search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டுவிட்டர்"

    • டுவிட்டரை சொந்தமாக வைத்திருப்பது மிகவும் வேதனைக்குரியது.
    • டுவிட்டர் பெயர்ப் பலகையில் ‘டபிள்யூ' எழுத்தை மறைத்துள்ளார்.

    வாஷிங்டன் :

    உலகப்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.

    இதில் ஆட்குறைப்பு, 'புளூடிக்' வசதிக்கு கட்டணம் போன்ற முடிவுகள் சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பியபோதும் எலான் மஸ்க் அதில் இருந்து பின்வாங்கவில்லை. சமீபத்தில், டுவிட்டர் 'லோகோ'வான, நீலநிற குருவியை மாற்றி, ஜப்பானின் முக்கிய நாய் இனமான 'ஷிபு' என்ற நாயின் புகைப்படத்தை புதிய 'லோகோ'வாக வைத்தார். பின்னர் அந்த லோகோ மாற்றப்பட்டு, மீண்டும் நீலநிற குருவியே வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பிபிசிக்கு பேட்டியளித்த எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது குறித்தும், அதை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    டுவிட்டரை சொந்தமாக வைத்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. அதனை நிர்வகிப்பது ரோலர் கோஸ்டரில் பயணிப்பது போன்று உள்ளது. டுவிட்டரை வாங்கியது ஒரு சரியான முடிவு என்று கருதினாலும், கடந்த பல மாதங்களாக நான் மிகவும் அழுத்தமாக உணர்கிறேன். பணிச்சுமையால் நான் சில நேரங்களில் அலுவலகத்தில் தூங்குகிறேன். சரியான நபரைக் கண்டுபிடித்தால் அவரிடம் டுவிட்டர் நிறுவனத்தை விற்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள டுவிட்டர் பெயர்ப் பலகையில் 'டபிள்யூ' எழுத்தை மறைத்துள்ளார். இதனால், அது டிட்டர் என்று காட்சி அளிக்கிறது.

    • டுவிட்டர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ லோகோ சில நாட்களுக்கு முன் அதிரடியாக மாற்றப்பட்டது.
    • டாகி-காயினில் இருந்து தற்போது டுவிட்டர் லோகோ மீண்டும் பழைய லோகோவிற்கே மாற்றப்பட்டு விட்டது.

    டுவிட்டர் நிறுவனத்தின் நீலப் பறவை லோகோ சில நாட்களுக்கு முன் மாற்றப்பட்டது. அனைவருக்கும் நன்கு பழகிப் போன டுவிட்டர் லோகோ டாகி-காயின், அதாவது ஷிபா இனு லோகோ-வாக மாற்றப்பட்டது. தற்போது டாகி-காயினுக்கு பதில் மீண்டும் பழையபடி நீலப் பறவை லோகோ மாற்றப்பட்டுவிட்டது. அடிக்கடி டுவிட்டர் லோகோ மாற்றப்படுவதற்கான கராணம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    டாகி-காயின் முதலீட்டாளர்கள் எலான் மஸ்க்-கிற்கு எதிரான வழக்கு தொடர்ந்ததே இந்த முடிவுக்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. முட்டாள்கள் தினத்தை ஒட்டி எலான் மஸ்க் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எந்த காரணமாக இருந்த போதிலும், டுவிட்டர் தளத்தில் தற்போது மீண்டும் நீலப் பறவை லோகோ வழங்கப்பட்டு விட்டது. டுவிட்டரை ரிலோட் செய்யும் போது பழையபடி நீலப் பறவை லோகோ திரையில் தோன்றுகிறது.

     

    சில நாட்களுக்கு முன்பு தான் டுவிட்டர் நிறுவன லோகோ மாற்றுவதவாக எலான் மஸ்க் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். டுவிட்டர் லோகோவுக்கு மாற்றாக டாகி-காயின் லோகோ இடம்பெற்றது. மூன்று நாட்களுக்கு டுவிட்டர் லோகோ டாகி-காயினாக இருந்த நிலையில், தற்போது டுவிட்டர் தளத்தில் மீண்டும் நீலப் பறவை லோகோ காணப்படுகிறது. டுவிட்டர் தளத்தின் லோகோ அதன் வெப் வெர்ஷனில் மட்டுமே மாற்றப்பட்டது.

    டுவிட்டர் மொபைல் வெர்ஷனில் நீலப் பறவை லோகோ மாற்றப்படாமலேயே இருந்தது. டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து, இதனை லாபகரமாக மாற்றுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார் எலான் மஸ்க். தற்போது அதன் மதிப்பு 20 பில்லியன் டாலர்களாக குறைந்துவிட்டது.

    • டுவிட்டரில் ஊழியர்கள் பணிநீக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.
    • டுவிட்டரின் லோகோவை எலான் மஸ்க் திடீரென்று மாற்றம் செய்துள்ளார்.

    வாஷிங்டன்:

    பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் மாதம் வாங்கினார். அதன்பின் டுவிட்டரில் ஊழியர்கள் பணிநீக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதோடு டுவிட்டர் புளூ திட்டத்தின் கீழ் பல்வேறு மாற்றங்களை அறிவித்தார். அந்த வரிசையில், டுவிட்டரில் மற்றொரு அதிரடி நடவடிக்கையை எலான் மஸ்க் எடுத்துள்ளார்.

     

    இந்த நிலையில் டுவிட்டரின் லோகோவை எலான் மஸ்க் திடீரென்று மாற்றம் செய்துள்ளார். ஏற்கனவே அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருந்த நீலநிற குருவிக்கு பதில் டாகி சின்னம் தற்போது லோகோவாக மாற்றப்பட்டு இருக்கிறது. ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் டுவிட்டர் லோகோவாக வைக்கப்பட்டுள்ளது. டாகி காயின் என்று அழைக்கப்படும் கிரிப்டோ கரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    பிட்காயின் போன்ற பிற கிரிப்டோகரன்சிகளை கேலி செய்யும் வகையில் 2013-ம் ஆண்டு டாகி காயினுக்கு ஷிபா இனுவின் நாய் படம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 15-ந் தேதி எலான் மஸ்க் தனது டுவிட்டர் கணக்கில் ஷிபா இனுவின் நாய் படத்தை வெளியிட்டு டுவிட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சரியமாக இருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் பாகிஸ்தான் அரசு டுவிட்டர் கணக்கை தேடும் போது, அக்கவுண்ட் முடக்கப்பட்டதை கூறும் தகவல் தோன்றும்.
    • பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது. டுவிட்டர் கணக்கை முடக்க மத்திய அரசு டுவிட்டர் நிறுவனத்தை வலியுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. சட்டப்பூர்வ கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் கணக்குகளை முழுமையாக நிறுத்திவைக்க டுவிட்டர் நிறுவன வழிமுறைகள் அனுமதிக்கின்றன.

    அதன்படி பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு @GovtofPakistan இந்திய எல்லை பகுதிக்குள் மட்டும் முடக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா தவிர அமெரிக்கா, கனடா போன்ற இதர நாடுகளில் இருந்து பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை மற்றவர்கள் தொடர்ந்து பார்க்கவும், பின்பற்றவும் முடியும்.

     

    எனினும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் அரசு டுவிட்டர் கணக்கை தேடும் பட்சத்தில், அக்கவுண்ட் முடக்கப்பட்டதை கூறும் தகவல் திரையில் தோன்றுகிறது. கடந்த ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அரசு டுவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அரசு டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

    • அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் எவ்விதமான ரோபோட் டெஸ்டிங்கையும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு விடுகின்றன.
    • டுவிட்டர் புளூ வெளியானதை அடுத்து டுவிட்டர் நிறுவனம் தனது பழைய வெரிஃபைடு திட்டத்தை நிறுத்த இருக்கிறது.

    டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் வெரிஃபைடு அக்கவுண்ட்கள் மட்டுமே For You பிரிவில் பரிந்துரை செய்யப்படும் என அறிவித்து இருக்கிறார். இதன் மூலம் ஏஐ பாட்கள் தளத்தில் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க முடியும் என எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார்.

    "ஏப்ரல் 15 ஆம் தேதி முதல், வெரிஃபைடு அக்கவுண்ட்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படும். இது தான் ஏஐ பாட்கள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும் உண்மையான வழியாக இருக்கும். இதைதவிர மற்ற நடவடிக்கைகள் தோல்வியிலேயே முடியும். வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளவும் வெரிஃபிகேஷன் பெற்றிருக்க வேண்டும்," என எலான் மஸ்க் டுவிட் செய்திருக்கிறார்.

     

    அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பிறப்பிக்கும் ரோபோட் டெஸ்டில் இருந்து விடுபட செய்யும் ஒரே வழிமுறை கட்டண சமூக வலைதள அக்கவுண்ட்கள் தான் என எலான் மஸ்க் முன்னதாக தெரிவித்து இருந்தார். தற்போதைய அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் எவ்விதமான ரோபோட் டெஸ்டிங்கையும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு விடுகின்றன.

    முன்னதாக ஏப்ரல் 1, 2023 முதல் டுவிட்டரில் அக்கவுண்ட்களை வெரிஃபை செய்யும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. டுவிட்டர் புளூ சந்தா அமலுக்கு வரும் முன் தங்களின் அக்கவுண்ட்களை வெரிஃபைடு செய்து புளூ டிக் பெற்றவர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புளூ டிக் நீக்கப்படும் என டுவிட்டர் அறிவித்து இருந்தது.

    உலகளவில் டுவிட்டர் புளூ வெளியானதை அடுத்து டுவிட்டர் நிறுவனம் தனது பழைய வெரிஃபைடு திட்டத்தை நிறுத்த இருக்கிறது. பழைய வழக்கப்படி டுவிட்டர் பயனர்களின் ஐடி மற்றும் பொது மக்கள் இடையே பிரபலமாக இருப்போருக்கு மட்டும் குறிப்பிட்ட வழிமுறைகளின் கீழ் வெரிஃபைடு அங்கீகாரம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டுவிட்டர் நிறுவனத்தின் சான்ஃபிரான்சிஸ்கோ அலுவலகம் நேற்று ஊழியர்கள் இன்றி காலியாக இருந்தது.
    • ஊழியர்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

    டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருக்கிறார். கடந்த புதன் கிழமை அனுப்பிய மின்னஞ்சல் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன் படி, எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது குறித்து டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

    அதிகாலை 2.30 மணிக்கு எலான் மஸ்க் அனுப்பிய மின்னஞ்சலில், "Office is not optional" அதாவது அலுவலகம் விருப்பம் இல்லை என தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. டுவிட்டர் நிறுவனத்தின் சான்ஃபிரான்சிஸ்கோ அலுவலகம் நேற்று ஊழியர்கள் இன்றி காலியாக இருந்தது என்று எலான் மஸ்க் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

     

    முன்னதாக எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து அதில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தார். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய கார்ப்பரேட் திட்டங்கள் பற்றிய அறிவிப்பை இரவு நேரத்திலோ அல்லது அதிகாலை சமயங்களிலோ வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் நள்ளிரவு 2.30 மணிக்கு ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் அவர்களுக்கு பழகிப் போன ஒன்றுதான்.

    எலான் மஸ்க் கைப்பற்றுவதற்கு முன் டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றுவதற்கான அனுமதி பரவலாக வழங்கப்பட்டு இருந்தது. நிறுவனத்தை கைப்பற்றிய எலான் மஸ்க் ஊழியர்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

    ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதை எலான் மஸ்க் ஆரம்பத்தில் இருந்தே ஊக்குவித்தது இல்லை. கடந்த ஆண்டு டெஸ்லா நிறுவன தலைவரான எலான் மஸ்க், "டெஸ்லா ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 40 மணி நேரம் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு செய்யாதவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கருதப்படுவர்," என்று தெரிவித்து இருந்தார். 

    • டுவிட்டர் புளூ சந்தா முதற்கட்டமாக உலகின் தேர்வு செய்யப்பட்ட 50 நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.
    • உலகளவில் டுவிட்டர் புளூ வெளியானதை அடுத்து டுவிட்டரில் பழைய வெரிஃபைடு திட்டம் நிறுத்தப்படுகிறது.

    ஏப்ரல் 1, 2023 முதல் டுவிட்டரில் அக்கவுண்ட்களை வெரிஃபை செய்யும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. டுவிட்டர் புளூ சந்தா அமலுக்கு வரும் முன் தங்களின் அக்கவுண்ட்களை வெரிஃபைடு செய்து புளூ டிக் பெற்றவர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புளூ டிக் நீக்கப்படும் என டுவிட்டர் அறிவித்து இருக்கிறது.

    சர்வதேச சந்தையில் சில நாடுகளில் படிப்படியாக கொண்டுவரப்பட்ட டுவிட்டர் புளூ சந்தா முறை தற்போது உலகளவில் வெளியாகி விட்டது. புதிய அப்டேட்டின் மூலம் டுவிட்டர் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட்டு இருந்த வெரிஃபைடு செக்மார்க் நீக்கப்படுகிறது.

    எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாற்றங்களின் படி டுவிட்டர் புளூ சந்தா பயனர்களுக்கு ஏராளமான அம்சங்களை பிரத்யேகமாக வழங்குகிறது. இதில், வெரிஃபைடு செக்மார்க், டுவிட் உரையாடல்களுக்கு முன்னுரிமை, குறைந்த விளம்பரங்கள், புக்மார்க் ஃபோல்டர்கள், நேவிகேஷனை கஸ்டமைஸ் செய்யும் வசதி, டுவிட்களை எடிட் மற்றும் அண்டு செய்யும் வசதி இடம்பெற்று இருக்கிறது.

    இத்துடன் அதிகபட்சம் 4 ஆயிரம் எழுத்துக்களில் டுவிட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக டுவிட்டர் புளூ சந்தா உலகின் தேர்வு செய்யப்பட்ட 50 நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. தற்போது உலகம் முழுக்க டுவிட்டர் புளூ சந்தா பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    உலகளவில் டுவிட்டர் புளூ வெளியாகி இருப்பதை அடுத்து டுவிட்டர் நிறுவனம் தனது பழைய வெரிஃபைடு திட்டத்தை நிறுத்துகிறது. பழைய வழக்கப்படி டுவிட்டர் பயனர்களின் ஐடி மற்றும் பொது மக்கள் இடையே பிரபலமாக இருப்போருக்கு குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளின் கீழ் வெரிஃபைடு வழங்கப்பட்டு இருந்தது.

    • ப்ளூ டிக் அங்கீகாரம் பெற்றுள்ள பயனர்களிடத்தில் இருந்து மாதம் தோறும் கட்டண சந்தா செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
    • சந்தா கட்டணங்களை செலுத்தாத டுவிட்டர் கணக்குகளில் இருந்து வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் ப்ளூ டிக் அகற்றப்படுகிறது.

    டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தார். அதில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் 'ப்ளூ டிக்குக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ப்ளூ டிக் அங்கீகாரம் பெற்றுள்ள பயனர்களிடத்தில் இருந்து மாதம் தோறும் கட்டண சந்தா செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் சந்தா கட்டணங்களை செலுத்தாத டுவிட்டர் கணக்குகளில் இருந்து வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் ப்ளூ டிக் அகற்றப்படும் என்று டுவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழைய சரிபார்ப்பு திட்டத்தை படிப்படியாக நீக்கி, சந்தா செலுத்தாத கணக்குகளில் ப்ளூ டிக் அகற்றப்படும் என்று டுவிட்டரில் நீல நிற சரிபார்ப்பு அடையாளத்தை வைத்திருந்த தனிநபர்கள் டுவிட்டர் ப்ளூவில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.
    • வீடு, அலுவலகம் என எலான் மஸ்க்-க்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    உலகளவில் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராக எலான் மஸ்க் இருக்கிறார். இவரது பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் மெய்க்காப்பாளர், தனியார் பாதுகாவலர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய எஸ்கார்ட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவரின் பாதுகாவலர் எலான் மஸ்க் எங்கு சென்றாலும், அவருடன் செல்கின்றனர். "எங்கு சென்றாலும்" என்பதில் கழிவறையும் அடங்கும்.

    இதுகுறித்து டுவிட்டரில் பணியாற்றி வரும் பொறியாளர் ஒருவர் கூறும் போது, எலான் மஸ்க்-ஐ சுற்றி எப்போதும் பாதுகாவலர்கள் உள்ளனர். டுவிட்டர் அலுவலகத்தில் அவரை சுற்றி எப்போதும் குறைந்தபட்சம் இரண்டு காவலர்கள் உள்ளனர். "அலுவலகத்தில் அவர் எங்கு சென்றாலும், அவருடன் இரண்டு பாதுகாவலர்கள் உடன் செல்கின்றனர்.

     

    பாதுகாவலர்கள் பிரமாண்டமாகவும், ஹாலிவுட் படங்களில் வருவதை போன்று காட்சியளிக்கின்றனர். அவர் கழிவறைக்கு சென்றாலும் இவர்கள் பின்தொடர்கின்றனர்" என தெரிவித்துள்ளார். சான் பிரான்டிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமையகத்தில் மஸ்க்-ஐ சுற்றி பாதுகாவலர்கள் இருப்பதை பார்க்கும் போது, அவருக்கு நிறுவன ஊழியர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றே தெரிகிறது.

    டுவிட்டர் அலுவலகத்தை சுற்றிலும் ஊழியர்கள் மீது நம்பிக்கை வைத்து உயிரை பணயம் வைக்க எலான் மஸ்க் விரும்பவில்லை என்பதை அவரின் செயல்பாடுகள் காட்டுகின்றன. பெரும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது புதிதான காரியம் இல்லை,மேலும் அவர்கள் எப்போதும் அவர்களுடனேயே செல்வர். ஆனால், எலான் மஸ்க்-க்கு பாதுகாப்பு ஒருமடங்கு அதிகமாகவே வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    • இணையதளத்தில் கட்சியின் கொடி மற்றும் சின்னங்களும் மாற்றப்பட்டன.
    • டுவிட்டர் கணக்கை ஹேக் செய்தவர்கள் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் என தெரியவந்தது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

    திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கு இன்று காலை திடீரென ஹேக் செய்யப்பட்டது. இணையதளத்தில் கட்சியின் கொடி மற்றும் சின்னங்களும் மாற்றப்பட்டன.

    இதனை கண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். டுவிட்டர் கணக்கை ஹேக் செய்தவர்கள் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் என தெரியவந்தது. மேலும் டுவிட்டர் கணக்கை சரி செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கு சரிசெய்யப்படும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில், 187 பில்லியன் டாலருடன் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார்.
    • பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரும் எல்விஎம்ஹெச் நிறுவத்தின் தலைவருமான பெர்னார்ட் அர்னால்ட் 185 பில்லியன் டாலருடன் 2வது இடத்தில் உள்ளார்.

    உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க்.

    கடந்த டிசம்பர் மாதம் டெஸ்லா நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த எலான் மஸ்க் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    இந்நிலையில், தற்போது அதே டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்டுள்ள எழுச்சி காரணமாக மீண்டும் நம்பர் ஒன் இடத்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார்.

    ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில், 187 பில்லியன் டாலருடன் எலான் மஸ்க் முதலிடத்திலும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரும் எல்விஎம்ஹெச் நிறுவத்தின் தலைவருமான பெர்னார்ட் அர்னால்ட் 185 பில்லியன் டாலருடன் 2வது இடத்திலும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • எலான் மஸ்க் டுவிட்டரை பெரும் தொகை கொடுத்து வாங்கினார்.
    • எலான் மஸ்க் கொண்டு வந்த மாற்றங்களால் அதிருப்தியடைந்த நூற்றுக்கணக்கான டுவிட்டர் ஊழியர்கள் ராஜினாமா செய்தனர்.

    வாஷிங்டன் :

    உலகப்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரபல சமூகவலைத்தளமான டுவிட்டரை பெரும் தொகை கொடுத்து வாங்கினார்.

    டுவிட்டர் நிறுவனம் தன்வசமானதும் அதன் நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார் எலான் மஸ்க். அந்த வகையில் முதல் பணியாக டுவிட்டரின் மொத்த ஊழியர்கள் 7,500 பேரில் 4,000-க்கும் மேற்பட்டோரை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.

    மேலும் சிக்கன நடவடிக்கை என்கிற பெயரில் எலான் மஸ்க் கொண்டு வந்த மாற்றங்களால் அதிருப்தியடைந்த நூற்றுக்கணக்கான டுவிட்டர் ஊழியர்கள் ராஜினாமா செய்தனர். அதன் பின்னரும் டுவிட்டர் சிறிய அளவிலான பணி நீக்கங்களை தொடர்ந்து வருகிறது. இதன்காரணமாக டுவிட்டர் ஊழியர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக குறைந்துள்ளது.

    இந்த நிலையில் டுவிட்டரில் இருந்து மேலும் 200 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளர். அதாவது தனது மொத்த ஊழியர்களில் 10 சதவீதம் பேரை டுவிட்டர் பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் டுவிட்டர் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1,800 ஆக குறைந்துள்ளது.

    ×