என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளை முயற்சி"

    • டாஸ்மாக் கடையில் தினமும் லட்சக்கணக்கில் மது பாட்டில்கள் விற்பனையாகிறது.
    • பெரிய இரும்பு கம்பியால் கடையின் இரும்பு கதவை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் பக்கிங் காம் கால்வாய் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை உள்ள பகுதியில் குடியிருப்பு பகுதிகள் ஏதும் இல்லை. இது போல் இரவு 10 மணிக்கு மேல் இந்த வழியில் பொதுமக்களின் போக்குவரத்தும் அதிகமாக இருக்காது. இங்குள்ள டாஸ்மாக் கடையில் தினமும் லட்சக்கணக்கில் மது பாட்டில்கள் விற்பனையாகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு டாஸ்மாக் விற்பனையாளர்கள் விற்பனையை முடித்துவிட்டு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சென்று உள்ளனர். அப்போது இரவு நேரத்தில் மர்ம நபர்கள் டாஸ்மார்க் கடையை உடைத்து அங்கு இருக்கும் மது பாட்டில்களை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி உள்ளனர். முன்னதாக மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைப்பதற்கு ஏதுவாக கடைக்கு முன்பாக இருந்த 2 கண்காணிப்பு கேமராக்களை உடைத்துள்ளனர். கடையின் எதிரில் இருந்த விளக்குகளையும் உடைத்தனர்.

    பின்னர் பெரிய இரும்பு கம்பியால் கடையின் இரும்பு கதவை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த இரும்பு கதவின் பூட்டு உடைபடவில்லை. இதனால் மர்ம மனிதர்கள் கொள்ளையடிக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் டாஸ்மாக் கடையின் இரும்பு கதவு உடைக்க முயற்சி செய்த சம்பவம் குறித்து மரக்காணம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    இந்த தகவலின் பெயரில் மரக்காணம் போலீசார் மற்றும் டாஸ்மார்க் விற்பனையாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கடையின் பூட்டு உடைபடாததால் உள்ளே இருந்த பல லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் தப்பியது தெரியவந்தது. இந்த கடையை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை கண்டுபிடிக்க மரக்காணம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகரின் முக்கிய பகுதியில் வங்கியின் முன்பு இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ள சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை-பந்தல்குடி சாலை வடுகர்கோட்டை பகுதியில் ஸ்டேட் வங்கி கிளை அலுவலகம் உள்ளது. இந்த வங்கியின் முன்பு ஏ.டி.எம்.மையம் இருக்கிறது.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு அந்த ஏ.டி.எம். எந்திரம் உடைந்துள்ளதாக வங்கியின் அதிகாரிக்கு செல்போனில் தகவல் வந்தது. இதையடுத்து அவர் அதுகுறித்து உடனடியாக அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோபியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம். மிஷின் உடைக்கப்பட்டு முன்பகுதி திறந்த நிலையில் இருந்துள்ளது. ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் எதுவும் திருட்டு போகவில்லை.

    இதையடுத்து ஏ.டி.எம். மையத்தின் அறையில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர் யார்? என கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர்.

    நகரின் முக்கிய பகுதியில் வங்கியின் முன்பு இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ள சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • பொதுமக்கள் அச்சம்
    • பணம், நகை இல்லாததால் ஏமாற்றுத்துடன் திரும்பிய கும்பல்

    வேலூர்:

    காட்பாடி தாராபட வீடு பாலாஜி நகர் பகுதியில் நேற்று மர்ம கும்பல் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டுள்ளனர்.அங்குள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு பணம், நகை எதுவும் இல்லாததால் கும்பல் ஏமாற்றுத்துடன் திரும்பியதாக கூறப்படுகிறது. இன்று காலை வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததைக் கண்ட உரிமையாளர்கள் காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட முயற்சி நடந்துள்ளது. விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பொதுமக்கள் வீடுகளைப் பூட்டி விட்டு வெளியே செல்லும்போது போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்

    அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பல லட்சம் மதிப்புள்ள நகை தப்பியது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 60). வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் தற்போது அவரது மனைவியுடன் வசித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு அவரது மனைவியுடன் தூத்துக்குடியில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு பீரோ மற்றும் வீட்டிலிருந்த பல்வேறு இடங்களில் நகை பணம் ஏதாவது உள்ளதா என்று தேடி பார்த்துள்ளனர். வீட்டில் லாக்கர் ஒன்று உள்ளது. அதனை உடைக்க முயற்சி செய்தும் திறக்க முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்து ஏமாற்றத்துடன் சென்றதாக கூறப்படுகிறது.

    இன்று காலையில் வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து காட்பாடியில் உள்ள ஜேக்கப் பின் உறவினர்களுக்கு தெரிவித்தனர். அவர்களது உறவினர்கள் வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது.மேலும் லாக்கரில் இருந்த நகை பணம் மற்றும் வீட்டின் மற்றொரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த நகை கொள்ளையர்கள் கண்ணுக்கு படாததால் தப்பியுள்ளது.

    இதுகுறித்து அரியூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை கும்பலை பிடிக்க அந்தப் பகுதியில் உள்ள கண்கா ணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஜேக்கப் வீட்டில் லாக்கர் உடைக்க முடியாததால் பல லட்சம் மதிப்புள்ள நகை தப்பியுள்ளது. வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென போலீசார் தெரிவித்தனர்.

    • மும்பையில் உள்ள வங்கியின் கட்டுப்பாட்டு அறையில் அலாரம் ஒலித்துள்ளது.
    • போலீசார் விரைந்து வந்ததால் ஏ.டி.எம். மையத்தில் இருந்த பல லட்சம் பணம் தப்பியது.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இருந்தபோதிலும் இந்த ஏ.டி.எம். மையத்திற்கு காவலாளி யாரும் நியமிக்கப்படவில்லை.

    இந்தநிலையில் இன்று அதிகாலை சுமார் 2.45 மணியளவில் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு மர்ம நபர் ஒருவர் வந்தார். முகமூடி, குல்லா மற்றும் கையுறை அணிந்திருந்த அவர் கையில் கட்டிங் எந்திரம், வயர், உளி உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்தார். கடுமையான பனிப்பொழிவு, அதிகாலை நேரம் என்பதால் சாலையில் ஆட்கள் நடமாட்டம் துளியும் இல்லை.

    முன்னதாக உள்ளேயிருந்த கண்காணிப்பு கேமரா மீது கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி தான் பதிவாவதில் இருந்து தப்பித்தார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த மர்ம நபர், ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று சாவகாசமாக தான் கொண்டு வந்திருந்த வயரை அந்த எந்திரத்திற்கு பின்னால் இணைத்து கட்டிங் எந்திரம் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தின் போல்ட்டுகளை கழற்றியுள்ளார். மேலும் பணம் வைக்கப்பட்டிருக்கும் கவச பெட்டியையும் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இதற்கிடையே மும்பையில் உள்ள இந்த வங்கியின் கட்டுப்பாட்டு அறையில் அலாரம் ஒலித்துள்ளது. உடனே உஷாரான அந்த அறையில் பணியில் இருந்த ஊழியர்கள் கேமராவை கண்காணித்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்தினை உடைத்து கொண்டிருந்ததை பார்த்துவிட்டனர். உடனடியாக அவர்கள் திருச்சி நெம்பர் 1 டோல்கேட் தனியார் வங்கி கிளை மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் வங்கி மேலாளர் ஸ்ரீரங்கம் போலீசாரை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அடுத்த விநாடி மின்னல் வேகத்தில் செயல்பட்ட ஸ்ரீரங்கம் போலீசார், ரோந்து போலீசார் ஆகியோர் கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தை நோக்கி சென்றனர். அதற்குள் சுதாரித்துக்கொண்ட கொள்ளையன் அங்கிருந்த நைசாக தப்பிவிட்டார். போலீசார் வந்து பார்த்தபோது அங்கு வயர், கட்டிங் எந்திரம் மட்டும் கிடந்தது.

    போலீசார் விரைந்து வந்ததால் ஏ.டி.எம். மையத்தில் இருந்த பல லட்சம் பணம் தப்பியது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல்கட்ட விசாரணையை தொடங்கினர்.

    இதில் ஏ.டி.எம். மையத்திற்குள் அந்த மர்ம நபர் நுழைவது, உள்ளே இருந்த கேமராவை கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பது, கொள்ளையனின் கண்கள் ஆகியவையும், அவசரம் அவசரமாக அந்த நபர் வெளியேறும் காட்சியும் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலும் சம்பவம் நடந்த ஏ.டி.எம். மையத்தை ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் பார்வையிட்டனர். இன்று அதிகாலை ஏ.டி.எம். மையத்தில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மணி பர்சில் பணம், கவரிங் செயினை எடுக்க முயற்சி செய்துள்ளார்.
    • பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகை,பணம் திருடியதுதெரிய வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சின்னப்பே ட்டைதோப்புதெருவை சேர்ந்தவர் கண்ணன். அவரது மனைவி மின்னல்கண்ணி (வயது 60). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த வாலிபர் இவரிடம் குடிக்க தண்ணீர்கேட்டுள்ளார். தண்ணீர் எடுக்கஉள்ள சென்றபோதுவீட்டின் உள்ளே இருந்த மணி பர்சில் பணம், கவரிங் செயினை எடுக்க முயற்சி செய்துள்ளார்.

    மூதாட்டி சத்தம் போட்டு அருகில் இருந்தவர்கள் மேற்படி நபரை பிடித்துபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் இவரிடம் தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையி ல்விழுப்பு ரம் அருகே விக்கிரவண்டி பழையகருவாச்சி, இந்திரா நகரைசேர்ந்த அமரன் (26)என்பது தெரியவந்தது. இவன்பல இடங்களில் தனியாக இருக்கும் பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகை,பணம் திருடியதுதெரிய வந்தது. இதனைதொடர்ந்து இவனை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கடைக்குள் தங்க நகைகள் வைக்கப்பட்டிருக்கும் லாக்கரை திறக்க முயற்சி செய்துள்ளனர்.
    • நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் திடீரென அடிக்க தொடங்கியது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை, குன்னத்தூர் சாலை பிரிவில் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான தங்க நகை கடை செயல்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த நகைக்கடையில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. பின்னர் வியாபாரம் முடிந்ததும் இரவு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். கடையின் முன் பகுதியில் இரவு நேர காவலாளி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    இந்த நகைக்கடையையொட்டி பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கும், நகை கடைக்கும் இடையே சுமார் 10 அடி இடைவெளியில் மரச்செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.

    இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் மர்மநபர்கள் அரசு ஆண்கள் பள்ளிக்குள் சென்று நகை கடையின் பின்பகுதிக்கு வந்துள்ளனர். சுமார் 3 அடி அகலத்துக்கு சுவற்றைத் துளையிட்டுள்ளனர். பின்னர் மர்மநபர்கள் நகைக்கடைக்குள் சென்று உள்ளனர்.

    கடைக்குள் தங்க நகைகள் வைக்கப்பட்டிருக்கும் லாக்கரை திறக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் திடீரென அடிக்க தொடங்கியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மர்மநபர்கள் தங்களது கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    திடீரென அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த கடையின் இரவு நேர காவலாளி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அப்போது கடையின் பின்பகுதி சுவற்றில் துளையிட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இது குறித்து கடையின் உரிமையாளருக்கும் பெருந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடையின் உரிமையாளர் பரமசிவம் கடைக்குள் சென்று பார்த்த போது கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. நல்ல வேளையாக அலாரம் ஒலித்ததால் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் தப்பியது.

    சம்பவ இடத்திற்கு பெருந்துறை ஏ.எஸ்.பி. கவுதம் கோயல், டி.எஸ்.பி. ஆனந்தகுமார், பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடை மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் கடையை பற்றி நன்கு தெரிந்தவர்கள் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வங்கி ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • கொள்ளையர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குனியமுத்தூர்

    கோவை போத்தனூர் பொள்ளாச்சி ரோடு சிட்கோ பகுதியில் அரசு வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இங்கு ராஜ்குமார்(36) என்பவர் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் தினமும் காலை 9 மணிக்கு வங்கியை திறந்து அலுவல் பணிகளை கவனித்து விட்டு இரவு 10 மணிக்கு வங்கியை பூட்டி விட்டு செல்வது வழக்கம். இதேபோல் அவர் சம்பவத்தன்று இரவு வங்கியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

    நேற்று காலை அந்த பகுதி மக்கள் அவ்வழியாக நடந்து சென்றனர். அப்போது வங்கி ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இதுகுறித்து வங்கி மேலாளர் ராஜ்குமார் மற்றும் போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் வங்கி மேலாளர் வந்தனர்.மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வங்கியில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

    தொடர்ந்து மேற்கொண்ட விசார ணையில், நள்ளிரவு நேரத்தில் வங்கியின் அருகே சில மர்மநபர்கள் சுற்றி திரிந்துள்ளனர்.ஆட்கள் நடமாட்டம் இருக்கிறதா? என பார்த்து விட்டு, வங்கியின் அருகே சென்றனர்.

    பின்னர் மர்மநபர்கள் வங்கியின் ஜன்னல் கம்பியை ஆக்ஷா பிளேடால் அறுத்து உள்ளே செல்வதற்கு முயன்றுள்ளனர். அந்த சமயம் அந்த வழியாக திடீரென வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் தாங்கள் மாட்டி கொள்வோம் என நினைத்து கொள்ளை முயற்சியை பாதியில் விட்டு சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியில் உள்ள சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து, கொள்ளையர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • பொருட்கள் இல்லாததால் ஜெர்கினை எடுத்துச் சென்ற கும்பல்

    செங்கம்:

    செங்கம் புதிய பஸ் நிலையம் பின்புறம் செந்தமிழ் நகர் போஸ்ட் ஆபீஸ் தெரு உள்ளது. இந்தப் பகுதியில் அருணகிரி என்பவர் வசித்து வருகிறார்.

    இவர் திருவண்ணாமலையில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலைக்கு பணிக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் அருணகிரி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து உள்ளனர். அதில் நகை பணம் பொருட்கள் இல்லை. ஆனால் ஜெர்கின் மட்டும் இருந்தது.

    அதனை விட்டு வைக்காமல் கிடைத்த வரைக்கும் லாபம் என்று மர்மக்கொம்பன் அணிந்து வந்த பழைய ஜெர்கினை விட்டு விட்டு புதிய ஜெர்கினை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

    • அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளனர்
    • இதுகுறித்த புகாரின்பேரில் மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள சந்தைப் பேட்டையில் கடைகள், வணிக நிறுவனங்கள் அதிக ளவில் உள்ளன. நேற்று நள்ளிரவு அந்த பகுதியில் உள்ள பிரபல எலக்ட ரானிக்கல் கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியவில்லை.

    இதையடுத்து கொள்ளை யர்கள் அருகில் உள்ள ஜவுளிகடை, டீக்கடை, செல் போன்கடை, கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள் அடுத்தடுத்து பூட்டு களை உடைத்து உள்ளே புகுந்தனர். மேற்கண்ட 4 கடைகளில் பணம் எதுவும் சிக்காததால் கொள்ளையர்களின் கடைகளில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றனர்.

    இன்று காலை கடைதிறக்க வந்த உரிமையாளர்கள் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலூர் பகுதியில் கடை, வீடுகளின் பூட்டுகளை உடைத்து கொள்ளை யடிப்பது தொடர்கதையாகி விட்டது. எனவே காவல் துறையினர் இரவு நேரங்களில் முக்கிய வீதிகள் மற்றும் நகர் பகுதியில் முழுவதும் தீவிரரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மர்ம கும்பல் பற்றி போலீசார் தீவிர விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் இரணி யல் அருகே உள்ளது திங்கள் நகர். இங்குள்ள இரணியல் சாலையில் ஒரு வணிக வளாகத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.

    அதன் அருகே பல்வேறு கடைகளும் உள்ளன. இதனால் அங்கு எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிக மாக இருக்கும். இன்று காலை அந்த வழியாக வந்த வர்கள், ஏ.டி.எம். அறை கதவு சரியாக மூடப்படாமல் இருப்பதை பார்த்தனர்.

    சந்தேகத்தின் பேரில் ஏ.டி.எம். மையம் அருகே அவர்கள் சென்ற போது அந்த எந்திரம் சேதப்படுத் தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து வங்கி யின் மேலாளர் ஹசீந்தருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அவர் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டார். அப்போது ஏ.டி.எம். எந்தி ரத்தின் முன்பக்க கதவை யாரோ மர்ம மனிதர்கள், கம்பியால் நெம்பியிருப்பது தெரிய வந்தது.

    எனவே நள்ளிரவுக்கு மேல் யாரோ சிலர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர், இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    அவர்கள், கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வரும் பகுதியின் கீழ் உள்ள இடம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த போலீ சார், அதுகுறித்து ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடம் வந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வங்கி ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்திருப்பது அந்தப் பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சி.சி.டி.வி. காமிராவில் சிக்கிய கொள்ளையன் உருவம்
    • 3 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே திங்கள் நகர் ரவுண்டானா பகுதியில் தேசிய மயமாக்கப் பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். உள்ளது.

    இந்த ஏ.டி.எம். மையத் தின் கதவு சரிவர மூடப்ப டாமல் திறந்திருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் ஏ.டி.எம். மையத்தை திறந்து பார்த்தபோது ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் ஹபிஹசிந்த ருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வை யிட்டார் .

    அப்போது கொள்ளை யர்கள் ஏடிஎம் எந்திரத்தை உடைத்திருப்பது தெரிய வந்தது. ஏ.டி.எம். மையத்தை உடைக்க முடியாததால் அதிலிருந்த ரூ. 15 லட்சம் பணம் தப்பியது. ஏடிஎம் உடைக்கப்பட்டது குறித்து வங்கி மேலாளர் இரணியல் போலீசுக்கு தகவல் தெரி வித்தார்.

    டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கே பதிவாகி யிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் திங்கள் நகர் ராதாகிருஷ்ணன் கோவில் அருகே செல்போன் கடையிலும் மர்ம நபர்கள் செல்போன் கடையின் கண்ணாடியை உடைத்து அங்கிருந்த 20 டம்மி செல்போன்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

    இதேபோல் அங்குள்ள ஜுவல்லரி கடையின் ஷட்ட ரையும் உடைத்து கொள்ளை யடிக்க முயன்றுள்ளனர். அடுத்தடுத்து 3 இடங்களில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவங்கள் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக் கப்பட்டது. தனிப்படை போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    செல்போன் கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.அப்போது சிசிடிவி கேமராவில் கொள்ளையர் உருவம் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்தக் காட்சிகளை வைத்து கொள்ளையனை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த 3 கொள்ளை யிலும் ஈடுபட்டது ஒரே கொள்ளையர்களாக இருக்க லாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    ×