search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்"

    • மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றிருந்தனர்.
    • போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த எலையமுத்தூர் செல்வபுரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 35). விவசாயி.இவர் கடந்த 10-ந்தேதி உடுமலை கச்சேரி வீதியில் உள்ள ஒரு ஓட்டலின் முன்னால் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காபி குடிக்க சென்றார்.சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது யாரோ மர்ம ஆசாமிகள் அவருடைய மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றிருந்தனர்.அக்கம் பக்கம் தேடிப் பார்த்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்காததால் ராதாகிருஷ்ணன் உடுமலை போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்தார்.

    இதனையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.மேலும் போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிளை திருடியவர் உடுமலையை சேர்ந்த செந்தில்குமார் (41) என்பது தெரிய வந்தது. இவர் திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைத் திருடி போலீசில் மாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது மீண்டும் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட செந்தில்குமாரிடமிருந்து ராதாகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் உள்பட 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மகளுடன் ஆசிரியை மாயமாகினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி அருகே உள்ள வக்காணங்குண்டு பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி சுவாதி (25). நர்சிங் பள்ளி ஆசிரியையான இவர் சம்பவத்தன்று மகள் நேசிகாவுடன் (5) மாயமானார். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திக்குளத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகள் லீலாவதி (19). சம்பவத்தன்று வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகே உள்ள வக்காணங்குண்டு பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி சுவாதி (25). நர்சிங் பள்ளி ஆசிரியையான இவர் சம்பவத்தன்று மகள் நேசிகாவுடன் (5) மாயமானார். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திக்குளத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகள் லீலாவதி (19). சம்பவத்தன்று வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு
    • தலைமறைவான ரகுபதி ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே பொற்றவிளை பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 55). இவர் முஞ்சிறை அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.

    சம்பவத்தன்று மாலை காரில் ஐரேனிபுரம் - புதுக்கடை சாலையில் சென்றார். மேலங்கலம் தொடக்க பள்ளி அருகில் ஜார்ஜ் சென்ற போது நெல்லிக்காவிளை பகுதி களத்து விளையை சேர்ந்த ரகுபதி ராஜா மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் காரை உரசிய வாறு வந்து தடுத்து நிறுத்தியுள்ளார். தொடர்ந்து ஆபாச வார்த்தைகள் பேசி ஆசிரியரை தாக்கி காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதில் படுகாயமடைந்த ஜார்ஜ் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் ஆசிரியரை தாக்கியவர் லாரி டிரைவர் என தெரிய வந்துள்ளது. தலைமறைவான ரகுபதி ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    • இந்த பள்ளி 1997-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
    • இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை செயல் பட்டு வருகிறது.

    முதுகுளத்தூர் :

    முதுகுளத்தூர் அருகே மரவெட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1997-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த கிராமத்தில் 10-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த ஊரில் பெரியவர்கள் தவிர அனைவரும் முதுகுளத்தூரில் வசித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை செயல் பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 5-ம் வகுப்பில் மட்டும் 1 மாணவி படித்து வந்தார். கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்று 6-ம் வகுப்பு சென்றதால் ஒரு மாணவிக்காக இயங்கிய பள்ளி தற்போது ஆளே இல்லாத பள்ளிக்கூடம் ஆனது. இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு ஒருவர் கூட சேரவில்லை.

    கடந்த 2½ மாதங்களாக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் 2 பேர் மட்டுமே இ்ந்த பள்ளியில் காலையில் வந்து மாலை வரை இருந்துவிட்டு சென்று விடுகின்றனர். கடந்த 2½ மாதங்களாக இந்த பள்ளியில் மாணவர்கள் இல்லை என்று தெரிந்தும் கல்வி துறை அதிகாரிகள் இதை கண்டு கொள்ளவில்லை.

    எத்தனையோ பள்ளிகளில் அதிக மாணவர்கள் இருந்தும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால் சரிவர பாடம் நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் அரசு பள்ளிகள் மீது உள்ளது, அதுபோன்ற பள்ளிகளுக்கு இந்த ஆசிரியர்களை இடமாற்றி இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    • வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாமகிரிப்பேட்டை வட்டார கல்வி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    ராசிபுரம்:

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றிய கிளையின் சார்பில் நாமகிரிப்பேட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சங்கத்தின் ஒன்றிய தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கினார். மாநில சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தனர்.

    நாமக்கல் மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாரதி, மாவட்ட துணை செயலாளர் லதா, வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் கதிரேசன், நாமகிரிப்பேட்டை ஒன்றிய துணைத் தலைவர்கள் வினோத், கிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் உள்பட 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாமகிரிப்பேட்டை வட்டார கல்வி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    • அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது
    • பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை.

    திருப்பூர் :

    கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.குறிப்பாக நகர்ப்புறங்களை ஒட்டிய ஊராட்சிப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித் திருக்கிறது.

    பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை. 70, 80 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை கூட, சில பள்ளிகளில் காணப்படுகிறது. சில பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை கட்டடம் இல்லை.இதனால் ஒரே வகுப்பறையில், 60, 70 மாணவர்களை அமர்த்தி பாடம் கற்பிக்க வேண்டியுள்ளது. சில பள்ளிகளில், பள்ளி வளாகங்களில் உள்ள மரத்தடியில் அமர்த்தி பாடம் கற்பிக்கின்றனர்.பாடம் கற்பிக்கும் பணி மட்டுமின்றி, மாணவர்களின் வருகை துவங்கி, பாட போதிப்பு தொடர்பான விவரங்களை அதற்கான பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டிய பணியையும் ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியுள்ளது.இதனால் அதிக பணிச்சுமை, நேர விரயம் ஏற்படுகிறது. இதனால் கல்வி போதிப்பில், முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலையில் ஆசிரியர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். நெருக்கடியான சூழலில் பணிபுரிய விரும்பாத ஆசிரியர்கள் பலர், பணி மாறுதல் பெற்று செல்கின்றனர்.

    இதனால் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறையால் சிரமத்தை எதிர்கொண்டுள்ள பள்ளி நிர்வாகங்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படுகிறது.எனவே பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

    • ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி வெளியிட்டது.
    • இதையடுத்து இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி வரை வழங்கப்பட்டது.

    சேலம்:

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 2022-ம் ஆண்டு அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி வெளியிட்டது. இதையடுத்து இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி வரை வழங்கப்பட்டது.

    சேலம், நாமக்கல்

    இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வசிக்கும் ஆசியர் பட்டயபடிப்பு, ஆசிரியர் பட்டப்படிப்பு படித்தவர்கள் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து தாள்-1- க்கு 230878 பேரும், தாள்-2-க்கு 401886 பேரும் என மொத்தமாக 632764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பினர். எனவே இந்த கோரிக்கையினை ஏற்று தாள்-1, தாள்-2 -க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் கால அவகாசம் வழங்கி உள்ளது.

    அதன்படி 24.07.2022 முதல் 27.07.2022 வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    கல்வித்தகுதி

    விண்ணப்பதாரர்கள் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் கல்வித்தகுதி ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது. விண்ணப்பபடிவத்தில் மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின் அதில் மேலும் மாற்றங்களை செய்யக்கூடாது.

    மேலும் இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    • 2 வருடங்களாக கொரோனா தொற்று தாக்கத்தால், மக்களின் வாழ்வாதாரம்,பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • அரசு பள்ளிகளில் தற்போது ஆங்கிலவழிக்கல்வி இருப்பதும் முக்கிய காரணம்.

    பல்லடம் :

    பல்லடம்,அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால்,ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:- சமீபகாலமாக அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று தாக்கத்தால், மக்களின் வாழ்வாதாரம்,பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் அரசு பள்ளிகளில் தற்போது ஆங்கிலவழிக்கல்வி இருப்பதும் முக்கிய காரணம். அந்த வகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.

    எனவே தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், கட்டடம், குடிநீர், சுகாதார வளாகம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • குழந்தையை ஆசிரியர் தாக்குவதைப் பார்த்த மற்ற குழந்தைகள் பயத்தில் உறைந்துள்ளனர்.
    • வீடியோ வைரலான நிலையில், குழந்தையின் குடும்பத்தினரின் கவனத்திற்கும் சென்றது.

    பாட்னா:

    பீகார் மாநிலம் தனருவா பகுதியைச் சேர்ந்த அமர் காந்த் என்ற சோட்டு என்பவர் டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். இவர் தன்னிடம் படித்த 5 வயது குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஆசிரியர் கம்பால் குழந்தையை கடுமையாக தாக்குகிறார். கம்பு உடைந்ததும் தலைமுடியைப் பிடித்து இழுத்து கைகளால் சரமாரியாக தாக்குகிறார். தன்னை விட்டுவிடும்படி குழந்தை அழுதுகொண்டே கெஞ்சியும் விடவில்லை. இதைப் பார்த்த மற்ற குழந்தைகள் பயத்தில் உறைந்துள்ளனர். ஆசிரியரைத் தடுக்கவோ, சக மாணவனை விட்டுவிடும்படி கூறவோ அவர்களால் முடியாத நிலை.

    இந்த வீடியோ வைரலான நிலையில், குழந்தையின் குடும்பத்தினரின் கவனத்திற்கும் சென்றது. உடனடியாக அவர்கள் பயிற்சி மையத்திற்கு சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். பின்னர் குழந்தையின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டியூசன் ஆசிரிர் அமர் காந்தை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கைது செய்யப்பட்ட ஆசிரியர் அமர் காந்த், உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அதிகமாக டென்சன் ஆவார் என கூறப்படுகிறது. அவரது டியூசன் சென்டரில் 45 குழந்தைகள் படித்துவருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • காலியிடங்களை விட பல மடங்கு விண்ணப்பங்கள் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் பெறப்பட்டுள்ளன.
    • ஒரு பணியிடத்திற்கு சராசரியாக 10 பேர் வீதம் விண்ணப்பித்துள்ளனர்.

    திருப்பூர் :

    தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தின் கீழ் நிரப்பப்பட உள்ளன. இதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பம் கடந்த 3 நாட்களாக பெறப்பட்டன. ஒருவரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    டி.டி.எட்., படித்தவர்கள் துவக்க பள்ளிக்கும், பி.எட்., படித்தவர்கள் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட டிகிரிகளுடன் பி.எட்., மற்றும் எம்.எட்., படித்தவர்கள் உயர்நிலை, மேல்நிலை பள்ளிக்கும் விண்ணப்பித்தனர். ஒருவர் எத்தனை பணியிடங்களுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்பதால், காலியிடங்களை விட பல மடங்கு விண்ணப்பங்கள் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் பெறப்பட்டுள்ளன.

    திருப்பூர் தெற்கு, வடக்கு, அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஒன்றியங்கள் முறையேஇடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆயிரத்து 407 விண்ணப்பங்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 405 விண்ணப்பங்களும், முதுகலை ஆசிரியர் பணிக்கு 401 விண்ணப்பங்களும் பெறபட்டுள்ளன. ஒரு பணியிடத்திற்கு சராசரியாக 10 பேர் வீதம் விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பிரதமர் மோடி, அண்ணா, கருணாநிதி உருவங்களை வரைந்து அசத்தல்
    • நல்லாசிரியர் விருது பெற்றவர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வள்ளலார் வீதியைச் சேர்ந்தவர் வை. கோபால கிருஷ்ணன் என்ற கோபால் (வயது 67), ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர்.

    இவர் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றும் போது மாணவர்களை வைத்து ஆண்டுதோறும் ஓவிய கண்காட்சிகளை நடத்தி வந்து உள்ளார்.

    நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ள வை. கோபாலகிருஷ்ணன் ஓய்வுக்கு பிறகு வீட்டில் முடங்கி கிடக்க கூடாது என்று ஓவியக்கலையில் சிறப்பு படைப்புகளை படைக்க தொடங்கினார்.

    சாதாரணமாக வரையும் ஓவிய படைப்புகளில் இருந்து மாறுபட்டு வண்ண மணலைக் கொண்டு மணல் ஓவியம் வரையும் கலையில் ஆர்வம் காட்டினார். அதன் பயனாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் உருவப்படங்களை மணல் ஓவியமாக வரைந்து சாதனை படைத்து உள்ளார்.

    தான் வரையும் மணல் ஓவிய படைப்புகளை கண்காட்சிபடுத்தியும் வருகிறார். இந்த மணல் ஓவியங்களை உருவாக்குவ தற்காக கன்னியாகுமரி கடற்கரையில் கிடைக்கும் கருப்பு, சிவப்பு, ரோஸ், வெள்ளை போன்ற பல வண்ண கலர் மணல்களை சேகரித்து வைத்துள்ளார்.

    இந்த பல வண்ண மணல்களைக் கொண்டு மகாத்மாகாந்தி, பாரதியார், பிரதமர் நரேந்திர மோடி, முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னாள் முதல்-அமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் முகதோற்ற உருவங்களை மணல் ஒட்டோவியமாக வரைந்து சாதனை படைத்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அரசியல் தலைவர்களின் மணல் ஓவியங்களை வரை வதற்கு முன்பு பென்சில் மூலம் அட்டையில் "ஸ்கெட்ச்" போட்டு முன் வரைவு செய்து அதன் மேல் பலவண்ண மணல் களை ஒட்டி இந்த மணல் ஓவியத்தை வரைந்து உள்ளேன்.

    நான் படைத்த மணல் ஓவியங்கள் மற்றும் செய்தித்தாள் காகித ஒட்டோ வியங்களை காமராஜர் பிறந்த தினமான வருகிற 15-ந்தேதிஅன்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சிய கத்தில் நடைபெறும் கல்வி வளர்ச்சி நாள் கண்காட்சி யில் இடம் பெற உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் கன்னியாகுமரியில் நடந்தசினிமா படப்பிடிப்புக்கு வந்த நடிகர் சூர்யாவிடம் அவரது தந்தை நடிகர் சிவகுமாரின் உருவத்தை இவர் மணல் ஓவியமாக வரைந்து அவரிடம் நேரில் சென்று கொடுத்து பாராட்டை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • தமிழக அரசு உடனடியாக தற்காலிக ஆசிரியர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
    • 4 கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருப்பூர் :

    தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நியமனம் செய்ய தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போதுதமிழகம் முழுவதும் தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வரக்கூடிய சூழ்நிலையில் ஏற்கனவே பயிற்சி முடித்த தங்களுக்கு இதுவரை பணி வழங்கப்படவில்லை. தமிழக அரசு உடனடியாக தற்காலிக ஆசிரியர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    ஆசிரியர் பணி நியமனத்தின் போது பழையபடி வயது வரம்பு தளர்வு செய்து பணி நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 4 கோரிக்கையை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

    ×