search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ப்ளிப்கார்ட்"

    • ப்ளிப்கார்ட் வலைதளத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை நடைபெற்று வருகிறது.
    • சிறப்பு விற்பனையில் ஏராளமான சாதனங்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் பலன்கள் வழங்கப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக் தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன், மின்னணு சாதனங்கள் என ஏராளமான பொருட்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது.

    ஐபோன் 14 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 விலையை குறைத்தது. ஆப்பிள் இந்தியா ஸ்டோர் வலைதளத்தின் படி ஐபோன் 13 விலை தற்போது ரூ. 69 ஆயிரத்து 990 என துவங்குகிறது. இந்த நிலையில், ஐபோன் 13 விலை மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் மேலும் குறைந்துள்ளது. அந்த வகையில் ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 விலை ரூ. 10 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் காரணமாக ஐபோன் 13 விலை தற்போது ரூ. 59 ஆயிரத்து 990 என துவங்குகிறது. இத்துடன் பாரத ஸ்டேட் வங்கி கார்டுகளுக்கு ரூ. 1250 உடனடி தள்ளுபடி, ரூ. 16 ஆயிரத்து 900 வரை எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஐபோன் 13 விலை ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 42 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலை தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளை சேர்த்த பின் கணக்கிடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 சீரிஸ் விலை ரூ. 79 ஆயிரத்து 990 என துவங்குகிறது. இதில் 6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் சிப்செட், ஐஒஎஸ் 16, இரண்டு கேமரா சென்சார்கள், பெரிய நாட்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் பெயரில் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
    • இந்த சிறப்பு விற்பனையில் ஏராளமான பொருட்களுக்கு அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடி போன்ற பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை சில தினங்களுக்கு முன் துவங்கியது. இந்த விற்பனையில் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான பொருட்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக மின்சாதனங்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. சிறப்பு விற்பனையில் லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு ப்ளிப்கார்ட் சார்பில் சோப் வினியோகம் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    இது பற்றிய தகவல் லின்க்டுஇன் தளத்தில் வெளியாகி இருக்கிறது. டெல்லியை சேர்ந்த மாணவர் ஒருவர் ப்ளிப்கார்ட் பிக் பில்லின் டேஸ் விற்பனையில் லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். எனினும், லேப்டாப்பிற்கு பதில் அவருக்கு டிடர்ஜெண்ட் சோப்புகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இதை ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் மாணவர் தெரிவித்து இருக்கிறார். எனினும், இதற்கு பணம் திருப்பி தரப்பட மாட்டாது என ப்ளிப்கார்ட் அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

    அதன் பின் வெளியான தகவல்களில் ப்ளிப்கார்ட் இந்த வாடிக்கையாளருக்கு பணத்தை திரும்ப வழங்குவதற்கான பணிகளை துவங்கி இருப்பதாக தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் உள்ள "ஓபன் பாக்ஸ்" திட்டத்திலேயே இந்த மாணவர் லேப்டாப்பை வாங்கி இருக்கிறார். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர் பொருளை வாங்கும் போது, டெலிவரி செய்யும் நபர் கண் முன்னே அதனை திறந்து பார்க்க வேண்டும்.

    பின் தான் ஆர்டர் செய்த பொருள் சரியாக இருப்பதை உறுதி செய்த பின் அதனை வாங்கிக் கொள்ளலாம். எனினும், இந்த மாணவர் ஆர்டர் செய்த லேப்டாப்பை அவரி்ன் தந்தை டெலிவரி ஊழியரிடம் இருந்து பெற்று இருக்கிறார். இதன் காரணமாக லேப்டாப்பிற்கு பதில் சோப்பு வைக்கப்பட்டு இருந்த சம்பவம் தாமதமாக தெரியவந்துள்ளது. மேலும் டெலிவரி செய்ய வந்த நபருக்கும் ஓபன் பாக்ஸ் திட்டம் பற்றிய தகவல் தெரிந்திருக்கவில்லை. 

    • ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.
    • இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 சிறப்பு விற்பனை பிளஸ் சந்தாதாரர்களுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்கியது. இந்த சிறப்பு விற்பனை செப்டம்பர் 30 வரை நடைபெற இருக்கிறது. ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் அனைத்து பொருட்களுக்கும் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதே போன்று ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் மின்சாதன பொருட்களுக்கும் அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

    அந்த வகையில் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ப்ளிப்கார்ட் வழங்கும் சிறப்பு சலுகை விவரங்களை பற்றி தொடர்ந்து பார்ப்போம். ஸ்மார்ட்போன் சலுகை மட்டுமின்றி வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

    ரெட்மி நோட் 11SE - இந்திய சந்தையில் ரூ. 16 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 12 ஆயிரத்து 249 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    மோட்டோரோலா மோட்டோ ஜி5 - ரூ. 17 ஆயிரத்து 999 விலையில் அறிமுகமான மோட்டோரோலா மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 12 ஆயிரத்து 999-க்கு கிடைக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதலாக பத்து சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி F13 - ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 9 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி கேலக்ஸி F13 ஸ்மார்ட்போனினை ரூ. 15 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும். இத்துடன் வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படுகிறது.

    விவோ T1 44W - இந்திய சந்தையில் ரூ. 19 ஆயிரத்து 990 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ T1 44W ஸ்மார்ட்போன் தற்போது ப்ளிப்கார்ட் விற்பனையில் ரூ. 13 ஆயிரத்து 499 விலைக்கு கிடைக்கிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது விவோ T1 44W மாடலை ரூ. 12 ஆயிரத்து 850 விலைக்கும் வாங்கிட முடியும்.

    ஒப்போ K10 5ஜி - 64MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஒப்போ K10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ரூ. 25 ஆயிரத்து 999 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ K10 5ஜி தற்போது ரூ. 15 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.
    • இந்த சிறப்பு விற்பனை இன்று ஒரு நாள் ப்ளிப்கார்ட் பிளஸ் பயனர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது.

    ப்ளிப்கார்ட் பிளஸ் சந்தாதாரர்களுக்கு மட்டும் பிக் பில்லியன் டேஸ் சேல் 2022 துவங்கி நடைபெற்று வருகிறது. மற்ற பயனர்கள் நாளை முதல் சிறப்பு விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம். இம்முறை மின்சாதன கேஜெட்களான லேப்டாப், மொபைல், ஸ்மார்ட்வாட்ச், டிவி மற்றும் பல்வேறு சாதனங்களுக்கு அதிகபட்சமாக 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் தள்ளுபடி பெறலாம். சிறப்பு விற்பனையின் போது புதிதாக சேரும் பயனற்களுக்கு ரூ. 100 தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போது ப்ளிப்கார்ட் பிளஸ் பயனர்கள் சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடிகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கிட முடியும்.

    பிக் பில்லியன் டேஸ் 2022 சிறப்பு விற்பனை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என ப்ளிப்கார்ட் தெரிவித்து இருக்கிறது. இந்த விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோர் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி பெற முடியும். ப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு கூடுதலாக 8 சதவீதம் தள்ளுபடி மற்றும் 5 சதவீதம் வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 விற்பனையின் ஒவ்வொரு நாளிலும் சரியாக நள்ளிரவு 12 மணி, காலை 8 மணி மற்றும் மாலை 4 மணி உள்ளிட்ட நேரங்களில் அதிரடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ரஷ் ஹவர் பெயரில் சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள், சாம்சங், கூகுள் என முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் மாடல்களுக்கு அதிரடி சலுகைகள், விலை குறைப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகை, வட்டியில்லா மாத தவணை முறை சலுகைகள், ஸ்கிரீன் பாதுகாப்பு உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன.

    • ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வருடாந்திர பிளாக்‌ஷிப் சலுகை விற்பனையை அடுத்த வாரம் நடத்த இருக்கிறது.
    • இந்த விற்பனையில் ஐபோன்களுக்கு வழங்கும் சலுகை விவரங்களை டீசர்களாக வெளியிட்டு உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ், ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 11 சீரிஸ் மாடல்களுக்கு பிக் பில்லியன் டேஸ் 2022 விற்பனையில் அசத்தல் சலுகைகளை வழங்க இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு சலுகை விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது. சிறப்பு விற்பனை செப்டம்பர் 30 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. சிறப்பு விற்பனையில் லேப்டாப், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பல்வேறு சாதனங்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

    அந்த வகையில் ஐபோன் மாடல்களுக்கு ப்ளிப்கார்ட் வழங்க இருக்கும் சலுகை விவரங்களை டீசர்களாக தனது வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. வலைதளம் மட்டுமின்றி ஸ்மார்ட்போன் செயலியிலும் ஐபோன்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் டீசர்களாக வெளியிடப்பட்டு இருக்கின்றன.


    சலுகை விவரங்கள்:

    டீசர்களின் படி ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 சிறப்பு விற்பனையில் ஐபோன் 13 மாடல் விலை ரூ. 49 ஆயிரத்து 990 என துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐபோன் 13 ப்ரோ மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 990 என்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ. 99 ஆயிரத்து 990 என என்று துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐபோன் 13 மாடல் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என துவங்குகிறது.

    ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 26 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 விற்பனையின் போது ஐபோன் 12 மினி விலை ரூ. 39 ஆயிரத்து 990 அல்லது குறைவாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஐபோன் 11 மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 990-க்கு கிடைக்கும். ஐபோன் 12 மினி மாடலின் விலை ரூ. 55 ஆயிரத்து 359 என்றும் ஐபோன் 11 விலை ரூ. 43 ஆயிரத்து 990 என கிடைக்கும் என்று ப்ளிப்கார்ட் டீசர்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் சார்பில் அதிக சலுகை வழங்கும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
    • இந்த சிறப்பு விற்பனைக்கான தேதி பற்றிய அறிவிப்புகளை வலைதள நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

    ப்ளிப்கார்ட் தளத்தின் பிளாக்‌ஷிப் நிகழ்ச்சி "தி பிகே பிலேலியன் டேஸ்" செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் ஒன்பது ஆண்டாக ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனை துவங்கும் இதே தேதியில் தான் அமேசான் நிறுவனத்தின் "கிரேட் இந்தியன் பெஸ்டிவல்"சிறப்பு விற்பனையும் துவங்குகிறது.

    ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையின் போது பல லட்சம் விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் கிரானா வினியோகஸ்தர்கள் ஒருங்கிணைக்கிறார்கள். இந்த விற்பனையின் மூலம் அனைவருக்கும் பண்டிகை காலத்தை மகிழ்ச்சியானதாக மாற்றுகிறோம். சிறப்பு விற்பனையில் ப்ளிப்கார்ட் செயலியில் பிரத்யேக சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.


    அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் துவங்கும் தேதி மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விற்பனையில் 2 ஆயிரம் புது பொருட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. முன்னணி பிராண்டுகளான சாம்சங், புமா, லோ-ரியல், பிலிப்ஸ், ஹவெல்ஸ், ஹீரோ சைக்கிள்ஸ், போஷ் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் பொருட்களை அறிமுகம் செய்கின்றன. அமேசான் தளத்தில் வாடிக்கையாளர்கள் எட்டு மொழிகளில் தங்களுக்கு விருப்பமுள்ள பொருட்களை வாங்க முடியும்.


    இது மட்டுமின்றி பொருட்களை வாங்கும் போது ரூ. 7 ஆயிரத்து 500 மதிப்பிலான ரிவார்டுகளை வெல்லும் வாய்ப்புகளும் உண்டு. இதற்கு பயனர்கள் அமேசானில் ஷாப்பிங் செய்வதற்கு அமேசான் பே மூலம் பணம் செலுத்தினாலே போதும். இது கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சமயத்தின் போது செல்லுபடியாகும். முன்னதாக சிறப்பு விற்பனை துவங்க இருப்பதை உணர்த்தும் டீசர்களை அமேசான் வெளியிட்டு இருந்தது.

    அமேசான் வழக்கப்படி பிரைம் சந்தா வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு விற்பனை முன்கூட்டியே துவங்கி விடும். இந்த விற்பனையில் மொபைல் போன் மாடல்களுக்கு அதிகபட்சம் 40 சதவீதம் தள்ளுபடி, டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் வங்கி சார்ந்த சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு அதிரடியாக விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய ஐபோன் 14 சீரிஸ் வெளியிடப்பட இருப்பதை அடுத்து இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 7 ஆம் தேதி புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு புது ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், புது ஐபோன் மாடல்கள் வெளியாகும் முன் ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 மாடலுக்கு 12 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு 128 ஜிபி ஐபோன் 13 மாடல் தற்போது ரூ. 69 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 256 ஜிபி விலை ரூ. 79 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி ஐபோன் 13 மாடலுக்கு அசத்தலான எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது.

    எக்சேன்ஜ் சலுகையில் பயனர்கள் அதிகபட்சம் ரூ. 19 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் கேஷ்பேக், ஐந்து சதவீதம் வரை தள்ளுபடி ரூ. 1000 கேஷ்பேக் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் பிராசஸர், 12MP வைடு ஆங்கில் கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐபோன்களின் விலை அதன் முந்தைய மாடலை விட 50 டாலர்கள் வரை விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஐபோன் 14 மாடலின் விலை 750 டாலர்கள் என துவங்கும் என தெரிகிறது.

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
    • சமீபத்தில் தான் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 43 ஆயிரத்து 999 எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்திய சந்தையில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிக்சல் 6a மாடலின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 43 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    எனினும், பிக்சல் 6a ஸ்மார்ட்போனினை அமேசான் தளத்தில் சற்றே குறைந்த விலையில் வாங்கிட முடியும். அமேசான் தளத்தில் பிக்சல் 6a விலை ரூ. 37 ஆயிரத்து 710 என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது ப்ளிப்கார்ட் விலையை விட ரூ. 5 ஆயிரம் வரை விலை குறைவு ஆகும். பல்வேறு மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் பிக்சல் 6a ஸ்மார்ட்போனினை ரூ. 37 ஆயிரம் அல்லது ரூ. 38 ஆயிரம் விலையிலேயே விற்பனை செய்து வருகின்றன.


    அமேசான் தளத்தில் பிக்சல் 6a ஸ்மார்ட்போனை வாங்குவோர் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அமேசான் தளத்தில் வாங்கும் போது பிக்சல் 6a ஸ்மாரட்போனிற்கு வாரண்டி எதுவும் வழங்கப்படாது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

    விலை குறைவாக கிடைப்பதால், விற்பனையாளர் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட யூனிட்டையும் விற்பனை செய்யும் வாய்ப்புகள் அதிகம். இந்த ரிஸ்க்-களை எடுக்க தயார் எனில், அமேசான் தளத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் பிக்சல் 6a ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ளலாம்.

    • பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது.
    • முதற்கட்டமாக இந்த வசதி தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான பவுன்ஸ் இன்பினிட்டி தனது E1 ஸ்கூட்டர் மாடல்களை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்ய துவங்கி இருக்கிறது. முதற்கட்டமாக தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் புது டெல்லி போன்ற மாநிலங்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    இன்று (ஜூலை 22) முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் பவுன்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் ஸ்கூட்டரை வாங்குவோர், அதற்கான தொகையை மட்டுமே செலுத்த வேண்டும். பதிவு கட்டணம், அக்சஸீஸ் மற்றும் கூடுதல் சேவைக்கான கட்டணம் உள்ளிட்டவைகளை நேரடியாக டீலரிடம் தான் செலுத்த வேண்டும்.


    "இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சந்தை பல்வேறு புதுமைகளுக்கு வழிவகை செய்து இருக்கிறது. அந்த வகையில், நாங்கள் தலைசிறந்த எலெக்ட்ரிக் வாகன தீர்வுகளை இன்பினிட்டி E1 மூலம் வழங்கி வருகிறோம். ஆன்லைன் விற்பனை மூலம் எலெக்ட்ரிக் வாகன வினியோகம் பல்வேறு எல்லைகளை கடந்து வாடிக்கையாளர்களை சென்றடையும். இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்."

    "எங்கள் வாகனங்களை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்து வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர் தேவைகளை சீராக பூர்த்தி செய்ய முடியும்," என பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான விவேகானந்த ஹலெகரெ தெரிவித்தார். 

    பொருளை மாற்றி அனுப்பியதற்காக ப்ளிப்கார்ட்க்கு போன் செய்த கொல்கத்தா வாலிபருக்கு பாஜகவில் இணைந்ததாக உறுப்பினர் எண்ணுடன் குறுஞ்செய்தி வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #FlipKart #BJP
    கொல்கத்தா:

    வீட்டில் உள்ளவர்களுக்கு தொந்தரவு தராமல் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க விரும்பிய கொல்கத்தா இளைஞர் ஒருவர், ப்ளிப்கார்ட் இணையதளத்தில் இரண்டு இயர் போன்கள் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு அனுப்பப்பட்ட பெட்டியில் தலைக்கு தேய்க்கும் எண்ணெய் பாட்டில் இருந்துள்ளது.

    இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் பார்சலில் இருந்த ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணிற்கு போன் செய்துள்ளார். ஆனால், தொடர்பு துண்டிக்கப்பட்டது. சில வினாடிகளில், “பாஜகவுக்கு வரவேற்கிறோம். உங்களது உறுப்பினர் எண் ...... உங்களது, பெயர் மற்றும் விலாசத்தை அனுப்பவும்” என குறுஞ்செய்தி வந்துள்ளது. 

    என்ன நடக்கிறது என புரியாமல் இருந்த அவர் அதே எண்ணை தனது நண்பர்களுக்கும் அனுப்பி, போன் செய்ய செய்துள்ளார். அவரது நண்பர்களுக்கும் அதே போல குறுஞ்செய்தி வந்துள்ளது. தனது அனுபவத்தை பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட இந்த செய்தி வைரலாக பரவியது.



    இதற்கு விளக்கமளித்துள்ள அம்மாநில பாஜக தலைவர், “பார்சல் கவரில் கொடுக்கப்பட்ட எண் பாஜவுக்கு சொந்தமானதே. இந்த எண்ணை யார் வேண்டுமானாலும் பகிரலாம். ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கும் மாநில பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என கூறியுள்ளார்.

    இந்த செய்தி இணையதளத்தில் பரவியதை அடுத்து, சப்தமில்லாமல் அந்த இளைஞருக்கு போன் செய்த ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மையம், “உங்களுக்கு அனுப்பிய எண்ணெய் பாட்டிலை உபயோகப்படுத்தவும் அல்லது தூக்கி எறியவும். தற்போது எங்களிடம் ஒரு செட் இயர் போன் மட்டுமே உள்ளது. அதனை உடனே அனுப்புகிறோம். மற்றொரு செட்டுக்கான பணத்தை திரும்ப அனுப்பி விடுகிறோம்” என கூறியுள்ளது.

    மேலும், பார்சலின் மீது இருந்த எண் மூன்றாண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தியது. தற்போது உபயோகப்படுத்தப்படும் எண்ணுக்கு பதிலாக பழைய எண் ஒட்டப்பட்டுள்ளது என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. 
    ×