடித்து இழுத்தனர்.இதைத் தொடர்ந்து ரயில் நடுவழியில் நின்றது. உடனடியாக ரயிலில் ஏறிய பயணிகள் அதிலிருந்து இறங்கினார்கள்.

    பின்னர் அங்கிருந்து தண்டவாளம் வழியாக ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். ரயில் நடுவழியில் நின்றதையடுத்து ரயில்வே அதிகாரிகளும் போலீசாரும் அங்கு சென்று விசாரித்தனர். அப்போதுதான் ரயில் பயணிகள் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் என்று தவறுதலாக ஏறி விட்டதாக கூறினார்கள். இதனால் நேற்று மாலை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையில் கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் ரயில் நிலை யத்தில் உள்ள முதலாவது பிளாட்பாரத்திற்கு வந்து சேர்ந்தது. திப்ரூகர் ரயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகள் இங்கு வந்து சேருவதற்கு முன்னதாகவே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாரானது. ரயில் பயணிகள் அவசரமாக ஓடி வந்து ரயிலை பிடித்தனர். பின்னர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

    இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ரயில் நிலையத்தில் சரி யான அறிவிப்புகள் வெளி யிடப்படவில்லை. கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரயில் வரக்கூடிய நேரத்தில் கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகர் ரயில் வந்தது. அறிவிப்புகள் வெளியிடாததால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் என்று நினைத்து ரயிலில் ஏறி விட்டதாகவும் ரயில் நிலையத்தில் முறையான அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் தெரிவித்தனர்.

    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
    • ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார்.

    கன்னியாகுமரி:

    இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திரவுபதிமுர்மு நாளை (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் மற்றும் உயர் அதிகாரிகள் முக்கிய விருந்தினர்கள் வரவேற்கிறார்கள்.

    வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன் பிறகு அவர் அங்கு இருந்து கார்மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக படகு துறைக்கு செல்கிறார். அங்கிருந்து தனிப்படகு மூலம் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்கிறார். அவரை விவேகானந்த கேந்திர அகில பாரத தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் கேந்திர நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.

    பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு விவே கானந்தர் நினைவு மண்ட பத்தை சுமார் 30 நிமிடம் சுற்றி பார்க்கிறார். அதன் பிறகு அங்கிருந்து அதே படகு மூலம் கரைக்கு திரும்புகிறார்.பின்னர் கார் மூலம் விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்கிறார். அங்குள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை பார்வையிடுகிறார். அதன் பின்னர் பாரத மாதா கோவிலுக்கும்செல்கிறார். பின்னர் காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.

    கவர்னர் வருகையொட்டி பலத்த போலீஸ் பாது காப்பு ஏற்பாடு செய் யப்பட்டு உள்ளது. பாது காப்புபணியில் 1500 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். ஜனாதிபதி வருகையை யொட்டி கன்னியாகுமரி நகரப் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் ஹெலிகாப்டர் தளம், அவர் தங்கி இருக்கும் அரசு விருந்தினர் மாளிகை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை, விவே கானந்தர் நினைவு மண்ட பம், விவேகானந்த கேந்திரா வில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண் காட்சி கூடம் மற்றும் பாரத மாதா கோவில்ஆகிய இடங் களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தி வருகிறார்கள்.மேலும் போலீஸ் மோப்பநாய் மூலமும் போலீசார் அவர் செல்லும் பாதைகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ஜனாதிபதி வருகையை யொட்டி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது. கூட்டத்துக்கு குமரி மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாதுகாப்பு குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன், பயிற்சி உதவி கலெக்டர் குணால்யாதவ், பத்ம நாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாக பொறுப்பாளர் ராஜ்குமார், கேந்திர நிர்வாக அதிகாரிஅனந்த ஸ்ரீபத்மநாபன், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், பூம்பு கார் கப்பல் போக்கு வரத்து கழக மேலாளர் செல்லப்பா, குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ் குமார், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் உதயகுமார், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில் குமார் உள்பட அனைத்து துறைகளைச் சேர்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரியில் ஜனாதிபதி ஓய்வெடுக்கும் புதிய அரசு விருந்தினர் மாளிகை புதுப்பிக்கும் பணிதீவிரமாக நடந்து வருகிறது. மேலும் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தைசுற்றிலும் உள்ள பகுதி சீரமைக்கப் பட்டு வருகிறது. அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தை சுற்றி புதர்மண்டி கிடந்த செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்லும் படகுகள்நிறுத்தி வைக்கப்படும்படகுதுறை க்குசெல்லும்சாலைஇரவு-பகலாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திரா வளாகத்திலும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று ஆய்வு

    கன்னியாகுமரி, மார்ச்.14-

    தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ. பெரிய சாமி நேற்று இரவு கார் மூலம் கன்னியா குமரி வந்தார். அங்கு வந்து அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அதன் பிறகு அவர் இரவு கன்னியா குமரியில் தங்கினார். பின்னர் அமைச்சர் ஐ. பெரிய சாமி இன்று காலை கன்னியா குமரி அருகே உள்ள கோவளம் சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் தூய்மை இந்தியா திட்டம்மற்றும் 15 -வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ்சுற்றுலா பயணிகளுக்குவசதியாக நவீன கழிப்பறை கட்டும் பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன் பிறகு ஒற்றையால் விளை அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள், நண்பர்கள் நட்புறவு திட்டத்தின் கீழ் ரூ.68 லட்சத்து25 ஆயிரம் செலவில்4 வகுப்பறை கொண்ட கட்டிடம் கட்டும்பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு லீபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆமணக்கன்விளை அரசு தொடக்கப்பள்ளி யில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 69 ஆயிரம் செலவில் சத்துணவு திட்ட சமையலறை கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

    அதைத் தொடர்ந்து சுவாமிதோப்பு பதிசாலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 99 ஆயிரம் செலவில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அவருடன் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட திட்ட அதிகாரி பாபு, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியதி.மு.க. செயலாளர் பாபு, மாநில தி.மு.க. வர்த்தக அணி இணைசெயலாளர்தாமரை பாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலைபேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கொட்டாரம் பேரூர்தி.மு.க. செயலாளர்வைகுண்ட பெருமாள், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர். எஸ்.பார்த்தசாரதி, மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்ப ரதி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் நீல பாலகிருஷ்ணன், கோவளம் பஞ்சாயத்து தலைவர் ஸ்டெனி, லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கேரள கடல் பகுதியில் காணப்பட்ட சீற்றம் காரணமாக குமரி மேற்கு கடல் பகுதியிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
    • கன்னியாகுமரி கடல் பகுதியிலும் இன்று கடல் சீற்றம் காணப்பட்டது.

    குளச்சல்:

    கேரளாவின் அரபிக்கடல் பகுதியில் கடந்த 2 நாட்களாக கடலில் சூறைக்காற்றும், அலைகளின் கொந்தளிப்பும் அதிகமாக காணப்பட்டது.

    இதுதொடர்பாக கேரள கடல் பகுதியில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அங்குள்ள அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். மேலும் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் கூறியிருந்தனர்.

    கேரள கடல் பகுதியில் காணப்பட்ட சீற்றம் காரணமாக குமரி மேற்கு கடல் பகுதியிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    இதனால் குளச்சல், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற படகுகள் கரை திரும்பி வருகின்றன. குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் உள்ளன.

    இதில் கரை திரும்பிய படகுகள் அனைத்தும் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோல கட்டுமரங்கள், வள்ளங்களும் கடலுக்கு செல்லவில்லை.

    இன்று 2-வது நாளாகவும் குளச்சலில் கடலுக்குள் பயங்கர சூறைக்காற்று வீசியது. அலைகளும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதன் காரணமாக 2-வது நாளாக இன்றும் விசை படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    குறைந்த அளவிலேயே கட்டுமரங்களும், வள்ளங்களும் மீன்பிடிக்க சென்றன. அவையும் அவசரமாக கரை திரும்பியது.

    விசைபடகுகள் மற்றும் கட்டுமரங்கள், வள்ளங்கள் அவசரமாக கரை திரும்பியதால் குறைந்த அளவே மீன்கள் பிடிப்பட்டன. குறிப்பாக சூறை, புல்லன் இறால் போன்ற மீன்களையே மீனவர்கள் பிடித்து வந்தனர்.

    அவற்றை வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கி சென்றனர். போதிய மீன்வரத்து இல்லாததால் மீனவர்களும், வியாபாரிகளும் கவலை அடைந்தனர்.

    கன்னியாகுமரி கடல் பகுதியிலும் இன்று கடல் சீற்றம் காணப்பட்டது. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் முடிந்து கடந்த 6-ந் தேதிதான் திறக்கப்பட்டது. இப்போது கடல் சீற்றம் காரணமாக அங்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு 133 அடி உயர வானுயர சிலை

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தல மான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு 133 அடி உயர வானுயர சிலை அமைக்கப்பட்டுஉள்ளது.

    இந்த சிலையைகடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி புத்தாயிரம் ஆண்டு மலரும் போது அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். கடல் நடுவில இந்த திருவள்ளுவர் சிலை அமைந்துஉள்ளதால் இந்த சிலை அடிக்கடிஉப்பு காற்றினால்சேதம்அடைந்து வருகிறது. இதனால் கடல் உப்புகாற்றின்பாதிப்பில் இருந்து இந்த திருவள்ளு வர் சிலை சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டு களுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி 4 ஆண்டு களுக்கு பிறகு இந்தமுறை திருவள்ளுவர்சிலைபராம ரிப்புபணியானதுரூ1கோடி செலவில்கடந்தஜூன்மாதம் 6-ந்தேதி தொடங்கப்பட்டது. 133 அடி உயரம் கொண்ட சிலையை சுற்றி சுமார் 60 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்புகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டு முதலில் சிலையை தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது.

    அதன் பிறகு காகித கூழ் கலவை சிலை மீது ஒட்டப்பட்டு சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் பணி நடை பெற்று முடிந்தது.அதைத் தொடர்ந்து தண்ணீர் கொண்டு முழுவது மாக சுத்தம் செய்யப்பட் டது. பின்னர் ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய் யப்பட்ட "வாக்கர்" எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இந்த பணிக்காக 60 டன் எடை கொண்டஇரும்புபைப்புகள் மூலம் சிலையை சுற்றி அமைக்கப்பட்ட சாரத்தினை பிரிக்கும் பணி நடைபெற்று முடிந்து உள்ளது. ரசாயன கலவை பூசும்பணிநிறை வடைந்து உள்ளதை தொடர்ந்து கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளூர் சிலை புதுப்பொலிவுடன் காட்சிஅளிக்கிறது.

    இதைத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு வருகிற 6-ந்தேதி முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள 133 அடி உயர திருவள்ளு வர் சிலைக்கு படகு போக்கு வரத்துஇயக் கப்படுகிறது.இதைத் தொடர்ந்து அன்று முதல் மீண்டும் திருவள்ளு வர் சிலையை நேரில் சென்று பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக திருவள்ளுவர் சிலை வளாகம் சுத்தப் படுத்தப்பட்டு தயாராகி கொண்டிருக்கிறது.

    கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை

    கன்னியாகுமரி, மார்ச்.2-

    கன்னியாகுமரி நடுத்தெருவை சேர்ந்தவர் லால் சந்த் (வயது 55).

    இவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சன்னதி தெருவில் பாலாஜி பேன்சி ஸ்டோர் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இங்கு மேலா ளராக பக்சாராம் (50) பணி யாற்றி வருகிறார்.

    இவர் நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் உள் பக்க அறையின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் கடையின் மேற் கூரை ஆஸ்பெஸ்டாஸ் சீட்டும் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அவர், கடையில்உள்ள கல்லா பெட்டியை திறந்து பார்த்தார். அப்போதுஅதில் வைத்திருந்தரூ.14ஆயிரத்து 500திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.

    இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு அவர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று விசா ரணைநடத்தினார்கள்.

    கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்த னர். கடந்த 4 மாதங் களுக்கு முன்பு இதே கடையில் மேற் கூரையை உடைத்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளை அடிக்க ப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    அதில் துப்பு துலங்கு வதற்கு முன்பு இப்போது 2-வது முறையாக கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி அதில் சந்தேகப்படும் படியான உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் திருநங்கைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்

    கன்னியாகுமரி, பிப்.26-

    மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் மிஸ்கான் ரகுவன்சி (வயது 22). கல்லூரி மாணவியான இவர் ஒரே பாரதம், உண்மையான பாரதம் மற்றும் பெண்கள் உரிமை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

    கடந்த 1-ந்தேதி காஷ்மீரில் இருந்து புறப்பட்ட அவர் 3 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்தை 25 நாட்களில் கடந்து கன்னியாகுமரி வந்தார். பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பணக்குடியை சேர்ந்த திருநங்கைகள் வினோதினி, முஜி, வாணி ஆகியோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    சைக்கிள் பயண வீராங்கனை மிஸ்கான்ரகுவன்சி கூறுகையில், தான் தினமும் 100 முதல் 150 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டதாகவும், நாட்டில் பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்புக்கு கேள்விக்குறி எழுந்து உள்ளதால் அதனை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு முன்பு நர்மதை நதிக்கரையில் 3200 கிலோமீட்டர் தூரத்தை 19 நாட்களில் சைக்கிள் மூலம் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

    விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல கூட்டம் அலைமோதியது

    கன்னியாகுமரி, பிப்.26-

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாகத் தெரிந்தது. சூரியன் உதயமான இந்த அற்புத காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள்கூட்டம்அலை மோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில்அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட "கியூ"வில் காத்திருந்தனர். காலை 8 மணிக்குபடகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    சுற்றுலா பயணிகள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகா னந்தர் மண்டபத்தை பார்வை யிட்டனர். கன்னியா குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்குபூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைபகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளானஇன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்குவர த்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்தபோலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டுஇருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • 25 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    • பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக எச்சரிக்கை நோட்டீசும் கொடுக்க நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியத்தின் குமரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டிய ராஜன் தலைமையில் உதவி மேலாளர்நாகராஜன், உதவிசுற்றுச் சூழல் பொறி யாளர் கலைவாணி, உதவி பொறியாளர் ஜெனிஷா, கன்னியாகுமரி சிறப்பு நிலைபேரூராட்சி சுகாதார அதிகாரிமுருகன் சுகாதார மேற்பார்வையா ளர் பிரதீஷ் மற்றும் அதிகாரிகள் கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னார்கள்.

    கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரைபகுதி, சன்னதி தெரு, ரத வீதிகள், மெயின் ரோடு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, கடற்கரை சாலை உள்பட பல்வேறு இடங்களில் 150-க்கும் மேற்பட்ட ஓட்டல் மற்றும் கடைகளில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி யது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்தகடைகளில்இருந்து மொத்தம் 25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும ஒரு சில கடைகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக எச்சரிக்கை நோட்டீசும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ×