என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சத்துணவு"
- கர்ப்பிணி பெண்கள் மற்றும் உள்நோயாளிகளுக்கு அவித்த முட்டையுடன் சரிவிகித மதிய உணவு வழங்கப்பட்டது.
- வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், அரிமா சங்க அன்னசுரபி திட்ட தன்னார்வலர்கள் சிவனேசன், விஸ்வநாதன் மற்றும் செவிலியர்கள் உணவு பரிமாறினர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரிமா சங்கம் செயல்படுத்தி வரும் 'அன்னசுரபி' திட்டத்தின் கீழ் பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் உள்நோயாளிகளுக்கு அவித்த முட்டையுடன் சரிவிகித மதிய உணவு வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், அரிமா சங்க அன்னசுரபி திட்ட தன்னார்வலர்கள் சிவனேசன், விஸ்வநாதன் மற்றும் செவிலியர்கள் உணவு பரிமாறினர். தொடர்ந்து வாரம் இருமுறை பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் அன்னசுரபி திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படுமென அரிமா சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், மோதிலால் ஆகியோர் தெரிவித்தனர்.
- சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும்.
- காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் வாசுகி தலைமை தாங்கினார்.
அப்போது சிறப்பு பென்ஷன் ரூபாய் 6750 வழங்கிட வேண்டும் அரசுத் துறை காலிப் பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து காலமுறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்துறை சத்துணவு ஊழியர்க ளிடம் வழங்கிட வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கவலை ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- இந்த கூட்டத்திற்கு மாநில பொருளாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்
- பொதுக்குழு கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பல்லடம்:
தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொருளாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாநில பிரச்சார செயலாளர் பாஸ்கர் ஜோசப், ஊரக வளர்ச்சித் துறை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் மகேந்திரன், சாலை பணியாளர் சங்க மாநில நிர்வாகி ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழு கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் மாவட்ட தலைவராக தமிழரசன், செயலாளராக தேவி, பொருளாளராக பழனிசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் ஒன்றிய தலைவராக அக்கம்மாள், செயலாளராக ராமசாமி, பொருளாளராக ஜோதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வூதியத்தை உயர்த்தி தர வேண்டும், பதவி உயர்வு மற்றும் அரசு மானியத்தை அதிகப்படுத்தி தரவேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விழா முடிவில் ஒன்றிய பொருளாளர் ஜோதி நன்றி கூறினார்.
- காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் வசம் ஒப்படைக்க வேண்டும்.
- சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில மைய முடிவின்படி, தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் வசம் ஒப்படைக்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சித்ரா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ராணி துவக்கவுரை–யாற்றினார். மாவட்டச் செயலாளர் இராஜூ விளக்கவுரை–யாற்றினார். அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கோவை.சுப்பிரமணியம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் முருகையன், நெடுஞ்சாலைத்துறை சாலைப்ப–ணியாளர் சங்க நிர்வாகி ரமேஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அந்துவன்சே–ரல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பழகன் சிறப்புரை–யாற்றினார். நாகைமாலி எம்.எல்.ஏ. நிறைவுரை யாற்றினார். மாவட்டப் பொருளாளர் பாலாம்பாள் நன்றி கூறினார். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் ஜானி டாம் வர்க்கீசிடம் அளித்தனர்.
- மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
- காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்
நாகர்கோவில் :
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெபமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கவிதா, செயலாளர் பொன் பாக்கிய தீபா, டயானா பிரபாராணி, லூயிஸ் மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தங்களது கண்களில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.
- வேதாரண்யம் கோட்டாச்சியர் அலுவலகம் எதிரே சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
- காலை உணவு திட்டத்தை தனியாரிடம் விடுவதை கைவிட்டு சத்துணவு அங்கன்வாடி பணியாளர் வைத்து நடத்த வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் கோட்டாச்சியர் அலுவலகம் எதிரே சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களின் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு அங்கன்வாடிகளில்பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படியுடன் ரூ 6,750 மாதந்திர சிறப்பு ஓய்வு ஊழியம் வழங்க வேண்டும் சத்துணவு அங்கன்வாடி பணியாற்றவர்களுக்கு காலம் வரை ஒன்றியத்தில் 50 சதவீதம் பணியாளர்களை நியமிக்க வேண்டும் காலை உணவு திட்டத்தை தனியாரிடம் விடுவதை கைவிட்டு சத்துணவு அங்கன்வாடி பணியாளர் வைத்து நடத்த வேண்டும்போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சத்துணவு அங்கன்வாடி பணியாளர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
- இந்த இயக்கம் இன்று 50 ஆண்டுகளை கடந்து 51-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
- எடப்பாடி, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் காந்தி தலைமை தாங்கினார்.
அ.தி.மு.க. அவைத்தலைவர் திருஞானசம்பந்தம், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் துரை.செந்தில், தஞ்சை ஒன்றிய செயலாளர் நாகத்திகலியமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருவாரூர் மாவட்ட செயலாளருமான காமராஜ் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. பேச்சாளர்கள் நள்ளாற்று நடராஜன், மணிமுரசு, ருத்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
உரிமையை பாதுகாத்தது
கூட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி- சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:- தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை தூக்கி எறிந்த போது அவர் அ.தி.மு.க.வை தொடங்கினார்.
அப்போது இந்த கட்சி 100 நாட்களை தாண்டுமா? என்று ஏளனம் பேசினர். ஆனால் இந்த இயக்கம் இன்று 50 ஆண்டுகளை கடந்து 51-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதில் 32 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்துள்ளது.
இந்த காலக்கட்டத்தில் தமிழர்களின் உரிமையை பாதுகாத்த, நிலை நாட்டிய கட்சி அ.தி.மு.க.. இந்த ஆட்சியில் தான் தமிழகத்தில் பேர் சொல்லும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
ஜெயலலிதா விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். எடப்பாடி பழனிசாமி, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.
ஆனால் தி.மு.க. ஆட்சி சொன்னதை கூட செய்யாத ஆட்சியாக உள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். கேட்டால் மத்திய அரசு மீது பழி போடுகிறார்கள்.
மக்களும் பயப்படுகிறார்கள்
தி.மு.க.வின் 16 மாத ஆட்சியில் எந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர் என்று கூற முடியுமா? ஆனால் காவிரி பிரச்சினையில் தொடர்ந்து பேராடியது அ.தி.மு.க. தான். ஆனால் காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றவர் கருணாநிதி. உலகில் பெண்களுக்கு எந்த பிரச்சினை நடந்தாலும் உடனடியாக குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. ஆனால் இன்று தி.மு.க. ஆட்சியை பார்த்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் அல்ல, மக்களும் பயப்படுகிறார்கள்.
இனி எப்போதும், ஏன் நாளையே தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த கூட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், சேகர், கோவிந்தராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மலைஅய்யன், ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் பாலை.ரவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒரத்தநாடு நகர செயலாளர் கதிரேசன், கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, திராவிட நகர கூட்டுறவு வங்கி தலைவர் பஞ்சாபிகேசன், ஒரத்தநாடு ஐ.டி.விங்க் நகர செயலாளர் கதிரேசன் , மாவட்ட பொருளாளர் தம்பித்துரை, மாணவர் அணி முருகேசன், விளார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோமரத்தின சுந்தரம், கவுன்சிலர்கள் கோபால், யு.என்.கேசவன், காந்திமதி, தெட்சிணாமூர்த்தி, கலைவாணி சிவக்குமார்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் வக்கீல் சரவணன் நன்றி கூறினார்.
- இதற்கு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார்.
- ஒன்றிய செயலாளர் லதா விளக்க உரையாற்றினார்.
தஞ்சாவூர்:
அரசு பள்ளி மாணவ -மாணவிகளுக்கு பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் லதா விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க வட்ட கிளை செயலாளர் அஜய்ராஜ் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
- மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
- பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட உணவின் தன்மை குறித்த முடிவுகள் நாளைக்குள் தெரிய வரும்
நாகர்கோவில் :
நாகர்கோவில் கோட்டார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் கள் சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் கலெக்டர் அரவிந்த் மற்றும் அதிகா ரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.
மாநகராட்சி அதிகாரிகளும் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும், மாணவிகள் சாப்பிட்ட உணவை ஆய்வு செய்தனர். பின்னர் அந்த உணவை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று வந்த 25 மாணவிகளில் 21 பேர் நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் ஆனார்கள். 4 மாணவிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
டாக்டர்கள் மாணவிகளை கண்காணித்து வந்த நிலையில் நேற்று மாலை மேலும் 4 மாணவிகளும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மாணவிகள் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் குழுவினர் பள்ளிகளில் தொடர்ந்து ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
மாணவிகள் சாப்பிட்ட உணவில் ஏதாவது பிரச்சனை உள்ளதா என்பது பரிசோதனை அறிக்கை முடிவு கிடைத்த பிறகு தெரியவரும். பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட உணவின் தன்மை குறித்த முடிவுகள் நாளைக்குள் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உணவு தயார் செய்ததில் குறைபாடுகள் ஏதும் தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட சத்துணவு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
- கடலூர் மாநகராட்சி பள்ளியில் சத்துணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
- பள்ளிகளை தூய்மையாக பாதுகாத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பத்தில் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன், செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளி வளாகம் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா? அரசு சார்பில் வழங்கப்படும் சத்துணவு சரியான முறையில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறதா? மேலும் தரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா? சத்துணவுக்காக வழங்கப்பட்டுள்ள பொருட்கள் உள்ளதா? என்பதனை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய சத்துணவு தரமாக வழங்குவதோடு சரியான முறையில் வழங்க வேண்டும் மேலும் பள்ளிகளை தூய்மையாக பாதுகாத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் என் குப்பை என் உரிமை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. அப்போது உதவி செயற்பொறியாளர் மகாதேவன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சுபாஷிணி ராஜா, பாலசுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
- பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
இங்கு சுமார் 250 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று மாணவர்களின் பெற்றோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது போதிய கழிவறை வசதி இல்லை, வகுப்பறை ஜன்னல்கள் உடைந்து காணப்படுகிறது. பள்ளியை சுற்றி சுற்றுசுவர் இல்லாததால் மாடுகள் பள்ளிக்குள் புகுந்து விடுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து துரைசந்திரசேகர் எம்.எல்.ஏ. பள்ளியின் சமையலறைக்கு சென்று பார்வையிட்டார். அப்போது மாணவர்களுக்கு வழங்க தயார் செய்யப்பட்டு இருந்த சத்துணவை சாப்பிட்டு தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.
மேலும் ஆசிரியரிடம் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அப்போது ஊராட்சி தலைவர் பவானி கங்கை அமரன், தலைமை ஆசிரியர் பியூலா மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
திருச்செங்கோட்டை அடுத்த வட்டூரை சேர்ந்தவர் குமாரசாமி. இவர் ஆண்டிப் பாளையத்தில் கிறிஸ்டி கிரைடு கிராம் இண்டஸ்ட்ரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சத்துணவு முட்டை, சத்து மாவு, ரேசன் கடைகளுக்கு பருப்பு ஆகியவற்றை வினியோகம் செய்து வருகிறது.
இந்த நிறுவனம் போலி கம்பெனிகள் மூலம் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வரிஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு ஏராளமான புகார்கள் குவிந்தன.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5-ந் தேதி முதல் திருச்செங்கோட்டில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
வட்டூரில் உள்ள குமாரசாமி வீடு, அவரது உறவினர் வீடுகள், மற்றும் ஆடிட்டர்கள் ராமச்சந்திரன், சங்கர் ஆகியோரது வீடுகள் உள்பட நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்குகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து தீவிர சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனை சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, டெல்லி என மொத்தம் 76 இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் பருப்பு, சத்து மாவு ஆகியவை சப்ளை செய்யப்படுகிறது. இக்கழகத்தின் மேலாண்மை இயக்குனராக உள்ள ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி சுதாதேவி, குமாரசாமியின் உறவினர் ஆவார்.
இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் ஆண்டிப்பாளையம் அருகே உள்ள கொல்லம்பட்டி ஆகும். இவர் பருப்பு, சத்து மாவு சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்,
இதையடுத்து சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 38 மணி நேரம் நடந்த இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று 3-வது நாளாக குமாரசாமி வீடு, நிறுவனம் உள்பட 20 இடங்களில் சோதனை நடந்தது. இன்று 4-வது நாளாக கிறிஸ்டி நிறுவனத்தில் சோதனை நடந்து வருகிறது.
இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே முதல் நாள் நடந்த சோதனையில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக நடந்த சோதனையில் பலகோடி ரூபாய் கணக்கில் வராத பணமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 17 கோடி ரொக்கப்பணமும், 10 கிலோ தங்க நகைகளும் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் வெளிநாட்டு பணங்களும் அடங்கும். மேலும் ஏராளமான சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சத்துணவு திட்டத்திற்காக 2017-2018-ம் ஆண்டு 95 கோடி முட்டை சப்ளை செய்வதற்காக கிறிஸ்டி நிறுவனம் ஒரு முட்டை 434 காசு வீதம் 412 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளது. இதில் சில முக்கிய பிரமுகர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆவணங்களை மதிப்பீடு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்த பணி முழுவதும் முடிவடைந்த பின்னர் தான் வரி ஏய்ப்பு, போலி நிறுவனங்கள் மூலம் நடந்த பண பரிமாற்றம் ஆகியவை பற்றிய முழு விவரம் தெரியவரும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்டி நிறுவன அதிபர் குமாரசாமியிடம் வருமான வரித்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சிலரிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அடுத்த வாரம் அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
இதனால் கிறிஸ்டி நிறுவனத்துடன் தொடர்புடைய பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
குமாரசாமி பல வங்கிகளில் ஏராளமான லாக்கர்களை பயன்படுத்தி வருகிறார். இந்த லாக்கர்களை திறந்து ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைக்கலாம் என்று தெரிகிறது.
வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையின் அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவரை இல்லாத அளவிற்கு தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்று வரும் சோதனை திருச்செங்கோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Eggnutritioncorruption
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்