search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பிஎல்"

    • திண்டுக்கல் அணியில் அதிகபட்சமாக மோகித் ஹரிஹரன் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் சேர்த்தார்
    • மதுரை பாந்தர்ஸ் தரப்பில் சன்னி சந்து 4 ஓவர்கள் வீசி, 11 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ், சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி, மதுரை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. துவக்க வீரர் விஷால் வைத்யா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான கேப்டன் ஹரி நிஷாந்த் 24 ரன்களும், மணி பாரதி 18 ரன்களும் சேர்த்தனர். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. மறுமுனையில் மோகித் ஹரிஹரன் மட்டும் சற்று தாக்குப்பிடித்து ஆடியதால், அணியின் ஸ்கோர் 100 ரன்களை தாண்டியது.

    மோகித் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் சேர்க்க, 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 122 சேர்த்தது.

    மதுரை பாந்தர்ஸ் தரப்பில் சன்னி சந்து 4 ஓவர்கள் வீசி, 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது. 

    • திருச்சி அணிக்கு எதிராக ராதாகிருஷ்ணன் 49 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 81 ரன்கள் விளாசினார்.
    • 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணியால் 159 ரன்களே எடுக்க முடிந்தது.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 81 ரன்களும், உதிரசாமி சசிதேவ் 65 ரன்களும் குவித்தனர். திருச்சி தரப்பில் அஜய் கிருஷ்ணா, பொய்யாமொழி தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணியால் 20 ஓவர்களில் இலக்கை எட்ட முடியவில்லை. சாத்விக் 33 ரன்களும், சந்தோஷ் ஷிவ் 59 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் அளித்தனர். ஆனால் அதன்பின்னர் வந்த வீரர்கள் அதிரடி காட்ட தவறியதால் ரன்ரேட் வெகுவாக சரிந்தது. நிரஞ்சன் 11 ரன், நிதிஷ் ராஜகோபால் 9 ரன்கள் என விரைவில் விக்கெட்டை இழந்தனர். கடைசி நேரத்தில் சற்று அதிரடி காட்டிய ஆதித்ய கணேஷ் 28 ரன்கள் சேர்த்தார்.

    முகமது அத்னன் கான் 10 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர் முடிவில் திருச்சி அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களே எடுத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஹரிஷ் குமார் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

    • ராதாகிருஷ்ணன் 49 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 81 ரன்கள் விளாசினார்.
    • திருச்சி தரப்பில் அஜய் கிருஷ்ணா, பொய்யாமொழி தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கவுசிக் காந்தி 19 ரன்களும், மற்றொரு துவக்க வீரர் ஜெகதீசன் 15 ரன்களும் சேர்த்தனர்.

    அதன்பின்னர், திருச்சி பந்துவீச்சாளர்களை திக்குமுக்காடச் செய்த ராதாகிருஷ்ணன் 49 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 81 ரன்கள் விளாசினார். உதிரசாமி சசிதேவ் 35 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 65 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் விரைவில் விக்கெட்டை இழந்தனர். திருச்சி தரப்பில் அஜய் கிருஷ்ணா, பொய்யாமொழி தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.

    • முதலில் ஆடிய சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது.
    • கோவை அணியின் துவக்க வீரர் சுரேஷ் குமார் 64 ரன்கள் விளாசினார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் -சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. அதிபட்சமாக கோபிநாத் 41 ரன்களும், பிரணவ் குமார் 32 ரன்களும், அஸ்வின் 31 ரன்களும் எடுத்தனர்.

    இதையடுத்து 147 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கோவை அணி 21 பந்துகள் மீதமிருந்த நிலையில், இலக்கை எட்டியது. துவக்க வீரர் சுரேஷ் குமார் 64 ரன்கள் விளாசினார். கங்கா ஸ்ரீதர் ராஜு 13 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின்னர் சாய் சுதர்சன் ஆட்டமிழக்காமல் 56 ரன்களும், ஷாருக்கான் 5 ரன்களும் சேர்க்க, கோவை அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 149 ரன்கள் குவித்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சுரேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

    • கோவை அணி தரப்பில் அபிஷேக் தன்வர், பாலு சூர்யா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • அதிரடியாக விளையாடிய கோபிநாத் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 11-வது ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் -சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகள் இழந்து அந்த அணி தடுமாறியது. அதன்பின்னர் கோபிநாத் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த முருகன் அஸ்வின் 31 ரன்களும், பிரணவ் குமார் 34 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

    இறுதியில் 20 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் சேலம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. கோவை அணி தரப்பில் அபிஷேக் தன்வர், பாலு சூர்யா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 147 ரன்கள் இலக்குடன் கோவை அணி விளையாடி வருகிறது.

    • முதலில் விளையாடிய நெல்லை அணி 209 ரன்கள் அடித்தது.
    • நெல்லை வீரர் சஞ்சய் யாதவ் 70 ரன்கள் குவித்தார்.

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய பேட்டிங் செய்த நெல்லை அணியில் தொடக்க வீரர் நிரஞ்சன் 47 ரன்கள் அடித்தார். பாபா அபரஞ்சித் 34 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் ஜோடி சேர்ந்த சஞ்சய் யாதவும், கேப்டன் பாபா இந்திரஜித்தும், அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.42 பந்துகளை சந்தித்த சஞ்சய் யாதவ் 70 ரன்கள் குவித்தார்.

    இந்திரஜித் 34 ரன்கள் எடுத்தார். இருவரும் கடைசி வரை களத்தில் இருந்தனர். நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்தது. இதையடுத்து 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர் பாலச்சந்தர் அனிருத் ஒரு ரன்னுடன் வெளியேறினார்.

    மற்றொரு தொடக்க வீரர் அருண் கார்த்திக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 57 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். கேப்டன் சதுர்வேதி 27 ரன்னுக்கு அவுட்டானார்.

    ஜெகதீசன் கவுசிக் 21 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் மதுரை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் அடித்தது. இதையடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றி பெற்றது. இது நெல்லை அணி பெறும் நான்காவது வெற்றியாகும்.

    • டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • சஞ்சய் யாதவ் 42 பந்துகளில் 70 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய பேட்டிங் செய்த நெல்லை அணியில் தொடக்க வீரர் நிரஞ்சன் 47 ரன்கள் அடித்தார். பாபா அபரஞ்சித் 34 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

    பின்னர் ஜோடி சேர்ந்த சஞ்சய் யாதவும், கேப்டன் பாபா இந்திரஜித்தும், அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.42 பந்துகளை சந்தித்த சஞ்சய் யாதவ் 70 ரன்கள் குவித்தார். இந்திரஜித் 34 ரன்கள் எடுத்தார்.

    இருவரும் கடைசி வரை களத்தில் இருந்தனர். நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்தது. இதையடுத்து 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மதுரை பாந்தர்ஸ் அணி விளையாட உள்ளது.

    • நேற்று நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வீழ்த்தியது.
    • இரு அணிகளும் இதுவரை தோற்கவில்லை. இதனால் எந்த அணிக்கு முதல் தோல்வி கிடைக்க போகிறது என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    திண்டுக்கல்:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 23-ந்தேதி நெல்லையில் தொடங்கியது.

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் , மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    நேற்று நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வீழ்த்தியது. திண்டுக்கல் அணி 2-வது வெற்றியை பெற்றது. திருப்பூர் அணி முதல் தோல்வியை தழுவியது.

    திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 10-வது ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் இதுவரை தோற்கவில்லை. இதனால் எந்த அணிக்கு முதல் தோல்வி கிடைக்க போகிறது என்று எதிர் பார்க்கப்படுகிறது. மதுரை அணி தான் மோதிய 2 ஆட்டங்களிலும் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ்) வெற்றி பெற்று இருந்தது. ஹாட்ரிக் வெற்றிக்காக அந்த அணி காத்திருக்கிறது.

    நெல்லை அணி தான் மோதிய 3 போட்டிகளிலும (சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ்) வெற்றி பெற்றது. 4-வது வெற்றி ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது. 

    • அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொள்கிறது.
    • திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறும்.

    அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொள்கிறது. 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது.

    அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. மூன்று நாள் இடைவெளிக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 9-வது லீக் ஆட்டத்தில் அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொள்கிறது.

    இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • கோவை அணியில் அதிரடியாக ஆடிய முகிலேஷ், 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் குவித்தார்.
    • மதுரை அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட், சன்னி சந்து, கிரன் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கலில் நடைபெறும் 2வது ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி கேப்டன், பீல்டிங்கைத் தேர்வு செய்ய, கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    கோவை அணியின் துவக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜு, சாய் சுதர்சன் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தனர். சஜித் சந்திரன் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம், மறுமுனையில் சுரேஷ் குமார் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆறுதல் அளித்தார். அவர் 22 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் குவித்தார்.

    அதன்பிறகு முகிலேஷ் அபாரமாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. தொடர்ந்து அதிரடி காட்டிய முகிலேஷ், 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.

    மதுரை அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட் கைப்பற்றினார். சன்னி சந்து, கிரன் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 12 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது.
    • பாபா அபராஜித், சஞ்ய் யாதவ் இருவரும் அதிரடியாக ஆடி ஆட்டத்தை முடித்தனர்.

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதினன. மழை காரணமாக போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    முதலில் ஆடிய திண்டுக்கல் அணி திண்டுக்கல் அணி 12 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய விஷால் வைத்யா, 21 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் குவித்தார். ஹரி நிஷாந்த் 27 பந்துகளை எதிர்கொண்டு, 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் விளாசினார். நெல்லை தரப்பில் ஸ்ரீ நிரஞ்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணி, 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் 133 ரன்கள் குவித்து வெற்றியை எட்டியது. துவக்க வீரர் நிரஞ்சன் 18 ரன்னிலும், சூர்யபிரகாஷ் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் பாபா அபராஜித், சஞ்ய் யாதவ் இருவரும் அதிரடியாக ஆடி ஆட்டத்தை முடித்தனர். பாபா அபராஜித் 59 ரன்களும் (நாட் அவுட்), சஞ்சய் யாதவ் 55 ரன்களும் (நாட் அவுட்) விளாசினர். இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றி பெற்றது.

    இதன்மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, நடப்பு சீசனில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியையும், 2வது ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்சையும் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் நெல்லை அணி, புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

    • விஷால் வைத்யா, 21 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் குவித்தார்.
    • திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெல்லை பந்துவீச்சாளர் ஸ்ரீ நிரஞ்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மழை காரணமாக போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நெல்லை அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணியில், துவக்க வீரர்களான விஷால் வைத்யா, கேப்டன் ஹரி நிஷாந்த் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    அதிரடியாக ஆடிய விஷால் வைத்யா, 21 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். துவக்க ஜோடி 82 ரன்கள் சேர்த்தது. ஹரி நிஷாந்த் 27 பந்துகளை எதிர்கொண்டு, 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். மணி பாரதி (1), ராஜேந்திரன் விவேக் (12), மோகித் ஹரிஹரன் (3) என சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    மோனீஸ் 10 ரன்களும் (நாட் அவுட்), பிரதீப் 14 ரன்களும் (நாட் அவுட்) சேர்க்க, திண்டுக்கல் அணி 12 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது. நெல்லை தரப்பில் ஸ்ரீ நிரஞ்சன் 3 விக்கெட் வீழ்த்தினார். அதிசயராஜ் டேவிட்சன், சஞ்சய் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. 

    ×