search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயம்"

    • மேட்டூர், கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் அதிக அள வில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகிறது.
    • இவை பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சத்யா நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் அஞ்சலி, பிரவீன், தமிழ்ச்செல்வன், பிரவீனா ஆகிய 4 பேரையும், நேற்று மாலை அந்த பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் கடித்தது. இதனை தொடர்ந்து, அவர்கள் சத்யா நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர்.

    மேட்டூர், கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் அதிக அள வில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகிறது. இவை பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் காயம் அடைந்தார்.
    • 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மகன் நரேஷ் (வயது 17). இவர் காரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை இடைவேளை நேரத்தில் நரேஷ் தனது நண்பர்களுடன் கழிவறையின் மறைப்பு சுவர் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது மறைப்பு சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததில் நரேசுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நரேஷ் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிராக்டரிலிருந்து விழுந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட காத்தான் விடுதியை சேர்ந்தவர் குமார். இவர் தனது டிராக்டர் மூலம் மாங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வல்லக்குளம் பகுதியில் உழவு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வீரையா மகன் தயாநிதி (வயது14) என்ற சிறுவன் டிராக்டரில் ஏறி அமர்ந்துள்ளார். அப்போது, டிராக்டரில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில், டிராக்டரின் கலப்பையில் சிக்கி தயாநிதியின் வலது கால் முறிந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தயாநிதியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மழை காலங்களில் பாலத்தின் மேல் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • ஆற்றில் தண்ணீர் ஓடி கொண்டிருந்ததால் டிரைவருக்கு சிறிய காயம்.

    பேராவூரணி:

    பேராவூரணியில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் சாலையில் பூக்கொல்லை அருகே பூனைக்குத்தி காட்டாறு செல்கிறது. பழமையான இந்த பாலத்தில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது.

    இது குறுகிய பாலமாக இருப்பதால் பருவ மழை காலங்களில் பாலத்தின் மேல் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்படுவதும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று வீரியங்கோட்டையில் இருந்து பொருட்களை ஏற்றி வந்த லோடுஆட்டோ பாலத்தில் வரும்போது எதிரில் வந்த வாகனத்திற்கு வழி விடும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் கவிழ்ந்தது.

    ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததால் டிரைவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்.

    எனவே மேலும் விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க உடனடியாக தடுப்பு கம்பி வேலி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மல்லிப்பட்டினத்தில் இருந்து மணமேல்குடி சென்ற காரும், வேனும் மோதிக்கொண்டன.
    • காயமடைந்தவர்கள் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    பேராவூரணி:

    புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து 6 மாணவ, மாணவிகளுடன் பள்ளி தாளாளர் செய்யது முகமது (வயது 35), ஆசிரியைகள் கார்த்திகா, சத்யா ஆகியோர் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மனோராவை சுற்றிப்பார்க்க வந்தனர்.

    கடந்த 29-ந் தேதி ஒரு வேனில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக அவர்கள் வந்தனர். வேனை பள்ளி தாளாளர் செய்யது முகமது ஓட்டினார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் மல்லிப்பட்டினத்தில் இருந்து மணமேல்குடி சென்ற காரும், வேனும் மோதிக்கொண்டன.

    இதில் செய்யது முகமது, ஆசிரியைகள் கார்த்திகா, சத்யா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு செய்யது முகமது உயிரிழந்தார். ஆசிரியைகள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கார்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இவர் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள விளங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகள்.இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆசிரியரின் இறப்பு கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    சத்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • பலத்த காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் அருகே பாகோடு மதில்தாணிவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார். இவர் மீது மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் சுனில்குமார் வழக்கு ஒன்றில் குழித்துறை நீதிமன்றம் மூலம் விடுதலை பெற்றுள்ளார். இதை கொண்டாடும் விதத்தில் நண்பர்களுக்கு மது விருந்து அளித்துள்ளார்.

    அப்போது இவருக்கும், பாகோடு மதில் குளத்து விளையைச் சேர்ந்த சேம் (வயது 43) என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்கு வாதம் முற்றியதையடுத்து சுனில்குமார், சேமை கல்லால் தாக்கி உள்ளார்.

    இதில் சேம் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர்.

    இது குறித்து சேம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேரனை கடமலைகுன்று பள்ளியில் கொண்டு விடுவதற்காக சென்றபோது விபத்து
    • தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே மருவூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் பாகுலேயன் (வயது 60), முடிதிருத்தும் தொழிலாளி.இவர் நேற்று காலை பேரனை கடமலைகுன்று பள்ளியில் கொண்டு விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது தக்கலை அருகே சாமிவிளை பகுதியில் செல்லும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் காயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாகு லேயனை கேரளா மாநிலம் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பாகுலேயன் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மகன் அஜிகுமார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் மோட்டார் சைக்கிளில் விபத்தை ஏற்படுத்திய குழிச்சல் பகுதியை சேர்ந்த ஜாண்சன் (40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.
    • பல்வேறு இடங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    அவினாசி :

    திருப்பூர்மாவட்டம் அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அவினாசியை அடுத்து சேவூர் பாலிக்காடு பகுதியை சேர்ந்த பழனிசாமி- கலா தம்பதியினர் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இன்றுஅதிகாலை நேரத்தில் திடீரென அடுத்தடுத்து 2 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் பழனிசாமி மற்றும் கலா ஆகியோர் லேசான காயமடைந்தனர் .கலாவின் தாயார் மாகாளி(வயது 70) மீது சுவர் இடிந்து விழுந்ததால் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சேவூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    • அய்யப்பன் குடிபோதையில் வந்து மனைவிடம் தகராறு செய்துள்ளார்.
    • விறகு கட்டையால் ஜோசப் தலையில் ஓங்கி அடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    திருவையாறு:

    தஞ்சை மாவட்டம், திருவையாறை அடுத்த வளப்பகுடி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது 50).தொழிலாளி.

    இவரது மகள் ரீட்டாமேரியும் (27), பட்டுக்கோட்டை தாலுகா, கருப்பு கிராமத்தை சேர்ந்த சங்கரன் மகன் அய்யப்பனும் (35) காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இருவரும் கடந்த 3 ஆண்டாக வளப்பகுடியில் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு அய்யப்பன் குடிபோதையில் வந்து மனைவிடம் தகராறு செய்துள்ளார்.

    இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு ரீட்டாமேரி வந்துள்ளார்.

    உடனே அய்யப்பன் மனைவியை தேடி ஜோசப் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது.இதில் ஆத்திரம்அடைந்த அய்யப்பன், விறகு கட்டை யால் ஜோசப் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த ஜோசப் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமோகன், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன்மருது, சப்-இன்ஸ்பெக்டர் சார்லிமேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜோசப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில், அய்யப்பனை போலீசார் கைது செய்தனர்.

    • இருவருக்குமிடையே இட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
    • தகராறில் மணிமாறன் அவரது மகன் உள்ளிட்டோர் பிரகலாதனை தாக்கியுள்ளனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரகலாதன் என்பவருக்கும் இடையே இட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    நேற்று மணிமாறன் அந்த இடத்தில் இருந்த வேலியை அகற்றியுள்ளார் . இதில் மணிமாறன் மற்றும் பிரகலாதன் இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த தகராறில் மணிமாறன் அவரது மகன் உள்ளிட்டோர் சேர்ந்து பிரகலாதனை கட்டையால் தலையில் தாக்கியுள்ளனர் .

    இதில் பலத்த காயமடைந்த அவர் சீர்காழி அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்த புகாரின் பேரில் பாகசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    • நீலகிரி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்படும்
    • கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் எப்போதுமே நீலகிரி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்படும்.

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சஜி மற்றும் திவ்யா ஆகியோர் தங்களது குடும்பத்தினர் 6 பேருடன் கார் மூலம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.

    ஊட்டியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள் ஊட்டி காமராஜர் சாகர் அணையை பார்வையிட சென்றனர்.அப்போது காமராஜர் சாகர் அணை வளைவு பகுதியில் வந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது.


    இதில் காரில் இருந்த 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர். காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என அபயகுரல் எழுப்பினர்.இதை பார்த்த பின்னால் வாகனங்களில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தினர். பின்னர் காரில் காயத்துடன் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் சம்பவம் குறித்து புதுமந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள பரணம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர் நேற்று பெரியகருக்கை பிரிவு பாதை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மேலத்தெருவை சேர்ந்த ராமலிங்கம் (70) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக குமார், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    ×