search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 196711"

    • தீக்காயம் அடைந்தவர்கள் படுப்பதற்கு வசதியான மருத்துவ குணம் கொண்ட மெத்தைகளை வழங்கினார்.
    • 8 பேருக்கு தீ காயம் ஏற்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    நாகர்கோவில் :

    தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ மெத்தையை விஜய் வசந்த் எம்.பி. வழங்கினார்.

    பார்வதிபுரத்தில் டீ கடையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் கடைக்கு டீ குடிக்க வந்தவர்கள், வேடிக்கை பார்த்தவர் என 8 பேருக்கு தீ காயம் ஏற்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்த குமரி எம்.பி., விஜய் வசந்த் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் தீ காயம் பட்டவர்களுக்கான தேவையான உதவிகளை செய்த அவர், தீக்காயம் அடைந்தவர்கள் படுப்பதற்கு வசதியான மருத்துவ குணம் கொண்ட மெத்தைகளை வழங்கினார்.

    இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவர் ரெனி மோள் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

    • நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை.
    • மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு புதூரை சேர்ந்தவர் வில்லியம். இவரது மனைவி பேபி (வயது 58). சம்பவத்தன்று இரவு இவர் மண்டைக்காட்டில் உள்ள மருந்துக்கடைக்கு சென்று மருந்து வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பினார். புதூர் ஏ.வி.எம். சானல்கரை சாலையில் நடந்து செல்லும்போது மண்டைக்காடு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராமல் பேபி மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

    அப்பகுதியினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோடிமுனையை சேர்ந்த ஜெனிபன் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    பெரம்பலூர்:

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, ஆவினங்குடியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் ஹரிஷ் (வயது 20). தொழுதூர் அருகே பாளையத்தை சேர்ந்த கருப்பையாவின் மகன் பூபதி. பெண்ணாடத்தை சேர்ந்தவர் சந்துரு. நண்பர்களான இவர்கள் 3 பேரும் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். இதில் ஹரிஷ், பூபதி, சந்துரு ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளிக்கு சென்ற முத்துரோஷன் சைக்கிளில் வீட்டிற்கு வரும்போது பின்னால் வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது.
    • விபத்தில் காரின் முன் சக்கரம் ஏறி இறங்கியதால் முத்து ரோசனின் வலது கால் சிதைந்து அவன் அலறி துடித்தான்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் அருணாச்சலபுரத்தில் வசித்து வருபவர் ராம்குமார் (64). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முத்து ரோஷன் (வயது 11). தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற முத்துரோஷன் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். கோமான் மேலத்தெருவில் வரும்போது பின்னால் வேகமாக வந்த கார் இவர் மீது மோதியது.

    இந்த விபத்தில் காரின் முன் சக்கரம் ஏறி இறங்கியதால் முத்து ரோசனின் வலது கால் சிதைந்தது. அவன் அலறி துடித்தான். உடனே அக்கம் பக்கத்தினர் அவனை திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை ராம்குமார் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.

    விபத்திற்கு காரணமான காரை ஓட்டி வந்த முகமது பாசில் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    பளுகல் அருகே உள்ள பருசுவைக்கல் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 33). இவருக்கும் மனைவிக்கும் குடும்ப பிரச்சனை இருந்தது. இதில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அனீஷ்மோன்(26) தலையிட்டதால் இருவருக்கும் விரோதம் ஏற்பட்டது.

    இந்த முன்விரோதத்தில் நேற்று அனீஷ்மோன் இரும்பு கம்பியால் தாக்கியதோடு இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்திவிட்டு கொலைமிரட்டல் விடுத்ததாக சதீஷ்குமார் பளுகல் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதேபோல் சதீஷ்குமார் தாக்கியதில் பலத்த காயமடைந்து பறசாலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசில் அனீஷ்மோன் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார்களின் அடிப்படையில் பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர் திருவிழாவின் போது சிலர் மது அருந்தி விட்டு தகராறு செய்தனர்.
    • அவர்களை ஊருக்கு உள்ளே விடாமல் அடித்து விரட்டியதால் போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அருகே கஞ்சாநகரம் ஊராட்சி பொன்னுகுடி மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மாதவன் மனைவி பரிமளா. 2 நாட்களுக்கு முன்பு நடந்த மாதாகோவில் திருவிழாவில் தேர் திருவிழா நடைபெற்றுள்ளது.தேர் திருவிழாவின் போது சிலர் மது அருந்தி விட்டு தகராறு செய்தனர். இது ஆன்மீக நிகழ்ச்சி, ஜெபத்துடன் இருக்குமாறு பரிமளா மகன் கேட்டுள்ளார். நீ என்ன கேட்பது என கூறி கோயில்பிள்ளை மகன் சக்கிரியாஸ் என்பவர் கையில் மறைத்து வைத்திருந்த கட்டையால் தாக்கியுள்ளார்.

    ராஜீ, மோகன், சத்யராஜ், தர்மராஜ், நெப்போலியன் சின்னதுரை இவர்களும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற பரிமளாவையும் தாக்கி மானப்பங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் பரிமளா மற்றும் மகன், உள்ளிட்டவர்கள் படுகாயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

    மேலும் அவர்களை ஊருக்கு உள்ளே விடாமல் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் செம்பனார்கோவில் போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்தனர். மேலும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். புகாரை அடுத்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். நடவடிக்கை எடுத்தால் தான் நாங்கள் ஊருக்கு போக முடியும் என்ற அச்சத்தில் மயிலாடுதுறையிலேயே தங்கியுள்ளனர். இந்த சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வானூர் அருகே இன்று விபத்து வேன் கவிழ்ந்து 17 பெண் தொழிலாளர்கள் படுகாயம் நிவாரணம் வழங்க கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • இந்த சாலை புதுவைக்கு வரக்கூடிய முக்கிய பகுதியாகும். வேன் நடுரோட்டில் கவிழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆரோபுட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிஸ்கெட் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் வானூர், தைலாபுரம், திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதற்காக கம்பெனி வேன்கள் ஆட்களை ஏற்றி, இறக்கிவிட்டு சென்றுவருகிறது. அதன்படி இன்று காலை தைலாபுரத்தில் இருந்து பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று ஆரோபுட் நோக்கி வந்தது. இந்த வேனில் 18 பெண் தொழிலாளர்கள் இருந்தனர். வேனை டிரைவர் ராஜா ஓட்டினார்.  இந்த வேன் காட்ராம்பாக்கம் பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக நின்ற வேன் மீது மோதியது. மோதிய வேகத்தில் நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த சாலை புதுவைக்கு வரக்கூடிய முக்கிய பகுதியாகும். வேன் நடுரோட்டில் கவிழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் 17 பேர் படுகாயத்துடன் அலறி துடித்தனர்.

    அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். தகவல் அறிந்த வானூர் மற்றும் ஆரோவில் போலீசார் அங்கு விரைந்து சென்று காயமடைந்த 17 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையில் விபத்தில் படுகாயம் அடைந்த பெண்களின் உறவினர்கள் ஒன்று திரண்டனர். காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது தகவல் அறிந்த வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன், ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் அங்கு விரைந்தனர். மறியல் செய்தவர்களு டன், இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    • ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
    • மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே கல்லடிவிளையை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் சிவகுமார் (வயது 32). மீன்பிடி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த டேவிட் ராஜா டேனியலுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அம்மாண்டிவிளையில் செல்லும்போது அங்கு வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர்.அப்பகுதியினர் இருவரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டேவிட் ராஜா டேனியல் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி கோடிமுனையை சேர்ந்த ஆன்றனிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • ஐ.டி.நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்பவர்
    • பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ப்பு

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் அருகே சொத்தவிளை புத்தளத்தை சேர்ந்தவர் செல்வராஜ்.இவரது மகன் மணி செல்வன் (வயது 30).

    இவர் சென்னையில் ஒரு ஐ.டி.நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் மண்டைக்காடு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டார்.

    மணவாளக்குறிச்சியை கடந்து சாத்தன்விளையில் செல்லும்போது, இவருக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற நெய்யூர் பெருங்கோடை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அப்பகுதி பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குமாரபாளையத்தில் ஆம்னி கார்கள் மோதி 2 ேபர் படுகாயம் அடைந்தனர்.

    குமாரபாளையம்:

    திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 48). மாவு மில் ெதாழில் நடத்தி வருகிறார். இவரது நண்பர் சதீஷ்குமாரின் தாயார் பார்வதிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், அவரை, சுந்தரம் தனது ஆம்னி காரில் கோவைக்கு அழைத்து ெசன்றார்.

    பின்னர் சிகிச்சை முடிந்து ஆம்னி காரில் வீடு திரும்பினார்.சுந்தரம் கார் ஓட்ட, அருகில் உறவினர் இளங்கோ அமர்ந்திருந்தார். சேலம் -கோவை புறவழிச்சாலை கல்லூரி அருகே வந்த போது, பல்லக்காபாளையம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற மற்றொரு ஆம்னி கார் சுந்தரம் ஓட்டி வந்த கார் மீது ேமாதியது.

    இதில் சுந்தரம், பார்வதி இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து சுந்தரம் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியிலும், பார்வதி கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான ஆம்னி கார் டிரைவர் எடப்பாடியை சேர்ந்த மாதேஸ் ( 36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திண்டுக்கல் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    சின்னாளபட்டி:

    குமுளியில் இருந்து சென்னைக்கு ஒரு ஆம்னி பஸ் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. வத்தலக்குண்டு- செம்பட்டி ரோட்டில் வீரசிக்கம்பட்டி என்ற இடத்தில் பஸ் வந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

    இதில் தாறுமாறாக ஓடிய பஸ் சாலையோரம் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கூச்சலிட்டனர்.

    இந்த விபத்தில் டிரைவர் திருச்சியை சேர்ந்த சார்லஸ் (வயது29), கண்டக்டரான கூடலூரை சேர்ந்த கார்த்திக் (28), பஸ்சில் பயணம் செய்த தேனியை சேர்ந்த பாலநாராயணன் (24), எரசக்கநாயக்கனூரை சேர்ந்த சதீஷ்குமார் (23) ஆகிய 4 பேர் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். மற்ற பயணிகள் அனைவரும் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மாற்று பஸ் மூலம் திண்டுக்கல் அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சென்னை சென்றனர். 

    இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ஆம்பூர் அருகே டிராக்டர் மீது வேன் மோதியதில் 16 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே காமேஸ்வரம் பகுதியில் தனியார் ஷூகம்பெனி உள்ளது. இதில் கோவிந்தாபுரம், கங்காபுரம், தாலுகா அலுவலக பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து தினம்தோறும் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர். வேலைக்கு வரும் பெண்களை அழைத்து வர ஷூகம்பெனி சார்பில் வேன் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பெண்களை வேலைக்கு அழைத்து கொண்டு வேன் வந்து கொண்டிருந்தது.

    ஆம்பூர் தாலுகா அலுவலகம் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது. இதில் வேனில் பயணம் செய்த 16 பெண்கள் படுகாயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் போலீசார் வேனில் ஈடுபாடுகளில் சிக்கி இருந்த பெண்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×