search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 196711"

    • கார் மீது லாரி மோதியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    காரைக்கால் மேலஓடுகரை அடுத்த அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது44). இவர் கோடை விடுமுறையையொட்டி குடும்பத்துடன் காரில் மேட்டுப்பாளையத்துக்கு சுற்றுலா சென்றனர். உடன் நண்பர் சுந்தர் என்பவரும் சென்றார். அங்கு சுற்றிப்பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். வரும் போது சுந்தர் காரை ஓட்டி வந்தார். கரூர்-திருச்சி நெடுஞ்சாலை கீழவதியம் அருகே வந்துகொண்டிருந்தபோது திருச்சியிலிருந்து கரூர் நோக்கி வந்த லாரி, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் பயணம் செய்த ராஜா (44), இவரது மனைவி வேணி (27), உறவினர் சந்தியா (23), சுந்தர் (43), நித்யா ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்ட 5 பேரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ராஜா கொடுத்த புகார்படி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த லாரி டிரைவர் இளையராஜா (44) என்பவர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருக்கோவிலூரில் இருந்து கடலூர் நோக்கி சென்ற மற்றொரு கார் இந்த கார் மீது மோதியது.
    • 4 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் தோட்டப்பட்டு சேர்ந்தவர் செந்தில் (வயது 50). தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை அதே பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு வேலைக்கு செல்வதற்காக காரில் கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் சென்றார். அப்போது திருக்கோவிலூரில் இருந்து கடலூர் நோக்கி மற்றொரு கார் இந்த கார் மீது மோதியது. பயங்கர சத்தத்துடன் 2 கார்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் கடலூர் கோண்டூர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி, மோட்டார் சைக்கிள் சென்றவர்கள் மீது கார் மோதி அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    இதனைப் பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து விபத்தில் அடிபட்ட 4 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையின் ஓரத்தில் தடுப்பு கட்டை அமைக்கப்பட்டு இருந்த தால் அருகாமையில் இருந்த பெரிய பள்ளத்தில் 2 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலையில் இந்த விபத்து நடந்ததால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • வனத்துறையினா் மானை மீட்டு வனத்துறை வளாகத்துக்கு கொண்டு சென்றனர்.
    • மான் அடா்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா் அக்ரஹாரம் பகுதிக்கு ஒரு காட்டு மான் வந்தது. இதனை பார்த்த நாய்கள் துரத்தி சென்று தாக்கின.

    இதில் அந்த மான் படுகாயம் அடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினா், ஈட்டிமூலை பகுதியில் மானை மீட்டு வனத்துறை வளாகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதன்பிறகு அந்த மான் அடா்ந்த வனப் பகுதிக்குள் விடப்பட்டதாக வனச்சரக அலுவலா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.

    • திருப்பூர் மாவட்டம் காங்கேய த்துக்கு மற்றொரு லாரி சென்று கொண்டு இருந்தது.
    • 2 லாரிகளும் எதிர்பாராத விதமாக மோதி க்கொண்டன.

    சென்னிமலை, 

    மதுரையில் இருந்து ஒரு லாரி பழைய இரும்பு பொருட்களை ஏற்றி கொண்டு சென்னிமலை அருகே ஈங்கூரில் உள்ள ஒரு தனியார் இரும்பு தொழிற்சாலைக்கு லாரி சென்று கொண்டிருந்தது.

    இந்த லாரியை நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே சோழசிராமணியை சேர்ந்த பழனிசாமி (வயது 39) என்பவர் ஓட்டி வந்தார். சென்னிமலை அருகே காங்கேயம் ரோட்டில் பசுவபட்டி பிரிவு என்ற இடத்தில் லாரி சென்று கொண்டு இருந்தது.

    அப்போது அந்த வழியாக திருப்பூர் மாவட்டம் காங்கேய த்துக்கு மற்றொரு லாரி சென்று கொண்டு இருந்தது. சென்னிமலை அருகே வந்த போது அந்த 2 லாரிகளும் எதிர்பாராத விதமாக மோதி க்கொண்டன.

    இந்த விபத்தில் 2 லாரிகளின் முன் பகுதியும் அப்பளம் போல் நொறுங்கி யது. இதில் இடிபாடுகளுக்கு இடையே லாரி டிரைவர் பழனிசாமியின் கால் சிக்கி கொண்டது. இதனால் காலை வெளியே எடுக்க முடியாமல் அவர் வலியால் அலறி துடித்தார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் வந்து 20 நிமிடம் போராடி பழனிசாமியை மீட்டனர். காலில் காயம் ஏற்பட்டிருந்ததால் பழனிசாமியை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். விபத்து ஏற்பட்டதும் மற்றொரு லாரியின் டிரைவர் அங்கிரு ந்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • விபத்தில் பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே பெருமானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி மாரியம்மாள். இவர் அதே பகுதியை சேர்ந்த பிரபு என்பவரின் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையோரமாக நின்று கொண்டிருந்த மற்றொரு வாகனம் மீது பிரபு மோதி விட்டார். இதில் மாரியம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுபற்றிய புகாரின்பேரில் சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை அருகே முத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 60). இவர் அதே பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோது விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அருள்ராஜ் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுபற்றிய புகாரின்பேரில் சிவகங்கை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கர்நாடகாவில் இருந்து 17 பேர் நீலகிரிக்கு சுற்றுலாவிற்கு வந்தனர்.
    • 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே தனியார் பஸ் மீது வேன் மோதியது.

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கர்நாடகா மாநிலம் பெள்ளேரி பகுதியில் இருந்து 17 பேர் தனியார் சுற்றுலா வேன் மூலம் சுற்றுலாவிற்கு வந்தனர். ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் சுற்றி பார்த்து விட்டு மீண்டும் தங்களது ஊருக்கு கோத்தகிரி வழியாக திரும்பிக் கொண்டு இருந்த னர்.

    வாகனத்தை பெள்ளேரி பகுதியை சேர்ந்த விஸ்வா (20) என்பவர் ஓட்டினார். வாகனம் கோத்தகிரி சாலையில் 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த போது முன்னால் சென்ற தனியார் பஸ் மீது வேன் மோதியது. இதில் வேன் டிரைவர் விஸ்வா (20), வினோத் (35), உலியம்மா (50), வீரம்மா (30), வீரோவ் (13), ராம்சரன் (14), தேஜீ (11), பஸ்வராஜ் (12), பாப்பா (34), லட்சுமி (30), நாகவேந்திரா (30), நாகராஜ் (40), மனோஜ் (6), கலரம்மா (44), மகானி (12) உள்ளிட்ட 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதிகி ருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடை ந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மேட்டுப்பா ளையம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 மற்றும் 5 ஆகிய வார்டுகள் 50 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கட்டடம் ஆகும்
    • அதிர்ச்சியடைந்த அங்கு கூடியிருந்த உறவினர்கள் வேக வேகமாக வெளியேறினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கும்.

    இங்குள்ள 4 மற்றும் 5 ஆகிய வார்டுகள் 50 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கட்டடம் ஆகும். அவசர சிகிச்சை பிரிவில் இருந்து முதற்கட்ட உள்நோயாளியாக இந்த 2 வார்டுகளில் தான் அனுமதிக்கப்படுவார்கள். 4-வது வார்டு பெண் நோயாளிகளும், 5-வது வார்டு ஆண் நோயாளிகளும் அனுமதிக்கப்படுவர். பின்னர் நோய் தன்மைக்கு ஏற்ப பிற வார்டுகளுக்கு மாற்றப்படுவார்கள்.

    இந்நிலையில் இன்று இந்த 2 வார்டை ஒட்டியுள்ள வராண்டா பகுதியில் நோயாளிகளின் உறவினர்கள் ஏராளமானோர் இருந்தனர்.

    அப்போது திடீரென மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழ தொடங்கியது. அதிர்ச்சியடைந்த அங்கு கூடியிருந்த உறவினர்கள் வேக வேகமாக வெளியேறினர்.

    இருந்தாலும் மேற்கூரை சிமெண்ட் பெயர்ந்து விழுந்ததில் தஞ்சாவூர் அருகே கரந்தையை சேர்ந்த கார்த்திக், பாபநாசத்தை சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய 2 பேர் பலத்த காயமடைந்தனர் .

    இவர்கள் இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர் .

    இது குறித்து தகவல் அறிந்த மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புதர் மறைவில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென சஞ்சையை தாக்கியது.
    • இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரவேணு,

    கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சஞ்சய்(வயது 16). இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விட்டு, முடிவுக்காக காத்திருக்கிறார்.

    தற்போது விடுமுறை என்பதால் சஞ்சய் நேற்று தனது நண்பர்கள் 3 பேருடன் கொடநாடு செல்லும் சாலை பிரிவில் நெடுகுளா சுண்டட்டியில் உள்ள சுண்டட்டி நீர்வீழ்ச்சிக்கு சென்றனர்.

    அங்கு அவர்கள் நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்தபடி நின்றிருந்தனர். அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென சஞ்சையை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை நண்பர்கள் மீட்டு நெடுகுளா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தொழிலாளி பரிதாப சாவு; வாலிபர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
    • காயமடைந்த ஜான்சன் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், மழவராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 33). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் திருப்பாச் சேத்திக்கு சென்றுவிட்டு ஊருக்கு வந்து கொண்டி ருந்தார். அப்போது பரமக்குடியில் இருந்து எதிர்புறமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாய மடைந்த கருப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருப்பாச் சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் பிரவீன்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    காளையார்கோவில் அருகே உள்ள உருவாட்டி கொங்கந்திடல் பகுதியை சேர்ந்தவர் ராக்கு (57). இவர் காளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நடந்த சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ராக்கு காயமடைந்தார். விபத்து குறித்து காளையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    உருவாட்டி பாப்பாக் கோட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (43), இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    மானாமதுரை அருகே உள்ள இடையமேலூரை சேர்ந்தவர் குருசாமி (48). இவர் அங்குள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தார். விபத்து தொடர்பாக மானாமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் சுந்தரம் (75). இவர் அந்தபகுதியில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்து ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    காரைக்குடி அருகே உள்ள செக்காலை பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (25). இவர் சம்பவத்தன்று காரை ஓட்டிச்சென்றபோது நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த ஜான்சன் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • பைக்கில் சென்றவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம்
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம், செந்துறை சென்னிவனம் நடுத்தெருவை சேர்ந்த கதிர்வேலின் மகன் சுவாமிநாதன்(வயது 33). இவர் ஒரு தனியார் சிமெண்டு ஆலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்யா (32). மகன் விஷ்வா. இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் அரியலூர் நோக்கி சென்றனர். அரசு நகர் பகுதியில் சென்றபோது எதிரே உடையார்பாளையம் பருக்கள் தெற்கு தெருவை சேர்ந்த கொளஞ்சிநாதன்(40) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், சுவாமிநாதனின் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் சுவாமிநாதன், அவரது மனைவியும் படுகாயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து கயர்லாபாத் போலீசில் சுவாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • எதிர்பாராதவிதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்து கலைவாணனின் இரண்டு கைகளிலும் உள்ள விரல்கள் துண்டானது.
    • சம்பவம் நடந்த பண்டாரவாடை கிராமத்தில் உள்ள கலைவாணனின் வீட்டில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா பண்டாரவாடை கலைஞர் நகரை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 40). இவர்மீது பல கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடியான இவர் நேற்று இரவு அவரது வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராதவிதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்து கலைவாணனின் இரண்டு கைகளிலும் உள்ள விரல்கள் துண்டானது. மேலும், மார்பு, தொடைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து, அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சம்பவம் நடந்த பண்டாரவாடை கிராமத்தில் உள்ள கலைவாணனின் வீட்டில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    திருவாரூரில் இருந்து முகில் என்ற மோப்ப நாயும் நாகப்பட்டினத்தில் இருந்து அகிலா என்ற மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே உள்ள ராப்ராய் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி ருக்குமணி (வயது75). இவர் தனியார் எஸ்டேட் குடியிருப்பில் தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தண்ணீர் எடுப்பதற்காக வீட்டிற்கு அருகே உள்ள குடிநீர் குழாய் அருகே சென்றுள்ளார்.

    அப்போது அங்குள்ள புதர் மறைவில் இருந்து திடீரென வெளியே வந்த கரடி ருக்குமணியை தாக்கியது. இதனால் கை, மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து கரடியை விரட்டி விட்டு, காயமடைந்த ருக்குமணியை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்ததுடன், காய்மடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்று வரும் ருக்மணிக்கு ஆறுதல் கூறினர். மேலும் வனவிலங்கு தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    ×