search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கோட்டை"

    • நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத்துணைத்தலைவா் ஆதிமூலம் தலைமை தாங்கினார்.
    • புதூர் பேரூராட்சி மன்றத்தலைவா் ரவிசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அரசு பொதுநூலக கட்டிடத்தில் தமிழ்நாடு அரசின் நூலக நண்பர்கள் திட்ட தொடக்க விழா நடந்தது. வாசகர் வட்டத்துணைத்தலைவா் ஆதிமூலம் தலைமை தாங்கி னார். இணைச்செயலாளா் செண்பகக்குற்றாலம், போட்டித் தேர்வு பொறுப்பாளா் விழுதுகள், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பொரு ளாளா் தண்டமிழ்தாசன்சுதாகர் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக புதூர் பேரூராட்சி மன்றத்தலைவா் ரவிசங்கர் கலந்து கொண்டு நூலக நண்பர்கள் திட்டத்தை தொடங்கி வைத்து தேர்வு செய்யப்பட்ட 22 தன்னார்வ லா்களுக்கு அடையாள அட்டை, புத்தகபைகள், புத்தகங்களை வழங்கி பேசினார். பின்னா் ரூ.5ஆயிரம் செலுத்தி 247-வது புரவலராக இணைத்து கொண்டார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி சுடலை, குற்றாலம் ரோட்டரி கிளப் தலைவா் திருவிலஞ்சி குமரன், எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவா் ஜவஹர்லால்நேரு, எஸ்.எஸ்.ஏ.திட்ட மேற்பார்வையாளா் சுப்புலெட்சுமி, ஓவிய ஆசிரியா் முருகையா மற்றும் சமூக ஆர்வலா்கள் மணிகண்டன், கவிஞா்தங்கராஜ் பழனிச்சாமி, இளங்குமரனார் உள்பட பலா் கலந்து கொண்டனா். நல்நுாலகர் ராமசாமி நன்றி கூறினார்.

    • 4 மாவட்டங்களின் எல்லைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
    • தென்காசி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதில்லை.

    செங்கோட்டை:

    தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் அளவுக்கு அதிகமாக கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

    இதனை தடுத்து கட்டுப்படுத்தும் பொருட்டு கன்னியாகுமரி, தென்காசி, கோவை, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களின் எல்லையில் தீவிரமாக கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு திருச்சி பறக்கும் படை உதவி இயக்குனர் அருள்முருகன் தலைமையில் 3 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு மேலாக அதிகாலை முதல் புளியரை சோதனைச் சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலையில் புளியரை சோதனைச் சாவடிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஆகியோர் வந்தனர். பின்னர் அங்கு கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் கலெக்டர் ரவிச்சந்திரன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதில்லை. இங்கு 39 குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து விதிகளுக்குட்பட்டு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.

    ஒரு சில வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதலாக கனிம வளங்கள் கொண்டு செல்வது கண்டுபிடிக்கப் பட்டால் உரிய அபராதம் விதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சில மாதங்களுக்கு முன்பு உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.
    • வெளிச்சம் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே கொல்லம், குண்டாறு அணை,தென்காசி பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் பிரியும் இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொது மக்களின் பயன்பாட்டிற்காக உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியினர், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலை யில் தற்போது அந்த உயர்கோபுர மின்விளக்கு பழுத டைந்துள்ளது.

    இதனால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். மேலும் வெளிச்சம் இல்லாத காரணத்தால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்து காணப்படும் உயர்கோபுர மின்விளக்குகளை உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகள் சிரமைக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் 26 பேர் தேர்ச்சி பெற்றனர்.
    • லெட்சுமிராமசந்திரன் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.

    செங்கோட்டை:

    சமஸ்கிருத பாரதி சார்பில் தென் தமிழகத்தில் சாதிமத பேதமின்றி அனைவருக்கும் இலவச அஞ்சல் வழியில் சமஸ்கிருத மொழி பயிற்சி அளிக்கப்பட்டு வந்தநிலையில் தென்காசி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்வில் 26 பேர் தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு செங்கோட்டை அம்மன் சன்னதி தெரு குருகுல பள்ளியில் பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிரிங்கேரி பாடசாலை அமைப்பாளர் ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழை வழங்கினார். முன்னதாக லெட்சுமிராமசந்திரன் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவிற்கு நெல்லை மாவட்ட சமஸ்கிருத மொழி ஆசிரியர்கள் லதா மாதா, நாகராஜன் மற்றும் செங்கோட்டை, தென்காசி பொறுப்பாளர்கள் தங்கம்மாள், உமா, உஷா, ஜெயா, வள்ளி, சீதாலெட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்புரையாற்றினார்.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் நகர தி.மு.க. சார்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நகர செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் காளி, நகர துணை செயலாளர்கள் ஜோதிமணி, முத்து சரோஜா, ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் பாஞ்ச் பீர்முகம்மது, மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் தில்லை நடராஜன் வரவேற்று பேசினார். மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநில சட்டப்பிரிவு துணை செயலாளர் சூர்யா வெற்றிகொண்டான், மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகசாமி, சேக் தாவூது, சேசுராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் கென்னடி, கனிமொழி, மாவட்ட பொருளாளர் ஷெரிப், பொதுக்குழு உறுப்பினர்கள் ரஹீம், சாமித்துரை, ராஜேஸ்வரன், தமிழ்செல்வி, அருள், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது.
    • விபத்தில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது பக்கத்து வீட்டில் துக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக சுரேஷ் வீட்டில் வைத்து சமையல் செய்தனர்.

    இந்நிலையில் இன்று காலை திடீரென வீட்டில் இருந்த சிலிண்டர் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து செங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது. நிலைய அதிகாரி சிவசங்கரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதில் ராஜா (35), கவுசியா (13), மாரித்துரைச்சி (29) ஆகிய 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் களை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    • தற்போது தாம்பரம் மற்றும் கோவை மேட்டுப்பாளையத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • புதிதாக இயங்க இருக்கும் ரெயிலானது 13 மணி நேரத்தில் தாம்பரம் சென்றடையும் வகையில் அட்டவணை ஏற்படுத்த வேண்டும்.

    தென்காசி:

    நெல்லை - தென்காசி இடையே 21.9.2012 அன்று மீட்டர் கேஜ் பாதையானது அகலப்பாதையாக மாற்றப்பட்டு பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நேரடி ரெயில் இல்லை

    இந்த வழித்தடமானது அகலப்பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்று வரை இந்த வழித்தடத்தில் தலைநகர் சென்னைக்கு ரெயில்கள் இல்லாத நிலையே இருந்து வருகிறது.

    பொதுமக்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாக தற்போது நெல்லையில் காலியாக இருக்கும் 2 ரெயில்களை பயன்படுத்தி தாம்பரம் மற்றும் கோவை மேட்டுப்பாளையத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை ரெயில் அம்பை, பாவூர்சத்திரம் வழியாக இயக்கப்படும் என்ற அறிவிப்பு அம்பை வழித்தட மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    13 மணி நேர பயணம்

    இதுகுறித்து மதுரை ரெயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது:-

    செங்கோட்டையில் இருந்து பாவூர்சத்திரம், அம்பை, நெல்லை வழியாக தாம்பரத்திற்கு நிரந்தர ரெயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது பொதிகை செங்கோட்டை - தாம்பரம் இடையே மதுரை வழியாக 10 மணி 30 நிமிடத்திலும், சிலம்பு எக்ஸ்பிரஸ் 11 மணி நேரத்திலும் கடக்கின்றன.

    புதிதாக இயங்க இருக்கும் செங்கோட்டை - தாம்பரம் மும்முறை ரெயிலானது பாவூர்சத்திரம், நெல்லை, விருதுநகர், திருவாரூர், விழுப்புரம் வழியாக 766 கிலோமீட்டர் தூரத்தை 60 கிலோமீட்டர் வேகத்துடன் 13 மணி நேரத்தில் தாம்பரம் சென்றடையும் வகையில் அட்டவணை ஏற்படுத்த வேண்டும்.

    தாமிரபரணி எக்ஸ்பிரஸ்

    செங்கோட்டையில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு தாம்பரம் சென்றடையு மாறும், தாம்பரத்தில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9:30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் வகையிலும் அட்டவணை ஏற்படுத்த வேண்டும்.

    பிரதமர் மோடி கொடி யசைத்து தொடங்கிவைக்க உள்ள இந்த ரெயிலுக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செங்கோட்டையில் இருந்து கடையநல்லூர் செல்லும் பஸ் கடந்த 2 ஆண்டு காலமாக முறையாக வரவில்லை.
    • மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் சிவசங்கர் உடனடி நட வடிக்கை எடுப்பதாக கூறினார்.

    தென்காசி:

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.

    அதில் செங்கோட்டையில் இருந்து கடையநல்லூர் செல்லும் பஸ் கடந்த 2 ஆண்டு காலமாக முறையாக வரவில்லை. அந்த பஸ்ஸை முறையாக செங்கோட்டை, விஸ்வநாத புரம், தேன்பொத்தை, பண்பொழி, கரிசல்குடியிருப்பு, வடகரை, வாவா நகரம், அச்சன்புதூர், காசி தர்மம், மேலகடையநல்லூர் வழியாக மீண்டும் இயக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் சிவசங்கர் உடனடி நட வடிக்கை எடுப்பதாக கூறினார். சந்திப்பின் போது தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, செங்கோட்டை நகர செயலாளர் வெங்கடேஷ், தலைமை பொது குழு உறுப்பினர் சாமிதுரை, அருள், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சக்தி, கடையநல்லூர் முன்னாள் ஒன்றிய செய லாளர் காசி தர்மம் துரை, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மூவண்ணா மசூது, மாவட்ட சிறுபான்மை அமைப்பாளர் சேக் முகமது, கடையநல்லூர் நகராட்சி உறுப்பினர் மைதீன் கனி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், கடையம் பெரும்பத்து ஊராட்சி தலைவர் பரமசிவம், நாகல்குளம் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சுப்பிரமணியன், ஆம்பூர் கருணாநிதி, வக்கீல் ஹரி, ஒன்றிய கவுன்சிலர் சங்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 

    • நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் தலைமை தாங்கினார்.
    • மண்வளம் பேணுதல் பற்றிய சிறப்பு பயிற்சியை முகுந்தா தேவி நடத்தினார்.

    செங்கோட்டை:

    தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை மண்வளம் பேணுதல் பற்றியும், மண்ணின் முக்கியத்துவத்தை அறியும் பொருட்டும் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் மண்வள அட்டை விழிப்புணர்வு பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. செங்கோட்டை வட்டாரம் கற்குடி கிராமத்தில் விவசாயிகள் மேளா நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் தலைமை தாங்கினார்.

    செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக்முகைதீன் வரவேற்றார் வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு முகுந்தா தேவி மண்வளம் பேணுதல் பற்றிய சிறப்பு பயிற்சியை நடத்தினார். அட்மா திட்டத்தின் வட்டார மேலாளர் செல்வகுமார் தொழில்நுட்ப உரையாற்றினார். கற்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்து பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.

    தலைமை உரை ஏற்று வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் பேசும்போது, மண் ஆய்வு செய்தலின் அவசியமும், மண் ஆய்வு பரிந்துரைப்படி உரம் இடுதலும், இனி வரும் காலங்களில் விவசாயிகளிடம் கட்டாயமான ஒன்றாகி விடும் என்பதோடு மண் ஆய்வுப்படி உரம் இடுவதால் விவசாய செலவினை குறைப்பதோடு ரசாயன உரங்களின் விரையத்தையும் தவிர்க்கலாம் என பேசினார். நூற்றுக்கும் மேற்பட்ட கற்குடி பகுதி விவசாயிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர் குமார் நன்றி கூறினார்.

    • இலஞ்சி நான்கு முக்கு சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
    • சாலையில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகில் உள்ள இலஞ்சி மிக முக்கியமான சாலையாகும். இலஞ்சி நான்கு முக்கு சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குற்றாலம் வரும் பயணிகள் இந்த சாலையையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பிரதான சாலையில் மிக முக்கியமான பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவ்வழியாக சாலையில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. பள்ளத்தில் மண்ணை கொட்டி பராமரிப்பு வேலைகளில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அதற்கு ஒரு நிரந்தர தீர்வு இல்லாமல் தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இரவு நேரத்தில் அந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே உடனடியாக அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மணிகண்டன்,விக்னேஷ்வரி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • விக்னேஷ்வரி மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையை அடுத்த காலங்கரையில் உள்ள கண்ணன் காம்பவுண்டு பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மனைவி விக்னேஷ்வரி(வயது 26).

    இவர்கள் 2 பேரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்று பண்பொழியில் உள்ள திருமலை கோவிலுக்கு செல்வதற்காக மணிகண்டன் தனது மனைவியை அழைத்துள்ளார்.

    ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வெறுப்படைந்த விக்னேஷ்வரி வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    உடனே அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணக்கபிள்ளைவலசையில் சங்கர் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    செங்கோட்டை:

    சங்கடஹரசதுர்த்தியை முன்னிட்டு செங்கோட்டை கணக்கபிள்ளைவலசையில் சங்கர் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. தேங்காய் மாலையால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டி ருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் அருள் பிரசாதம் பெற்று சென்றனர்.

    இதே போன்று வல்லம், இலஞ்சி, பிரானூர் புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளைகுடியிருப்பு உள்ளிட்ட சிவ பிள்ளையார் செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர் முக்தி விநாயகர், வீரகேரள விநாயகர் அனைத்து கிராமங்களிலுள்ள விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.செங்கோட்டை பால விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தன. பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×