search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயம்"

    • டெம்போ 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • கணவன், மனைவி 2 பேரும் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    குனியமுத்தூர்.

    கோவை மதுக்கரை மார்க்கெட்டை சேர்ந்தவர் சிவதாஸ்(61). இவரது மனைவி நாகமணி(50).

    சிவதாஸ் அதே பகுதியில் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இன்று காலை சிவதாஸ் தனது மனைவியுடன் டெம்போ வாகனத்தில் சென்றார்.வாகனம் போடி பாளையம் பிரிவு அருகே வந்தபோது சிவதாஸ் வண்டியை திருப்ப முயற்சித்தார்.

    அப்போது, எதிரே கேரளாவை நோக்கி வேகமாக வந்த கண் டெய்னர் லாரி மொபட் மீது மோதியது. இதில் டெம்போ சாலையோரம் இருந்த 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கணவன், மனைவி 2 பேரும் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    அப்போது அந்தவழியாக துடியலூர் யூனிட்டை சேர்ந்த பேரூர் சப் டிவிஷன் ஊர்க்காவல் படையினர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் இந்த விபத்தை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி விட்டு, இறங்கி சென்று டெம்போவில் இருந்த கணவன், மனைவியை மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.

    பின்னர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து சிவதாஸ், அவரது மனைவி நாகமணியை மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மதுக்கரை போலீசார் விரைந்து வந்து, லாரியை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    • கேரளாவில் இருந்து சென்னைக்கு வாழைத்தார் ஏற்றிக்கொண்டு மினி லாரி வந்தது.
    • . இந்த மினி லாரி இன்று அதிகாலை பெட்ரோல் பங்க் அருகே வந்த போது கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

    விழுப்புரம்:

    கேரளாவில் இருந்து சென்னைக்கு வாழைத்தார் ஏற்றிக்கொண்டு மினி லாரி வந்தது. இதனை டிரைவர் ரவி (20) ஓட்டி வந்தார். அவருடன் வடிவேல் (23), துமேஷ் (24) ஆகியோர் வந்தனர். இந்த மினி லாரி இன்று அதிகாலை விழுப்புரம் அருகே உள்ள அரசூர் இருவேல்பட்டு பெட்ரோல் பங்க் அருகே வந்த போது கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் மினி லாரி டிரைவர் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சத்தம் போட்டதை கேட்ட இருவேல் பட்டு கிராம மக்கள் அங்கு விரைந்து சென்றனர்.பின்னர் பொக்லைன் எந்திரம் மற்றும் போலீசார் உதவியுடன் விபத்தில் சிக்கிய துமேசை மீட்டனர். பின்பு 3 பேரும் சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • சக்திவேல் என்பவர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கோவிலில் நேற்று ஒரு திருமணம் நடைபெற்றது. பின்னர் பேராவூரணி திருமண மண்டபத்தில் விருந்து நடைபெற்றது.

    திருமணம் முடிந்து அவரது உறவினர்கள் வேனில் பேராவூரணியில் இருந்து முடச்சிக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பேராவூரணி அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி அருகே உள்ள வளைவில் திரும்பும்போது வேன் நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது.

    இதில் முடச்சிக்காடு கலைஞர் நகரை சேர்ந்த டிரைவர் மோகன் (வயது 34), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் பகுதியை சேர்ந்த சக்திவேல் (27), அவரது சகோதரி முத்துமீனா (24), முடச்சிக்காடு கலைஞர் நகரை சேர்ந்த லதா (45), சிவகங்கை மாவட்டம் நாட்டார்வள்ளியை சேர்ந்த ஆனந்தி (22), அவரது 8 மாத பெண் குழந்தை மற்றும் முடச்சிக்காடு கலைஞர் நகரை சேர்ந்த ஜெயா ( 60), முடச்சிக்காடு கலைஞர் நகரை சேர்ந்த நடராஜ் (70) ஆகியோர் காயமடைந்தனர்.

    இதனை பார்த்த அக்கம்ப க்கத்தி னர் உடனடியாக காயம்அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜ் உயிரிழந்தார்.

    மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சக்திவேல் என்பவர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதுகுறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரு தரப்பினர் மோதிக்கொண்டனர்.
    • 6 பேர் காயமடைந்தனர் மற்றும் 28 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பிசிண்டி கிராமத்தில் நேற்று குறிப்பிட்ட சமுதாயத்தின் ஊர் கூட்டம் நடந்தது. அப்போது கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மோதலாக வெடித்தது.

    இருதரப்பை சேர்ந்தவர்க ளும் ஒருவரை யொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் அந்த ஊரைச்சேர்ந்த காமராஜ் மனைவி ஜெயக்கொடி, அவரது மகன் சிவா மற்றும் ராஜா(வயது41), மற்றொரு தரப்பைச் சேர்ந்த ராஜ சுலோக்சனா உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் காரியாபட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் ரகுபதி, ராஜ்குமார், செல்வராஜ், ராமச்சந்திரன், பாலமுருகன், எம்.ஜி.ஆர். என்ற சீனி வாசன் உள்பட 28 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இரு தரப்பினர் மோதலால் பிசிண்டி கிரா மத்தில் பதட்டமான சூழல் நிலவுவதால் போலீசார் அந்தப்பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்ட னர்.

    • சாலையோரம் நின்ற லாரி மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது.
    • காயம் அடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    வாடிப்பட்டி

    கோவையில் இருந்து திராட்சை பழங்களை ஏற்றிக்கொண்டு லாரி மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு வந்தது. அங்கு பழங்களை இறக்கி விட்டு மீண்டும் கோவை செல்வதற்காக மதுரையில் இருந்து புறப்பட்டது.

    மதுரை- திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் இன்று காலை சமயநல்லூர் அருகே உள்ள கட்டப்புளிநகர் கருப்பு கோவில் முன்பு லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் குளிக்க சென்றார்.

    அப்போது சமயநல்லூரில் இருந்து பிஸ்கட் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மீனா, மலர்விழி வள்ளியம்மாள் மற்றும் ஒருவரை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ நகரிக்கு சென்று கொண்டிருந்தது. இதை டிரைவர் முருகன் ஓட்டினார்.

    அந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது.

    இதில் ஆட்டோவின் மேற்கூரை சேதமடைந்தது. இதில் பயணம் செய்த 5 பேரும் ஈடுபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த சமயநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படு காயம் அடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    • வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது.
    • விபத்தில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது பக்கத்து வீட்டில் துக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக சுரேஷ் வீட்டில் வைத்து சமையல் செய்தனர்.

    இந்நிலையில் இன்று காலை திடீரென வீட்டில் இருந்த சிலிண்டர் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து செங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது. நிலைய அதிகாரி சிவசங்கரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதில் ராஜா (35), கவுசியா (13), மாரித்துரைச்சி (29) ஆகிய 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் களை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    • வாகன விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்
    • கரூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில்

    கரூர்

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பாம்பாட்டிப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). தரகம்பட்டியில் உள்ள சீட்டு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று காலையில் இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். பாலவிடுதி தரகம்பட்டி நெடுஞ்சாலையில் குரும்பபட்டி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, தரகம்பட்டியில் இருந்து எதிரே வந்த ஈச்சர் வேன் இவர் மீது மோதியது. இதில் சதீஷ்குமார் பலத்த காயமடைந்தார். இது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகார்படி, ஈச்சர் வேன் டிரைவர் கடவூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குளித்தலை

    குளித்தலை அடுத்த, சேப்ளாப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மாய கிருஷ்ணன் (வயது 48). இவர் இருச்கர வாகனத்தில், அதே ஊரை சேர்ந்த தனது நண்பர் வரதராஜன் (53), என்பவரை பின்னால் அமர வைத்து சென்று கொண்டிருந்தார். பெரிய பனையூர் நங்கவரம் நெடுஞ்சா லையில், கன்னிமார் கோவில் அருகே சென்ற போது , எதிரே அதி வேகமாக வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து மாயகிருஷ்ணன் கொடுத்த புகார்படி, திருச்சி இனாம்பு லியூர் போதாவூரை சேர்ந்த கார் டிரைவர் ராஜலிங்கம் மீது குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
    • விபத்தில் பட்டாசு குடோன் வெடித்து சிதறிய இடத்தை போலீசார் பார்வையிட்டனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள நாகதாசம்பட்டி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் ராக்கெட், வானவெடி உள்பட பல பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பட்டாசுகளை தயார் செய்து விற்பனைக்காக குடோனில் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று காலை அந்த ஆலையில் அதே பகுதியை சேர்ந்த பூபதி மனைவி பழனியம்மாள் (வயது50), காவேரி மனைவி முனியம்மாள் (65), சிவாலிங்கம் ஆகிய 3 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென பட்டாசு குடோனில் இருந்து புகை வந்தது. பின்னர் பயங்கர சத்தத்துடன் குடோன் வெடித்து சிதறியது. இதனால் அருகில் உள்ள வீடுகள் குலுங்கின.

    இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது பட்டாசு தயாரிக்கும் ஆலை குடோன் வெடித்து சிதறியது தெரியவந்தது. இதில் பணியாற்றி பெண்கள் முனியம்மாள், பழனியம்மாள் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் சிவாலிங்கம் என்ற பெண் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பட்டாசு குடோன் வெடித்து சிதறிய இடத்தை பார்வையிட்டனர்.

    பின்னர் விபத்தில் இறந்த 2 பெண்கள் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பணியில் இருந்த கேட் கீப்பர் பிரசாத் காயம் அடைந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 35).

    வளரும் தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்த இவரை சிலர் வெட்டி படுகொலை செய்தனர்.

    இது தொடர்பாக கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் ராஜ்குமார் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதையடுத்து ராஜ்குமார் உடல் திருவாரூரில் இருந்து பூவனூருக்கு அமரர் ஊர்தியில் எடுத்து வந்தனர்.

    அப்போது ஊர்வலத்தில் வந்தவர்களில் சிலர் சாலையோர கடைகள் மீது தாக்குதல் நடத்தினர்.

    இதனால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

    இந்த நிலையில் ஊர்வலத்தின் போது நீடாமங்கலத்துக்கும், மன்னார்குடிக்கும் இடையே உள்ள ரெயில்வே கேட் மீதும் சரமாரி கற்கள் வீசப்பட்டன.

    இதில் அங்கு பணியில் இருந்த கேட் கீப்பர் பீகாரை சேர்ந்த பவன்குமார் பிரசாத் காயம் அடைந்தார்.

    உடனடியாக அவர் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    இது குறித்து அவர், தஞ்சை ரெயில்வே இருப்புபாதை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சாந்தி, சிவவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    கல்வீசிய சம்பவம் தொடர்பாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வடகரைவயல் குளத்து மேட்டு தெருவை சேர்ந்த இளவரசன் (34), நீடாமங்கலம் அருகே உள்ள கானூர் மெயின் சாலையில் உள்ள ராஜப்பன்சாவடியை சேர்ந்த பழனி (38) ஆகிய 2 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • லால்குடி அருகே சம்பவம்-விளையாட்டு மைதான சீரமைப்பின் போது மின்சாரம் தாக்கி 8 கல்லூரி மாணவர்கள் காயம் அடைந்தனர்
    • இந்த சம்பவம் தொடர்பாக சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூரில் அரசு வேளாண்மைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் விளையாட்டு விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதைத்தொடர்ந்து விளையாட்டு மைதானத்தை புதுப்பித்து சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் அந்த கல்லூரி மாணவர்கள் இன்று வாலிபால் விளையாட்டிற்கான உபகரணங்களை நிறுவும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக வாலிபால் கம்பத்தின் மேலே செல்லும் செல்லும் உயர் மின்னழுத்த வயரில் உரசியது.

    இதில் மாணவர்கள் மதன்குமார், முகமது யூசுப், செந்தமிழ், லோகேஷ், பரசுராமன், மகேந்திரன், திவாகர், புகழேந்தி ஆகிய 8 பேரு மீதும் மின்சாரம் பாய்ந்தது.உடனே கல்லூரி நிர்வாகத்தினர் அவர்களை மீட்டுலால்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எட்டு பேரும் நலமுடன் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் பள்ளி வாகனங்கள் மோதிக்கொண்டதில் 2 மாணவர்கள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
    • இது பற்றி பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் 2 தனியார் பள்ளி வாகனங்கள் நேற்று முன்தினம் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஒரு பள்ளியை சேர்ந்த 2 மாணவர்கள், டிரைவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் பெரம்பலூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது பற்றி பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குளித்தலையில் வாகன விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்
    • இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    குளித்தலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 56). இவர் தனது பேரக்குழந்தைகளான பிரதிக்ஷா, பிரஜித் ஆகியோருடன் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    திருச்சி- கரூர் சாலையில் குளித்தலை பெரியார் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் மொபட்டில் வந்த குளித்தலை அண்ணா நகரை சேர்ந்த அக்ஷரா (31) என்பவர் சண்முகசுந்தரம் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளார். இதில் சண்முகசுந்தரம், பேரக்குழந்தைகளான பிரதிக்ஷா, பிரஜித் மற்றும் அக்ஷரா ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர்.

    இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 4 பேரையும் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் அக்ஷரா மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×