search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிவிபத்து"

    • பட்டாசுகள் வெடித்து சிதறியதில் வாலிபர் மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.
    • வெடி விபத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த வடக்காஞ்சேரியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அங்கிருந்த வாலிபர் மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.

    அவரை போலீசார் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாவட்ட கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    பட்டாசு ஆலையில் வெடிமருந்துகள் பதுக்கப்பட்டிருந்ததா? விபத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு முதலமைச்சர் தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.
    • சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ரவியின் குடும்பத்தினருக்கும் ரூ.3 லட்சம் நிதியுதவி

    சென்னை:

    திண்டுக்கல் மாவட்டம் பச்சைமலையான்கோட்டை கிராமம், பாலாஜி நகரில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் மேல்தளத்தில் வசித்து வந்த ஜெயராமன் மற்றும் அவரது மனைவி நாகராணி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும், பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல் சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ரவியின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த சாமுவேல் ஜெயராஜ் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    • உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார்.
    • காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு

    மதுரை:

    மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி அழகுசிறை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில், வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:-

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

    செய்தி அறிந்தவுடன் அமைச்சர் மூர்த்தியை மீட்பு பணிகளை துரிதப்படுத்த உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல அறிவுறுத்தி உள்ளேன்.

    மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

    • நேற்று மதியம் திருப்பதியும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் பட்டாசுகளை தயாரித்துள்ளனர்.
    • வெடிவிபத்து நடந்த பகுதியை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பூசாரித்தேவன்பட்டி கிராமம் உள்ளது. இந்த ஊரில் காளியம்மன் கோவில் அருகே கோபாலன்பட்டியை சேர்ந்த திருப்பதி (வயது 29) என்பவர் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்க பயன்படும் குழாய்கள் தயாரித்து வந்தார்.

    அந்த இடத்தில் உரிய அனுமதியின்றி விதிகளுக்கு புறம்பாக பேன்சி ரக பட்டாசுகளையும் தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று மதியம் திருப்பதியும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் பட்டாசுகளை தயாரித்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் திருப்பதி மற்றும் 17 வயது சிறுவன் என இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருப்பதி பரிதாபமாக இறந்தார்.

    வெடிவிபத்து நடந்த பகுதியை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
    • விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.

    கடலூர் எம்.புதூரில் சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது.

    இங்கு ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வாணவேடிக்கை பட்டாசுகள் வெடித்துச் சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

    விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.

    ஆந்திரப்பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கர்னூல் :

    ஆந்திரப்பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வரும் இந்த குவாரியில், திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. 

    இதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயம் அடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    கல்குவாரி வெடிவிபத்தினால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

    அதிக அளவிலான டெட்டனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தியதே வெடி விபத்திற்கு காரணம் எனவும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
    ×