search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184225"

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    • அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரி சனம் செய்து விட்டு செல்வது வழக்கம். இங்கு வரும் பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இந்த அன்னதான திட்டத்தை பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது.

    நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவ குமார், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளர் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ரமேஷ், கணக்காளர் ஸ்ரீ ராமச் சந்திரன் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண் ணப்பட்டது.

    உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ.74ஆயிரத்து 946 வசூல் ஆகி இருந்தது. அதேசமயம் இந்த கோவிலில் பக்தர் கள் காணிக்கை செலுத்து வதற்காக கோவில் வளாகத்தில் வைக் கப்பட்டுள்ள 17 நிரந்தர உண்டியல்கள் இந்த மாதம் திறந்து எண்ணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

    • இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் வடிவமைக்க ஏற்பாடு
    • சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் டெல்லி மற்றும் கார்கில் போர் நடந்த இடத்தில் இருப்பது போல் கன்னியாகுமரியிலும் மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கு மத்திய அரசிடம் எம்.பி. விஜயகுமார் வலியுறுத்தி வந்தார்.

    அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து கன்னியா குமரியில் ராட்சத தேசியக்கொடி கம்பம் அமைப்பதற்கு எம்.பி. விஜயகுமார் தனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்துரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதைத் தொடர்ந்து இந்த 150 அடி உயர ராட்சத தேசிய கொடிக் கம்பத்தின் திறப்பு விழா நேற்று முன்தினம் காலை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், விஜயகு மார் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த தேசிய கொடிக்கம்பத்தை தமிழக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ரிமோட் மூலம் ஏற்றினார். இந்தநிலையில் கன்னியாகுமரி பகுதியில் நேற்று வீசிய பயங்கர சூறாவளி காற்றினால் ஒரே நாளில் இந்த கொடி சேதம் அடைந்தது. சூறைக்காற்றில் இந்த தேசியக்கொடி சேதமடைந்தது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கொடியின் அடிப்பகுதியில் உள்ள பச்சை நிற பகுதியில் பச்சை நிற பகுதிசேதமடைந்து கொடிய கிழிய தொடங்கி உள்ளது. அதேபோல் மேல் புறமும் லேசாக சேதம் அடைய தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் கொடியை நிர்மாணிக்க காண்ட்ராக்ட் பெற்ற நிறுவன அலுவலர்களும் இதனை சரி செய்வதற்காக விரைந்துவந்தனர். அவர்கள் சேதமடைந்த அந்த தேசிய கொடியை கீழே இறக்கினர். இதனால் தற்போது 150 அடி உயரது கொடி கம்பம் தேசியக்கொடி இல்லாமல் வெறுமனே காட்சியளிக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் வீசும் சூறைக்காற்று மற்றும் இயற்கை சீற்றங்களுக்கு ஏற்றவாறு எந்த மாதிரியான தேசிய கொடியை தயாரிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர்குழு கன்னியாகுமரிக்கு வருகைதரஉள்ளது.

    இந்த குழு வந்து ஆய்வு செய்த பின்னரே அடுத்த தேசியக்கொடி ஏற்றப்படும் என்று தெரிகிறது. இதற்கு சிலநாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று மாலை 150 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி பறப்பதை பார்க்க கன்னியாகுமரிக்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
    • போலீஸ் நிலையத்தில் ஆய்வு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரன் பிரசாத் நேற்று மாலை "திடீர்" என்று வந்தார். அங்கு வந்த அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

    பின்னர் அவர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். போலீசாருக்கு சில அறிவு ரைகளையும் வழங்கினார். போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றியும் எவ்வளவு புகார் மனுக்கள் வருகின்றன என்பது குறித்தும் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டார்.

    கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தல மாக திகழ்வதால் போலீஸ் நிலையத்தையும் சுற்றுப்பு றங்களையும் தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு எவ்வளவு புகார் மனுக்கள் வருகின்றன என்பது குறித்தும் எந்த மாதிரியான வழக்குகள் பதிவாகுகின்றன என்பது குறித்தும் எவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்தும் நான் ஆய்வு மேற்கொண்டேன். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டு உள்ளேன்.

    டி.ஜி.பி.யின் அறிவுறுத்தலின் பேரில் இன்று (வெள்ளிக்கிழமை) குமரி மாவட்டம் முழுவதும் உள்ள போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை நாகர்கோவிலில் நடைபெற இருக்கிறது. இதில் 2 ஆயிரம் போலீசார் பங்கேற்கின்றனர். 50-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு போலீசாருக்கு பரிசோதனை செய்கின்றனர்.

    சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் கடற்கரைப் பகுதியில் இருசக்கர வாகனங்களில் போலீஸ் ரோந்து ஏற்படுத்தப்படும்.

    கன்னியாகுமரியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கழுத்து அடிபட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு ரெயில்வே பாலத்தின் அடியில் வீசப்பட்டு பிண மாக கிடந்தார். மர்மமான முறையில் நடந்த அந்த வாலிபரின் கொலை வழக்கு குறித்து மிக விரைவில் துப்பு துலக்கப்படும்.

    அதற்காக கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். பின்னர் கன்னியா குமரியில் நடைபெற்ற போலீ சாரின் குடும்பங்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

    • காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து வெகுநேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    • இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    கன்னியாகுமரி, ஜூன்.30-

    கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்"என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து வெகுநேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்த நிலையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    • தெருவிளக்குகளை மாற்றி விட்டு ரூ.75 லட்சம் செலவில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவது மற்றும் பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
    • செயல் அலுவலர் ஜீவநாதன், சுகாதார அதிகாரி முருகன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். வார்டு உறுப்பி னர்கள் சுபாஷ், ஆனி ரோஸ்தாமஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்

    கன்னியாகுமரி,

    ஜூன்.30-

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டம் அதன் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது.

    செயல் அலுவலர் ஜீவநாதன், சுகாதார அதிகாரி முருகன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். வார்டு உறுப்பி னர்கள் சுபாஷ், ஆனி ரோஸ்தாமஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்யும் உரிமையை மறு ஏலம் விடுவது, சிலுவை நகர் முதல் சன்செட் பாயிண்ட் வரை உள்ள கருவேல மரங்களை அகற்றி அந்தப்பகுதியில் புல்வெளி அமைத்துஅழகுபடுத்தி மேம்படுத்துவது, குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு ரூ.36 லட்சம்செலவில் 13 குப்பை அள்ளும் வாகனங்கள் வாங்குவது, ஒற்றையால் விளை அரசு பள்ளியில் ரூ.6 லட்சம்செலவில் மேற்கூரை அமைத்து பராமரிப்பு பணி செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் தெருவிளக்குகளை மாற்றி விட்டு ரூ.75 லட்சம் செலவில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவது மற்றும் பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

    • இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.
    • படகுத்துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்"என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

    இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து வெகுநேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத்துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இந்த நிலையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • இந்தப் பணி நாள்தோறும் நடைபெறும் என்று அறிவிப்பு.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி, காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டப சாலை உள்பட பல பகுதிகளில் அன்றாடம் தேங்கும் குப்பைகளை அகற்றும் தூய்மைப்பணி முகாம் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் நடந்தது. இந்த பணியை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்.

    இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், சுகாதார அலுவலர் முருகன், கவுன்சிலர் ஆனிரோஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து தூய்மைப்பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கூறியதாவது:-

    கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சுற்றுலாத் திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கும் சூழ்நிலையில் பேரூராட்சி பகுதிகளை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்கும் நோக்கத்தில் இந்தப்பணி நாள்தோறும் நடைபெறும் என்று தெரிவித்தார்.

    • விண்ணப்பிக்க ஜூலை 7-ந் தேதி கடைசி நாள்
    • கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நாகர் கோவில், மீன்வளம் மற் றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவல கத்தில் காலியாக உள்ள மூன்று மீன்வள உதவி யாளர் காலிப்பணியிடத் தினை அரசாணையில் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்திலிருந்து நடைமுறை யிலுள்ள விதிகளின்படி இச் சுழற்சி முறையில் பெறப்படும் பட்டியலிலி ருந்தும், தினசரி நாளித ழின் வாயிலாக விளம்பரம் செய்து பெறப்படும் விண் ணப்பங்கள் மூலமாகவும் நிரப்பப்படவுள்ளது.

    எனவே தற்போது நடைமுறையில் உள்ள இனசுழற்சி முறையில் மிக வும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன் னுரிமை பெற்றவர். பிற்ப டுத்தப்பட்ட வகுப்பினர் முன்னுரிமை பெற்றவர், பொதுப்போட்டி முன் னுரிமையற்றவர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மீன்வள உத வியாளர் பணியிடத்திற்கு 01.01.2022 அன்றுள்ளபடி பொதுபிரிவு-32 வயது, பிற்படுத்தப்பட்ட வகுப் பினர், மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் 34 வயது மற்றும் ஆதி திராவி டர்அருந்ததியினர்-37வய திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    தமிழில் எழுத, பேச தெரிந்திருக்கவேண் டும். நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். மீன்பிடி வலை பின்னவும் மற்றும் அறுந்த வலைகளை சரிசெய்யவும் தெரிந்திருக்கவேண்டும். மற்றும் மீன்வளத்துறை யின் கீழ் உள்ள ஏதேனும் மீனவர் பயிற்சி நிலையத் தில் பயிற்சி மேற்கொண் டமைக்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னு ரிமை அளிக்கப்படும்.

    மேலே குறிப்பிட்டுள்ள தகுதியுடையவர்கள் மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறை துணை இயக்குநர், (மண்டலம்) கன்னியாகு மரி, (இருப்பு) நாகர்கோ வில் டிஸ்டில்லரி ரோடு, வடசேரி என்ற முகவரியில் செயல்படும் அலுவல கத்திற்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந் தப்பட்ட சான்றிதழ் நகல் களுடன் 07.07.2022 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பிட அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
    • ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் ரெயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

    நாகர்கோவில்:

    சென்னையில் விஜய் வசந்த் எம்.பி. தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா, முதன்மை தலைமை இயக்க மேலாளர் நீனு இட்டியேரா ஆகியோரை சந்தித்து மனு ஒன்று அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி வழித்தடத்தில் புதிய ரெயில் இயக்க வேண்டும், இரட்டை வழி ரெயில் பாதை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். கன்னியாகுமரியிலிருந்து வேளாங்கண்ணிக்கு புதிய ரெயிலை இயக்க வேண்டும். ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் ரெயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். மேலும் அனந்தபுரி ரெயிலை நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கு மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தனர்
    • ஜூன் 26-ந் தேதி உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்

    கன்னியாகுமரி:

    ஆண்டுதோறும் ஜூன் மாதம் 26-ந்தேதி உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி மத்திய அரசின் திட்டமான போதைப்பொருள் இல்லாத இந்தியா திட்டம், குமரி மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகத் தொண்டு நிறுவனங்களான திருப்புமுனை போதை நோய் நலப்பணி, போதை நோய் பணிக்குழு, புது வாழ்வு மையம், நியூ பாரத் டிரஸ்ட், ஏ.எம். கே. ஆகியவை இணைந்து குமரி மாவட்டத்தில் 21 இடங்களில் இருந்து நாகர்கோவிலுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கன்னியாகுமரி யில் விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தின் தொடக்க விழா காந்தி நினைவு மண்டபம் முன்பு இன்று காலை நடந்தது. குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் பங்கேற்று "மாணவரே, வேண்டாமே...போதை!" என்ற விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை வெளியிட அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் பெற்றுக்கொண்டார்.

    பின்னர் அவர்கள், போதை ஒழிப்பு விழிப்பு ணர்வு ஜோதியை ஏற்றி தொடர் ஓட்ட வீரர்களிடம் வழங்கினர். ஜோதி ஓட்டத்தை கொடி யசைத்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அதிகாரி சரோஜினி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், செயல் அலுவலர் ஜீவநாதன், கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, திருப்புமுனை போதை நோய் நலப்பணி இயக்குனர் அருட்பணியாளர் நெல்சன், ஜோதி ஓட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசிறில், நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக இயக்கம் மற்றும் ஆய்வு பிரிவு துணை பொது மேலாளர் ஜெரோலின் லிஸ்பன்சிங், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி துணைத்தலைவர்ஜெனஸ் மைக்கேல், வார்டு கவுன்சிலர்ஆனிரோஸ், முன்னாள் வார்டு கவுன்சிலர் தாமஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஜோதி ஓட்டத்தில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் ஆகியோர் தொடர் ஓட்ட வீரர்களுடன் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடினார்கள். கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து புறப்பட்ட இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் விவேகானந்தபுரம், கொட்டாரம், பொற்றையடி, ஈத்தங்காடு, வழுக்கம்பாறை, சுசீந்திரம், இடலாக்குடி, கோட்டாறு, மீனாட்சிபுரம் மணிமேடை சந்திப்பு வழியாக நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தது. அங்கு உலக போதை விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது.

    குளச்சல் காணிக்கை அன்னை சபை மற்றும் புது வாழ்வு இல்லம் சார்பில் போதை விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் குளச்சல் பீச் சந்திப்பில் தொடங்கியது.குளச்சல் பங்குத்தந்தை டையனேசியஸ் லாரன்ஸ் சிறப்புரை ஆற்றினார். வட்டார முதன்மை அருட் பணியாளர் பிரான்சிஸ் டி.சேல்ஸ் ஜோதி ஏற்றி வாழ்த்துரை வழங்கினார். குளச்சல் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜுவா, இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் ஆகியோர் ஜோதி ஓட்டத்தை துவக்கி வைத்தனர்.

    இதில் மாவட்ட ஊராட்சி கள் உதவி இயக்கு னர் அலுவலக பி.டி.ஓ. விஜயகுமார் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.ஜோதியை குளச்சல் பங்கு இளைஞர்கள் பெற்றுக்கொண்டு மண்டை க்காடு, மணவாளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம் வழி யாக நாகர்கோவில் சென்றடைந்தனர்.அங்கு அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    குளச்சலில் தொடங்கிய ஜோதி ஓட்டம் ஏற்பாடுகளை காணிக்கை அன்னை சபை தலைமை அருட்சகோதரி அன்பரசி செய்திருந்தார்.

    குமரி மாவட்டம் முழுவதும் 21 இடங்களில் இருந்து புறப்பட்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கை வந்தடைந்தது.

    • 3 சன்னதிகள் முன்பு 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
    • ரூ.8 லட்சத்து 69 ஆயிரத்து 133 வசூல்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்ச்சை நிறைவேறுவதற்காக வேண்டி கோவிலில் உள்ள உண்டியலில் பணம், காசு தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

    இதற்காக வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி ஆகிய 3 சன்னதிகள் முன்பு 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும்பணி கோவில் ஆய்வாளர் சாய் கிருஷ்ணா, சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுவலர் விஜயகுமார் விஜிலென்ஸ் அதிகாரி நாயுடு மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. இதில் வருமானமாக ரூ.8 லட்சத்து 69 ஆயிரத்து 133 வசூல் ஆகி இருந்தது.

    • அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.
    • சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    விடுமுறை நாளான இன்றும் (சனிக்கிழமை), ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அவர்கள் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.

    அதன்பிறகு கன்னியா குமரி முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் சென்று விவேகானந்தர் மண்ட பத்தை பார்வையிட்டனர்.

    மேலும் கன்னியா குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச், சொத்த விளை பீச் உள்பட அனைத்து சுற்று லாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    ×