search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 185432"

    • கள்ளக்குறிச்சி அடுத்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவர். இவர் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • நேற்று காலை பள்ளிக்கு சென்றுவிட்டு பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் அங்கிருந்து பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு இரவு 8 மணி அளவில் வந்துள்ளார்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி அடுத்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவர். இவர் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் அந்த பகுதியில் உள்ள டியூசன் சென்டரில் டியூசன் படித்து வந்துள்ளார். டியூசன் சென்டரில் செல்போன் மாயமானது குறித்து நேற்று முன்தினம் மாணவனிடம் அந்த டியூசன் ஆசிரியர் விசாரித்துள்ளார். மேலும் அவரது தந்தைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டில் மாணவனை கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த அவர், நேற்று காலை பள்ளிக்கு சென்றுவிட்டு பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் அங்கிருந்து பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு இரவு 8 மணி அளவில் வந்துள்ளார்.

    பள்ளி சீருடையில் பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்த மாணவனை கண்ட பள்ளப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் மாணவனுக்கு இரவு உணவு வாங்கி கொடுத்து உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனிடையே மாணவன் வீடு திரும்பாததால் அவரது தந்தை கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்திருந்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி புகழேந்தி கணேசன் மற்றும் மாணவனின் பெற்றோர் நேற்று நள்ளிரவு சேலம் வந்து மாணவனை அழைத்துச் சென்றனர்.

    • திராவகம் கலந்த குளிர்பானம் குடித்ததால் பலி
    • பெற்றோர் உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு

    நாகர்கோவில்:

    களியக்காவிளை அருகே படந்தாலுமூடு மெதுகும்பல் பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவரது மனைவி சோபியா. இவர்களது மகன் அஸ்வின் (வயது 11).

    இவன் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் அஸ்வினுக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அஸ்வினை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெய் யாற்றின்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அஸ்வின் திராவகம் கலந்த குளிர்பானத்தை குடித்து இருப்பதால் சிறுநீரகம் செயல் இழந்திருப்பதாக கூறி னார்கள். இதைத்தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக் கப்பட்டு வந்தது. இதை யடுத்து அஸ்வினின் தாயார் சோபியா களியக்காவிளை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரியை சந்தித்தும் மனு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெற்று வந்த அஸ்வின் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு வரப்பட்டது.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அஸ்வினின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மூன்று டாக்டர்கள் கொண்ட குழு வினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய் யப்பட்டது. இதற்கு பிறகு அஸ்வினின் உடல் அவரது உறவினிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    ஆனால் அவரது உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அஸ்வின் உடல் ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் வைக் கப்பட்டுள்ளது. அஸ்வின் மர்மமான முறையில் இறந்தது குறித்து களியாக்கா விளை போலீசார் தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த வழக்கு நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீ சாருக்கு மாற்றப்பட்டது.

    நாகர் கோவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இது தொடர்பாக விசார ணையை இன்று தொடங்கி யுள்ளனர். டி.எஸ்.பி. சங்கர், சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி ஆகியோர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை உட்பட அனைத்து தகவல்களையும் சேகரித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    முதற்கட்டமாக சம்பவம் நடைபெற்ற பள்ளிக்கு நேரில் சென்று அவர்கள் இன்று விசாரணை மேற் கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரி யைகள் மாணவ-மாணவி களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீ சார் விசாரணை நடத்து கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து மாணவன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஆஸ்பத்திரி மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளனர்.மேலும் அஸ்வினின் பெற்றோரி டமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    • குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்
    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை

    கன்னியாகுமரி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கியுள்ள மனுவில் கூறி யிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் மெதுகும்மல் ஊராட்சி, அதங்கோடு, அனந்தநகர் என்னும் இடத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில்

    6-ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் அஸ்வின் கடந்த 24-ந்தேதி அன்று மதியம் பள்ளி வளாகத்தில் வைத்து மர்மநபர்கள் கொடுத்த திராவகம் கலந்த குளிர்பானத்தை குடித்துள் ளான்.

    இதில் மாணவன் அஸ்வின் உயிருக்கு ஆபத் தான நிலையில் நெய் யாற்றின் கரை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை யில் 17-ந்தேதி மதியம் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்துள்ளார். இதற்கு காரண மான சமூக விரோதிகளை உடனடியாக போலீ சார் கைது செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.முதல்-அமைச்சர் இக்கடி தம் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவன் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.
    • மாணவன் அஸ்வின் இறப்பு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைவில் விசாரணை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாணவன் குளிர்பானம் குடித்ததாக கூறப்படும் பள்ளியில் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளது.
    • அந்த கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    நாகர்கோவில், அக்.18-

    களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவரது மனைவி சோபியா. இவர்களது மகன் அஸ்வின் (வயது 11).

    இவன் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அஸ்வினுக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அஸ்வின் சேர்க்கப்பட்டான்.

    அப்போது அவனை பரிசோதித்த டாக்டர்கள் அஸ்வின், ஆசிட் போன்ற ஏதோ திரவத்தை குடித்ததால் தான் பாதிப்பு ஏற்பட்டதாகவும், சிறுநீரகம் செயலிழந்திருப்பதாகவும் கூறினர். இதையடுத்து சிறுவனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அப்போது அஸ்வின், பெற்றோரிடம் தேர்வு முடிந்து வீட்டுக்கு வரும்போது பள்ளி சீருடையில் வந்த மற்றொரு மாணவர் ஒருவர் தனக்கு குளிர்பானம் கொடுத்து குடிக்க கூறியதாகவும், அதை குடித்ததாகவும் தெரிவித்தான்.

    அந்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்து இருக்கலாம் என்று அஸ்வினின் பெற்றோர் சந்தேகிக்கிறார்கள் .இது குறித்து அஸ்வின் தாயார் சோபியா களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . இந்த நிலையில் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், முதன்மை கல்வி அதிகாரி ஆகியோரை சந்தித்தும் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் உடல்நிலை மோசமான அஸ்வின் நேற்று மாலை பரிதாபமாக இறந்தான். இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.மாணவன் அஸ்வின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து அஸ்வினின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்படுகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அஸ்வினின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.பிரேத பரிசோதனை முழுவதையும் சி.சி.டி.வி. பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் தான் அஸ்வின் இறப்பிற்கான முழு விவரமும் தெரியவரும்.

    மேலும் அஸ்வினுக்கு ஆசிட் கலந்த குளிர்பானத்தை கொடுத்தது யார் ? என்பது இன்னும் மர்மமாக உள்ளது .

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், மாணவன் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார். மாணவன் அஸ்வின் இறப்பு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைவில் விசாரணை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாணவன் குளிர்பானம் குடித்ததாக கூறப்படும் பள்ளியில் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளது. அந்த கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    • கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க மனு
    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் களியக்காவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    நாகர்கோவில்:

    களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது 11 வயது மகன் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று மதியம் பள்ளியில் இருந்து இவன் வீடு திரும்பும் போது, அதே பள்ளிச் சீருடையில் வந்த மாணவன், குளிர்பானம் ஒன்றை கொடுத்துள்ளான்.

    அதனை வாங்கி சுனில் மகன் குடித்துள்ளான். சிறிதளவே குடித்த அவனுக்கு இரவில் காய்ச்சல் மற்றும் வேறு சில உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    பின்னர் சிறுவன் மேல் சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் குடித்த குளிர்பானத்தில் திராவகம் கலந்திருப்பதாக கூறினர். இதனால் சிறுவனின் 2 சிறுநீரகங்களும் செயல் இழந்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்தநிலையில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் களியக்காவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    விரைவில் குற்றவாளியை கண்டுபிடிக்காவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சூழலில் சிறுவனின் பெற்றோர், இன்று காலை குறைதீர்க்கும் நாளில், மாவட்ட கலெக்டரிடம் கண்ணீர் மல்க ஒரு மனு அளித்தனர். அதில், போலீசார் விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை.எனவே கலெக்டர் தலையிட்டு, எங்கள் மகனுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். எனது குடும்பத்தின் சூழ்நிலை கருதி மகன் மருத்துவ செலவிற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

    • சேலம் அஸ்தம்பட்டி கோர்ட்டு ரோடு காலணியை சேர்ந்தவர் சிவகுரு. இவரது மகன் தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் செல்போன் பார்ப்பதை கண்டித்தும் தற்கொலைக்கு காரணம் என தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி கோர்ட்டு ரோடு காலணியை சேர்ந்தவர் சிவகுரு. இவரது மகன் அரசு குரு. ( வயது 14). இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அரசு குரு நேற்று அருகில் உள்ள சந்தோஷ் என்பவரது வீட்டிற்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர்.

    இது குறித்து அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் . பின்னர் அரசு குரு உடலை மீட்டு பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் இருந்த அரசு குருவை பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தியதும், மேலும் செல்போன் பார்ப்பதை கண்டித்தும் தற்கொலைக்கு தற்கொலைக்கு காரணம் என தெரியவந்தது. இதனால் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • மாணவன் உப்பிலிபாளையம் வரதராஜபுரத்தில் நடந்து சென்றார்.
    • 3 பேரும் சேர்ந்து மாணவனை தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கினர்.

    கோவை

    கோவை நீலிகோணாம்பாளையம் 3-வது தெருவை சேர்ந்தவர் 17 வயது மாணவன். அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று மாணவன் உப்பிலிபாளையம் வரதராஜபுரத்தில் நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த 3 வாலிபர்கள், சிறுவனை பார்த்து ஏன் எங்கள் தெருவில் சுற்றுகிறாய்? என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

    தகராறு முற்றி வாக்குவாதமாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து மாணவனை தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கினர்.

    மேலும் கத்தியால் தாக்கியதில் மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் 3 பேரும் மாணவனை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.


    இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தாக்கிய உப்பிலிபாளையம் காந்திநகரை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் கவுதம்(20), உப்பிலிபாளையம் சி.எம்.சி. காலனியை சேர்ந்த தொழிலாளி விக்னேஷ்(23) மற்றும் சுனில்குமார்(19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோல், விக்னேஷ் போலீசில் அளித்த புகாரில், மாணவன், அவனது நண்பருடன் சேர்ந்து தங்களை தாக்கியதாக புகார் அளித்தார். அதன்பேரிலும் போலீசார் மாணவன் மற்றும் அவரது நண்பர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தபோது சோகம்
    • போலீசார் திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே வட்டக்கோட்டையைச் சேர்ந்தவர் கண்ணன், டெம்போ டிரைவர். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு திவாகர் (வயது 15) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கண்ணன் தற்பொழுது காணி மடத்தில் வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்தார். கண்ணனின் மகன் திவாகர் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். விநாயகர் சதுர்த்தி விடுமுறையை அடுத்து திவாகர் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    இதையடுத்து நேற்று வீட்டில் இருந்து திவாகர் தனது தாயார் சித்ரா மற்றும் சகோதரி உடன் அஞ்சுகிராமம் அருகே ரஸ்தாகாடு கடற்கரைக்கு சென்றனர். அவர்கள் அங்கு கடல் அலையை ரசித்து கொண்டு இருந்தனர். அப்போது திவாகர் கடலில் இறங்கி கால் நனைத்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த ராட்சத அலை அவரை இழுத்துச்சென்றது. தாய் மற்றும் சகோதரியின் கண் எதிரே திவாகரை ராட்சத அலை இழுத்துச் சென்றதைப் பார்த்த அவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அஞ்சுகிராமம் போலீசுக்கும், கடலோர பாதுகாப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட் டது.

    அவர்கள் சம்பவ இடத் திற்கு வந்து தேடுதல் வேட் டையில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் திவாகர் பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை திவாகரை அலை இழுத்துச் சென்ற இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அவரது உடல் கரை ஒதுங்கியது.

    இதை பார்த்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கன்னியாகுமரி கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். திவாகரின் உறவினர்களும் அங்கு வந்தனர். அவர்கள் திவாகர் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதற்கிடையில் போலீ சார் திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது ராட்சத அலையில் மாணவன் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
    • புதிய சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் மகன் வசந்த் (வயது 17).

    இவர் தஞ்சையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.‌

    இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக தஞ்சை செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.

    பஸ்சில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    இந்த பஸ் வயலூர் பகுதியில் சென்றபோது பஸ்சில் இருந்த மாணவன் வசந்த் திடீரென தவறி கீழே விழுந்தான்.

    இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

    ஆனால் அந்த பஸ் நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தஞ்சை- கும்பகோணம் சாலையில் ஒன்று திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது.

    உடனடியாக புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

    மேலும் பஸ் நிற்காமல் சென்றதை கண்டித்தும் கூறினர்.‌

    புதிய சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர்.

    இதையடுத்து பொதுமக்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.

    இந்த மறியலால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பெரம்பலூர் மாவட்டம் சார்பில் தேசபக்தன் விருது வழங்கப்பட்டது.
    • நமது தாய்நாட்டின் பற்றுணர்வை வெளிப்படுத்தும் விதமாக தேசிய கீதப்பாடலை தமிழில் பாடிய மாணவன்.

     திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி.டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவன் ரெ.ஜெயோஷ் கிேஷார்.

    இவர் நமது தாய்நாட்டின் பற்றுணர்வை வெளிப்படுத்தும் விதமாக தேசிய கீதப்பாடலை தமிழில் பாடியதால் அவற்றினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்ச்சங்க இலக்கிய ஆய்வு நடுவம் பெரம்பலூர் மாவட்டம் சார்பில் தேசபக்தன் விருது வழங்கப்பட்டது.

    இதையடுத்து மாணவன் ஜெயோஷ் கிஷோரை ஏ.வி.பி.டிரஸ்ட் பப்ளிக்சீனியர் செகண்டரி பள்ளி தாளாளர் ஏ.கார்த்திகேயன், பள்ளி முதல்வர் ஜி.பிரமோதினி, பள்ளி ஒருங்கிணைப்பாளர் வி.மோகனா மற்றும் ஆசிரிய,ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள காப்பரத்தாம் பட்டி. கணபதி நகர் பகுதியை சேந்தவர் கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் பாலியானர்.
    • இவர் கே ஆர் தோப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்தார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள காப்பரத்தாம் பட்டி .கணபதி நகர் பகுதியை சேந்தவர் வேல்முருகன்.

    இவருடைய மகன் சுதர்சன கிருஷ்ணன் (வயது 16). இவர் கே ஆர் தோப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்தார்.

    இந்நிலையில் பள்ளியில் சிறப்பு வகுப்பிற்கு சென்ற மாணவர் மதியம் பள்ளியின் அருகில் உள்ள ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் இருந்த கிணற்றில் இறங்கி குளித்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக சுதர்சன கிருஷ்ணன் கிணற்றில் மூழ்கி பலியானான். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து மாணவன் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தோட்டப் பகுதியில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தேங்கி நின்ற ஒரு குழியில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.
    • இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள தேவி பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.

    இவர் தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள மகாலிங்கம் என்பவரது தோட்டத்தில் தங்கி கூலிவேலை செய்து வருகிறார். இவரது மகன் ஹரிக்குமார் (வயது 14). இவர் பரமத்தியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாணவர் ஹரிக்குமார் காலையில் அங்கிருந்த தோட்டப்பகுதிக்கு‌ சென்றவர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் தோட்டப் பகுதியில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தேங்கி நின்ற ஒரு குழியில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.

    பின்னர் இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக

    பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் குழியில் தவறி விழுந்து இறந்தது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ×