search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சநீதிமன்றம்"

    • புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை, ஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரமணா மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார்.
    • புதிய தலைமை நீதிபதிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

    உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியான என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி பொறுப்பேற்றார். இவரது பணிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

    தொடர்ந்து, புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை, ஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரமணா மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார்.

    இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நாளை பொறுப்பேற்கிறார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

    • சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும், குஜராத் மாநில அரசு கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.
    • இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகள் 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    கடந்த 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது. அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட, 14 பேர் அன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும், குஜராத் மாநில அரசு கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

    இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் எந்த அடிப்படையில், நன்னடத்தையின் கீழ் விடுவிக்கப்பட்டனர். இந்த பொதுநல மனுக்கள் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். மேலும், விடுவிக்கப்பட்ட 11 குற்றவாளிகளும் இந்த வழக்கில் இணைந்து கொள்ளவும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    மேலும் இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    • திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    • சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.

    அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக இருந்த போது நெருங்கிய உறவினர்களுக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றியதோடு 3 மாத காலத்துக்குள் அதை முடிக்குமாறு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எடப்பாடி பழனிசாமியின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் சார்பில் வழக்கறிஞர் ரஞ்சித்குமார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் ஆஜராகி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரிப்பதாக அறிவித்துள்ளனர். 

    • மேகதாது விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தையும் அறிய விரும்புகிறோம்.
    • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க கூடாது.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் மாதம் 17-ந்தேதி டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அது ஜூன் 23-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த கூட்டம் மீண்டும் ஜூலை 6-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால் கடந்த 6-ந்தேதியும் கூட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஏற்கனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் பற்றி விவாதிக்கக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சுப்ரீம் கோர்டில் இன்று நீதிபதி கன்வெல்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக அரசு சார்பில் இந்த விவகாரத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில் கூறியதா வது:-

    காவிரி நதிநீர் பங்கீட்டை கூட கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சரியாக செயல்படுத்துவதில்லை. இந்த சூழலில் மேகதாது அணைகட்டியதற்கு பிறகு உரிய நீரை வழங்குவோம் என்பது போன்ற கர்நாடக அரசின் வாக்குறுதிகளை நாங்கள் நம்பமுடியாது.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    அதற்கு மறுப்பு தெரிவித்து கர்நாடக அரசு வக்கீல் வாதாடுகையில், 'காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்' என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

    மேகதாது அணை விவகாரத்தில் நாங்கள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். எனவே காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரம் பற்றி விவாதிக்கலாமா? அல்லது வேண்டாமா? என்பது பற்றிய விவரங்களை பதிலாக அளிக்குமாறு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    வருகிற வெள்ளிக்கிழமை காவிரி ஆணைய கூட்டம் நடைபெறலாம். ஆனால் மேகதாது அணை விவகாரம் பற்றி அதில் விவாதிக்க தடை விதிக்கிறோம்.

    2018-ம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் எதுவும் மாறிவிடப் போவதில்லை.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    • நூபுர் ஷர்மா மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
    • நூபுர் ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா டிவி விவாதம் ஒன்றில் பேசுகையில், நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவரை பா.ஜ.க. தலைமை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. பல்வேறு நாடுகளும் இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன. நூபுர் ஷர்மா மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

    இதற்கிடையே, தன்னை கைது செய்ய தடை விதிக்கவும், பல்வேறு மாநிலங்களில் உள்ள வழக்குகளை ஒன்றாக விசாரிக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் நூபுர் ஷர்மா வழக்கு தொடர்ந்தார். அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நூபுர் சர்மா உயிருக்கு மிரட்டல் வந்துள்ளதாக கூறினார்.

    இந்நிலையில், நூபுர் சர்மா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. அவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ள மாநிலங்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் இந்த வழக்கை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    • உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ், வைரமுத்து சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
    • தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என ஈபிஎஸ் மனு

    அதிமுக பொதுக்குழு கடந்த 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், ஓ.பன்னீர் செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அ

    திமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என ஓ. பன்னீர் செல்வம் கூறி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் தரப்பு முறையிட்டுள்ளது. மேலும் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ், வைரமுத்து சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

    இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக உத்தரவு எதுவும் மனு எதுவும் தாக்கல் செய்யப்பட்டால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என கேவியட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மேகதாது அணை திட்டம் தொடர்பாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விசாரிக்க தமிழகம் எதிர்ப்பு.
    • தமிழக மனுக்களை அவசரமாக விசாரிக்க மூத்த வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடைகோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

    தமிழக காவிரி தொழில்நுட்பப்பிரிவின் துணைத்தலைவர் எம்.செல்வராஜு சார்பில் வழக்கறிஞர்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மேகதாது அணை திட்டம் தொடர்பாக, கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யவோ, எவ்வித உத்தரவையோ காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் மனுக்களை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜராகிய மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி முறையிட்டார். இதற்கு கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆட்சேபித்தார். தமிழக அரசின் முறையீட்டை பரிசீலித்த நீதிபதிகள், மேகதாது அணை விவகாரம் தொடர்புடைய மனுக்களை வருகிற 19-ந் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.

    • நூபுர் ஷர்மா கருத்து, நாட்டையே தீக்கிரையாக்கி விட்டதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
    • உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து துரதிருஷ்டவசமானது என ஓய்வு பெற்ற நீதிபதிகள் அறிக்கை.

    இறைதூதர் முகமது நபிகள் பற்றி நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் பர்திவாலா ஆகியோர் நூபுர் ஷர்மா கருத்து, நாட்டையே தீக்கிரையாக்கி விட்டதாகவும், இதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

    அவர் பொறுப்பற்ற முறையில் பேசியதால் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். பொதுவாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையின்போது மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கண்டனம் தெரிவிப்பது இல்லை. ஆனால் நூபுர் சர்மா வழக்கு விவகாரத்தில் கடுமையான வார்த்தைகளை நீதிபதி பயன்படுத்தி இருந்தனர்.

    இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து துரதிருஷ்டவசமானது என்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரிகள் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    அதில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களுக்கும், வழக்கிற்கும் துளியும் தொடர்பில்லை என்றும், இதுபோன்ற கருத்துகள், நீதித்துறை கண்ணியத்திற்கும் எதிரானது என்றும், நீதித்துறையின் எல்லையை மீறிய செயல் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

    • ஈபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் தாக்கல்.

    சென்னையில் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    நாளை இந்த வழக்கு விசாரணை வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி அடங்கிய அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    ஓ.பன்னீர்செல்வத்தின் நடத்தையால் அதிமுகவின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதாகவும், அதிமுகவின் செயல்பாட்டிற்கும், உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கும் ஓ.பன்னீர் செல்வம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கட்சியின் பொருளாளர் ஆன ஓ.பி.எஸ் கட்சி நிதியை விடுவிக்காததால் ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈபிஎஸ் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை கோரி 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிவை குறித்தும் ஈபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.

    • சட்டத்தின் ஆட்சி என்ற ஒன்றை மட்டும் மனதில் வைத்து உச்ச நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும்.
    • டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் கட்டாயமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

    லக்னோவின் டாக்டர் ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக் கழகம், ஒடிசாவின் தேசிய சட்டப் பல்கலைக் கழகம், தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களுக்கான முன்னாள் மாணவர்களின் கூட்டமைப்பு உள்ளிட்டவை இணைந்து நடத்திய தேசிய கருத்தரங்கு டெல்லியில் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி.பார்திவாலா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    நீதிமன்ற தீர்ப்புகள் பொதுமக்கள் கருத்துகளின் பிரதிபலிப்பாக இருக்க முடியாது, எனவே உச்ச நீதிமன்றமே சட்டத்தின் ஆட்சியை மனதில் வைத்து செயல்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சி என்ற ஒன்றை மட்டும் மனதில் வைத்து உச்ச நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    ஜனநாயகத்தை நான் நம்புகிறேன். ஜனநாயகத்தில் சட்டம் மிகவும் முக்கியமானது. லட்சுமண ரேகையை கடந்து, நீதிபதிகள் மீது தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்வது ஆபத்தானது என்பதால், அரசியலமைப்பின் கீழ் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க நாட்டில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் கட்டாயமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

    ஒரு நீதிபதி, ஒரு விதிவிலக்கான வழக்கில், சமூகத்தின் உணர்வுகளையும், அவர் வழங்கப் போகும் தீர்ப்பின் விளைவையும் அறிந்திருக்க வேண்டும். நீதிபதிகள் சமூக வலைதள விவாதங்களில் பங்கேற்கக் கூடாது, நீதிபதிகள் தங்கள் நாக்கின் மூலம் ஒருபோதும் பேச மாட்டார்கள், அவர்களின் தீர்ப்புகளை மட்டுமே பேசுவார்கள்.

    நீதித்துறையின் பங்கும், அரசியலமைப்புச் சட்டத்தின் பங்கும் மக்களால் நிலைநிறுத்தப்படும் புனிதமான நம்பிக்கையாகும். சட்டத்தின் ஆட்சி என்பது இந்திய அரசியலமைப்பின் தனிச்சிறப்பு அம்சமாகும். நாடாளுமன்ற முறைகள் இல்லாத நாடுகளிலும்  சட்டத்தின் ஆட்சி உள்ளது. ஒரு சர்வாதிகாரம் கூட சட்டத்தின்படி ஆட்சி செய்வதாகக் கூறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்காலிகமாக டி.ஜி.பி.க்களை நியமிக்க கூடாது என காவல்துறை சீர்திருத்தம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி :

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்காலிகமாக டி.ஜி.பி.க்களை நியமிக்க கூடாது என பிரகாஷ் சிங் என்பவர் உச்சநீதிமன்றதில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘டி.ஜி.பி-க்கள் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாக புதிய டி.ஜி.பி.க்களின் பரிந்துரை பெயர் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்துக்கு (UPSC) அனுப்ப வேண்டும்.

    மத்திய பணியாளர் தேர்வு ஆணையம், தேர்வு செய்யும் அதிகாரிகளின் பெயர்கள் அந்தந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுக்கு அனுப்பப்பட்டு, அவர்களில் ஒருவரை டிஜிபியாக நியமனம் செய்ய வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும், தற்காலிக டி.ஜி.பி.க்களாக யாரையும் நியமிக்க கூடாது எனவும், குறிப்பாக ஓய்வு பெறும் வயதில் உள்ளவர்களை டி.ஜி.பி.யாக நியமிக்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
    ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மீது டெல்லி போலீசார் தொடுத்திருந்த சூதாட்ட வழக்கில் ஜூலைக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #SCasksHC #Sreesanth
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த். இவர் ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சீசனில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்பட மூன்று வீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனை அடுத்து, ஸ்ரீசாந்த் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பிசிசிஐ அவருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடைவிதித்தது.


    இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஸ்ரீசாந்தை விடுவித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து, டெல்லி ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பில் முறையிடப்பட்டது. இதற்கிடையே, ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

    மேலும், இதர நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பிசிசிஐ தடையில்லா சான்று தர மறுப்பதாகவும், இதர நாடுகளில் சென்று விளையாட அனுமதி வேண்டியும் ஸ்ரீசாந்த் மனு அளித்திருந்தார்.

    இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வரும் ஜூலை மாதத்துக்குள் டெல்லி போலீசாரால் தொடரப்பட்ட கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #SCasksHC #Sreesanth
    ×