search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 196711"

    • உலியூர் வனப்பகுதியில் தனக்கு சொந்தமான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார்.
    • சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சர கத்திற்குட்பட்ட உலியூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(58). விவசாயி.

    இவர் உலியூர் வனப்பகுதியில் தனக்கு சொந்தமான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார்.

    அப்போது வனப்பகுதியில் புதர் மறைவில் இருந்த ஒற்றை யானை திடீரென ராதாகிருஷ்ணனை தாக்க முயற்சித்தது. யானை வருவதை பார்த்ததும் ராதாகிருஷ்ணன் திடீரென அங்கிருந்து அலறி அடித்து ஓடினார்.

    ஆனாலும் காட்டு யானை இவரை விடாமல் துரத்தி வந்து தூக்கி வீசியது. இதில் ராதாகிருஷ்ணனின் நெஞ்சு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காட்டு யானையை விரட்டிய பின் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பயணிகளை ஏற்றி கொண்டு சேரங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊட்டி

    பந்தலூர் அருகே சேரங்கோடு சோதனைசாவடியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 42). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலை பந்தலூரிலிருந்து தனது ஆட்டோவில் ராஜேந்திரன் (62) உள்பட 3 பயணிகளை ஏற்றி கொண்டு சேரங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மேங்கோ ரேஞ்ச்சில் பள்ளி சிறுவன் அப்துல்ரகுமான் 7 சாலை குறுக்கே ஓடி உள்ளான். இதில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ சிறுவன் மீது மோதியதோடு சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிறுவன் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்கு சுல்த்தான்பத்தேரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடக்க முயன்ற போது கரூரிலிருந்து நாமக்கல் நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு ஆட்டோ சின்னப்பகவுண்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • சரக்கு ஆட்டோவை அதிகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய வெங்கரை அருகே திட்டமேடு பகுதியை சேர்ந்தவரை பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா ஊஞ்சபாளையம் அருகே பொன்னேரிப்பட்டி பகுதி சேர்ந்தவர் சின்னப்பகவுண்டர் (வயது 80). விவசாயி. இவர் மாடு வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    சாலையை கடக்க முயன்ற போது கரூரிலிருந்து நாமக்கல் நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு ஆட்டோ சின்னப்பகவுண்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு சின்னப்பகவுண்டர் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில், சரக்கு ஆட்டோவை அதிகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய வெங்கரை அருகே திட்டமேடு பகுதியை சேர்ந்த தினகரன் (45) என்பவர் மீது பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இந்திரஜித் கூவமூலாவில் தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு வாங்கி உள்ளார்.
    • அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடோடி வந்து, காட்டுப்பன்றியை விரட்டினார்கள்.

    ஊட்டி

    பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் பகுதியை சேர்ந்தவர் இந்திரஜித் (வயது 52). விவசாயி. கூவமூலாவில் தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு வாங்கி உள்ளார். அந்த தேயிலை தோட்டத்தில் நேற்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மறைந்திருந்த காட்டுப்பன்றி அவரை திடீரென தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சத்தம் போட்டு கத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடோடி வந்து, காட்டுப்பன்றியை விரட்டினார்கள். பின்னர் படுகாயம் அடைந்த இந்திரஜித்தை மீட்டு சிகிச்சைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுறித்து தேவாலா வனச்சரகர் சஞ்சீவி, வருவாய் ஆய்வாளர் லட்சுமிசங்கர் கிராம நிர்வாக அலுவலர் கர்ணன், வனகாப்பாளர் அருண்குமார் மற்றும் வனத்துறையினர் ஆஸ்பத்திரிக்கு சென்று இந்திரஜித்துக்கு ஆறுதல் கூறினர்.

    • பஸ்சில் பயணித்த 15 மாணவிகள் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரகோட்டையில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு பலபகுதிகளில் இருந்து மாணவிகள் பஸ்சில்வந்து படித்து செல்கின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு சொந்தமான பஸ்சில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    கல்லூரி பஸ் மன்னார்குடி அருகே காளவாய்கரை பகுதியில் வந்த போது செருமங்கலம் கிராமத்தில் இருந்து மண் ஏற்றி வந்த லாரி, முன்னாள் சென்ற தனியார் கல்லூரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் கல்லூரி பேருந்தில் பயணித்த 15 மாணவிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    தகவல் அறிந்து வந்த மன்னார்குடி போலீசார் விபத்தில் காயமடைந்த மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புஷ்பராஜ் தேயிலை எஸ்டேட்டில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.
    • புஷ்பராஜூக்கு டாக்டர்கள் சிகிக்சை அளித்து வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பன்னிமேட்டை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 54). இவர் தேயிலை எஸ்டேட்டில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் பன்னிமேடு 22-வது பீல்டில் வேலை செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது தேயிலை செடிக்குள் இருந்து திடீரென கரடி வெளியே வந்தது. கரடியை பார்த்து அதிர்ச்சியடைந்த புஷ்பராஜ் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓட்டம் பிடித்தார். அப்போது கரடி அவரது இடது முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியில் கடித்தது.

    இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட தேயிலை தோட்டத்தில் வேலை செய்தவர்கள் ஓடி வந்து கரடியை விரட்டினர். பின்னர் காயங்களுடன் உயிருக்கு போராடிய புஷ்பராஜை மீட்டு உருளிக்கல்லில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிக்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து ஷேக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • ஆலங்குடி அருகே உருட்டு கட்டையால் தாக்கி வாலிபர் படுகாயம் அடைந்தார்
    • ராஜமாணிக்கம் தலைமறைவானதால் போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள கலிபுல்லா நகரைச்சேர்ந்தவர் செபஸ்தியான் மகன் அந்தோணிசாமி (வயது 44). கலிபுல்லா நகர் ஏ.டி. காலனியை சேர்ந்தவர் கணேசன் மகன்களான புஷ்பராஜ் (48), ராஜமாணிக்கம் ஆகிய இருவரும் அந்தோணிசாமி வீட்டின் அருகில் உள்ள ஆர்எஸ்பதி மரத்தை இருவரும் சேர்ந்து வெட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தோணிசாமி ஏன் மரத்தை வெட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு புஷ்பராஜ் மற்றும் ராஜமாணிக்கம் உருட்டு கட்டையால் அந்தோணிசாமியை தாக்கியுள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்தோணிசாமியை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இதுகுறித்து அந்தோணிசாமி ஆலங்குடி போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து புஷ்பராஜை கைது செய்தனர். பின்னர் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இதில் ராஜமாணிக்கம் தலைமறைவானதால் போலீசார் தேடி வருகின்றனர்.


    • சென்னையில் இருந்து சோளிங்கர் நோக்கி சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • திருத்தணி பைபாஸ் ரவுண்டானா ஒரு வழிபாதையில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

    திருத்தணி:

    திருத்தணி பெரிய தெரு பகுதியில் வசிப்பவர் பாபு. இவரது மகன் கார்த்தி (வயது 16). இவர் ஆர்.கே. பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை மாணவர் கார்த்தி மோட்டார் சைக்கிளில் திருத்தணி பைபாஸ் ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சென்னையில் இருந்து சோளிங்கர் நோக்கி சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் கார்த்தி சிக்கிக்கொண்டார். அவரது 2 கால்களும் நசுங்கியது. ஆபத்தான நிலையில் இருந்த கார்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    எப்போதும் பரபரப்பாக இருக்கும் திருத்தணி பைபாஸ் ரவுண்டானா ஒரு வழிபாதையில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

    • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே பழவிளை பூவன்குடி யிருப்பை சேர்ந்தவர் செல்லபெருமாள். இவரது மகன் மகேஸ்வரன் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவரது நண்பர் தர்மபுரத்தை சேர்ந்த ராஜன் (42). இவர் மகேஸ்வரனுடன் சேர்ந்து கட்டிட தொழில் செய்து வருகிறார்.

    நேற்று இருவரும் கருங்கல் பகுதிக்கு வேலைக்கு சென்றுவிட்டு மாலை மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். மோட்டார் சைக்கிளை மகேஸ்வரன் ஓட்டினார். ராஜன் பின்னால் இருந்தார்.

    மோட்டார் சைக்கிள் மணவாளக்குறிச்சி கடந்து வெள்ளமோடியில் செல்லும்போது எதிரே கோணத்தில் இருந்து முட்டம் நோக்கி சென்ற பைக் மகேஸ்வரன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்ப்பாராமல் மோதியது. இதில் 3 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர்.அப்பகுதியினர் 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மகேஸ்வரன் சுசீந்திரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், ராஜன் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், எதிரே வந்த தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டுடன் காடு வடக்கு தெருவை சேர்ந்த ரவினோ பாலவி (24) நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து மண வாளக்குறிச்சி போலீசார் ரவினோ பாலவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்த பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வந்தவாசி,பிப்.2-

    திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அடுத்த கீழ்நெடுங்கள் கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தனியார் பஸ் மூலம் மேல்மருவத்தூர் கோவிலுக்கு நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தனர்.

    பஸ்சை டிரைவர் தினேஷ் ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் பிருதூர் கிராமம் அருகே பஸ் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.

    அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை முந்த முயன்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் வந்தவாசி போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்த பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக 4 பேரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விபத்தில் நடந்து குறிப்பிடத்தக்கது. திண்டிவனம் ஆரணி, வேலூர், புறவழி சாலையில், சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அடிக்கடி விபத்து நடப்பதால் பொதுமக்கள் சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர்.* * *பஸ் கவிழ்ந்து கிடந்த காட்சி.

    • மணப்பாறை மெயின் ரோட்டில் சென்ற போது சம்பவம்
    • மோட்டார் சைக்கிள் மோதி தாய், மகன் படுகாயம் அடைந்தனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் பொருந்தலூர் ஊராட்சி தெலுங்கு பட்டி காலனியை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 32). இவர் தனது தாயார் வளர்மதியுடன் (52) மோட்டார் சைக்கிளில் தோகைமலை- மணப்பாறை மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பொன்னம்பட்டியை சேர்ந்த தீபன் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சத்யராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சத்யராஜ், வளர்மதி ஆகியோரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • வி.கைகாட்டியில் கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
    • அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் காவனூர் காலனி தெருவை சேர்ந்தவர் வெள்ளையத்தேவன் (வயது 34). இவர் தனது உறவினரான சக்தி தேவனுடன் (20) மளிகை பொருட்கள் வாங்குவதற்கு வி.கைகாட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் வெள்ளையத்தேவன், சக்தி தேவன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரைக்குறிச்சி பட்ட தெருவை சேர்ந்த கார் டிரைவர் கண்ணாயிரத்தை (32) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ×