search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184225"

    • ராஜாக்கமங்கலம் சந்திப்பில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    கன்னியாகுமரி : 


    ராஜாக்கமங்கலம் சந்திப்பில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


    வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயல் தலைவர் சகாய பிரவீன் தலைமை வகித்தார் நாகர்கோவில் சட்டமன்ற செயல் தலைவர் சுதன் முன்னிலை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் நரேந்திர தேவ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    மாநில பொதுச் செயலாளர் ஆஸ்கர் பிரடி, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகர காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆல்வின், சேவியர், பிரேம்குமார் முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், வட்டார காங்கிரஸ் தலைவர் வைகுண்ட தாஸ் மாநில காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் காமராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • தேவ பிரசன்னம் பார்க்கப்பட்ட போது கும்பாபி ஷேகத்துக்கு முன்பு பல்வேறு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி நேற்று பரிகார பூஜைகள் நடைபெற்றது. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்ட போது அப்போது கும்பாபி ஷேகத்துக்கு முன்பு பல்வேறு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.


    அதன்படி கடந்த 8 மாதங்களாக மாதம் ஒருமுறை கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்று வந்தது திரிகால பூஜைகள், கணபதி பகவதி சேவை, தேவி பூஜை மணிக்கு சுத்தி கலச பூஜை, கலசாபிஷேகம் சர்ப்பபலி பூஜை ஆகியன நடைபெற்றது.


    நேற்று காலை கணபதி ஹோமத்தைத்தொடர்ந்து பரிகார பூஜைகளில் ஒன்றான சுகிர்த ஹோமம் நடைபெற்றது. கோவில் தந்திரி சஜித் சங்கர நாராயணரு மற்றும் நான்கு அர்ச்சகர்கள் சேர்ந்து சுதர்தன ஹோமம் நடத்தினர்கள்.


    கோவிலின் புனிதத்தை அதிகரிக்கச்செய்யவும், கும்பாபிஷேக விழா சிறப்புற நடைபெறுவதற்காகவும் நடத்தப்படும் சுகிர்த ஹோமம் இன்றும் காலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது. நேற்று நடந்து சுகிர்த ஹோம பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு அறிவித்த உத்தரவுபடி ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களை பயன்படுத்த கூடாது.
    • திற்பரப்பு அருவி அருகில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மை படுத்தினார்கள்.

    கன்னியாகுமரி:

    தமிழக அரசு அறிவித்த உத்தரவுபடி அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களை பயன்படுத்த கூடாது. அனைவரும் மஞ்ச பையை தான் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

    அதன்படி திற்பரப்பு பேரூராட்சி மூலம் திற்பரப்பு அருவி அருகில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி அந்த பகுதி முழுவதும் தூய்மை படுத்தினார்கள். அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடமும் அந்த பகுதியில் உள்ள கடை நடத்தும் வியாபாரிகளிடமும்,

    பொதுமக்களிடமும் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் சுகாதார சீர் கேடுகள் போன்றவற்றை எடுத்து கூறினார்கள் அனை வரும் பிளாஸ்டிக்கை தவிர்த்து மாற்று பொருள்களை பயன்படுத்த வேண்டும் தமிழக அரசு அறிமுகபடுத்திய மஞ்ச பை திட்டத்தை அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள்.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் பெத்ராஜ், தலைவர் பொன் ரவி, துணைத் தலைவர் ஸ்டாலின்தாஸ், வார்டு உறுப்பினர் கிருஷ்ணவேணி, பேருராட்சி தூய்மை பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    • கடந்த 2000 -ம் ஆண்டு 133 அடி உயரதிருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.
    • இந்த சிலை கடல் உப்புக் காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. கடந்த 2000 -ம் ஆண்டு 133 அடி உயரதிருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி இந்த சிலையை திறந்து வைத்தார். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்படகில்சென்று இந்தச்சிலையை கண்டு களித்து வருகின்றனர்.


    இந்தச்சிலை கடல் உப்புக் காற்றினால் பாதிப்ப டையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயன கலவை பூசப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரசாயன கலவை பூசஅரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனாபரவல் காரண மாக பணி நடைபெறவில்லை. இந்தநிலையில் தற்போது தமிழகத்தில் தி.மு.க அரசு பதவியேற்றதும் இதற்கான பணிகள் துரிதப்படுத்தப் பட்டது. ஒரு கோடி ரூபாய் செலவில்திட்டமிடப்பட்டு உள்ள இந்தப் பணிக்கான டெண்டர் விடப்பட்டது.

    ஆய்வு செய்வதற்காக பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட குழு சமீபத்தில் கன்னியாகுமரி வந்தது. அந்த குழுவினர் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்து விட்டு விரைவில் ரசாயனக் கலவை பூசும் பணி தொடங்கும் என்று தெரிவித்தனர்.


    இந்த நிலையில் கன்னி யாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள133 அடி உயர திருவள்ளுவர் சிலை யில் ரசாயன கலவை பூசும் பணி நாளை (6-ந்தேதி) தொடங்கப்பட உள்ளது. இந்தப் பணி முடிவடையும் வரை சுமார்5 மாத காலம் சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று திருவள்ளுவர் சிலையை பார்க்க அனுமதி வழங்கப்படாது.

    • கன்னியாகுமரி ரதவீதிகளில் வடிகால் அமைத்து சாலைகள் சீரமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதம்18-ந் தேதி தொடங்கியது.
    • கிடப்பில் போடப்பட்ட ரதவீதிகள் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரத வீதிகள் கடந்த சில ஆண்டுகளாக மோசமான நிலையில் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் ரூ.1 கோடியே 50லட்சம் செலவில் கன்னியாகுமரி ரதவீதிகளில் வடிகால் அைமத்துசாலைகள் சீரமைக்கும் பணி கடந்த ஜனவரிமாதம்18-ந்தேதி தொடங்கியது.

    ஆனால் பணி தொடங்கி 4 மாதங்களாகியும் இன்னும் முடிவ டையவில்லை. கடந்த 3 மாதங்களாக ரதவீதிகள் சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டன.


    இந்தநிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாகடந்த3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம்திருவி ழாவான11-ந்தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. ரத வீதிகள் வழியாகத் தான் தேர் பவனி வரும் என்பதால் ரத வீதிகளை சீரமைக்கும் பணியை விரைந்து முடித்து தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததன் அடிப்படையில் கிடப்பில் போடப்பட்ட ரதவீதிகள் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    இந்த பணியை அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை குழுமத் தலைவர் தாமரைபாரதி தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத் தலைவர் ஜெனஸ் மைக்கேல், உதவி பொறியாளர் இர்வின் ஜெயராஜ், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள்சி.எஸ்.சுபாஷ், ஆனிரோஸ்தாமஸ், பூலோக ராஜா, இக்பால், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கன்னியாகுமரி கோவிலில் வைகாசி விசாக 2-ம் திருவிழாவையொட்டி கிளி வாகனத்தில் பகவதி அம்மன் வீதி உலா.
    • வழி நெடுகிலும் பக்தர்கள் திரண்டு வழிபாடு

    கன்னியாகுமரி:


    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    2-ம் திருவிழாவான நேற்று மாலை சமய உரையும் அதைத் தொடர்ந்து வயலின் இன்னிசை கச்சேரியும் நடந்தது. அதன்பிறகு அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிளி வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது.

    கோவிலிலிருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது. அந்த மண்டபத்துக்குள் அம்மன்சிறிதுநேரம் இளைப்பாறும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.

    பின்னர் அங்கிருந்து வாகன பவனி புற ப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடு கிலும் பக்தர்கள் வாகன த்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்க ணம்"சாத்தி வழிபட்டனர்.

    நிகழ்ச்சியில் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.3-வது நாளான இன்று அதி காலை 5மணி மற்றும் காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


    முன்னதாக அன்ன வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது.


    அதைத் தொடர்ந்து 11-30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும்9மணிக்கு அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #TNRains #KanyaKumari #Ooty
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு விடிய, விடிய மாவட்டம் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 23 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. 

    தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நேற்றுமுன்தினம் நிரம்பியது. முதற்கட்டமாக அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் பிரசாந் மு வடநரே உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல, நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
    ×