search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலைப்பாம்பு"

    • மலைப் பாம்பினை லாவகமாக மீட்டனர்.
    • மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுசீந்திரம் அக்கரையில் உள்ள குடியிருப்பு பகுதியில் ராட்சதமலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இந்தராட்சதமலைப்பாம்பு ஊருக்குள் புகுந்ததை பார்த்த காசி என்பவர் உடனடியாக இது பற்றி வனத்துறையினரு க்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் வனச்சரக அலுவலர் ரவீந்திரன் உத்தரவின் படி வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பதுங்கி இருந்த அந்த மலைப் பாம்பினை லாவகமாக மீட்டனர். அந்த ராட்சத மலைப்பாம்பு சுமார் 10 அடி நீளம் கொண்டதாக இருந்தது. இதைத் தொடர்ந்து அந்த ராட்சத மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

    • வலையில் சிக்கிக் கொண்டிருந்த ராட்சதமலைப் பாம்பை லாவகமாக பிடித்த வனத்துறையினர்
    • பாதுகாப்பான காட்டுப் பகுதியில் கொண்டு பத்திரமாக விட்டனர்.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள மகாராஜபுரத்தில் இலவணிகர் குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் ஏராளமான வீடுகள் உள்ளன.

    இந்த வீடுகள் குளத்தின் கரையில் அமைந்து உள்ளதால் பாம்புகள் மற்றும் விஷ சந்துக்கள் வீடுகளுக்குள் புகுந்து விடாமல் இருப்பதற்காக மீன்பிடி வலைகளை தடுப்பு வேலிகள் போன்று வீட்டை சுற்றி அமைத்துஉள்ளனர். இருப்பினும் இந்த மீன் பிடி வலையில் நேற்று ராட்சதமலைப்பாம்பு ஒன்று சிக்கிக் கொண்டது. அந்த பாம்பு வலையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

    உடனே இதுபற்றி வனத் துறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன் பேரில் மருந்துவாழ் மலை வேட்டை தடுப்பு காவலர் பிரவீன் தலைமையில் வனத் துறையினர் சம்பவ இடத் துக்கு வரைந்து வந்தனர். அவர்கள் அந்த வலையில் சிக்கிக் கொண்டிருந்த ராட்சதமலைப் பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்தப் பாம்பு சுமார் 10 அடி நீளம் கொண்டதாக இருந்தது.

    அந்த ராட்சத மலைப் பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பான காட்டுப் பகுதியில் கொண்டு பத்திர மாக விட்டனர்.

    • உமா தனது வெள்ளாடுகளை ஊட்டல் பைரப்பள்ளி காப்புகாட்டு பகுதியில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார்.
    • காப்புக்காட்டில் அடர்ந்த புதர் பகுதியில் படுத்திருந்த மலைப்பாம்பு ஒன்று ஆட்டை விழுங்கிகொண்டிருந்தது.

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஊட்டல் பகுதியில் அடர்ந்த காப்புக்காடு உள்ளது. இங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    அப்பகுதியை சேர்ந்தவர்கள் காப்பு காட்டிற்கு காலையில் ஆடு, மாடுகளை ஓட்டிச்சென்று மேய்த்து விட்டு மாலை 4 மணி அளவில் வீட்டிற்கு திரும்புவது வழக்கம்.

    ஆம்பூர் அடுத்த பைரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி உமா (55), இவர் சொந்தாமாக 15-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வழக்கம் போல் உமா தனது வெள்ளாடுகளை ஊட்டல் பைரப்பள்ளி காப்புகாட்டு பகுதியில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். மாலை தனது வெள்ளாடுகளை வீட்டிற்கு ஓட்டி வந்தார்.

    அப்போது தனது வெள்ளாடு கூட்டத்திலிருந்து ஒரு ஆடு காணாமல் போனது. அந்த ஆட்டை தேடிக்கொண்டு உமா வனப்பகுதிக்கு சென்றார். அப்போது காப்புக்காட்டில் அடர்ந்த புதர் பகுதியில் படுத்திருந்த மலைப்பாம்பு ஒன்று ஆட்டை விழுங்கிகொண்டிருந்தது. ஆட்டின் முழு உடலையும் முழுவதுமாக விழுங்குவதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து உமா ஆம்பூர் வனத்துறையிருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து அடர்ந்த காட்டில் விட்டனர்.

    முழு ஆட்டை மலைப்பாம்பு முழுவதுமாக விழுங்கிய சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    • வனத்துறையின் வேட்டை தடுப்புகாவலர்பிரவின் தலைமையில் வனத்துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வலையில் சிக்கி இருந்த மலைப்பாம்பை மீட்டனர்.
    • வனத்துறையினர் அந்த பாம்பை காட்டில் விட்டனர்

    கன்னியாகுமரி,

    ஜூன்.30-

    கன்னியாகுமரி அருகே உள்ளகொட்டாரம் சுடுகாட்டு ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வலை போடப்பட்டு இருந்தது. அந்த வலையில் ராட்சதமலை பாம்பு ஒன்று சிக்கிகொண்டு வெளியே வர முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தது. இதை அந்தப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர்.

    உடனேஇதுபற்றி கொட்டாரம் பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சி லர் செல்வன் வனத்துறை யினருக்கு தகவல் தெரி வித்தார். அதன் பேரில் வனத்துறையின் வேட்டை தடுப்புகாவலர்பிரவின் தலைமையில் வனத்துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்தப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் வலையில் சிக்கி இருந்த மலைப்பாம்பை மீட்டனர். மலைப்பாம்பு 10 அடி நீளம் உள்ளதாக இருந்தது.அந்த மலைப்பாம்பை வனத்து றையினர் காட்டுப் பகுதியில் கொண்டுவிட்டனர்.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் மலைப்பாம்பை தோளில் போட்டு செல்பி எடுக்க முயன்ற வனத்துறை அதிகாரியை பாம்பு தாக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் உள்ள கிராமத்தில் மலைப்பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மலைப்பாம்பை பிடித்தனர். அதில் ஒரு அதிகாரி பாம்பை தனது தோளில் எடுத்து போட்டுக்கொண்டு நடந்தார்.

    அப்போது அவருடன் செல்பி எடுக்க கிராமத்தினர் முயன்றனர். திடீரென பாம்பு அவர் கழுத்தை நெறிக்க தொடங்கியது. இதனை கண்ட பலர் அங்கிருந்து ஓடினர். பின்னர் மற்ற வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது. அதனை வனத்துறை அதிகாரிகள் காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

    அந்த வனத்துறை அதிகாரி பாம்புடன் மாட்டிக்கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ×