search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கோட்டை"

    • சுவாமி விவேகானந்த ஆசிரமத்தின் முப்பெரும் விழா செங்கோட்டையில் நடைபெற்றது.
    • ஆதரவற்ற தாய்மார்கள் சுமார் 50பேருக்கு ஆடைகள் வழங்கப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை சேனைத்தலைவா் சமுதாய நலக்கூடத்தில் திருக்குற்றாலம் சுவாமி விவேகானந்தா ஆசிரமம் சார்பில் சாரதா ஆசிரமத்தின் 25-வது ஆண்டு நிறைவு விழா, சுவாமி விவேகானந்த ஆசிரமத்தின் 35-வது ஆண்டு விழா, ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் 125-வது ஜெயந்திவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பெருங்குளம் செங்கோல் ஆதினம் 103-வது ஆதீன கர்த்தர் ஸ்ரீலஸ்ரீசிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார். தொழிலதிபர்கள் பொறியாளா் லிங்கராஜ், சா மில் உரிமையாளா்கள் லால்ஜீ படேல், மோகன்படேல், சீவ்கன்படேல், காந்தி சேவா மைய நிர்வாகி ராம்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

    தென்காசி திருவள்ளுவா் கழக செயலா் சிவராம கிருஷ்ணன் வரவேற்றார். செங்கோட்டை காந்தி சேவா மைய நிறுவனா் விவேகானந்தன், திருக்குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லுாரி முதல்வா் ஜெயநிலாசுந்திரி, மணி மேகலை மன்றம் பொதுச்செயலாளா் கோதண்டம், செங்கோட்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிகு லேஷன் பள்ளி தாளாளா் ராணி ராம்மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா்.

    பள்ளிகளில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, பாட்டுப்போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ- மாணவியா்களுக்கு சமூக ஆர்வலா்கள் பிரபாமுரளி, ரமீலாமோகன்படேல், சந்திரிகாதிலீப்படேல், கான்கதாலலித்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கினா். பின்னா் ஆதரவற்ற தாய்மார்கள் சுமார் 50பேருக்கு ஆடைகள் வழங்கப்பட்டது. 5பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

    இதனையடுத்து சுவாமி விவேகானந்தா ஆசிரம ஸ்ரீமத் சுவாமி அகிலானந்தஜீ, ஆத்மபிரியா மாதாஜீ ஆசியுரை வழங்கினா்.

    நிகழ்ச்சியில் விவேகானந்தா கேந்திர மாவட்ட பொறுப்பாளா் கருப்பசாமி, கேந்திர தொண்டா்கள் கோமதி நாயகம், பாலகிருஷ்ணன், அய்யப்பன், நகர்மன்ற உறுப்பி னா்கள் பொன்னுலிங்கம் என்ற சுதன், செண்பகராஜன், பொதுமக்கள், சமூக ஆர்வலா்கள், உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் செங்கோட்டை சமூக ஆர்வலா் கல்யாண குமார் நன்றி கூறினார்.

    • ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நாளை முதல் நடைபெற உள்ளது.
    • வண்டி எண் 06663 மற்றும் 06664 ஆகிய முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் 6 நாட்களுக்கு ரத்து செய்யப்படும்.

    தென்காசி:

    தென்னக ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜபாளையம் - சங்கரன் கோவில் ரெயில்வே வழித்தடத்தில் ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நாளை முதல் நடைபெற உள்ளதால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை ரெயில் ( வண்டி எண் 06663 ) மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) ஆகிய முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் நாளை (5-ந்தேதி) முதல் வருகிற 10 வரை 6 நாட்களுக்கு ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • விநாயகருக்கு பல்வேறு வண்ணமயமான நறுமண பூக்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

    செங்கோட்டை:

    நாடெங்கிலும் விநாயகர் சதுர்த்தி விழா மேளதாளங்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.தமிழகத்தில் பல இடங்களில் விநாயகர் திரு உருவ சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு யோகங்கள் ஹோமங்களுடன் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டது. செங்கோட்டை செக்கடி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதன் முக்கிய நிகழ்ச்சியான விநாயகர் சதுர்த்தி விழா காலை 7.00 மணிக்கு கும்பபூஜை ஜபம், ஹோமத்துடன் 25 பொருட்களை கொண்டு நறுமண சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு செக்கடி விநாயகர் பல்வேறு வண்ணமயமான நறுமண பூக்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. தர்மஸம்வர்த்தினி பஜனை மண்டலி சார்பில் பக்தி பாடல்கள் நிகழ்த்தபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தர் பட்டர் செய்திருந்தார்.

    • நீரோடைகளில் அணை கட்டி அதை நீர்வீழ்ச்சிகளாக கட்டண அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளித்தனர்.
    • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனியார் செயற்கை நீர்வீழ்ச்சிகளை அகற்றும் பணி தொடங்கியது.

    கடையநல்லூர்:

    செங்கோட்டை தாலுகாவில் உள்ள மேக்கரை கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து வரும் நீரோடைகளில் அணை கட்டி அதை நீர்வீழ்ச்சிகளாக கட்டண அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளித்தனர்.

    இதனால் விவசாயத்திற்கு பயன்படக்கூடிய நீர் மாசடைந்து காணப்படு வதாக விவசாய சங்கத்தினர் மாவட்ட கலெக்டரிடம் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து நீரோடைகளை மறித்து கட்டப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சிகளை அகற்ற மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து, கடந்த 1-ந் தேதியில் இருந்து பல கட்டங்களாக அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

    இந்த பணியில் அதிகாரிகள் பாரபட்சம். காட்டுவதாகவும், கடந்த 2 தினங்களாக எந்த பணியும் நடைபெறாமல் இருப்பதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக சில முக்கிய பிரமுகர்களின் அழுத்தத்தின் காரணமாக அந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டதாக பேசப்பட்டு வந்த நிலையில் நேற்று மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனியார் செயற்கை நீர்வீழ்ச்சிகளை அகற்றும் பணி சிவகிரி மற்றும் செங்கோட்டை தாசில்தார்கள் முன்னி லையில் தொடங்கியது.

    பாதுகாப்பு பணியில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆக்கிரமித்து கட்டப்பட்ட 35 நீர்வீழ்ச்சிகளில் இதுவரை 25 நீர்வீழ்ச்சிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், நேற்று திடீரென கலெக்டர் ஆகாஷ் மற்றும் மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணராஜ் ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டர்.

    அப்போது கலெக்டர் பாரபட்சம் இல்லாமல் அனைத்து ஆக்கிரமிப்பு நீர்வீழ்ச்சிகளையும் அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.

    • கேரளாவில் இருந்து புளியரை சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களும் பிரானூரை கடந்தே செல்ல வேண்டும்.
    • சாலையில் மழைநீர் தேங்குவதால் பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ளது பிரானூர் பார்டர். இது தமிழக -கேரளாவை இணைக்கும் முக்கிய பகுதியாக விளங்குகிறது.

    முக்கிய சாலை

    கேரளாவிற்கு செல்லவும், கேரளாவில் இருந்து புளியரை சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களும் பிரானூரை கடந்தே செல்ல வேண்டும். இதனால் தினசரி ஆயிரக்கனக்கான வாகனங்கள் இப்பகுதியை கடந்து செல்கிறது.

    இதில் பிரானூர் பார்டர் திப்பாச்சியம்மன் கோவில் பின்புறம் குற்றாலம் இணைப்பு சாலை தேசிய நெடுஞ்சாலை எல்லையில் அமைந்துள்ளது. இச்சாலை வழியாகத்தான் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.

    பழுதான சாலை

    இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை எல்லையில் அமைந்துள்ள பிரானூர் பார்டர் திப்பாச்சியம்மன் கோவில் அருகாமையில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது.

    மேலும் கழிவுநீர் ஓடை சீரமைக்கப் படாததால் பருவமழை காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    பிரானூர் முதல் புளியரை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகளவில் காணப்படும் இது போன்ற பள்ளங்கலால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும், எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு நடவடிகை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வவர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பயணிகளின் வசதிக்காக சில ரெயில்களின் முன்பதிவு பெட்டிகள் ‘டிரிசர்வ்டு’ (Dereserved) பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகிறது.
    • ‘டிரிசர்வ்டு’ரெயில் பெட்டிகளில் பயணம் செய்ய புதிய சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.

    செங்கோட்டை:

    ரெயிலில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு பயண சீட்டு வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். குறுகிய தூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக சில ரெயில்களின் முன்பதிவு பெட்டிகள் 'டிரிசர்வ்டு' (Dereserved) பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி ரெயிலில் (16723) அக்டோபர் 19-ந் தேதி முதல் எஸ் 10 மற்றும் எஸ்11 ஆகிய முன்பதிவு பெட்டிகள் நெல்லை- கொல்லம் இடையேயும், கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி ரெயிலில் (16724) அக்டோபர் 20-ந் தேதி முதல் எஸ்11 என்ற பெட்டி கொல்லம்-நெல்லை இடையேயும் 'டிரிசர்வ்டு' பெட்டிகளாக இயக்கப்படும்.

    மேலும் தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக இயக்கப்படும் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் ரெயில்களில் (16851/16852) எஸ் 12, எஸ் 13 ஆகிய பெட்டிகள் அக்டோபர் 24-ந் தேதி முதல் மானாமதுரை - ராமேஸ்வரம் இடையேயும் அக்டோபர் 26 -ந் தேதி முதல் ராமேஸ்வரம் - மானாமதுரை இடையேயும் 'டிரிசர்வ்டு' பெட்டிகளாக இயக்கப்படும். அதேபோல தூத்துக்குடி - மைசூர் ரெயிலில் (16235) அக்டோபர் 28 -ந் தேதி முதல் எஸ் 10 மற்றும் எஸ் 11 ஆகிய முன்பதிவு பெட்டிகள் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும்.

    இந்த 'டிரிசர்வ்டு'ரெயில் பெட்டிகளில் பயணம் செய்ய புதிய சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக தூத்துக்குடி - மதுரை இடையே ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவற்ற கட்டணம் ரூ.70, முன்பதிவு கட்டணம் ரூ.145, டிரிசர்வ்டு கட்டணம் ரூ.110 என வரையறுக்கப்பட்டுள்ளது.

    • கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • வழுக்குமர போட்டியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு வழுக்கு மரம் ஏறினர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் சின்ன சிறு குழந்தைகள் கிருஷ்ணன் வேடம் அணிந்து கையில் புல்லாங்குழலுடன் காட்சி தந்தனர். அதனைத்தொடர்ந்து இளைஞர்களுக்கான வழுக்குமர போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு வழுக்கு மரம் ஏறினர்.பெரியவர்கள் மற்றும் விழா கமிட்டியினர் விழாவில் கலந்துகொண்டு குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளுடன் பரிசு தொகையினையும் வழங்கினர்.

    • பருவ மழை சரியான நேரத்தில் பெய்ததால் அணைகள், குளங்கள், , ஆறுகள் என எல்லா இடங்களிலும் தண்ணீர் செழித்து காணப்பட்டது.
    • சோள மூடைகள் தரம்வாரியாக பிரித்து தற்போது ரூ. 1,000 முதல் 2,000 வரை மட்டுமே விற்க வேண்டி உள்ளது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையை அடுத்துள்ள சுப்பிரமணியபுரம், கணக்கபிள்ளைவலசை, இலத்தூர், அச்சன்புதூர், சீவநல்லூர், கொடிகுறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயி கள் சுமார் 1000 ஏக்கருக்கும் மேலான மாணாவாரி பயிரான மருத்துவ குணம் வாய்ந்த நாட்டு சோளம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.

    கடந்த சில ஆண்டுகளாக போதிய வருமானம் கிடைக்காததால் தற்போது பெரும்பாலான பகுதிகளில் பூ மகசூல் என சொல்லப்படும் கேப்பை சோளம், மொச்சை, தக்காளி, வெண்டை, கத்தரிக்காய் உள்ளிட்ட பயிர்களை பயிரிடாமல் தரிசாகவே போட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை சரியான நேரத்தில் தொடங்கி பெய்ததால் நிலத்தடி நீர் பெறுகி அணைகள், குளங்கள், கால்வாய்கள், ஓடைகள், ஆறுகள் என எல்லா இடங்களிலும் தண்ணீர் செழித்து காணப்பட்டது.

    இதனால் செங்கோட்டை தாலுகா இலத்தூர் பகுதி விவசாயிகள் தக்காளி, வெங்காயம், வாழை, நெல், மற்றும் சோளம் போன்ற வற்றை சாகுபடி செய்தனர்.

    ஆனால் தென்மேற்கு பருவ மழை உரிய நேரத்தில் பெய்தும் உழவு நடவு, ஆள்பற்றாக்குறை, விதை விலை உயர்வு போன்ற பணிகளுக்கு தொடர் நஷ்டம் போன்ற பல்வேறு காரணங்களால் இப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் நாட்டு சோளம் விவசாயிகள் பயிரிட்டு சாகுபடி செய்து அறுவடைநேரத்தில் போதிய விலை இல்லாததால் தாங்கள் கடந்தாண்டை போல் இந்தாண்டும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறுகின்றனர்.

    இதுபற்றி விவசாயி சோழராஜன் கூறியதாவது:-

    சோளம் விதைத்து சுமார் 80- 90 நாட்கள் வரை ஏக்கருக்கு சுமார் 18 முதல் 20 ஆயிரம் வரை செலவு செய்து விதை, உழவு, களையெடுத்து பாதுகாத்து விதைத்து தற்போது அறுவடைக்கு தயாரான நேரத்தில் ஆள் பற்றாக்குறையால் அதிக சம்பளம் கொடுத்து அறுவடை செய்த மூடைகள் தரம்வாரியாக பிரித்து தற்போது ரூ. 1,000 முதல் 2,000 வரை மட்டுமே விற்க வேண்டி உள்ளது.

    மேலும் எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லாமலும் அதற்கேற்ப விலையும் இல்லாததால் சோளம் பயிரிட்ட விவசாயிகள் ஓவ்வொரு ஆண்டும் நஷ்டம் அடைந்துள்ளனர். செலவு செய்த பணம் கிடைக்காமல் கடனாளியாகதான் இருந்து வருகிறோம் என வேத னையுடன் தெரிவித்தார்.

    • வழக்கமாக இப்பகுதியில் சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும்
    • வெளி மாவட்டங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் சின்ன வெங்காயம் விலை குறைந்துவிட்டதாக வியாபாரிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களான இலத்தூர், அச்சன்புதூர், சீவநல்லூர், கரிசல் குடியிருப்பு, சிவராமபேட்டை உள்ளிட்ட பகுதி களில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது.

    இந்த பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக பூ மகசூலான தக்காளி, வெண்டை, சின்ன வெங்காயம், மிளகாய், சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். வழக்கமாக சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும் நிலையில், மழை பொய்த்ததால் 500 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே நடைபெற்றது.

    கடந்த மாதத்தில் இருந்து சின்ன வெங்காயம் எடுக்கும் பணி தொடங்கியது. தொடக்கத்தில் அதன் விலை ரூ.35 ஆக இருந்த நிலையில், அதிக சாகுபடி காரணமாக அதன் விலை தற்போது ரூ.15-க்கும் குறைவாக சென்றுவிட்டது.

    மேலும் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்தும் வரத்து அதிகரித்துள்ளதால் சின்ன வெங்காயம் விலை மிகவும் குறைந்துவிட்டதாக வியாபாரிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

    இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது:-

    2 மாத பயி ரான சின்ன வெங்காயத்திற்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும். விளைவதற்க்கு ஏற்ற நிலமாக உள்ளதால் கூடுதலாக பயிர் செய்கிறோம்.

    ஒரு ஏக்கருக்கு உழுவது முதல் களையடுத்தல், அறுவடை வரை ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 75 ஆயிரம் வரை செலவாகிறது. தொடக்கத்தில் ரூ.40 வரை கிடைத்ததால் லாபமாக இருந்த நிலையில் தற்போது ரூ.15-க்கு விலை போகிறது.

    கோரிக்கை

    இதனால் எங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வரும் பெரும் நஷ்டத்தால் பெரும்பாலோர் சின்னவெங்காயம் நடவை கைவிட்டு வருகின்றனர். பாடுபட்ட நாங்கள் லாபம் ஈட்ட முடியாத நிலையில் இடைத்தரகர்கள் அதிக லாபம் சம்பாதிக்கின்றனர்.

    எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசே உரிய விலை நிர்ணயிக்கவும், மழைகாலங்களில் உரிய முறையில் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் என வேதனையுடன் தெரிவிகின்றனர்.

    • செங்கோட்டை அருகே இலவச உடல்பரிசோதனை, இலவச கண்பரிசோதனை, பல் பரிசோதனை முகாம் நடந்தது.
    • முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று சென்றனா்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள வல்லம் நேஷனல் பப்ளிக் பள்ளி வளாகத்தில் வல்லம் ஷிபா மெடிக்கல், கடையநல்லுார் கே.எம்.எஸ். மருத்துவமனை, நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச உடல்பரிசோதனை, இலவச கண்பரிசோதனை, பல் பரிசோதனை முகாம் நடந்தது.

    முகாமில் கடையநல்லுார் கே.எம்.எஸ். மருத்துவமனை அறக்கட்டளை பொறுப்பாளா் அப்துல்ரஷீத் தலைமை தாங்கினார். தலைமை மருத்துவா் டாக்டா் முஹம்மதுபைசல், மகளிர் நல சிறப்பு மருத்துவா் டாக்டா் இஸ்மாயில்ஜாஸ்மின், பல் மருத்துவா் டாக்டா் மைதீன்அபுதாஹீா். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா் டாக்டா் அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மருத்துவா்கள் தலைமையில் மருத்துவ குழுவினா் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினா். முகாமில் கலந்து கொண்ட அனைத்து நபர்களுக்கும் கே.எம்.எஸ். மருத்துவமனையின் ஹெல்த் அட்டை வழங்கப்பட்டது.

    அதன் மூலம் கே.எம்.எஸ். மருத்துவமனையின் சிகிச்சை சர்வீஸ் அனைத்திலும் 25சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். முகாமில் வல்லம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி அப்துல்மஜீத் ஓருங்கிணைத்து செய்திருந்தார்.

    • பூமி பூஜையை கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவா்,உறுப்பினா்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சி முத்துசாமி பூங்காவில் ரூ.1கோடியே 59லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    பூஜையை கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி, துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினா்கள் எஸ்எம்.ரஹீம், முருகையா, பேபிரெசவுபாத்திமா, இசக்கித்துரைபாண்டியன், சுப்பிரமணியன், ஜெக நாதன், முத்துப்பாண்டி, இசக்கியம்மாள், சுடர் ஒளி, வேம்புராஜ், பொன்னு லிங்கம் (சுதன்), ராம்குமார், செண்பகராஜன், அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவா் வீபி.மூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளா் பொய்கை மாரியப்பன், நகர செயலாளா் கணேசன், எம்.ஜி.ஆர். இளைஞரணி சக்திவேல், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள் செந்தில் ஆறுமுகம், ராஜா கோபாலன், திலகர், ஞானராஜ், தி.மு.க. நகர துணைச்செயலாளா் குட்டி ராஜா, அவைத்தலைவா் மணிகண்டன், நகர இலக்கிய அணி மாடசாமி, வார்டு செயலாளா் கோபால்யாதவ், இசக்கி முத்து, வனத்துறை விக்னேஷ், சூர்யா, ஹரிஹர லெட்சுமணன், ஒப்பந்தகாரர் ஸ்ரீசபரி சாஸ்தா இன்ப்ரா பிரைவேட் லிமிடேட் நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • அணைப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து மிதமான தண்ணீர் விழுந்து வருகிறது.
    • செங்கோட்டை ரெயில் நிலைய 1,2 பிளாட்பாரங்களில் போடப்பட்டுள்ள கிரானைட் தளம் வழு வழுப்பாக உள்ளது. இதனால் பயணிகள் வழுக்கி விழுந்து வருகின்றனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகள் மற்றும் அணைப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து மிதமான தண்ணீர் விழுந்து வருகிறது.

    குற்றாலம் சீசன்

    குற்றாலம் சீசன் தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இதனால் தென்காசி, செங்கோட்டை ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில் ஏராளமானவர்கள் குவிகிறார்கள்.

    கூடுதல் கவுண்டர்

    எனவே குற்றாலம் சீசன் காலம் முடியும் வரை செங்கோட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் நலன்கருதி சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறக்க வேண்டும் என பொதுமக்களும், ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

    குற்றாலம் சீசனையொட்டி கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ், செங்கோட்டை - நெல்லை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ், செங்கோட்டை -சென்னை சிலம்பு எக்ஸ் பிரஸ், செங்கோட்டை- சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ெரயில்கள் மூலம் ஏராளமான பயணிகள் செங்கோட்டைக்கு வந்துசெல்கிறார்கள்.

    அறிவிப்பு

    இதனால் டிக்கட் கவுண்டர்களில் அதிகமான கூட்டம் காணப்படுகிறது. எனவே மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் குற்றால சீசனை கருதி செங்கோட்டை ரெயில் நிலையத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு டிக்கட் கவுண்டர்கள் திறக்க வேண்டும்.

    செங்கோட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்களின் வருகை- புறப்பாடுகளை அறிவிக்கும் ஒலிபெருக்கிகள் பழுதாகி உள்ளது. அதனை சீரமைத்து செயல்படுத்த வேண்டும்.

    பயணிகள் பாதிப்பு

    முதல் பிளாட்பாரத்தில் நிற்கும் கொல்லம், மதுரை, நெல்லை ரெயில்களில் பயணிக்கும் பயணிகள் ரெயில் மாறி ஏறிவிட்டு பின்னர் விபரம் அறிந்ததும் அவசரமாக இறங்கி மாற்று ரெயிலில் செல்கிறார்கள். செங்கோட்டை ரெயில் நிலைய 1,2 பிளாட்பாரங்களில் போடப்பட்டுள்ள கிரானைட் தளம் வழு வழுப்பாக உள்ளது.

    இதனால் பயணிகள் வழுக்கி விழுந்து வருகின்றனர். வழுக்கும் தன்மையுடைய கிரானைட் தளங்களுக்கு பதிலாக சொர சொரப்பான தளங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×