search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 196711"

    • மதுரையில் இன்று அதிகாலை விபத்தில் வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் முதல் கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது.

    மதுரை

    மதுரை மேலமாசிவீதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது குடும்ப உறுப்பினர்களுடன் மினி வேனில் கும்பகோணத்துக்கு ஆன்மீக சுற்றுலா சென்றார். வேனில் 10 பெண்கள், ஒரு சிறுவன் உள்பட 24 பேர் பயணம் செய்தனர். அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு நேற்று அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் மதுரை அருகே உள்ள பாண்டிக்கோவில் ரிங் ரோட்டில் மினி வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அதே வேகத்தில் சாலை தடுப்பில் மோதி நடு ரோட்டில் கவிழ்ந்தது.

    வேனில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். நள்ளிரவு என்பதால் உடனடியாக யாரும் உதவிக்கு வரவில்லை. அந்த வழியாக வாகனத்தில் வந்த சிலர் மினி வேனில் சிக்கியவர்களை மீட்டனர்.

    மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பஞ்சவர்ணம் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து மீட்பு பணியில் ஈடு பட்டனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்த பெண்கள் உள்பட 16 பேரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்த தால் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கேரளா மாநிலம் ஐரா பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். தொழிலாளி. இவர் நேற்று மாலை மார்த்தாண்டம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திருவனந்தபுரம் நோக்கி வேகமாக சென்ற கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்தில் சிக்கிய காரை விட்டு விட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினcர்.

    அப்போது விபத்துக் குள்ளான காரில் சோதனை செய்தபோது ஒரு டன் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் மற்றும் அரிசியை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற டிரைவரை போலீசாரை வலைவீசி தேடி வருகினறனர்.

    • மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி தனியார் பஸ் மீது பின்பக்கமாக மோதியது.
    • மோதிய வேகத்தில் பஸ் டிரைவர் முன்பக்கமாக கீழே விழுந்து கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் இருந்து ஷாபூருக்கு தனியார் பஸ்சில் திருமண விழாவுக்காக 35 பேர் சென்று கொண்டிருந்தனர். மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி தனியார் பஸ் மீது பின்பக்கமாக மோதியது.

    மோதிய வேகத்தில் பஸ் டிரைவர் முன்பக்கமாக கீழே விழுந்து கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணித்த 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மணவாளக்குறிச்சி பாலம் அருகில் செல்லும் போது அங்கு வந்த வேன் மோதியது.
    • மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வேன் டிரைவர் பாலஜெகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி பிள்ளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் கேசவதாஸ் (வயது 52).

    இவர் மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் எலக்ட்ரீசி யனாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கேசவதாஸ் அம்மாண்டி விளையிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அவர் மணவாளக்குறிச்சி பாலம் அருகில் செல்லும் போது அங்கு வந்த வேன் மோதியது. இதில் கேசவதாஸ் படுகாயமடைந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மணவாள க்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வேன் டிரைவர் பாலஜெகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே மரத்திலிருந்து கீழே விழுந்த விவசாயி பலியானார்.
    • மரத்தில் இருந்த குரங்கு ஒன்று கீழே இறங்க இவரைப் பார்த்து வேகமாக வந்தது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே சித்தானங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி (வயது 55) விவசாயி . இவர் சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் உள்ள புளிய மர கிளைகளை வெட்ட மரத்தில் ஏறினார். இந்நிலையில் மரத்தில் இருந்த குரங்கு ஒன்று கீழே இறங்க இவரைப் பார்த்து வேகமாக வந்தது. அப்போது தண்டபாணி குரங்கு தன்னை கடிக்க வருகிறது என்று மரத்திலிருந்து கீழே குதித்தார்.

    இதில் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் தண்டபாணி யைமீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி தண்டபாணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பெரியம்மாவை காப்பாற்ற முயன்றவரையும் மின்சாரம் தாக்கியது.
    • படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் ஊராட்சி பெரியேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் சந்திரா (வயது 45).

    திருமணமாகாத இவர் தனது தங்கை மகன் 11-ம் வகுப்பு படிக்கும் மணிகண்டனுடன் வாழை கொல்லையில் மேய்ந்து கொண்டிருந்த தனது ஆட்டை ஓட்டச் சென்றார்.

    அப்போது காற்றின் காரணமாக அறுந்து விழுந்து கிடந்த மோட்டாருக்கு செல்லும் மின்சார கம்பியை எதிர்பாராத விதமாக சந்திரா மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    தனது பெரியம்மாவை காப்பாற்ற முயற்சித்த மணிகண்டனையும் மின்சாரம் தாக்கியது.

    இதில் சம்பவ இடத்திலேயே சந்திரா பரிதாபமாக உயிரிழந்தார்.

    படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பெரம்பூர் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
    • இவர்கள் 2 பேரும் பெரும்பாக்கத்தில் இருந்து கெடிலம் செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் (வயது 17). இவருடைய நண்பர் பிரேம்குமார். இவர்கள் 2 பேரும் பெரும்பாக்கத்தில் இருந்து கெடிலம் செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆவலம் அய்யனார் கோவில் என்ற இடத்தை கடக்கும்போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அருள் பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்த பிரேம்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • குழித்துறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதி
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட திக்குறிச்சி கடம்பற விளையைச் சேர்ந்தவர் ஜெனிஷா (வயது23). இவர் லேப் டெக்கரேஷன் படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

    சம்பத்தன்று வெட்டு மணியில் உள்ள குருசடிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அதே பகுதியைச் சேர்ந்த விஜய லட்சுமி ஏளனமாக பேசி தகராறு செய்ததாகவும் அவர் கல்லால் தாக்கிய தில் தலையில் காயம் அடைந்ததாகவும் மார்த்தாண்டம் போலீசில் ஜெனிஷா புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    தாக்குதலில் படுகாயம் அடைந்த ஜெனிஷா குழித்துறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

    • மனைவிக்கு தேவையான உடைகளை எடுப்பதற்காக முருகானந்தம் வீட்டிற்கு தனது ேமாட்டார் சைக்கிளில் சென்றார்.
    • எதிர்பாராத விதமாக மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பலி

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம்-மன்னார்குடி அருகே செருகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 36). இவரது மனைவி வனிதா.

    இவர் பிரசவத்திற்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிபட்டுள்ளார்.

    இந்நிலையில் மனைவிக்கு தேவையான உடைகளை எடுப்பதற்காக முருகானந்தம் வீட்டிற்கு தனது ேமாட்டார் சைக்கிளில் சென்றார்.

    பின்னர் உடைகளை எடுத்து கொண்டு சித்தமல்லி கடை தெருவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளிலில் நின்றிருந்த ஜெயபிரகாஷ் (40) என்பவர் மீது முருகானந்தம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

    இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    இதுகுறித்து பெருக வாழ்ந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று அருள் தனது குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்,

    விழுப்புரம்: 

    விழுப்புரம் அருகே வளவனூரை சேர்ந்தவர் முருகன் அருள் (வயது 29). அவரது மனைவி வேண்டாமிர்தம்(28) . இவர்களது மகன் வெற்றி(8). சம்பவத்தன்று அருள் தனது குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அசோகபுரி அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அருள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது, இதில் தவறி கீழே விழுந்த அருள், அவரது மனைவி வேண்டாமிர்தம், மகன் வெற்றி ஆகியோர் படுகாயம் அடைந்தனர், படுகாயம் அடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், இது குறித்து புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • அரசு பஸ்-சரக்கு வேன் மோதியதில் 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
    • சிலர் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கீழசெல்வனூரில் இருந்து இன்று காலை விவசாய கூலி வேலைக்காக ஆட்களை ஏற்றி கொண்டு சரக்கு வேன் சாயல்குடிக்கு புறப்பட்டது.

    அதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் நின்று கொண்டே பயணம் செய்தனர். கிழக்கு கடற்கரை சாலை மலட்டாறு அருகே வந்து கொண்டிருந்த போது சாயல்குடியில் இருந்து ராமநாதபுரம் சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக சரக்கு வேன் மோதி பயங்கரமாக உரசியது.

    இந்த விபத்தில் சரக்கு வேனில் நின்று பயணம் செய்த கீழசெல்வனூரை சேர்ந்த முருகேசன் மனைவி பூமா (45), சோமு மனைவி ஞானசுந்தரி, ராஜலிங்கம் மனைவி முனியம்மாள், சண்முகம் மனைவி லட்சுமி, நாராயணன் மனைவி ஆபிதா ஆகிய 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதில் அவர்களுக்கு கைகளில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. சிலர் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரத்தில் விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • பஸ்சில் பயணம் செய்த தேசூர், மேல்ஒலக்கூர், செஞ்சி, காஞ்சிபுரம் ஊரை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    வந்தவாசி:

    காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி தேசூர் வழியாக செஞ்சிக்கு தனியார் பஸ் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

    அப்போது வந்தவாசி அடுத்த திரக்கோவில் கிராமம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரத்தில் விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சில் பயணம் செய்த தேசூர், மேல்ஒலக்கூர், செஞ்சி, காஞ்சிபுரம் ஊரை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    தேசூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×