search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நம்பிக்கை"

    உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு அடுத்த முறை இன்னும் கடுமையாக முயற்சி எடுத்து நிச்சயம் ஒரு நாள் உலக சாம்பியன் ஆவேன் என பி.வி.சிந்து கூறியுள்ளார். #PVSindhu
    ஐதராபாத்:

    சீனாவின் நான்ஜிங் நகரில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினிடம் (ஸ்பெயின்) தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். உலக பேட்மிண்டனில் அவர் வெள்ளிப்பதக்கம் வெல்வது இது 2-வது முறையாகும். தாயகம் திரும்பிய 23 வயதான பி.வி.சிந்து நேற்று ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நானும், கரோலினா மரினும் நல்ல தோழிகள். ஆனால் களம் இறங்கி விட்டால் வேறு விதமாக மாறி விடுவோம். அதன் பிறகு ஆட்டத்தின் மீது தான் கவனம் இருக்கும். இறுதி சுற்று முடிந்ததும் அவர் என்னை கட்டித்தழுவியது மகிழ்ச்சி அளித்தது. உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு அடுத்த முறை இன்னும் கடுமையாக முயற்சிப்பேன். நிச்சயம் ஒரு நாள் உலக சாம்பியன் ஆவேன்.

    வருகிற 18-ந்தேதி ஆசிய விளையாட்டு போட்டி தொடங்க உள்ளது. இந்த முறை பேட்மிண்டனில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும். உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் கிடைத்த நம்பிக்கையை ஆசிய போட்டிக்கு எடுத்து செல்ல முடியும். ஆசிய விளையாட்டுக்கு இன்னும் குறைந்த காலமே உள்ளதால், உடனடியாக நான் பயிற்சியை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு சிந்து கூறினார். 
    காரைக்குடி-பட்டுக்கோட்டை ரெயில் மதுரை வரை நீட்டிக்கப்படும் என்றும், இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் கொடுப்பேன் என்றும் செந்தில்நாதன் எம்.பி. கூறினார்.
    காரைக்குடி:

    காரைக்குடியை அடுத்த குன்றக்குடியில், குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் விழா செய்தி-மக்கள் தொடர்பு துறையின் சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு செந்தில்நாதன் எம்.பி., கலெக்டர் லதா, கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ., குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மணி மண்டபத்தில் குன்றக்குடி அடிகளார், முக்கிய பிரமுகர்களுடன் அரசு விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. அதனை எம்.பி., கலெக்டர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    இந்த விழாவில் செய்தி-மக்கள் தொடர்பு துறை அலுவலர் பாண்டி, திருப்பத்தூர் தாசில்தார் தங்கமணி, முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் அசோகன், குன்றக்குடி ஆதீன மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழா முடிந்தபின்பு நிருபர்களுக்கு பேட்டியளித்த செந்தில்நாதன் எம்.பி. கூறும்போது, காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான ரெயில் வழித்தடத்தில் ஆளில்லாத ரெயில்வே கேட்டுகளில் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையிலான ரெயில் பயண நேரத்தை மேலும் குறைக்க முயற்சி எடுக்கப்படும். இத்துடன் அந்த ரெயிலை மதுரை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகத்திடம் முறையிடப்படும். மேலும் வாரம் இருமுறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்படும். இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்துவேன் என்றார். 
    உலகம் இனி மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும் என்று அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வடகொரிய தலைவர் கிம் நம்பிக்கை தெரிவித்தார். #TrumpKimSummit #USPresidentDonaldTrump #TrumpKimSignedDocument
    சிங்கப்பூர்:

    அமெரிக்கா, வடகொரியா இடையிலான பகைமை உணர்வு மறைந்து நட்புறவுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளன. முதற்கட்டமாக சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். உலகமே உற்றுநோக்கிய இந்த சந்திப்பின்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.



    இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், டிரம்ப், கிம் ஜாங் அன் இருவரும் கையெழுத்திட்டனர். அதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது, கிம் ஜாங் அன் பேசுகையில், இது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என்றும் இந்த சந்திப்பு சிறப்பாக நடப்பதை உறுதி செய்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

    ‘கடந்த காலங்களில் நடந்தவற்றை மறக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதற்காக முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இனி உலகம் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும்’ என்றும் கிம் கூறினார்.

    டிரம்ப் பேசும்போது, வடகொரிய தலைவர் கிம்மை அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வரும்படி அழைப்பேன் என்றார். பேச்சுவார்த்தை தொடர்பான விரிவான விவரங்களை மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.  #TrumpKimSummit #USPresidentDonaldTrump #TrumpKimSignedDocument

    அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இடையிலான பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. #trumpkimsummit
    பீஜிங்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார்.

    இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த வியாழக்கிழமை டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

    பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று திடீரென மனமாற்றம் அடைந்தார். கிம் ஜாங் அன்னை திட்டமிட்டவாறு சந்தித்துப் பேச அவர் தற்போது முடிவு செய்துள்ளார்.

    இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “கிம் ஜாங் அன்னை சந்திப்பது தொடர்பாக தொடர்ந்து ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. எனவே ஜூன் 12-ம் தேதி திட்டமிட்டபடி எங்களது சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இந்த தேதிக்கு பின்னரும் கூட சந்திப்பை தள்ளி வைத்துக் கொள்ளலாம்” என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில், டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ம் தேதி திட்டமிட்டவாறு நடைபெறும் என நம்புவதாகவும், இதற்காக ஆவலாக காத்திருப்பதாகவும் சீன அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #trumpkimsummit
    காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு வெற்றி கிடைக்கும் என்று ஊட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #CauveryIssue #TNCM #Edappadipalanisamy
    ஊட்டி:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊட்டியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஊட்டியில் இன்று மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. முடிவுற்ற பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது.

    காவிரி பிரச்சனையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சி முதல் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆட்சி வரை பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி இன்று இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

    இதில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தமிழகத்திற்கு வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #CauveryIssue #TNCM #Edappadipalanisamy
    காவிரி விவகாரத்தில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழகத்துக்கு உறுதியாக நல்ல தீர்வு வரும் என துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். #Cauvery #Paneerselvam
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரிநீரை பெறுவதற்கு மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து ஜெயலலிதா காலம் வரையில், அந்த இருபெரும் தலைவர்கள் எடுத்த நடவடிக்கையால் தான் இப்பிரச்சினை உயிரோட்டமாக இருக்கிறது.

    இன்றைக்கு மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறது. அதில் இருக்கிற சாதக, பாதகங்களை கலந்துபேசி தருகின்ற நேரத்தில், ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழகத்துக்கு உறுதியாக நல்ல தீர்வு வரும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். தமிழக சட்டமன்ற மானியக்கோரிக்கை கூட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் உரிய நிதி அளிக்கப்படும். இதில் பல்வேறு இனங்களில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்புவார்கள். தமிழக அரசின் சார்பில் உரிய பதிலை நாங்கள் அளிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது காவிரி விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் உங்களை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருப்பதாக சொல்லி இருக்கிறாரே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர் என்னை சந்தித்தால், அந்த சந்திப்புக்கு பின்னர் என்னுடைய முடிவை நான் தெரிவிப்பேன்’ என்று ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.  #Cauvery #Paneerselvam

    “காவிரி விவகாரத்தில் நாளை தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு வரும்” என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #Cauvery #EdappadiPalanisamy
    சேலம்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் இருந்து திருப்பதிக்கு தனது குடும்பத்தினருடன் சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    “காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்து இருக்கிறது. அதில் மத்திய அரசு சில யோசனைகள் அடிப்படையில் கருத்து தெரிவித்து உள்ளது. இந்த அறிக்கையின்படி நாளை (புதன் கிழமை) தமிழகத்துக்கு ஒரு நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நீர்வளத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டத்தின் மூலமாக சுப்ரீம் கோர்ட்டை அணுகியதால் இறுதி தீர்ப்பு வழங்கக்கூடிய நிலை வந்துள்ளது. இதனால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். தமிழக அரசை பொறுத்தவரை காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர்முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்பது தான் கோரிக்கையாக உள்ளது.”

    இவ்வாறு அவர் கூறினார்.  #Cauvery #EdappadiPalanisamy

    ×