search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்"

    • பரமத்தி வட்டார கல்வி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஒன்றிய அளவில் பணிப்பதிவேடு சரிபார்த்தல் சார்ந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி வட்டார கல்வி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தர். மாவட்ட செயலாளர் சங்கர், மாநில பொருளாளர் முருக செல்வராசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    இதில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் அனுமதிக்கப்பட வேண்டும். மருத்துவ காப்பீட்டு அட்டையை அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றுத் தர வேண்டும். ஒன்றிய அளவில் பணிப்பதிவேடு சரிபார்த்தல் சார்ந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    இறுதியில், கபிலர்மலை ஒன்றிய செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • திருமலைசமுத்திரம் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி ஓராசிரியர் பள்ளியாக இயங்கி வருகிரது.
    • ஆசிரியரை தற்காலிகமாக பணி நியமனம் செய்வதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி ஓராசிரியர் பள்ளியாக இயங்கி வருவதால் ( தலைமை ஆசிரியர் நிலையில் காலிப் பணியிடம்) பள்ளி மேலாண்மை குழு மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் இடைநிலை ஆசிரியரை தற்காலிகமாக பணி நியமனம் செய்வதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு:-

    இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7500 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், பதவி உயர்வு மூலம் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக இப்பணியிடம் அனுமதிக்கப்படும்.

    ஒராசிரியர் தொடக்கப் பள்ளியில் தற்காலிகமாக இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல் 2023 முடிய உள்ள மாதங்களுக்கு மட்டும் அந்தந்த ஊர்களில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகில் உள்ள தகுதியுள்ள நபர்கள் பள்ளி மேலாண்மை குழு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித் தகுதி பெற்ற நபர்கள் மட்டும் தேர்ந்தெடுக்க ப்படுவார்கள்.

    இடைநிலை ஆசிரியருக்கு விண்ணப்பிப்போர் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் ஆசிரியர்கள் பணி புரியும் பணியிடத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு உயர்வு மூலமாகவோ அல்லது மாறுதல் மூலமாகவோ பணியிடம் நிரப்பப்படின் உடனடியாக பணி விடுவிப்பு செயல்படுவார்கள்.

    தகுதியான நபர்கள் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித் தகுதி சான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு நாளைக்குள்

    (வெள்ளிக்கிழமை) விண்ணப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று தமிழகம் முழுவதும் அனைத்து தேர்வு மையங்களிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது.
    • சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் நாளில் ஏராளமானோர் தேர்வு எழுதினர்.

    சேலம்:

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இன்று முதல் வருகிற 14-ம் தேதி வரை ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் -2 தேர்வு, கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையிலும் என 2 பிரிவுகளாக நடத்தப்படுகிறது.

    தனியார் பள்ளி ஆசிரியர்கள்

    அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு தொடங்கியது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் நாளில் ஏராளமானோர் தேர்வு எழுதினர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியர் பணிக்கான தேர்வில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை உள்ளதால் ஏராளமானோர் இந்த தேர்வை எழுதினர். குறிப்பாக இதில் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், டியூசன் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள், மற்றும் வேலைக்காக எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்று தேர்வு எழுதினர்.

    முன்னதாக தேர்வு மைய நுழைவு வாயிலில் ஹால்டிக்கெட் பரிசோதிக்கப்பட்டு தேர்வு அறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் புகைப்படத்துடன் கூடிய அரசாங்கம் வழங்கிய அடையாள அட்டை வைத்திருந்தனர். ஆசிரியைகள் பலர் தங்களது பெற்றோருடன் தேர்வு மையத்துக்கு வந்ததை காண முடிந்தது. தேர்வர்கள் உடன் வந்தவர்கள் தேர்வு முடியும் வரை தேர்வு மையத்தின் வெளியே காத்திருந்தனர்.

    தேர்வுக்கான பணியில் அரசு கல்லூரி பேராசிரியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேர்வு மைய நுழைவு வாயிலில் போலீசார் மற்றும் கல்லூரிகளில் உள்ள தனியார் வாட்ச்மேன்கள் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிறப்பு பஸ்கள்

    தேர்வையொட்டி கிராம புறங்களில் இருந்து தேர்வு எழுத வருபவர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் சேலம், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஆத்தூர், தாரமங்கலம், கொளத்தூர், மேச்சேரி உள்ளிட்ட இடங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், குமாரபாளையம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், ராசிபுரம், உள்ளிட்ட இடங்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    • தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தேர்தல் முத்துப்பேட்டையில் நடைபெற்றது.
    • தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களை வாழ்த்தி பேசினார்.

    முத்துப்பேட்டை:

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தேர்தல் முத்துப்பேட்டையில் நடைபெற்றது.

    தேர்தல் ஆணையராக திருத்துறைப்பூண்டி வட்டார செயலாளர் ஹரிகிருஷ்ணன், துணை ஆணையராக வேதரெத்தினம் ஆகியோர் செயல்பட்டனர்.

    இதில் வட்டார தலைவராக சரவணன், வட்டார செயலாளராக செல்வசிதம்பரம், பொருளாளராக சுரேஷ், துணை தலைவர்களாக சீனிவாசன், பழனித்துரை, வாசுகி துணை செயலாளர்களாக செந்தில்குமரன், ராஜசேகரன், உஷா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக சிங்காரவேலன், ஆறுமுகம், பாரதி, சசிகலா, ராணி ஆகியோரும், வட்டார செயற்குழு உறுப்பினர்களாக சிங்காரவேலன், முரளி, சாமிநாதன், சீனிவாசன், இந்திரா, விஜயராணி, அன்புச்செல்வி, அறிவழகன், பன்னீர்செல்வம், சாகுல் ஹமீது, சோமசுந்தரம், மாரிமுத்து, மகாதேவன், பொதுவுடை, முருகானந்தம், பாலகிருஷ்ணன், முருகேசன், பாஸ்கரன், வீரமணி, கார்த்திகை செல்வன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட பொருளாளர் சுபாஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களை வாழ்த்தி பேசினார்.

    இதில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார்த்திக் ஷெகோக்கர் என்ற 3-ம் வகுப்பு மாணவர் மட்டுமே பள்ளிக்கு வருகிறார்.
    • காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு இருவரும் தேசிய கீதம் பாடுகின்றனர்.

    புனே:

    மகாராஷ்டிரத்தில் வாஷிம் மாவட்டத்தில் கணேஷ்பூர் கிராமம் உள்ளது. மொத்தம் 150 பேர் வசித்து வரும் இந்த கிராமத்தில் அரசால் நடத்தப்படும் பள்ளி ஒன்று உள்ளது. 1 முதல் நான்காம் வகுப்பு வரையிலான வகுப்புகளை கொண்டிருந்தபோதும், அந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் படித்து வருகிறார்.

    கார்த்திக் ஷெகோக்கர் என்ற 3-ம் வகுப்பு மாணவர் மட்டுமே பள்ளிக்கு வருகிறார். அவருக்கு பாடம் நடத்துவதற்காக கிஷோர் மங்கார் என்ற ஆசிரியர் தினமும் 12 கி.மீ. பயணம் செய்து பள்ளிக்கு வருகை தருகிறார். காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு இருவரும் தேசிய கீதம் பாடுகின்றனர். அதன்பின்னர் வகுப்பு தொடங்கும்.

    இதுபற்றி ஆசிரியர் கிஷோர் மங்கார் கூறும்போது, 2 ஆண்டுகளாக இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே படித்து வருகிறார். பள்ளியில் நான் மட்டுமே ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இந்த மாணவருக்கு அனைத்து பாடங்களையும் கற்று தருகிறேன். அரசால் வழங்கப்படும் மதிய உணவு உள்பட அனைத்து வசதிகளும் அந்த மாணவருக்கு வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார். ஒரே ஒரு மாணவர் மட்டுமே பள்ளிக்கு வந்தபோதும், மாணவரின் கல்விக்கு தடை விதிக்காமல், பள்ளி நிர்வாகம் தொடர்ந்து இந்த பள்ளியை நடத்தி வருகிறது.

    • கீழ்வேளூரை அடுத்த தென்மருதூரை சேர்ந்தவர் தேவதாஸ் ஆந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.
    • அங்குள்ள 5-ம்வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தென்மருதூரை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 38).

    இவர் ஆந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் அவர் அங்குள்ள 5-ம்வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கார்த்திகேயன் விசாரணைக்கு உத்த ரவிட்டார்.

    விசாரணையில் ஆசிரியர் தேவதாஸ் மீது கூறப்பட்ட புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது.

    அதனைத்தொடர்ந்து அவரை சஸ்பென்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    இது குறித்து வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த புகார் மனு நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் ஆசிரியர் தேவதாஸ் தப்பியோடி விட்டார்.

    அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மேலும் பாதிப்புக்கு உள்ளான ஆந்தகுடி தொடக்க பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினர் நாகை அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் 5-ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆசிரியர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மாணவரின் பெற்றோர் கேட்க மறுத்தனர்.
    • உங்களின் வறுமை நிரந்தரமாக நீங்கவே, நான் உங்களை வற்புறுத்துகிறேன் என்று கல்வியின் முக்கியத்துவத்தை புரிய வைத்தார்.

    ஐதராபாத்:

    தெலங்கானா மாநிலம், சித்திபேட்டை மாவட்டம், பெஜ்ஜிங்கி உயர்நிலைப்பள்ளியில் மொத்தம் 64 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

    இதில், வரும் மார்ச் மாதத்தில் 6 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் நவீன் என்ற மாணவன் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. தலைமையாசிரியர் உத்தரவின் பேரில், ஆங்கில ஆசிரியர் பிரவீன் குமார், நவீன் வீட்டிற்கு சென்று விசாரித்தார்.

    குடும்ப வறுமை காரணமாக நவீனை பள்ளிக்கு அனுப்ப அவனது பெற்றோர் மறுத்துவிட்டனர்.

    ஆசிரியர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மாணவரின் பெற்றோர் கேட்க மறுத்தனர். இதனால், மாணவரின் வீட்டுமுன் தரையில் அமர்ந்து ஆசிரியர் பிரவீன் குமார் தர்ணாவில் ஈடுபட்டார்.

    உங்களின் வறுமை நிரந்தரமாக நீங்கவே, நான் உங்களை வற்புறுத்துகிறேன் என கூறி கல்வியின் முக்கியத்துவத்தை புரிய வைத்தார்.

    அதன் பிறகு நவீனை பள்ளிக்கு அனுப்ப அவனது பெற்றோர் ஒப்புக் கொண்டனர். நவீனை பள்ளிக்கு அழைத்து வந்த பிரவீன் குமாரை, தலைமை ஆசிரியர் உட்பட பலரும் பாராட்டினர். 

    • பாலியல் தொல்லை வழக்கில் சாட்சியை மாற்றி கூறும்படி மாணவிக்கு மிரட்டல் வருகிறது.
    • இந்த சம்பவம் முதுகுளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள திருவரங்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அவருக்கு, அங்கு பணிபுரியும் ஒரு ஆசிரியர் பாலியல் ெதால்லை கொடுத்ததாக கூறப்படு கிறது. இது தொடர்பாக அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக சாட்சி கூறி இருந்தார்.

    இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் முதுகுளத்தூர் மகளிர் போலீசார், ஆசிரியருக்கு எதிராக சாட்சி கூறிய மாணவியை மிரட்டி அவரது புகாரை மாற்றி கூறும்படி வற்புறுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் முதுகுளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நான் எப்போதும் ஒரு ஆணாக இருக்கவே விரும்பினேன்.
    • அவர் அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும், நான் அவரை திருமணம் செய்திருப்பேன்.

    ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்தவர் மீரா. பள்ளியில் உடற்கல்வி வகுப்புகளின்போது மீரா மாணவி கல்பனாவை சந்தித்துள்ளார். அப்போது அவர் கல்பனா மீது காதல் வயப்பட்டுள்ளார். 

    பள்ளி காதல் நீண்ட ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில், கல்பனாவை திருமணம் செய்துக்கொள்ள தான் ஆணாக மாற மீரா பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டுள்ளார்.

    "காதலில் எல்லாம் நியாயமானது. அதனால்தான் நான் என் பாலினத்தை மாற்றிக் கொண்டேன்" என்று ஆணாக மாறி ஆரவ் என்று பெயர் மாற்றிக்கொண்ட மீரா தெரிவித்துள்ளார்.

    மேலும் ஆரவ் கூறுகையில், "நான் பெண்ணாக பிறந்தேன். ஆனால் நான் எப்போதும் ஒரு ஆணாக இருக்கவே விரும்பினேன். இதற்காக பாலினத்தை மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டேன். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் எனது முதல் அறுவை சிகிச்சையை செய்தேன்" என்றார்.

    இதுகுறித்து கல்பனா கூறுகையில், " நான் அவரை ஆரம்பத்திலிருந்தே விரும்பினேன். அவர் இந்த அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும், நான் அவரை திருமணம் செய்திருப்பேன். அறுவை சிகிச்சைக்கு அவருடன் சென்றேன்," என்றார்.

    கல்பானா மாநில அளவில் கபடி விளையாடிய நிலையில், வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச கபடி போட்டிக்காக துபாய் செல்லவுள்ளார்.

    • சேலம் மாவட்–டம், ஜல–கண்–டா–பு–ரம் அருகே சவு–ரி–யூ–ரில் நவோ–தயா அரசு மேல்–நி–லைப்–பள்ளி உள்–ளது. இந்–தப் பள்–ளி–யில் 14 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வரு–கி–றார்.
    • அங்கு மற்ற மாண–வி–கள் யாரும் இல்–லாத நேரத்–தில், கணித ஆசி–ரி–யர் அந்த 9-ம் வகுப்பு மாண–வியை கட்–டி–பி–டித்து பாலி–யல் தொல்லை கொடுத்–த–தாக கூறப்–ப–டு–கிறது.

    ஓம–லூர்:

    சேலம் மாவட்–டம், ஜல–கண்–டா–பு–ரம் அருகே சவு–ரி–யூ–ரில் நவோ–தயா அரசு மேல்–நி–லைப்–பள்ளி உள்–ளது. இந்த பள்–ளி–யில் கணித ஆசி–ரி–ய–ராக கன்–னி–யா–கு–மரி மாவட்–டம் நாகர்–கோ–விலை சேர்ந்த சர–வ–ண–கு–மார் (வயது 44) என்–ப–வர் வேலை பார்த்து வரு–கி–றார்.

    இந்–தப் பள்–ளி–யில் 14 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வரு–கி–றார். இந்–த–நி–லை–யில் நேற்று முன்–தி–னம் மாலை 3 மணி அள–வில் கணித ஆசி–ரி–யர் சர–வ–ண–கு–மார் அந்த மாண–வி–யி–டம் அடை–யாள பதிவு எண் எழுத சோதனை கூடத்–திற்கு அழைத்து உள்–ளார். அங்கு மற்ற மாண–வி–கள் யாரும் இல்–லாத நேரத்–தில், கணித ஆசி–ரி–யர் அந்த 9-ம் வகுப்பு மாண–வியை கட்–டி–பி–டித்து பாலி–யல் தொல்லை கொடுத்–த–தாக கூறப்–ப–டு–கிறது.

    இத–னால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, வீட்–டுக்கு சென்று நடந்த விவ–ரங்–களை தனது பெற்–றோ–ரி–டம் கூறி கதறி அழு–துள்–ளார். உடனே அந்த மாண–வி–யின் பெற்–றோர் ஓம–லூர் அனைத்து மக–ளிர் போலீ–சில் புகார் அளித்–த–னர். அதன்–பே–ரில் ஆசி–ரி–யர் சர–வண குமார் மீது போக்சோ சட்–டத்–தின் கீழ் போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து அவரை கைது செய்–த–னர்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி சஸ்பெண்டு செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.

    • அரசு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்.
    • ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு கிளை தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கினார். செயலாளர் பெரியநாயகி, பொருளாளர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், இணை பேராசிரியர், பேராசிரியர் பணி மேம்பாட்டுத் தொகை தொடர்பான அரசாணையை முழுவதுமாக அமல்படுத்த வேண்டும்.

    எம்.பில்., பி.எச்.டி., ஊக்க ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும். அரசு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பாலத்தில் கார் மோதியதால் ஆசிரியர் படுகாயம் அடைந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டி கிராமத்தில் ஆசிரியராக பணி வருபவர் ஜான் பெஸ்டர்ட். இவர் சிவகங்கையில் இருந்து பள்ளிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.

    திருக்கோஷ்டியூர் தெப்பக்குளம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் சுவர் மீது மோதியது. இதில் ஆசிரியர் ஜான் பெஸ்டர்ட் படுகாயம் அடைந்தார். தகவலறிந்த திருக்கோஷ்டியூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சண்முகம், காவலர் வீரபாண்டியன் ஆகியோர் காயமடைந்த ஆசிரியருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×