search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184225"

    • பெண் படுகாயம்
    • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று அதிகாலை ஒரு கார் புறப்பட்டது.

    அந்த காரை கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சார்ந்த முகமது சாபி ஓட்டி வந்தார். காரின் பின் சீட்டில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஜினா அமர்ந்திருந்தார்.

    களியக்காவிளை அருகே திருத்தோபுரம் பகுதி யில் கார் வந்த போது எதிர்பா ராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையில் வைத்திருந்த தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரின் பின்இருக்கையில் அமர்ந்தி ருந்த அஜினா படுகாயம் அடைந்தார்.அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பி னார்.

    இது குறித்து களியக்கா விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தகவல்
    • மழையின் காரணமாக சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு ஊராட்சி யில் உள்ள சாலைகள் பழுதடைந்து காணப்படுவதுடன், இச்சாலைகளை சீரமைத்து பல ஆண்டுகள் ஆகின்ற நிலை உள்ளது. மேலும் கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டில் பெய்த மழையின் காரணமாக சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

    ஊராட்சி சாலைகள் மற்றும் ஒன்றிய சாலை களை மாவட்ட சாலை களாக தரம் உயர்த்தி முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டுமென நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சா லைத்துறை பொறியா ளர்களுக்கு ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் வைத்திருந்தேன்.

    இதன் அடிப்படையில் தற்போது ஊராட்சி சாலை களை மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தி சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறை - நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி சட்ட மன்றத் தொகுதியில் வடக்கு தாமரைகுளம்-பறக்கை சாலை தரம் உயர்த்துவதற்கு ரூ. 1 கோடியே 57 லட்சமும், புதுக்குளம் சாலை- கடம்பாடி விளாகம் வழி, ஆலந்துறை தெற்கு மேடு காலனி அலங்காரமூலை சாலை தரம் உயர்த்துவதற்கு ரூ.5 கோடியே 43 லட்சத்து 78 ஆயிரமும், பறக்கை-தாமரைக்குளம் சாலை தரம் உயர்த்த ரூ.1 கோடியே 5 லட்சத்து 74 ஆயிரமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இச்சாலை பணிகள் விரை வில் தொடங்கி சீரமைக் கப்பட்டு மக்கள் பயன் பாட்டிற்கு வரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை
    • 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் .

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டை பிளாஸ்டிக் இல்லா தமிழகமாக மாற்றும் முயற்சியாக, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் தாள்கள் ஆகியவற்றை பயன்படுத்த 01.01.2019 முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    அதன் தொடர்ச்சியாக மேற்குறிப்பிட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவது கன்னி யாகுமரி மாவட் டத்தில் நன்கு குறைந்து வருகிறது. இருப்பினும், சில உணவகங்கள், டீ கடைகள், மளிகை கடைகள், பேக்கரிகள், இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிக்கும் கடைகள் ஆகியவற்றில் அரசின் தடை ஆணையை மீறி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவது தெரியவருகிறது.

    அனைத்து உணவகங்கள் டீ கடைகள் , மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், பேக்கரிகள், இனிப்பு மற்றும் காரவகைகள் முதலிய கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட ஒருமுறை பயன்ப டுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்தக்கூடாது என இதன்மூலம் எச்ச ரிக்கப்படுகிறது. ஆய்வின் போது, தடையை மீறி அவ்வாறு உபயோகப்படுத்துவது கண்டறியப்பட்டால் முதல்முறை ரூ.2 ஆயிரமும், 2-வது முறை ரூ.5 ஆயிரமும், 3-வது முறை ரூ.10 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படுவதுடன் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்து கடை மூடி சீல் வைக்கப்படும் என்பது இதன்மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

    செய்தித்தாள் முதலிய அச்சிடப்பட்ட தாள்களில் உணவுப்பொருட்களை பாதுகாக்கவோ, பொட்டல மிடவோ பயன்படுத்தக்கூ டாது. சூடான வடை, சம்சா போன்ற தின்பண்டங்களை செய்திதாளில் வைத்து எண்ணெய்யை பிழிந்து சாப்பிடும் பொழுது செய்தித்தாளில் படிந்தி ருக்கும், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கார்பன், காட்மியம் . தாலேட் போன்ற கடின உலோகங்களும் சேர்ந்து உண்ணும்பொழுது உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளது.

    அவை தொடர்ச்சியாக உடலில் சேரும்பொழுது ஜீரண மண்டலம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன .

    எனவே செய்தித்தாள் மற்றும் அச்சிடப்பட்ட தாள்களில் உணவுப்பொ ருள்களை சேமித்து வைப்பதோ , பொட்டலமிட்டு வழங்குவதோ மற்றும் உணவு பொருள்களை உண்ண வழங்குவதோ உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது .

    அவ்வாறு உபயோ கப்படுத்துவது கண்டறியப் பட்டால் அபராதம் விதிக்கப் படுவதுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்து கடை மூடி சீல் வைக்கப்படும்.

    டீ கடைகள், ஓட்டல்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவை பயன்படுத்துவது, அச்சிடப் பட்ட தாள்களில் வடை, சம்சா கொடுப்பது போன்றவை தொடர்பாக பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க லாம் .

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 2 மணி நேரம் காத்திருந்து படகில் சென்றனர்
    • சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாகத் தெரிந்தது. சூரியன் உதயமான இந்த அற்புத காட்சியை சுற்றுலா பயணிகளும் அய்யப்ப பக்தர்களும் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை6மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகா னந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். சுற்றுலா பயணிகளும் அய்யப்ப பக்தர்களும் சுமார் 2 மணி நேரம் நீண்டவரிசையில் காத்திருந்து படகில் சென்றுவிவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்ட னர்.

    திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தளங்கள் களை கட்டியது. கடும் போக்குவரத்து நெரிச லும் ஏற்பட்டது.

    இந்த சுற்றுலாதலங்களில் பலத்தபோலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • ரெயில்வே பொதுமேலாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை
    • கன்னியாகுமரியில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி சுனாமி ஏற்பட்டது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி வந்த திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட பொது மேலாளரிடம் கன்னியாகுமரி புனித அலங்கார உபகர மாதா திருத்தல பங்குத்தந்தை அல்காந்தர் தலைமையில் பங்கு பேரவை துணைத் தலைவர் செல்வராணி ஜோசப் மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் இக்பால் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைமனு ஒன்றை கொடுத்தனர்.

    அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரியில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி சுனாமி ஏற்பட்டபோது கடற்கரை பகுதியில் இருந்த ஏராளமான மீனவர் குடியிருப்புகள் பாதிக்கப் பட்டன. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி ரெயில் நிலையத்திற்கு வடக்கு புறம் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் 700-க்கும் மேற்பட்ட சுனாமி குடியி ருப்புகள் கட்டப்பட்டன.

    இந்தப் பகுதியில் 5 ஆயிரத்துக்கும்மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற னர். இவர்கள் கன்னியாகுமரி யின் பிரதான பகுதிக்கு வருவதற்கும் இவர்கள் தொழில் செய்வதற்காக சின்னமுட்டம் மற்றும் கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு செல்வதற்கும் ரெயில்வே நிலையத்தை ஒட்டிஉள்ள பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது கன்னியாகுமரி ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு வருவதால் இந்த பாதையை தங்களுக்கு சீரமைத்து தருவ துடன் அந்தப் பாதையை பயன்படுத்து வதற்கு உரிய அனுமதியும் வழங்க வேண் டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    • பேரூராட்சி நிர்வாகம் “திடீர்” நடவடிக்கை
    • கன்னியா குமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வருகிற 28-ந்தேதி சீசன் கடைகள் ஏலம் விடப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளது.

    இந்த சீசனை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரை சாலை மெயின் ரோடு போன்ற பகுதிகளில் நடை பாதைகளை ஆக்கிரமித்து தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகள் அமைக்கப்பட்டுஉள்ளன.இதற்கிடையில் கன்னியா குமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வருகிற 28-ந்தேதி சீசன் கடைகள் ஏலம் விடப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை சாலை, காந்தி மண்டபம் பஜார், மெயின் ரோடு, பழைய பஸ் நிலைய ரவுண் டானா சந்திப்பு, போன்ற பகுதி களில் நடைபாதை களை ஆக்கிரமித்து வைக் கப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகளை பேரூராட்சி ஊழியர்கள் இன்று காலை அதிரடியாக அகற்றினார்கள்.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் தலைமையில் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் சுகாதார மேற்பார்வை யாளர் பிரதீஸ் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நடந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

    • 28 மதுபாட்டில்கள் பறிமுதல்
    • கன்னியாகுமரி சிலுவைநகர் டாஸ்மாக் மதுக்கடை பார் அருகே விற்பனை செய்வதற்காக ரகசியமாக பதுக்கல்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிலுவைநகர் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை பார் ஒன்று உள்ளது. இதன்அருகே மது பாட்டில்கள் ரகசியமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது சிலுவை நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மது கடை பார் அருகே ஒருவர் மது பாட்டில்களை ரகசியமாக விற்பனைசெய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவரது பெயர்துரைசாமி (வயது 52) என்றும் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள மேலத்திடியூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இதைதொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மேலும் கன்னியாகுமரி சிலுவைநகர் டாஸ்மாக் மதுக்கடை பார் அருகே விற்பனை செய்வதற்காக ரகசியமாக பதுக்கி வைத்திருந்த 28 குவாட்டர் மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும் நடந்தது
    • திரளான பக்தர்கள் பங்கேற்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. குமரி மாவட்டத்தி லேயே மிகவும் உயரமான 5½ அடி உயர சிவலிங்க சிலை இந்த கோவிலில் அமைந்து உள்ளது சிறப்பாகும்.

    வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது.இதையொட்டிமாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணை, மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம்ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

    பின்னர் 5.30 மணிக்கு மூலவரான சிவபெரு மானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு பள்ளியறை எழுந்திருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

    இதேபோல கன்னியா குமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்க புரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசிவிசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்பற்று அகத்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ் மலை ஜோதி லிங்கசாமி கோவில், பரமார்த்த லிங்க சுவாமி கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுதமுடைய நயி னார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் கார்த்திகை மாத சோமவார பிரதோசத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 18 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
    • 11 கடைகளுக்கு அபராதம்

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலாத்த லமான கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளது. இந்த சீசனையொட்டி ஆங்காங்கே நடைபாதைகளில் ஏராள மான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கன்னியாகு மரியில் நேற்று குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கசிவம் நாகர்கோவில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் குமாரபாண்டியன், தக்கலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவின்ரகு ஆகியோர் கொண்ட குழுவினர் ஒரு குழுவாகவும் மேல்புறம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வின்சென்ட்கிளாட்சன், குளச்சல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி, திருவட்டார்வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்னொரு குழுவாகவும் தனித்தனியாக சென்று 50-க்கும் மேற்பட்ட ஓட்டல் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    கன்னியாகுமரி கடற்கரை சாலை, மெயின்ரோடு, திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி உள்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் 11 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதுகண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அந்த கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த கடைகளில் இருந்து 18 கிலோ 750 கிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பிரதமர் மோடி 25-ந்தேதி திறந்து வைக்கிறார்
    • 24-ந் தேதி தமிழக கவர்னர் ஆர். என். ரவி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள சபா மண்டபத்தில் ஸ்ரீ ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம் நிகழ்ச்சி வருகிற 24-ந் தேதி தொடங்கி 25-ந்தேதி வரை 2 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    24-ந் தேதி காலை 10 மணிக்கு தமிழக கவர்னர் ஆர். என். ரவி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். மேல்கோட்டை ஸ்ரீயதுகிரி யதிராஜமடம் 41-வது பட்டம் பீடாதிபதிஸ்ரீ ஸ்ரீயதுகிரியதிராஜ நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலை வகிக்கிறார். இதில் சிறப்பு விருந்தினராக கர்நாடக மாநில மந்திரி அஸ்வத் நாராயண், விஜய்வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். மாலை 6மணிக்கு சுவாமி ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பகவத் ராமானுஜர் நாட்டிய நாடக நிகழ்ச்சி நடக்கிறது. 25-ந்தேதி காலை 10 மணிக்கு ராமானுஜர் மாநாடு நடக்கிறது. பகல் 12 மணிக்கு விவேகானந்தா கேந்திராவில் நிறுவப்பட்டு உள்ள ராமானுஜர் முழு உருவ சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த முழு உருவ சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

    • மொத்தம்உள்ள 3ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 60 நாட்களில் தொடர் ஓட்டம் மூலம் கடந்து செல்கிறார்கள்.
    • இந்த ஒற்றுமை தொடர் ஓட்டத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் இன்று காலை நடந்தது.

    கன்னியாகுமரி:

    தேசிய மாணவர் படை (என்.சி.சி.) உதயமான 75-வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய மாணவர் படை இயக்குனரகம் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை தேசிய ஒற்றுமை தொடர் ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இந்த ஒற்றுமை தொடர் ஓட்டத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் இன்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள தமிழ்நாடு தேசிய மாணவர் படை துணை டைரக்டர் ஜெனரல் கமாடர் அதுல்குமார் ரஸ்டோகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 250-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் ஒற்றுமை தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கினர்.

    கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த தொடர் ஓட்டம் நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, சின்னாளப்பட்டி, தேத்துப்பட்டி, வேலூர், ஐதராபாத், நாக்பூர், ஆக்ரா, வழியாக வருகிற ஜனவரி மாதம் 18-ந்தேதி டெல்லி சென்றடைகிறது.மொத்தம்உள்ள 3ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 60 நாட்களில் தொடர் ஓட்டம் மூலம் கடந்து செல்கிறார்கள். கன்னியாகுமரியில் நடந்த இந்த ஒற்றுமை தொடர் ஓட்ட நிகழ்ச்சியில் தமிழக அரசின் சுற்றுலாத்துறையைச்சேர்ந்த சுற்றுலா காவலர்களும் பங்கேற்றனர்.

    • அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
    • இரவு நேரங்களில் தெருவிளக்குகள் அனைத்தும் எரிவதற்கு உறுதி செய்திட வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற் கொள்வது குறித்து பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பேரூ ராட்சிகள்) மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலக சிறு கூட்ட அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக் டர் அரவிந்த் கலந்து கொண்டு, துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொண்டார்.

    பின்னர் அவர் கூறியதா வது:-

    கன்னியாகுமரிக்கு நவம்பர் மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்வரை அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்ப டுகிறது. எனவே அய்யப்ப பக்தர்க ளுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளை கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி, சுகாதாரத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

    மேலும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை போக்குவரத் துக்கு இடையூறு இல்லாமல் உரிய இடத்தில் நிறுத்துவதற்கு ஏதுவாக இடங்களை ஏற்பாடு செய்வதோடு, இரவு நேரங் களில் எந்தவித பயமும் இல்லாமல் பொதுமக்கள் நடந்து செல்ல ஏதுவாக தெருவிளக்குகள் அனைத்தும் எரிவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மின்சாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறை உறுதி செய்திட வேண்டும்.

    மேலும் கன்னியா குமரியை சுற்றியுள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், உணவு பாதுகாப்புதுறை உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள் வதோடு, பிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலும் தவிர்ப்ப தற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதோடு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) விஜய லெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×