search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டுவிட்டர்"

    • எந்த நாட்டிலும் அந்த நாட்டின் சட்டத்தை பின்பற்றுவது சிறந்தது
    • சட்டத்திற்கு உட்பட்டு கருத்துரிமை தகவலை கொண்டு சேர்க்க சிறப்பாக செயல்படுவோம்

    இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடந்தபோது அரசுக்கு எதிராகவும், விவசாய போராட்டத்தை ஆதரித்தும் வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜேக் டார்சி குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு மத்திய அமைச்சர் பதிலடியும் கொடித்திருந்தார்.

    அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, நியூயார்க்கில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமெரிக்க பிரமுகர்களை சந்தித்தார். டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் அதில் ஒருவர்.

    தற்போது டுவிட்டர் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். மோடியை சந்தித்த பின், டுவிட்டரின் முன்னாள் சிஇஓ-வின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு எலான் மஸ்க் கூறியதாவது:-

    எந்த நாட்டிலும் அந்த நாட்டின் சட்டத்தை பின்பற்றுவது நமக்கு சிறந்தது. அதைத்தாண்டி செய்வது இயலாத காரியம். சட்டத்திற்கு உட்பட்டு கருத்துரிமை தகவலை கொண்டு செல்ல சிறப்பாக செயல்படுவோம் என்றார்.

    மேலும், ''டெஸ்லா இந்தியா சந்தைக்கு வர வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, ''அடுத்த ஆண்டு இந்தியா செல்ல இருக்கிறேன். இந்தியாவில் டெஸ்லா விற்பனைக்கு வரும் என நம்புகிறேன். பிரதமர் மோடியின் ஆதரவுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். சில விசயங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை''

    இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்தார்.

    • டுவிட்டர் நிறுவனம் குறுகிய கால வீடியோ ஃபார்மேட்களில் கவனம் செலுத்துகிறது.
    • புதிய செயலி குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் என்று தகவல்.

    டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கும் எலான் மஸ்க், தனது நிறுவனம் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்காக பிரத்யேக வீடியோ ஆப் வெளியிடப்படும் என்று சமீபத்தில் அறிவித்து இருந்தார். டுவிட்டர் பயனர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க் இவ்வாறு தெரிவித்தார்.

    'எங்களுக்கு ஸ்மார்ட் டிவி-க்கான பிரத்யேக டுவிட்டர் வீடியோ ஆப் வேண்டும்,' என்று டுவிட்டர் பயனர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க்- 'இது வந்து கொண்டு இருக்கிறது,' என பதில் அளித்தார். அந்த வகையில் புதிய டுவிட்டர் வீடியோ ஆப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவற்றை பார்ப்போம்..

     

    - மற்ற நிறுவனங்களை போன்றே டுவிட்டர் நிறுவனமும் வீடியோக்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இந்த வீடியோ ஆப் டுவிட்டர் நிறுவனம் வீடியோ தரவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை உணர்த்துகிறது.

    - புதிய திட்டத்தின் கீழ் டுவிட்டர் நிறுவனம் குறுகிய கால வீடியோ ஃபார்மேட்களில் கவனம் செலுத்துகிறது. யூடியூப் ஷாட்ஸ், டிக்டாக் போன்ற சேவையை டுவிட்டர் நிறுவனமும் அறிமுகம் செய்யலாம்.

    - வீடியோ பிரிவில் கவனம் செலுத்துவதற்காக டுவிட்டர் நிறுவனம் அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் தான் பெரிஸ்கோப் லைவ் ஸ்டிரீமிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

    - வீடியோக்களை பார்ப்பது மற்றும் பகிர்வது தொடர்பாக பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் அம்சங்களை டுவிட்டர் வழங்கி வருகிறது.

    - புதிய செயலி டுவிட்டர் மட்டுமின்றி அதன் பயனர்களுக்கும் குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் என்று தெரிகிறது. மேலும் இது வருவாய் வாய்ப்புகளையும் அதிகப்படுத்தும்.

    • உலகின் நம்பர் ஒன் பணக்காரரான மஸ்க், டுவிட்டரை வாங்கும்போது விமர்சனம் எழுந்தது
    • நிர்வாகத்தில் ஆட்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டார்

    உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா தலைவருமான அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், சமீபத்தில் உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரை விலைக்கு வாங்கி அதன் நிர்வாகத்தில் பல அதிரடி முடிவுகளையும் எடுத்து வருகிறார்.

    பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில், கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அவர், டுவிட்டர் சமூக வலைதளம் இதற்கு முன்பு சிவில் சமூகத்தின் மீது ஒரு அரிக்கும் தன்மை உடைய தீங்கை விளைவிப்பதாக இருந்தது. அதனை தம்மால் மாற்றி, மனிதகுலத்திற்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் தளமாக அதனை செயல்பட வைக்க முடியும் என தான் நம்பியதாக கூறினார்.

    கிட்டத்தட்ட 4000 பேர் குழுமியிருந்த விவா-டெக் கருத்தரங்கத்தில் பல விஷயங்கள் குறித்து பேசிய மஸ்க், மேலும் கூறியதாவது:-

    தொடர்ந்து டுவிட்டர் உபயோகப்படுத்தும் பயனாளிகள் அந்த தளம் பயன்படுத்தும்போது கிடைக்கும் அனுபவம் மேம்பட்டிருப்பதை உணர முடியும். இதுவரை இல்லாத அளவிற்கு டுவிட்டரின் பயன்பாடு மக்களை சென்றடைந்துள்ளது.

    மேலும், விளம்பரதாரர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளில் புதிய தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்கரினோவின் திறமையின் மீது தமக்கு நம்பிக்கை உள்ளது. விலகிச் சென்ற விளம்பரதாரர்களில் பெரும்பாலானோர் பெருமளவில் திரும்ப வந்து விட்டார்கள். மேலும் சிலர் விரைவில் வருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முறையாக சரிபார்க்கப்பட்ட பிறகே பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், அது ஆபத்தாக மாறலாம். டிஜிட்டல் அதிநுண்ணறிவு தொழில்நுட்பத்தின் விளைவுகள் நேர்மறையானவைதான் என்றாலும் இதனால் மக்களுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்படும் பேராபத்தும் நிச்சயம் உள்ளது.

    தனது நியுராலிங்க் கார்பரேசன் இந்த வருடத்தில், முதல் மனித உள்வைப்பு செயல்முறையில் அந்நிறுவனம் ஈடுபடும். அதன் முன்னேற்றம் தாமதமாக இருந்தாலும் அதன் நோக்கம் மனித உடல் உறுப்புகளில் செயல்பாடு இழந்தவர்களுக்கு முழுவதுமாக அதனை மீட்பதுதான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    எலான் மஸ்கிடம் இருந்து முதல் பணக்காரரர் என்ற பெருமையை குறுகிய காலத்திற்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் பெற்றிருந்தார். அவரை சந்தித்ததுடன் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சமீபத்தில் அவரிடமிருந்து மீண்டும் அந்த பட்டத்தை மீட்டெடுத்தார் மஸ்க் எனபது குறிப்பிடத்தக்கது.

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், தனது நாட்டில் எலான் மஸ்க் ஒரு தொழிற்சாலை நிறுவ வேண்டும் என்பதற்காக அவரிடம் தொடர்ந்து பேசி வருகிறார். இப்பின்னணியில் இருவரும் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அடுத்த சில வாரங்களில் இடையூறு படிப்படியாக குறையும்.
    • இதற்கான அப்டேட் வரும் வாரங்களில் வெளியாகும் என்று எலான் மஸ்க் அறிவிப்பு.

    டுவிட்டர் வலைதளத்தில், பயனர்கள் பின்தொடராதவர்களுக்கு (non-followers) மெசேஜ் அனுப்புவதற்கான வசதி விரைவில் நிறுத்தப்படுகிறது. டுவிட்டர் தளத்தில் ஸ்பேம் மற்றும் ஏஐ பாட்களால் குறுந்தகவல் சேவையில் அதிக இடையூறு ஏற்படுவதாக பயனர் ஒருவர் குற்றம்சாட்டி இருந்தார்.

    இதோடு தனக்கு வந்த குறுந்தகவல்களின் ஸ்கிரீன்ஷாட்டையும் அவர் பகிர்ந்து இருந்தார். இதற்கு எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். அதில், அடுத்த சில வாரங்களில் குறுந்தகவல் மூலம் ஏற்படும் இடையூறு படிப்படியாக குறையும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார். இதற்கான அப்டேட் வரும் வாரங்களில் வெளியாகும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் டுவிட்டர் தளத்தில், பயனர்கள் பின்தொடராத நபர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியாது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்பின், பின்தொடராதவர்களுக்கும் குறுந்தகவல் அனுப்ப முடியும்.

    மேலும் டுவிட்டர் தளத்தில் பயனர்கள் அனுப்பும் குறுந்தகவல்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது நாள் ஒன்றைக்கு பயனர்கள் 500 குறுந்தகவல்களை மட்டுமே அனுப்ப முடியும்.

    • விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான டுவிட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்
    • நிறுவன ஊழியர்கள் வீட்டில் சோதனை நடத்தப்படும் என மிரட்டினர்

    டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜேக் டார்சி. விவசாயிகள் போராட்டம் இந்தியாவில் நடைபெற்றபோது இந்திய அரசு கொடுத்த நெருக்கடி குறித்து குறிப்பிட்டிருந்தார்.

    அதில் ''டுவிட்டர் நிறுவனத்துக்கு இந்திய அதிகாரிகளிடம் இருந்து எராளமான கோரிக்கைகள் வந்தன. விவசாயிகள் போராட்டத்தை வெளிப்படுத்தும் டுவிட்டர் கணக்குகளை முடக்க வேண்டும். அதேபோல் மத்திய அரசை விமர்சனம் செய்யும் கணக்குகளையும் முடக்க வேண்டும் என்றனர்.

    எங்களது கோரிக்கையை ஏற்கவில்லை என்றால், இந்தியாவில் டுவிட்டர் நிறுவன அலுவலகம் மூடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நாங்கள் நிறுவன ஊழியர்களின் வீட்டில் சோதனை நடத்துவோம் எனத் தெரிவித்தார்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

    இது சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், ஜேக் டார்சியின் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்தரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

    மேலும் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில் ''டுவிட்டர் நிறுவனத்தைச் சேர்ந்த எவரும் சோதனைக்கு ஆளாகவில்லை. சிறைக்கு போகவில்லை. இந்தியாவில் டுவிட்டர் அலுவலகம் மூடப்படவும் இல்லை. டுவிட்டருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு அது செயல்பட்டிருந்தால், டுவிட்டர் அரசு வழிகாட்டுதல்களை மீறியிருக்கும். டுவிட்டருக்கு இந்திய சட்டத்தின்படி இந்திய இறையாண்மையை ஏற்படதில் சில சிக்கல் இருந்தது. அதற்கு அதன் சட்டம் பொருந்தாதது போன்று செயல்பட்டது.

    இறையாண்மை கொண்ட நாடாக இந்தியாவுக்கு, தனது சட்டங்களை இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் பின்பற்றுவதை உறுதி செய்யும் உரிமை உண்டு.

    ஜேக் டார்சியின் பாகுபாடான நடத்தை, இந்திய அரசுக்கு எதிரான இணை-நிறுவனர் கருத்து போன்ற கடந்த கால வரலாற்று சந்தேகத்திற்குரிய காலக்கட்டத்தை அகற்றுவதற்கான முயற்சி'' எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெரிஃபைடு பயனர்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் வழங்கப்படும் என்று அறிவிப்பு.
    • கடந்த அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக விலைக்கு வாங்கினார் எலான் மஸ்க்.

    உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டர், விரைவில் கிரியேட்டர்களும் பணம் சம்பாதிக்க செய்யும் புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இதனை டுவிட்டரை விலைக்கு வாங்கியிருக்கும் எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்.

    டுவிட்டர் தளத்தில் கிரியேட்டர்கள் பதிவிடும் டுவிட்களில் விளம்பரங்களை வழங்கி, அதில் இருந்து கிடைக்கும் வருவாயை கிரியேட்டர்களுக்கு பங்கிட்டு கொடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக 5 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

    "கிரியேட்டர் வெரிஃபைடு பெற்றிருக்க வேண்டும். மேலும் வெரிஃபைடு பயனர்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் வழங்கப்படும்," என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், அதில் ஏராளமான மாற்றங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி டுவிட்டர் தளத்தில் பயனர்களுக்கு வெரிஃபைடு அந்தஸ்தை வழங்கும் வகையில் புளூ சந்தா அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது கட்டணம் செலுத்துவோருக்கு வெரிஃபைடு அந்தஸ்த்து, கூடுதலாக புதிய வசதிகளை விரைந்து வழங்கி வருகிறது.

    • புதிய செயலியின் இன்டர்ஃபேஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.
    • இந்த செயலி டுவிட்டர் தளத்திற்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக புதிய சமூக வலைதள செயலியை மெட்டா நிறுவனம் உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. பிராஜக்ட் 92 பெயரில் உருவாகி வரும் புதிய செயலி பற்றிய முன்னோட்டம் அந்நிறுவன ஊழியர்களுக்கு சமீபத்தில் காட்டப்பட்டது. மெட்டா நிறுவனத்தின் புதிய செயலி எப்படி காட்சியளிக்கும் என்பதை கூறும் ஸ்கிரீன்ஷாட்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

    மேலும், புதிய செயலி த்ரெட்ஸ் (threads) எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களின் படி புதிய செயலியின் இன்டர்ஃபேஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதில் புகைப்படங்கள் காணப்படவில்லை.

    மெட்டா நிறுவனத்தின் மூத்த பிராடக்ட் அலுவலர் க்ரிஸ் கோக்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, புதிய சமூக வலைதள செயலி ஆக்டிவிட்டிபப் சோஷியல் நெட்வொர்க்கிங் ப்ரோடோகாலை (ActivityPub social networking protocol) பயன்படுத்துகிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் அக்கவுன்டை புதிய பிளாட்ஃபார்மிற்கும் கொண்டு செல்ல முடியும்.

    இந்த செயலி டுவிட்டர் தளத்திற்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த செயலி இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் விவரங்களை கொண்டு தானாக ப்ரோஃபைல் உருவாக்கும் என்று கூறப்படுகிறது. புதிய தளத்தை பயன்படுத்துவதற்காக மெட்டா நிறுவனம் பல்வேறு பிரபலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    புதிய செயலியை உருவாக்குவதற்கான பணிகள் ஜனவரி மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில், இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

    Photo Courtesy: The Verge

    • எலான் மஸ்கிற்கு என்ன ஆச்சு, நீண்ட நேரமாக டுவிட் இல்லையே என்ற கேள்வி எழத்தது.
    • எலான் அக்கவுண்டில் இருந்தே பதிவுகள் வெளியாகாததற்கு காரணம் அவர் தற்போது இருக்கும் இடம் தான்.

    டுவிட்டர் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் சமீப காலமாக அடிக்கடி டுவிட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சுமார் 48 மணி நேரமாக எலான் மஸ்க் அக்கவுண்டில் இருந்து டுவிட் எதுவும் காணப்படவில்லை. எலான் மஸ்கிற்கு என்ன ஆச்சு, நீண்ட நேரமாக டுவிட் எதுவும் பதிவிடவில்லையே என்ற கேள்விகள் எழத்துவங்கியது.

    திடீரென டுவிட்டர் உரிமையாளர் அக்கவுண்டில் இருந்தே பதிவுகள் வெளியாகாததற்கு காரணம் அவர் தற்போது இருக்கும் இடம் தான். எலான் மஸ்க் சென்றிருக்கும் நாட்டில் டுவிட்டர் சேவையை பயன்படுத்த முடியாது. எலான் மஸ்க் தற்போது சீனா சென்றிருக்கிறார். அங்கு டுவிட்டர் தளத்தை பயன்படுத்த முடியாது என்பதால், அவர் டுவிட் எதுவும் செய்யவில்லை.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த ஆண்டு துவங்கியதில் இருந்து எலான் மஸ்க் ஒவ்வொரு நாளும் பலமுறை டுவிட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சமயங்களில் ஒன்றிரண்டு டுவிட்களையேனும் பதிவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூன் 2022 முதல் எலான் மஸ்க் நீண்ட நேரம் டுவிட் செய்யாமல் இருந்தது இதுவே முதல் முறை ஆகும்.

    அப்போது டுவிட்டரை வாங்குவதில் எலான் மஸ்க் குறியாக இருந்தார். இதன் காரணமாக அவர் அதிக டுவிட்களை மேற்கொள்ளவில்லை. தற்போது சீனாவில் இருப்பதால் எலான் மஸ்க் டுவிட் செய்வதை நிறுத்தி வைத்துள்ளார். சீனாவில் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் என பல்வேறு வெளிநாட்டு சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை பெருநகர காவல் துறையை தொடர்புப்படுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும்.
    • தவறான தகவல் பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னை :

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட மேலும் சிலரின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டன. இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    டுவிட்டர் கணக்கை முடக்குமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் சென்னை பெருநகர காவல் துறையை தொடர்புப்படுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும்.

    தவறான தகவல் பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.
    • டுவிட்டர் முடக்கத்தை விலக்கி சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

    சென்னை :

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட மேலும் சிலரின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டன.

    இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது டுவிட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

    கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.

    டுவிட்டர் முடக்கத்தை விலக்கி சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சீமானின் டுவிட்டர் கணக்கு இந்தியாவில் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
    • சட்ட கோரிக்கைக்கு ஏற்ப டுவிட்டர் கணக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் டுவிட்டர் கணக்கு ஒரே நேரத்தில் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது .

    மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் டுவிட்டர் கணக்குகளை இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்து டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    • புதிய வலைதளம் இன்ஸ்டாகிராமை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்படுகிறது.
    • புதிய சமூக வலைதளம் டெக்ஸ்ட்-ஐ மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது.

    சமூக வலைதள உலகில் மாற்றம் எப்போதும் மாறாத ஒன்று. முன்னணி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், P92 அல்லது பிராஜக்ட் 92 பெயரில் புதிய திட்டத்தில் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதிய சமூக வலைதள சேவை உருவாக்கப்பட இருக்கிறது.

    இந்த சமூக வலைதளம், "Instagram for your thoughts" எனும் டேக்லைன் கொண்டிருக்கிறது. இந்த வலைதளம் பிரத்யேக அம்சங்கள் மற்றும் பயனர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் தாய் நிறுவனம் மெட்டா மற்றும் தேர்வு செய்யப்பட்ட கிரியேட்டர்களிடையே நடைபெற்ற ரகசிய உரையாடல்களை தொடர்ந்து இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி புதிய வலைதளம் இன்ஸ்டாகிராமை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த தளம் மாஸ்டோடான் போன்ற சேவைகளில் இயங்கும் திறன் கொண்டிருக்கும். இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொண்டு புதிய தளத்திலும் சைன்-இன் செய்து கொள்ளலாம். இதன் மூலம் இன்ஸ்டாவில் உள்ள ஃபாலோயர்களை புதிய தளத்திலும் சின்க் செய்து கொள்ள முடியும்.

    புதிய சமூக வலைதளம் டெக்ஸ்ட்-ஐ மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது. மெட்டாவின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராமின் கிளை நிறுவனமாக புதிய வலைதளம் செயல்பட இருக்கிறது. இந்த வலைதளம் டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. மெட்டாவின் இன்ஸ்டாகிராம் தளத்தினை உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிரும் தளமாகவே இருந்து வருகிறது.

    இந்த நிலையில், டுவிட்டர் போன்று செய்திகளை பகிரும் நோக்கில், எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் புதிய வலைதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வலைதளத்தின் ஆரம்பக்கட்ட சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூன் மாத வாக்கில் இந்த வலைதளம் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

    புதிய வலைதளத்தில் பயனர்கள் அதிகபட்சம் 500 வார்த்தைகள் கொண்ட பதிவுகளை மேற்கொள்ள முடியும். இத்துடன் இணைய முகவரிகளை பகிர்வது, புகைப்படம் அல்லது ஐந்து நிமிடங்கள் வரை ஓடும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வது போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் மற்ற சமூகவலைதளங்களில் இருப்பதை போன்றே, இதிலும் லைக், ரிப்ளை மற்றும் ரிபோஸ்ட் போன்ற வசதிகளும் வழங்கப்படுகிறது. 

    ×