search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரணம்"

    • முனியனின் சாவில் சந்தேகம் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த சிறுணை கிராமத்தை சேர்ந்தவர் முனியன்.இருங்காட்டு கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து வந்த இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருப்புட்குழியை சேர்ந்த பரிமளா என்பவருடன் பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    பரிமளா பாலுசெட்டியிலுள்ள தனியார் துணிக்கடையில் பணிபுரிந்து வந்தார். பரிமளா வேலைக்கு செல்வதில் விருப்பம் இல்லாத அவரது கணவர் முனியனுக்கும் பரிமளாவிற்கும் இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தனது சொல் பேச்சை கேட்காத மனைவியின் செயலால் முனியன் மன உளைச்சலில் அவ்வப்போது மது அருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 2-ந் தேதி பரிமளா, முனியன் வீட்டில் வைத்திருத்த 4000 ரூபாயில் 1000 ரூபாயை எடுத்து கொண்டு வேலைக்கு சென்றார். செல்லும் வழியில் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

    சிறுணையில் இருந்து பாலுசெட்டி செல்லும் சாலையில் பரிமளாவை வழிமறித்து முனியன் வாக்குவாதத்தில் ஈடுபட பரிமளா தான் வைத்திருந்த பிளேடால் முனியனின் கழுத்தை கிழித்துள்ளார்.இதனையடுத்து முனியன் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து பாலுசெட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    மேலும் தனது மனைவி வேலைக்கு செல்வதை விரும்பாத முனியன், பரிமளா பணிபுரியக்கூடிய துணிக்கடைக்கு சென்று சண்டையிட்டதால் பரிமளாவை பணியில் இருந்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பரிமளா அன்று முதல் முனியனுடன் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வந்த முனியனுக்கும் பரிமளாவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் முனியனின் பெற்றோர் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது முனியன் இறந்து விட்டதாக பரிமளா தெரிவித்திருக்கிறார்.

    இதனையடுத்து முனியனின் சாவில் சந்தேகம் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் பரிமளா தப்பி ஓடிவிட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த பாலுசெட்டி போலீசார் முனியனின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பக்கிங்காம் கால்வாய் பகுதியில் முனுசாமி மர்மமாக இறந்து கிடந்தார்.
    • கேளம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்போரூர்:

    கோவளத்தை அடுத்த குன்னுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 46). மீனவரான இவர் பக்கிங்காம் கால்வாயில் படகுமூலம் மீன், இறால், நண்டு ஆகியவற்றைப் பிடித்து வந்தார். நேற்று காலை மீன்படிக்க சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் முனுசாமி மர்மமாக இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து கேளம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    • திடீரென மயங்கி விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.

    புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1997-ம் ஆண்டு யானை ஒன்று தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது.

    லட்சுமி யானை நாள்தோறும் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. தொடர்ந்து பக்தர்களிடம் அமோக வரவேற்பை யானை லட்சுமி பெற்றுள்ளது. புத்துணர்ச்சி முகாமுக்கு செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் யானை லட்சுமி இன்று காலை வழக்கம் போல் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது.

    அப்போது திடீரென மயங்கி விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் 25 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நிகழ்ச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு துரை.கோவிந்தராஜன் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 17-ந் தேதி மரணம் அடைந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வடக்கூரை சேர்ந்தவர் துரை.கோவிந்தராஜன் (வயது 90). இவர் தமிழக அரசின் முன்னாள் கொறடா ஆவார்.

    இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 17-ந் தேதி மரணம் அடைந்தார். இந்த நிலையில் துரை.கோவிந்தராஜனின் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை காவேரி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு துரை.கோவிந்தராஜன் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் அ.ம.மு.க. துணை பொதுசெயலாளர் ரெங்கசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன், திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், பொருளாளர் மனோகரன், அமைப்பு செயலாளர் சீனிவாசன், வேங்கை கணேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோக்குமார், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, திராவிடர் கழக மண்டல தலைவர் அய்யனார், திருச்சி மாவட்ட த.மா.கா. தலைவர் குணா, தஞ்சை தெற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் புகழஞ்சலி செலுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு வந்தவர்க ளை அ.ம.மு.க. மருத்துவபிரிவு இணை செயலாளர் துரை.கோ.கருணாநிதி, வடக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் துரை.கோ.பாண்டியன், திராவிடமணி பால்ராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

    • உரிய பாதுகாப்பின்றி நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளால் பறிப்போகும் உயிர்.
    • கிடப்பில் போடப்பட்ட மழை நீர் வடிகாRain Drainல் பணியால் விபரீதம்.

    காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக அப்பகுதி சேறும் சகதியுமாக, பள்ளத்தில் மழை நீர் தேங்கியும் இருந்துள்ளது. மேலும், இந்த பணி கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், அவ்வழியாக சென்ற தனியார் நிறுவன ஊழியர் லட்சுமிபதி (42) என்பவர் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து பலியாகி உள்ளார்.

    உரிய பாதுகாப்பின்றி நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளால் உயிர் பலி அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
    • மனோஜ் சின்ஹா மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனோஜ் சின்ஹா மந்தவி செயல்பட்டு வருகிறார். மனோஜ் கன்கீர் மாவட்டம் பானுபிரதாபூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார்.

    இந்நிலையில், 58 வயதான மனோஜ் சின்ஹாவுக்கு நேற்று நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தம்தரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மாரடைப்பு ஏற்பட்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் மனோஜ் சின்ஹா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் இன்று கைது செய்தனர்.
    • திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    சென்னை பரங்கிமலையில் மின்சார ரெயிலில் இருந்து மாணவியை தள்ளிவிட்டதில், கழுத்து துண்டாகி உயிரிழந்த சம்பவம் நேற்று சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சதீஷ் என்ற இளைஞர் மாணவியை காதலித்து வந்த நிலையில், காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க ரெயில்வே போலீசார் சார்பில் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

    பின்னர், கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் இன்று கைது செய்தனர்.

    இந்நிலையில், மகள் இறந்த சோகத்தில் இருந்த மாணவியின் தந்தையும் மரணமடைந்துள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மகள் இறந்த தகவல் அறிந்த தந்தை துக்கம் தாங்காமல், உறவினர்களிடம் புலம்பிக் கொண்டே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இருவரின் உடல்களும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை மகள் மற்றும் தந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

    • தி.மு.க. கட்சி சார்பில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1லட்சம் பணமும் சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதி உதவி.
    • உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே உள்ள விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் நேற்று உயிரிழந்தனர். மேலும் 11 சிறுவர்களுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அமைச்சர் மு.பி.சாமிநாதன் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவாசன், சமூக நலத்துறை இயக்குனர் வளர்மதி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் அதிகாரிகள் மாணவர்கள் தங்கி இருந்த காப்பகத்தில் ஆய்வு செய்தனர். இப்போது மாணவர்கள் தங்கி இருந்த அறை, சமையல் கூடம் மற்றும் உணவு அருந்தும் இடம், இடங்களை ஆய்வு செய்தனர்.

    அதனை தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் தி.மு.க. கட்சி சார்பில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1லட்சம் பணமும் சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதி உதவியாக அமைச்சர்கள் வழங்கினார்கள்.

    இந்நிலையில், காப்பகத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    மேலும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • குஜராத் மாநிலத்தில் கார்பா நடனம் ஆடிக் கொண்டிருந்த 21 வயது இளைஞர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • விரேந்திர சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    அகமதாபாத், குஜராத்தில் நவராத்திரியை முன்னிட்டு பாரம்பரிய கார்பா நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், விரேந்திர சிங் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் நடனமாடி கொண்டிருந்தார்.

    அப்போது அந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அங்கு, விரேந்திர சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கடியாபட்டி பகுதியை சேர்ந்தவர் ராமன் மகன் ராஜேஷ் (வயது 23).
    • கடந்த வாரம் திருச்சிக்கு வருவதற்காக சிங்கப்பூர் விமான நிலையம் வந்த ராஜேஷ், எதிர்பாராத விதமாக விமானத்தை தவறவிட்டதால் மீண்டும் தான் தங்கியிருந்த அறைக்கே சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

    திருச்சி :

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கடியாபட்டி பகுதியை சேர்ந்தவர் ராமன் மகன் ராஜேஷ் (வயது 23). இவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு சிங்கப்பூரில் பணியாற்றுவதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்றார். அங்கு உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பணியாற்றி வந்தார்.

    அடிக்கடி தன் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஷ் பேசும் போது விரைவில் ஊருக்கு வர இருக்கிறேன். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன் என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளதுடன், கடந்த வாரம் திருச்சிக்கு வருவதற்காக சிங்கப்பூர் விமான நிலையம் வந்த ராஜேஷ், எதிர்பாராத விதமாக விமானத்தை தவறவிட்டதால் மீண்டும் தான் தங்கியிருந்த அறைக்கே சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து ராஜேஷ் வீட்டிற்கு தொலை பேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒருவர் ராஜேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    இதனை கேட்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். ராஜேஷ் சாவில் மர்மம் இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் ராஜேஷ் உடல் இன்று சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் கொண்டுவரப்பட்டுது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கடியாபட்டி எடுத்துச் செல்லப்பட்டது.




    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சேடப்பட்டி முத்தையா அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார்.
    • முத்தப்பன்பட்டியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில் உடல் நலம் பாதித்து காலமானார்.

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள முத்தப்பன்பட்டியை சேர்ந்தவர் சேடப்பட்டி முத்தையா (வயது 77). முன்னாள் சபாநாயகரான இவர் வயது முதிர்வு காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த 2 மாதமாக அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

    தீவிர எம்.ஜி.ஆர். ரசிகரான சேடப்பட்டி முத்தையா அ.தி.மு.க.வின் ஆரம்ப காலத்தில் இருந்தே கட்சி பணியாற்றி வந்தார். கடந்த 1991-ம் ஆண்டு சேடப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக சட்டசபை சபாநாயகரானார்.

    1991 முதல் 1996-ம் ஆண்டு வரை சபாநாயக ராக பொறுப்பு வகித்தார். 1998-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார்.

    தரைவழி போக்குவரத்து இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அந்த நேரத்தில் வாஜ்பாயின் அரசு ஒரு ஓட்டில் கவிழ்ந்தது. அப்போது சேடப்பட்டி முத்தையாவின் நடவடிக்கையில் ஜெயலலிதாவுக்குஅதிருப்தி ஏற்பட்டது. அவரை ஜெயலலிதா கட்சியில் இருந்து ஓரம் கட்டினார்.

    இதனை தொடர்ந்து சேடப்பட்டி முத்தையா அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். தற்போது வரை தி.மு.க.வில் இருந்து வந்தார். சொந்த ஊரான முத்தப்பன்பட்டியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில் உடல் நலம் பாதித்து காலமானார்.

    சேடப்பட்டி முத்தையாவுக்கு சகுந்தலா என்ற மனைவியும் 2 மகன்கள், 2 மகள்களும் உள்ளனர். இதில் மகன் மணிமாறன் தி.மு.க. மதுரை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சேடப்பட்டி முத்தையாவின் இறுதி சடங்கு ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    • கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
    • சிகிச்சை பலனின்றி சுப்ரக் உசேன் இறந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    பாகிஸ்தானை சேர்ந்தவன் சுப்ரக் உசேன். அங்கு இயங்கி வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இவன் இந்தியாவில் நாசவேலைக்கு திட்டமிட்டு இருந்தான். இதற்காக தீவிரவாத அமைப்பினர் அவனுக்கு பண உதவியும் செய்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் நுழைய முயன்ற சுப்ரன் உசேனை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடத்தியதில் அவன் தனது கூட்டாளிகளுடன் இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த திடுக்கிடும் தகவல் வெளியானது.

    இந்தநிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த அவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவன் ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்ரக் உசேன் இறந்தான்.

    இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    ×