search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 196711"

    • வாகன விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்
    • கார் மீது லாரி மோதி விபத்து

    கரூர்:

    கரூர் மாவட்டம், மாயனுாரை அடுத்த, கீழ முனையனுாரை சேர்ந்தவர் நம்பிராஜ் (வயது 30). இவர், ஆம்னி காரில் தனது ஊரை சேர்ந்த இளஞ்சியம் (45), கார்த்திக் ஆகியோருடன், திருச்சி நோக்கி கடந்த சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, பின்னால் வந்த வீரராக்கியம் தனியார் பால் கம்பெனி லாரி, இவர்கள் மீது மோதியது. இதில் இளஞ்சியம், கார்த்திக் இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உதவியுடன், குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.இதுகுறித்து நம்பிராஜ் கொடுத்த புகாரின் படி, லாரி டிரைவரான, புலியூர், குளத்துப் பாளையத்தை சேர்ந்த சீனிவாசன் (49), மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

    • திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்ற மினிலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • படுகாயம் அடைந்து முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அரசக்குளத்தெருவை சேர்ந்தவர் முஸ்தபா. இவருடைய மகன் அப்துல் ரஹ்மான் (வயது 28).

    இவர் தான் வாங்கிய புதிய மோட்டார் சைக்கிளை சர்வீஸ் செய்வதற்காக தனது நண்பரான, குண்டாங்குளத் தெருவை சேர்ந்த சேக்தாவுது மகன் செய்யது இப்ராகிம்(27) என்பவருடன் திருத்துறைப்பூண்டி சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.

    ஆலங்காடு பைபாஸ் அருகே சென்றபோது திருத்துறைப்பூண்டியில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்ற மினிலாரி இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார்சைக்கிளை ஓட்டி சென்ற அப்துல் ரஹ்மான் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிர் இழந்தார்.

    செய்யது இப்ராகிம் படுகாயம் அடைந்து முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மினிலாரி டிரைவர் சம்பவஇடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் ஏ.சி. பழுது நீக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
    • திடீரென ஏ.சி. எந்திரம் வெடித்து 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சேகலாவுதீன் (வயது 24) கணேஷ் (23). இவர்கள் 2 பேரும் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஏ.சி. பழுது நீக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் திருநாகேஸ்வரம் மேலமடவளாகம் பகுதியில் உள்ள ஒருவர் வீட்டில் ஏ.சி. எந்திரத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது திடீரென ஏ.சி. எந்திரம் வெடித்துள்ளது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருநீலக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று காலைகரும்புதோட்டத்தில் களை எடுப்ப தற்காக விஜயா (50), சரோஜா (70) ஆகியோர் சென்றனர். அப்போது திடீரென கரும்பு தோட்டத்தின் மேல் சென்ற மின் கம்பி திடீரென அறுந்து களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த விஜயா மற்றும் சரோஜா மீது விழுந்தது.
    • இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி அருேக மின்சாரம் தாக்கி 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.பண்ருட்டி அருகே உள்ள திருவத்தூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு உள்ளார். இதில் களை எடுப்ப தற்காக அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மனைவி விஜயா (50), ராஜகோபால் மனைவி சரோஜா (70) ஆகியோர் இன்று காலை சென்றனர். அப்போது திடீரென கரும்பு தோட்டத்தின் மேல் சென்ற மின் கம்பி  திடீரென அறுந்து களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த விஜயா மற்றும் சரோஜா மீது விழுந்தது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அங்கு மயங்கிய நிலையில் இருந்த சரோஜா மற்றும் விஜயாவை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து புதுப்பேட்ைட போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நந்த குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.    களை எடுக்க சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி காயம் அடைந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தகவலனுமதிக்க ப்பட்டுள்ளனர்.

    • கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த நபர் எதிர்பாராத விதமாக முனியம்மாள் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததா ளாப்பள்ளி அருகே உள்ள பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் (வயது 55 ). இவர் போலுப்பள்ளியில் உள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த நபர் எதிர்பாராத விதமாக முனியம்மாள் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • சாலை நடுவில் சிமெண்ட் தடுப்பு க்கட்டையில் பலத்த சத்தததுடன் லாரி மோதி நின்றது.
    • நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த வரக்கால்பட்டு பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது வரக்கால்ப ட்டு பகுதியில் சாலை நடுவில் சிமெண்ட் தடுப்பு க்கட்டையில் பலத்த சத்தததுடன் லாரி மோதி நின்றது. அப்போது முன்பக்க சக்கரம் அச்சு முறிந்து லாரியில் இருந்த டிரைவர் லேசான காயமடைந்தார். இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதில் செஞ்சி பகுதியில் இருந்து மாடு எலும்புகளை ஏற்றிக்கொண்ட கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனிக்கு கொண்டு சென்ற போது எதிர்பாராமல் சிமெண்ட் தடுப்பு கட்டை மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாகன விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    கரூர்:

    குளித்தலையை அடுத்த, நங்கவரம் தமிழ்ச்சோலை, கிழக்கு தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 25). அதே பகுதியை சேர்ந் தவர் விஜயராகவன் (22). இவர்கள் இருவரும், பார்த்திபனின் இரு சக்கர வாகனத்தில் பெருகமணி சென்று விட்டு, மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். பெருகமணி - நங்கவரம் சாலையில், அனஞ்சனுார் நார்மில் அருகே, வந்தபோது, கரூர், வெண்ணைமலையை சேர்ந்த சரவணன் (46) என்பவர் ஓட்டி வந்த கார், பைக் மீது மோதியது. இதில் பார்த்திபனும், விஜயராகவனும் படுகாயமடைந்தனர். இதைய டுத்து இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்படி, கார் டிரைவரான சரவணன் மீது குளித்தலை போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராஜபாளையத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் தென்காசி நெடுஞ்சாலை யில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையம் உள்ளது. இந்தநிலையில் இன்று காலை தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம் பகுதியில் இருந்து தேனிக்கு நுங்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு பிக்கப் வாகனம் சென்றது.

    அப்போது எதிரே டிராக்டர் வந்த தால் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் மணிகண்டன் வாகனத்தை திருப்பி யுள்ளார். அப்போது வாகனம் ரோட்டில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் மணி கண்டன், அவருடன் வந்த முருகன், மனோஜ் ஆகிய 3 பேரும் படுகாய மடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ராஜபாளையம் தெற்கு போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய வர்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

    இந்த நேரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தேங்காய்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் புனலூர் நோக்கி ஒரு ஈச்சர் லாரி சென்றது. அந்த லாரி டிரைவர் ரோட்டில் கவிழ்ந்து கிடக்கும் வாகனத்தை பார்த்துக் கொண்டே சென்றதால் ஈச்சர் லாரி நிலைதடுமாறி அதே பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் உயர்ரக மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனை மீட்பு பணியில் இருந்த போலீசார் கண்டு விலகி சென்றதால் உயிர் தப்பினர். அடுத்தடுத்து வாகன விபத்து ஏற்பட்டதால் ராஜபாளையத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி பகுதியில் வந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
    • சாலையோரம் உள்ள பள்ளத்தில் பாய்ந்ததில் காரின் முன்பக்கம் உடைந்து என்ஜின் மற்றும் உதிரி பாகங்கள் தனியாக கழன்று சென்று விபத்துக்குள்ளானது.

    கயத்தாறு:

    சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் திருவேங்கடன். இவரது மகன் பிரகாஷ் (வயது39). இவரது மனைவி சாந்தினி. இவர்களுக்கு சாரா (3) என்ற மகள் உள்ளார்.

    இந்நிலையில் பிரகாஷ் நேற்று இரவு தனது காரில் மனைவி மற்றும் மகளுடன் நெல்லை புறப்பட்டார். அவர்கள் இன்று அதிகாலை கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி பகுதியில் வந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

    பின்னர் சாலையோரம் உள்ள பள்ளத்தில் பாய்ந்ததில் காரின் முன்பக்கம் உடைந்து என்ஜின் மற்றும் உதிரி பாகங்கள் தனியாக கழன்று சென்று விபத்துக்குள்ளானது.

    இதில் பிரகாஷ் உள்பட 3 பேரும் காயமடைந்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் மேற்கூரை சுவர் இடிந்து பெண் படுகாயமடைந்தார்.
    • இது குறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள இருப்பைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுமதி (வயது 30). இவர், கடந்த 1989-ம் ஆண்டு கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று சுமதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டின் மேற்கூரை சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் சுமதிக்கு இடுப்பு, கால் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த உறவினர்கள் சுமதியை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • நூற்பாலை தொழிலாளர்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    • இந்த விபத்து பற்றிய புகாரின் பேரில் கீழ ராஜகுல ராமன் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஒரு தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் தொழி லாளர்களை வேன் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவேனை தென்காசி அருகே உள்ள மலையன்குளத்தைச் சேர்ந்த சங்கர்மணி(வயது 35) என்பவர் ஓட்டி வருகிறார்.

    அவர் நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பும் தொழிலா ளர்களை வேனில் அழைத்து சென்றார்.

    அந்த வேன் வன்னி யம்பட்டி-ஆலங்குளம் இடையே வந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், வேன் மீது மோதியது. அப்போது வேன் டிரைவர் பிரேக் போட்டார். இதில் வேனுக்குள் இருந்த தொழிலாளர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதி படுகாயம் அடைந்தனர்.

    பலவேசம் என்பவர் மனைவி வேலுத்தாய் (50), மாரீஸ்வரி(39), மணி(55), காளியம்மாள் (40), கலாராணி (32) ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வேலுத்தாய் கவலைக்கிடமாக உள்ளதால் அவர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வேன் டிரைவர் சங்கர் மணி, கற்பகராஜ் மற்றும் 8 பெண் தொழிலாளர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பற்றிய புகாரின் பேரில் கீழ ராஜகுல ராமன் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • லாரி மீது அரசு பஸ் மோதி இன்று அதிகாலை 5 மணியளவில் விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    பெங்களூரில் இருந்து 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு திட்டக்குடிக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை திட்டக்குடியைச் சேர்ந்த டிரைவர் தங்கராஜ் (வயது 47) ஓட்டி வந்தார். இந்த பஸ் உளுந்தூர்பேட்டைக்கு வராமல் எலவனாசூர்கோட்டை ஆசனூர் வழியாக சென்றது. அப்போது ஆசனூர் சிப்காட் அருகே ஒரு வழிப்பாதையில் சென்றது. அப்போது எதிரில் வந்த லாரி மீது அரசு பஸ் மோதி இன்று அதிகாலை 5 மணியளவில் விபத்துக்குள்ளானது. இதில் அரசு பஸ்சின் கண்டக்டர் தேவேந்திரன் (54), திட்டக்குடியைச் சேர்ந்த பயணிகள் இந்திராகாந்தி (58), நீலாவதி (50), மோகன் (55), பெரம்பலூர் ராஜேந்திரன் (55), பெங்களூரு சந்துரு (25), லாரி கிளினர் அஜித் (25) ஆகியோர் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எடக்கல் போலீசார், படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டும் என்பதால் ஒரு வழிப்பாதையில் அரசு பஸ் சென்றதால் இந்த விபத்து நடந்தது. இது குறித்து எடக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×