search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்"

    • ஆசிரியர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாராட்டினார்
    • கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த

    புதுக்கோட்டை:

    திருமயம் வட்டார வளமை யத்தில்   இரண்டாம் பருவத்திற்கான, எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை,  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் பாராட்டினார்.

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்க மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி செப்டம்பர் 27 -ந் தேதி முதல் 29-ந் தேதி வரை புதுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. இதில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் தங்கள் ஒன்றிய அளவில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பயிற்சி அளிக்க உள்ளனர்.

    அந்த வகையில் திருமயம் வட்டார வளமையத்தில் இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் பயிற்சிக்கு தேவையான கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் தயாரிக்கும் பணியில்  திருமயம் ஒன்றிய ஆசிரியர்கள் 8 பேர் ஈடுபட்டிருந்தனர். இதனை மாவட்ட முதன்மைக் கல்வி நேரில் பார்வையிட்டு பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் திருமுருகன்,வட்டார வளமைய மேற்பார்வையாளர் குல்ஜார் பானு, வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் பரிசுத்தம், இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நாள்தோறும் தலைமை ஆசிரியா்கள் அங்கு சென்று அந்நாளுக்குரிய வினாத்தாளைப் பெற்றுச் சென்று தோ்வை நடத்த வேண்டும்.
    • நடப்பு கல்வியாண்டின் முதல் பருவத்தோ்வு தொடங்கி உள்ளது.

     திருப்பூர்:

    தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம் வருமாறு:- நடப்பு கல்வியாண்டின் முதல் பருவத்தோ்வு தொடங்கி உள்ளது. இந்நிலையில் 4, 5 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாளைப் பின்பற்றி தோ்வு நடத்துமாறு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநா் அலுவலகம் ஆணை வெளியிட்டுள்ளது.

    இந்த வினாத்தாள்கள் வட்டாரக் கல்வி அலுவலகம் மூலம் குறுவள மையத்தை சென்றடைந்து, நாள்தோறும் தலைமை ஆசிரியா்கள் அங்கு சென்று அந்நாளுக்குரிய வினாத்தாளைப் பெற்றுச் சென்று தோ்வை நடத்த வேண்டும்.

    தொடக்க நிலையில் உள்ள மாணவா்களுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியா்களே அவா்களை மதிப்பீடு செய்யும் நடைமுறையே அறிவியல் பூா்வமாகவும், உளவியல் அடிப்படையிலும் சரியானது என மாவட்ட செயற்குழு தெரிவித்துள்ளது.எனவே மாணவா் நலனைக் கருத்தில் கொண்டு 4, 5 ம் வகுப்புகளுக்கான ஒரே வினாத்தாளைப் பின்பற்றி தோ்வு நடத்தும் பொதுத்தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
    • சமூக வலைதளத்தில் வீடியோ வைரலானதால் பரபரப்பு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு விரதம் இருந்து காதில் கம்மல் காலில் கொலுசு அணிந்துள்ளார்.

    விரதம் இருப்பதால் மாணவர் பள்ளிக்கும் அதனை கழற்றாமல் அப்படியே சென்றுள்ளார். இந்த நிலையில் பள்ளி ஆசிரியர் அந்த மாண வனிடம் கம்மல் மற்றும் காலில் கிடந்த கொலுசை அகற்றிவிட்டு பள்ளிக்குள் வருமாறு கூறியுள்ளார்.

    ஆனால் மாணவன் கோவிலுக்கு விரதம் இருந்து அவற்றை அணிந்திருப்பதால் அவற்றை கழற்ற முடியாது என கூறியுள்ளார். மேலும் அந்த மாணவன் வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

    இதையடுத்து மாணவ னின் பெற்றோர் பள்ளிக் குச் சென்று ஆசிரியரு டன் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். கோவிலுக்கு விரதம் இருப்பதால் மாணவன் அணிந்திருக்கும் கம்மல் மற்றும் கொலுசை அகற்ற முடியாது என்று கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மற்ற பள்ளியில் அனைத்து மாணவர்களும் இதை அணிந்துதான் செல்கின்றனர். ஆனால் எந்த ஒரு ஆசிரியரோ தலைமையாசிரியரோ இதனை கழற்ற சொன்னது கிடையாது. ஆனால் நீங்கள் மட்டும்தான் உங்கள் பள்ளியில் கழற்ற சொல்கின்றனர், என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஆசிரியருடன் மாண வரின் பெற்றோர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவனின் உறவினர்களும் அங்கு கூடியதால் பதட்டம் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • மாணவர்களின் கல்வியை வளர்க்கும் நோக்கில் இருந்தால் நிச்சயம் வரவேற்கிறோம்.
    • மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவும் இயலாத சூழல் ஏற்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    தமிழக அரசு பள்ளிக்கல்வி துறை கல்வி முறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மாணவர்களின் கல்வித்திறன் மட்டுமின்றி உடல் நிலை, உணவு முறை, குடும்ப விவரம் என, பல்வேறு கேள்விகள் கேட்கப்படுவதால், ஆசிரியர்கள் எப்போது பார்த்தாலும், செல்போனும், கையுமாகவே இருந்து வருகின்றனர். தற்போது காகிதம் இல்லா காலாண்டு தேர்வு நடத்த கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இது குறித்து திருப்பூர் ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:- பள்ளிக்கல்வித்துறை கொண்டு வரும் முயற்சிகள் மாணவர்களின் கல்வியை வளர்க்கும் நோக்கில் இருந்தால் நிச்சயம் வரவேற்கிறோம். ஆனால் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வரக்கூடாது என்று கூறும் கல்வித்துறை, போன் மூலம் தான் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அறிவுறுத்துகிறது.கல்வித்துறையின் இந்த நடவடிக்கையால், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவும் இயலாத சூழல் ஏற்பட்டு வருகிறது. தற்போது, 1 முதல் 3-ம் வகுப்பு வரை, காலாண்டு தேர்வினை காகிதம் இல்லாமல் வாய்வழியாக நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    செல்போனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள கேள்விகளை மாணவர்களிடம் கேட்டு அவர்கள் கூறும் பதில்கள் அடிப்படையில் மதிப்பீடுகளை செல்போனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம், மாணவர்களின் எழுத்து திறமை மறைந்து போகும் அபாயம் உள்ளது.ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி மிக அவசியம். ஆனால் தேர்வை காகிதம் இல்லாமல் நடத்த சொல்வதால் மாணவர்களின் எழுத்து மற்றும் சிந்தனைத் திறன் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சிறப்பாக செயல்படும் பள்ளி முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
    • பெதப்பம்பட்டி ஆர்.ஜி.எம்., பள்ளி லட்சுமி, தாங்க்ஸ் பேட்ஜ் விருது பெற்றுள்ளனர்.

    உடுமலை :

    தமிழ்நாடு பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் நீண்ட நாள் சேவை செய்யும் ஆசிரியர்கள், சிறப்பாக செயல்படும் பள்ளி முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாரண ஆசிரியர் காளீஸ்வரராஜ் நீண்ட நாள் சாரண சேவைக்கான மாநில விருது பெற்றுள்ளார்.சிவசக்திகாலனி அரசு பள்ளித்தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியம், ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் பள்ளி முதல்வர் மாலா, கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்ட் பள்ளி முதல்வர் சாரதாமணிதேவி, பெதப்பம்பட்டி ஆர்.ஜி.எம்., பள்ளி லட்சுமி, தாங்க்ஸ் பேட்ஜ் விருது பெற்றுள்ளனர்.

      நாகர்கோவில்:

      தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு மற்றும் கன்னியாகுமரி மாவட்ட அனைத்து பள்ளி மேலாண்மைகளின் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

      தமிழக அரசானது அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி இட ஒதுக்கீடு களையும், அரசு பள்ளி மாணவி களுக்கு அறி விக்கப்பட்டுள்ள ரூ.1000 உயர்கல்வி ஊக்கத்தொகை, காலை சிற்றுண்டி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து நல திட்டங்களையும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்த வேண்டும்.

      மாணவர் எண்ணிக் கைக்கு கேற்ப அரசு அனுமதித்த காலி பணி யிடங்களில் விதிகளுக்கு உட்பட்டு நியமனம் பெற்ற ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நியமன நாள் முதல் ஊதியம் வழங்கிட வேண்டும்.

      அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியிட நிர்ணயம், ஆங்கில வழி இணை பிரிவு பணி நிரவல் நியமன ஏற்பளிப்பு ஆகியவற்றை முழுமையாக செயல்படுத்த வேண்டும். 1991-க்கு பின்னர் தொடங்கப்பட்ட அல்லது தரம் உயர்த்தப்பட்ட தமிழ் வழி பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்து செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு, கன்னியாகுமரி மாவட்ட அனைத்து பள்ளி மேலாண்மைகளின் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வருகிற 20-ந்தேதி பேரணி புறப்பட்டு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

      இவ்வாறு அவர் கூறினார்.

      குழித்துறை மறை மாவட்ட பள்ளிகள் கூட்டாண்மை மேலாளர் கலிஸ்டஸ், சிஎஸ்ஐ கூட்டு மேலாண்மை பள்ளிகள் கூட்டு மேலாளர் கிரிஸ்டோபர் இயேசு மணி, இயக்க மாநில துணைத்தலைவர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

      • வீடு வீடாக சென்று ஆதார் கருடா செயலி மூலமாக இணைப்பையும் மேற்கொள்கின்றனர்.
      • வாக்காளர்கள் அனைவரின் ஆதார் எண்ணையும், மார்ச் 31-ந் தேதிக்குள் இணைத்துவிட வேண்டும்.

      திருப்பூர் :

      வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடுமுழுவதும் நடந்து வருகிறது. இதற்காக 6பி என்ற படிவத்தை அறிமுகம் செய்துள்ள தேர்தல் ஆணையம், வீடு வீடாக வாக்காளர் பதிவு அலுவலரை அனுப்பி விவரங்களை பெற்று வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கும் ஒரு வாக்குச்சாவடி அலுவலர் வீதம் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைபள்ளி ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

      தற்போது இவர்களே வீடு வீடாக சென்று ஆதார் கருடா செயலி மூலமாக இணைப்பையும் மேற்கொள்கின்றனர்.

      இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:- பலரும் வங்கிக்கணக்கு, ஆதார் எண் இணைப்பது என தவறான புரிதலில் உள்ளனர்.சில வீடுகளில், எல்லாரும் வேலைக்கு போய்ட்டாங்க என்றும் கூறுகின்றனர்.எவ்வளவு பிரச்னை என்றாலும், வாக்காளர்கள் அனைவரின் ஆதார் எண்ணையும், மார்ச் 31-ந் தேதி 2023க்குள் இணைத்துவிட வேண்டும். பள்ளி வேலைநாட்களில் சுழற்சி முறையில் பணியை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆசிரியருக்கும் குறைந்தது 800 முதல் 1500 பேருக்கு மேல் இணைக்க வேண்டி வரும்.இந்நிலையில், பாடக்குறிப்பேட்டை தயார் செய்ய வேண்டும். காலாண்டு தேர்வுக்கான பாடம் நடத்த வேண்டும். ஓராசிரியர், இரண்டு ஆசிரியர் மட்டுமே இருக்கும் பள்ளிகளில் சுழற்சி முறையில் மாற்று ஆசிரியர் கற்பிக்கவும் வழியில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

      • கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
      • ஆசிரியர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன

      நாகர்கோவில்:

      நாகர்கோவில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இரணியல் அரசு பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து புகார் மனு அளித்தனர். அதில், நாங்கள் இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறோம்.

      எங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் அருவரு க்கத்தக்க வகையிலான வார்த்தைகள் பேசி வரு கிறார். மேலும் மாணவர்கள் மற்றும் மாணவிகளை இணைத்து தவறாக பேசி வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆசிரியர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன என கூறியிருந்தனர்.

      இது தொடர்பான மனுவை மாவட்ட கல்வி அதிகாரிக்கும் அளித்து உள்ளனர். கல்வித் துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியர் மீது மாணவிகள் செக்ஸ் புகார் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      • படிப்பு தான்வாழ்க்கை யை மாற்றும், ஒருவரை வெளிஉலகுக்கு நிரூபிக்க உதவும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே என்று கூறினார்.
      • ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

      தஞ்சாவூர்:

      ஆசிரியர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மேம்பாலம் அரசு பார்வை திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலை பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சுமார் 300 விலையில்லா நோட்டு புத்தகங்களும் பள்ளி அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும்பரிசுகளும் வழங்கப்பட்டன .

      நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான இந்தச் சிறப்பு பள்ளியில் பிரெய்லி வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

      படிப்பு தான்வாழ்க்கையை மாற்றும், ஒருவரை வெளிஉலகுக்கு நிரூபிக்க உதவும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே என்று கூறினார்.

      பார்வை திறன் குறைபாடு கொண்ட மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி அளவில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப்போட்டி, நடனம், சதுரங்கம்உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

      நிகழ்ச்சியில் போக்கு வரத்து பிரிவு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், மேற்கு இன்ஸ்பெக்டர் சந்திரா, தொழிலதிபர் நார்த்தாங்குடி பாலசுப்ரம ணியன், பார்வை திறன்கு றையுடை யோருக்கான அரசு மேல்நிலை பள்ளி முதல்வர் சோபியா, ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் ஆகியோர்கலந்து கொண்டனர்.

      ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

      • குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோதிமணி
      • மாணவ, மாணவிகளும் ஊக்கம் அடைந்துள்ளனர்

      குடிமங்கலம் :

      உடுமலை அடுத்த குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோதிமணி.இவர் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

      சமீபத்தில், தனது சொந்த செலவில் வகுப்பறைக்கு வர்ணம் பூசி, சக ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதேநேரம், இவரது செயலைக்கண்ட மாணவ, மாணவிகளும் ஊக்கம் அடைந்துள்ளனர்.இதன் காரணமாக பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து, தாங்கள் சேமித்த தொகையை திரட்டி, அவர்களே வகுப்பறைக்கு பெயின்ட் அடித்து ஆசிரியர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளின் செயலை தலைமையாசிரியர் பழனிசாமி, ஆசிரியர் உட்பட பலரும் வாழ்த்தினர்.

      • போக்சோ வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டை
      • குழந்தைகள் நல அதிகாரிகளும் விசாரணை

      நாகர்கோவில்:

      நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

      இங்கு அஞ்சு கிராமம் புது குடியிருப்பை சேர்ந்த ஆம்ஸ் நல்லதம்பி (வயது 45) என்பவர் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆசிரியர் ஆம்ஸ்நல்லத்தம்பி 7-ம் வகுப்பு மாணவியிடம் வகுப்பறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து அந்த மாணவி சக ஆசிரியையிடம் இதுகுறித்து கூறியுள்ளார். பின்னர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வகுப்பறையில் பள்ளி மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷம் செய்த சம்பவம் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தெரிய வந்தது.

      இது தொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து ஆம்ஸ் நல்லதம்பி மீது மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.பள்ளி வகுப்பறையில் மாணவியிடம் ஆசிரியர் சில்மிசத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள். இங்கு உள்ள செங்கல் சூளை ஒன்றில் பெண் ஒருவர் குளிப்பதை வாலிபர் ஒருவர் எட்டிப் பார்த்துள்ளார்.இதையடுத்து அந்த பெண் செங்கல்சூலை உரிமையாளரிடம் நடந்த தகவலை கூறியுள்ளார். செங்கல்சூளை உரிமையாளர் இது குறித்துஅந்த வாலிபரிடம் தட்டி கேட்டபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

      அந்த வாலிபரை செங்கல் சூளை உரிமையாளர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வாலிபர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.அந்த வாலிபர் கொடுத்த புகாரின் பேரில் செங்கல்சூளை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண் புகாரின் பேரில் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

      • ஸ்ரீனிவாசன் உஸ்பெகிஸ்தானில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
      • பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

      நீலாம்பூர்

      கோவை நீலாம்பூர் அருகே உள்ள கங்கா நகரை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவர் உஸ்பெகிஸ்தானில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

      இவரது மனைவி சந்தியா (வயது 32). டியூசன் ஆசிரியை. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான உடுமலைக்கு சென்றார்.

      அப்போது சந்தியா வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம் உள்பட 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வீட்டிற்கு திரும்பிய சந்தியா கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை பார்த்தார்.

      வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார்.

      புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டியூசன் ஆசிரியை வீட்டில் 6 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். 

      ×